Monday, July 7, 2008

இரு தற்கொலைகள்




இரு தற்கொலைகள்

சில ஆண்டுகளுக்கு முன் வரலாறை பதிவு செய்யும்
இரு ஆய்வாளர்கள் வெவ்வேறு நாடுகளில் மன அழுத்தம்
தாங்காமல் தற்கொலை செய்து கொண்டனர்.

1.அய்ரிஸ் சாங் அமெர்க்காவில் பிறந்து வளர்ந்த ஒரு
சீனப் பெண். (தைவான்) 1931இல் ஜப்பானியர்கள் சீனாவை
ஆக்கரமித்து, நான்கிங் பகுதிகளில் பல லட்சம்அப்பாவி
சீன மக்களை கொன்று, பென்களை வன்கொடிமை செய்து,
அழித்து பெருங்கொடுமைகள் புரிந்தனர். அதை ரேப் ஆஃப்
மன்சூரியா என்றும் கூறுவர். அந்த கொடுமையன
நிகழ்வுகளை நான்கிங் சென்று ஆராய்ந்து, அலசி
ஆங்கிலத்தில் பதிவு செய்து ஒரு புத்தகத்தையும்
எழுதினர் சாங்.

http://www.sfgate.com/cgi-bin/article.cgi?f=/c/a/2004/11/20/DDGN29TV0G1.DTL
http://en.wikipedia.org/wiki/Nanking_Massacre

Chinese civilians to be buried alive.[citation needed]
Chinese civilians to be buried alive

தான் சேகரித்த கொடுந்தகவல்களின் பாரம், மன அழுத்தம்
தாங்க முடியமல் விரைவில் (2004) தற்கொலை செய்து
கொண்டார்.

2. தென் ஆப்பரிக்காவை சேர்ந்த வெள்ளை இனத்தை
சேர்ந்தவ புகைபட கலைஞர் கெவின் கார்ட்ர். சூடானில்
நிலவிய கடும் பஞ்சத்தை 1994இல் புகைபடமெடுக்க
சென்றார். அவர் எடுத்த இந்த படம் அவருக்கு
புலிட்ஸர் விருதினை பெற்றுத் தந்தது. நேரில்
கண்ட கொடுமையான நிகழ்வுகளை தாங்க முடியாம்ல்
(க்டன் தொல்லை வேறு) 2004இல் தற்கொலை
செய்து கொண்டார்.

http://www.npr.org/templates/story/story.php?storyId=5241442



இதை ஆக்குபேசனல் ஹசார்ட் என்பர் ஆங்கிலத்தில்.
அதாவது தொழில் ரீதியான அபாயங்கள். மிக
அதிகமான மனித நேயம், சென்ஸிடிவான மனம்,
உலகின் துயரங்களை நேரில் கண்டதால் ஏற்பட்ட
கடும் மன உளைச்சல் ;இவை தற்கொலையில்
முடிந்தன..

3 comments:

  1. திரு அதியமான் அவர்களே.

    இந்த இரு தற்கொலைகளும் அரசியல் சார்ந்த மரணங்களாகவே நான் பார்க்கிறேன்.

    வலதுசாரி சிந்தனையாளரான தங்களின் அரசியல் பார்வையில், இந்த இரு தற்கொலைகளுக்கான காரணங்களை அலசுங்களேன்.

    ReplyDelete
  2. என்ன சொல்ல வரீங்க அதியமான் சார் ?

    ReplyDelete
  3. சுந்தர்ராஜன் அவர்களே,

    இந்த இருவரும் தற்கொலை செய்ய அரசியல் காரணம் இல்லை.
    எத்தனையோ புகைபட நிபுணர்கள் மற்றும் வரலாற்று ஆய்வாளர்கள்
    இருக்கிறார்கள். அவைவரும் அவ்வாறு மனமுறிவதில்லை..

