Friday, March 4, 2011

தி.மு.க தோற்க வேண்டும்

நேற்று காலை சென்னை அண்ணா சாலையில் பெரும்
போக்குவரத்து நெருசல். கிண்டியிலிருந்து ஜெமினி
செல்ல சுமார் இரண்டு மணி நேரம் ஆனது. தி.மு.க
தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்திற்க்கு,
'வேட்பாளர்கள்' பேரணி. படைகளுடன். இல்லை. கூலிப்
படைகளுடன்.

அவசர வேலையாக அந்த வழியில் பைக்கில் சென்ற நான், நன்றாக சிக்கிக்கொண்டேன். பல ஆயிரம் 'தொண்டர்கள்' (இல்லை, குண்டர்கள்), பல வாகனங்களில் பவணி. போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்தது.

நேரம் ஆக ஆக, எனக்கு கோபம் அதிகரித்து, நிதானம் இழக்க ஆரம்பித்தேன். பக்கத்தில் காத்திருந்த சக பயணிகளிடம் முடிந்த வரை கேட்டேன் : 'இந்த தேர்தலில் தி.மு.காவிற்க்கு வாக்களிக்க போகிறார்களா ? அவர்கள் மறுபடியும் ஜெயித்தால், தமிழ்நாட்டையே வாங்கிவிடுவார்கள். கொள்ளைகார பாவிகள் என்று தொடர்ந்து 'பிரச்சாரம்' செய்தேன். பலரும் அமோதித்தனர். குறைந்தது ஒரு 15 பேர்களிடம் 'பேசியிருப்பேன்'.

இறுதியாக, ஒரு ஆட்டோவினுள் உட்காந்திருந்த மூன்று கரை வேட்டி அன்பர்களை கடக்க நேர்ந்த போது, அவர்கள் அருகில் நின்று, 'கண்டிப்பாக இந்த தேர்தலில் நீங்க தோக்க போறீங்க' என்று சத்தமாக கூறிவிட்டு, பைக்கை விரைந்து முடிக்கி எஸ்கேப் ஆனேன். அங்கே தொடர்ந்து நிற்க எனக்கு பைத்தியமா என்ன ?

ஆனால், தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் ? சொல்லுங்களேன்.


9 comments:

 1. தப்பி வந்து விட்டீர்கள், ஆனாலும் இப்படியான இடங்களில் அவதானமும் முக்கியம்.
  ஆனாலும் இவர்கள் இடத்தைப் பிடிக்க உள்ளவர்கள் குறைந்தவர்களா?
  நமக்கு உள்ள நிலை ,கொதிக்கும் எண்ணைச் சட்டி அல்லது நெருப்பு,
  மக்கள் புதுப் பேயைவிட பழகிய பேயுடன் வாழ்வோமென நினைக்க மாட்டார்களா?
  பணம் விளையாட உள்ளதே!
  பார்ப்போம்.

  ReplyDelete
 2. அப்பு, அம்மா ஆட்சிக்கு வந்தா நீங்க என்னைக்குமே அவசரமா ஒரு இடத்துக்கு போக முடியாது ,, பரவாயில்லயா?? அம்மா கீழ்பாக்கம் போகுதுன்னா கிண்டியிலேயே உங்களை நிறுத்திருவானுங்க..

  ReplyDelete
 3. அப்பு, அம்மா ஆட்சிக்கு வந்தா நீங்க என்னைக்குமே அவசரமா ஒரு இடத்துக்கு போக முடியாது ,, பரவாயில்லயா?? அம்மா கீழ்பாக்கம் போகுதுன்னா கிண்டியிலேயே உங்களை நிறுத்திருவானுங்க..

  ReplyDelete
 4. அப்பு, அம்மா ஆட்சிக்கு வந்தா நீங்க என்னைக்குமே அவசரமா ஒரு இடத்துக்கு போக முடியாது ,, பரவாயில்லயா?? அம்மா கீழ்பாக்கம் போகுதுன்னா கிண்டியிலேயே உங்களை நிறுத்திருவானுங்க..

  ReplyDelete
 5. This is the biggest joke i have read so far... u r troubled for waiting onre day.... after jayalaitha comes u will wait day ...

  ReplyDelete
 6. Your profile describes you differently. But your post makes you appear an average person.

  What do want to say here? Just because you get caught up in a traffic jam due to clogging of the road by movement of the prospective candidates of the ruling party, you want to campaign against them ?

  It begs the question: :What will you do if there were no such traffic jam and you moved w/o hassle passing Arivalayam ? You would then buttonhole a 15 or 20 persons and say to them: 'I have had a smooth way w/o getting caught anywhere and reached my office safely. So, please vote for Karunanithi and Udyasooriyan?"

  And on the way, seeing an auto carrying a few DMK supporters, say to them: 'Advance Congrats for your election victory!"

  Disappointing !

  ReplyDelete
 7. Jo Rayan,

  You are presuming too much about me. (but you know me from Vianvu days) !

  To start with, I hail from a hard core DMK / DK family and my grandfather was a (honest) DMK MLA in the 70s. I know these guys well.

  And it is not the issue about traffic jam alone. It is the cumulative issue of massive corruption and discontent here.

  and yes, JJ is not the alternative to MK and we have seen worse in her regimes, esp 1991-96 one. But i prefer the Kerala model where the ruling parties are voted out in every election and they come back after 5 years again. It will prevent the notion of 'நிரந்தர முதல்வர்’ ; and TN needs the same.
  If this regime manages to win again, then it is curtains for us.

  ReplyDelete
 8. I think entire tamilnadu thinks like you.

  ReplyDelete
 9. now Jaya came.

  let us see how the traffic will response to her travel and visits

  ReplyDelete