Saturday, May 24, 2008

பங்களாதேஸ் மக்களுக்கு மறதியா / நன்றியுணார்வு இல்லையா ?

ஜெய்பூரில் நடந்த கொடுமையான குண்டு வெடிப்புக‌ளில்
70க்கும் மேற்பட்ட அப்பாவிகள் உயிரழந்தனர். இதற்ற்கு காரணம் பங்களாதேஸை
தலைமையாக கொண்ட ஒரு ஜிகாத் அமைப்பு என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

1971 வரை பங்களாதேஸ் கிழக்கு பாக்கிஸ்தானாக, மேற்க்கு பாகிஸ்தான்
(இன்றையபாக்) உடன் இனைந்து ஒரே நாடாக இருந்ததது. மேற்க்கு பாகிஸதானிய
பஞ்சாபியினர் அரசையும், ராணுவத்திலும் முன்னனி வகுத்து, கிழக்கு பாக்
பெங்காலி முஸ்லீமகளை நசுக்கி பல அடக்குமுறை புரிந்தனர். தேர்தல்களில்
வங்காளிகள் வென்றதை ஏற்க்க மறுத்து, பாக் ராணுவத்தை, பங்களாதேச்
பகுதிகளுக்கு அனுப்பி இனப் படுகொலை பெருமளவில் புரிந்தனர். கோடிக்கணக்கான
மக்கள் அகதிகளாக இந்தியாவிற்க்கு வந்தனர். அகதிகள் வருகை மிக மிக
அதிகமானதை அடுத்து இந்தியா தலையிட வேண்டிய கட்டாயம்.

அன்று பாக் முஸ்லிம் 'சகோதரகளின்' இனப்படுகொலைகளை ச‌ந்தித்த பங்களாதேஸ்
மக்கள் 40 ஆண்டுகளில் நடந்ததை மறந்து, நம் உதவிகளை மறந்து, இன்று
இந்தியாவை 'எதிரியாக' கருதி, தீவிரவாதிகளுக்கு ஆதரவு அளிப்து
வியப்பளிக்கிறது.

பார்க்க‌ :

http://en.wikipedia.org/wiki/1971_Bangladesh_atrocities

http://en.wikipedia.org/wiki/Bangladesh_Liberation_War

http://en.wikipedia.org/wiki/1971_Bangladesh_atrocities#Genocide_debate

3 comments:

  1. //அன்று பாக் முஸ்லிம் 'சகோதரர்களின்' இனப ்படுகொலைகளை ச‌ந்தித்த பங்களாதேஸ் மக்கள் 40 ஆண்டுகளில் நடந்ததை மறந்து, நம் உதவிகளை மறந்து, இன்று இந்தியாவை 'எதிரியாக' கருதி, தீவிரவாதிகளுக்கு ஆதரவு அளிப்பது வியப்பளிக்கிறது.//

    சென்னை மாகாணம் என்றிருந்த பெயர் தமிழ்நாடு என்று மாற்றப்பட்ட வரலாறு, இப்போதைய தமிழ்நாட்டு இளைஞர்களில் எத்தனை பேருக்குத் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறீர்கள்..?

    இதே போன்ற நிலைமைதான் அங்கும் நிச்சயம் நிலவும். இதில் சந்தேகமில்லை.

    எல்லா நாடுகளிலும் தொழில் துறையைவிட மக்களின் மனோபாவம்தான் அதிக வளர்ச்சியடைந்து வருகிறது.

    ஒரு குடும்பத்திலேயே அன்பு, பாசம், நன்றி இதையெல்லாம் நினைத்துப் பார்க்க முடியாத நிலைமையில் அண்டை நாடு என்கிற உருவகம் இல்லாத ஒன்றிற்காக வேற்று நாட்டு மக்கள் பாசமாக இருக்க வேண்டுமென்று எதிர்பார்ப்பது நியாயமில்லை அதியமான்..

    அதிலும் நீங்கள் சொல்வதைப் போல் எல்லா நாடுகளிலும் தீவிரவாதம் வளர்வது மக்களால் அல்ல அரசுகளால்தான்.. இப்போது அங்கேயும் இஸ்லாமிய அடிப்படை நெறிகளைப் பின்பற்றும் அரசுகள்தான் அமைய வேண்டும் என்பது அந்நாட்டுத் தீவிரவாத குழுக்களின் தலையாய கோரிக்கை.

    எப்படி இதனை நம் நாட்டில் நாம் ஏற்றுக் கொள்ள முடியாதோ.. அதே போல் அந்நாட்டு அரசாலும் ஏற்க முடியாது..

    ஆனால் மக்களின் ஆதரவு எப்படி கிடைக்கிறதெனில் ஆந்திராவின் டெல்டா பிரதேசங்களில் நக்ஸல் தீவிரவாதிகளுக்கு கிராமப்புற மக்களின் ஆதரவு எதற்காக, என்ன காரணத்திற்காக கிடைக்கிறதோ அதே காரணத்திற்காகத்தான் அந்நாட்டுத் தீவிரவாதிகளுக்கும் கிடைக்கிறது..

    அவ்வளவுதான்..

    ReplyDelete
  2. நல்ல எதார்த்தமான பதில் உண்மைத்தமிழன் அவர்களே... நன்றி.

    ReplyDelete
  3. இல்லை உ.தமிழ்,

    பல லச்சம் அப்பவிகள் படுகொலை செய்யப்பட்டதை அதற்க்குள் மறப்பதற்க்கு காரணம்,
    மதவெறி என்னும் அபின். ஆனால் மத ரீதியாக ஒன்றாக இருந்த இரு பாக்கிஸ்தான்களும், கடும் போராட்டத்திற்க்கு பிறகு பிரிந்த வரலாற்றை மறந்ததே நமக்கு ஆச்சர்யம். இந்தியாவில் 80களுக்கு பிறகு அபாரமாக 'வளார்ந்த' இந்து மத அடிப்ப்டைவாதத்திற்கு எதிர்வினை என்றும் பார்க்கலாம்.

    and Osama was from a wealthy Saudi back ground. Poverty alone cannot be blamed for religious fundmentalism.

    ReplyDelete