    ஆனால் ஆப்பரிக்க பஞச்ம, 1931இல் சைனாவில் ஜப்பானியர்கள் செய்த‌
    வ‌ன்கொடுமைக‌ள் அனைத்தும் ஏகாதிப‌த்திய‌ அர‌சிய‌ல் என்ற‌ அம்ச‌த்தில்
    வ‌ருகிற‌து.

    ஏகாதிப‌த்திய‌ம் என்ப‌து ச‌ர்வாதிகார‌த்தில் ஒரு ம‌றுவடிவம். அதை யார்
    செய்தாலும் அது ம‌னித‌ உரிமை மீற‌ல் தான். அமெரிக்கா ஈராக்கில்
    செய்வ‌தும், சோவிய‌த் ர‌ஸ்ஸியா ஆஃப்கானிஸ்தானில் செய்த‌தும்
    எகாதிப‌த்திய‌மே.

    அதற்க்கு முன் ஜ‌ன‌னாய‌க‌ம் / ஏகாதிப‌த்திய‌ம் பற்றி ஒரு விள‌க்க‌ம் :

    ஜ‌ன‌னாய‌க‌ம் என்ப‌து ம‌னித‌ உரிமைக‌ளை அனைத்தையும் மிக‌ புனித‌மாக,
    மிக் அடிப்ப‌டையான் அம்ச‌மாக‌ பேணும் ஒரு அர‌சிய‌ல் அமைப்பு.
    அடிப்டை சுந்திர‌ங்க‌ள் என்றால் :

    The UN decleration of fundamental rights covers all
    aspects of life.

    http://www.unhchr.ch/udhr/lang/eng.htm


    மாற்றுக் க‌ருத்துக்க‌ள், பேச்சுரிமை, பார‌ளும‌ன்ற‌ம், பார‌ப‌ட்ச‌மில்லா நிதி ம‌ன்ற‌ங்க‌ள்,
    ப‌த்திரிக்கை சுந்திர‌ம், ம‌த‌ச் சுத‌ந்திர‌ம் போன்ற‌வை இதில் அட‌ங்கும் சில‌ அம்ச‌ங்க‌ள்.

    முத‌லாளித்துவ‌ ச‌ர்வாதிகார‌ம் ப‌ல‌ நாடுக‌ளில் உண்டு. (மைன்மார், பாக்கிஸ்தான், ச‌வுதி அரெபியா போல‌ ; ஆனால் பொருளாதார‌ சுத‌ந்திர‌மும் ப‌ல‌ வ‌கைக‌ளில் அர‌சால் க‌ட்டுப்ப‌டுத்த‌ ப‌டுகின்ற‌ன‌); முத‌லாளித்துவ‌ ஜ‌னனாய‌க‌ நாடுக‌ள் பெரும் பான்மையான‌வை. ஸ்வீட‌ன், ஜெர்ம‌னி, ஜ‌ப்பான் போல‌.

    ஆனால் க‌ம்யூனிச‌ அமைப்பிற்க்கும் ஜ‌ன‌னாய‌க‌த்திற்க்கும் ஒரு ச‌ம்ப‌ந்த‌மும் இல்லை. அங்கு ச‌ர்வாதிக‌ர‌ம் வேறு பாணியில் அம‌லாகும். அடிப்ப‌டை சுந்திர‌ங்க‌ள் அனும‌தி இல்லை.

    ஆப்ப‌ரிக்க‌ நாடுக‌ள் பெரும்பாலும் ச‌ர்வாத்காரிக‌ள், ஜ‌னனாய‌க‌த்தை ந‌சுக்கும் அட‌க்குமுறைக‌ள் அதிக‌ம். மிக‌ உய‌ர்ந்த‌ த‌ர‌த்தில் அம‌லாகும் ஜ‌ன‌னாய‌க‌ நாடுக‌ளில் ப‌ஞ்ச‌ம் பெரிய‌ அள‌வில் ஏற்ப‌டுவ‌தில்லை. எதிர் க‌ட்சிக‌ள், ப‌த்திரிக்கைக‌ள், ம‌னித‌ உரிமை ஆர்வ‌ல‌ர்க‌ள் என்று பெரும் பான்மை ம‌க்க‌ள் அர‌சை நிர்ப‌ந்திக்க‌ வ‌ழி இருப்ப‌தால், அர‌சு தேவையான‌ ந‌ல‌திட்ட‌ங்க‌ளை செய‌ல் ப‌டுத்த‌ முய‌லும்.

