(விகடன் பிரசுரம்)
திரு.வி.க, அண்ணா, பெரியார், பாரதி, வா.வு.சி, கோவை
அய்யாமுத்து,கண்ணதாசன், காமராஜர், ஜீவானந்தம், காயிதே மில்லத், குத்தூசி
குருசாமி, உ.வே.சா, அப்துல் ரஹிம், நெ.து.சுந்தரவடிவேலு போன்ற பல
பெருமக்களை பற்றி, பல நூல்களின் முலம், அருமையான கட்டுரைகளை
வடித்துள்ளார்.
பல வகை மனிதர்கள் ; சம்பவங்கள் ; வரலாற்று சுவசுகள்.
மிக அருமையான புத்தகம். அனைவரும் படிக்க வேண்டும்
---------------------------------------
'எனது நினைவுகள்'
கோவை அய்யாமுத்து
(1898-1977)
சுதந்திர போராட்ட வீரர், பெரியாரின் சகா மற்றும்
வைக்கம் வீரர். குடியரசு பத்திரிக்கையின் ஆசிரியர்.
தமிழகத்தில் கதரை நிலைனாடியவர்.
காந்தியடிகளின் சகா. அவருடன் சன்டை இட்டு,
விலகியவர். ராஜஜியின் சீடர்.
கவிஞர், கதாசிரியர், 'கஞ்சன்' என்ற படத்தை
கோவை சென்ட்ரல் ஸ்டுடியோவில் 1947இல்
எழுதி இயக்கியவர்.
ஜீவாவின் நண்பர். ஜி.டி.நாயுடுவின் தோழர்.
கோவை ரத்தினசபாபதி முதலியாரின் சகா.
(ஆர்.எஸ் புரம் இவர் நினைவாக).
பொள்ளாச்சி மகாலிங்கம், ஜி.கே.சுந்திரம்,
கல்கி சதாசிவம், அவர்களின் நண்பர்.சி.சுப்ரமணியம்
அவரின் நெருங்கிய சகா.
மேலும் பல பல அருமையான நிகழ்வுகள் ;
நட்புகள், சாதனைகள்.
அவர் எழுதிய புத்தகங்கள் :
நாடு எங்கே செல்கிறது ?
நான் கண்ட பெரியார் (1957)
அவரின் சயசரிதை 1972இல் வானது பதிப்பகத்தால்
வெளியிடப் பட்டது. இன்று கிடைப்பது அரிது.
மிக மிக பத்திரமாக பாதுகாத்து வருகிறேன்.
என்னுடை மிக முக்கிய பொக்கிசம் அது.
----------------------------------------
பட்டாம்பூச்சி (Paipilon)
பட்டாம்பூச்சி (ஆங்கிலத்தில் பாபிலான், மூலம் : ப்ரென்ச்)
ஹென்றி ஷாரியர் என்னும் ப்ரென்ச்காரரின் சுயசரிதை.
செய்யாத ஒரு கொலைக்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு,
ஃப்ரென்ச் கயனாவிற்க்கு (S.America) நாடுகடத்தப்பட்டு சிறைவைக்கப்பட்டார்
(1930களில்). அநியாயமனா தண்டனையை எதிர்த்து மீண்டும் மீண்டும் சுமார்
12 தடவை தப்பி, ஒவ்வொரு முறையும் பிடிபடுகிறார்.
ஒரு சிறு படகில் 1000 மைல்கள் கடலை கடந்து டிரினிடாடை ஒரு முறை
அடைந்து சாதனை படைத்தார். சுமார் 6 மாதகாலம் செவ்விந்தியர்களடன்
வசித்தார் ; அங்கு மனம் புரிந்தார். தம்மை சதி செய்து சிறையில்
அடைத்த கயவர்களை பழி வாங்க துடித்தார். மீன்டும் ஃப்ரான்ஸ் செல்ல
முயல்கையில் பிடிபட்டு 4 ஆண்டு தனிமைச் சிறை தண்டனை.
தனிமை சிறை இருப்பதிலேயே கொடுமையானது. நிசப்தம் மட்டுமே.
பலருக்கும் பைத்தியம் பிடிக்கும். அதையும் வென்ற கதை அருமை.
மீண்டும் மீன்டும் தப்ப முயற்ச்சி. பல நண்பர்கள், எதிரிகள்,
துரோகங்கள், நம்பிக்கைகள். மரணங்கள், சிறை கலகங்கள்...
கடைசியாக டெவில்ஸ் தீவில் சிறை. கொப்பரை தேங்கயா நிரம்பிய சாக்க்கு
மூட்டை பை மீது சவாரி செய்து கடலை கடந்து, வெனிசுலாவை அடைந்து இறுதி
வெற்றி. மொத்தம் 14 ஆண்டுகள் சிறைவாசம்.
தமிழில், ரா.கி.ரங்கராஜன் மொழி பெயர்த்து தொடராக 1970களில் வந்தது.
ஆனாலும் ஆங்கில / ப்ரென்ச் வடிவங்களே புத்தகமாக உள்ளன.
1971இல் இது வெளியாகி ஃப்ரான்ஸையே கலக்கியது.
ஒரு திரை படமாகவும் உருவானது.
வாழ்க்கையில் வைராக்கியத்தையும், நம்பிக்கையும்
உருவாக்கும்ஒரு காவியது இது. மீண்டும் மீண்டும் அடிக்கடி படிக்க தூண்டும்
வராலாறு இது.
-------------------------------------