    1944இல் பெங்காலில் பெரும் ப‌ஞ்ச‌ம். ப‌ல‌ கோடி ம‌க்க‌ள் இற‌ந்த‌ன‌ர். அன்று ஆங்கிலேய‌ அர‌சு ஒரு ஏகாதிப‌த்திய‌ அர‌சாக‌ இந்தியாவை ஆண்ட‌து. அத‌னால் பெரிய‌ அளவில் எதிர்ப்பை ச‌ந்திக்காம‌ல் ச‌மாளித்த‌து. இன்று இந்தியாவில் அப்ப‌டி ஒரு ப‌ஞ்ச‌த்தை எந்த‌ அர‌சும் எதிர்கொள்ளாத‌ அள‌வு நிலைமையை பெரும் அள‌வில் சிர‌மைத்தோம், ஜ‌னனாய‌க்த்தின் மூல‌ம்.

    1931இல் சோவிய‌த் யூனிய‌னின் ஒரு ப‌குதியாக‌ இருந்த‌ உக்ரேனில் பெரும் ப‌ஞ்ச‌ம்.
    அங்கு விளைந்த‌ கோதுமை அனைத்தையும் ர‌ஸ்ஸிய‌ க‌ம்யூனிச‌ அர‌சு ப‌றிமுத‌ல் செய்து, உக்ரேனிய‌ர‌ன் ப‌குதியையே ஒரு பெரும் சிறையாக‌ மாற்றி, அனைத்து எல்லைக‌லையும் அடைத்து வ‌ன்கொடுமை புரிந்த‌து. எதிர் க‌ட்சிக‌ளே, ஜ‌ன‌னாய‌க்மோ, ப‌த்திர்க்கை சுந்திர‌மோ அங்கு இல்லாத‌தால், சோவிய‌த் அர‌சை யாராலும் த‌டுக்க‌ முடிய‌வில்லை.

    சூடான் நாட்டில் பல ஆண்டுகளாக உள்னாட்டு போர். கொள்கை எதுவும் இல்லை.
    ப‌ல‌ குட்டி ராணுவ‌ ச‌ர்வாதிகாரிக‌ள், தாத‌க்க‌ள் போல் ராணுவ‌ம் வைத்துக் கொண்டு ச‌ண்டை. ம‌க்க‌ள் இற‌ந்தால் அவ‌ர்க‌ளுக்கு காலை இல்லை. இன‌ப் பிரிவினைக‌ள், நீர் ஆத‌ராங்க‌ளுக்கான‌ ச‌ண்டைக‌ள். விவ்சாய‌மும் பொய்க்கும் போது க‌டும் ப‌ஞ்ச‌ம் விளைகிற‌து. அர‌சும், க‌ல‌க்கார‌ வார் லார்ட்குக‌ளும் (த‌மிழில் என்ன) கிடைக்கும் அனைத்து வளங்களையும், வெளி நாட்டு உதவிகளையும் திருடுவர். பட்டினியால் சாகும் மக்களை பற்றி கவலை இல்லை.

    அடிப்ப‌டை ஜ‌ன்னாய‌க‌ம், ம‌னித‌ உரிமைக‌ளை அனைவ‌ரும் ம‌திக்க‌ க‌ற்றால் தான் இந்த கொடுமைகள் ஒழியும்.

    ஒரு உண்மையான ஜனனாயக நட்டில் பஞ்சம் இந்த அளவு வராது. வந்தாலும் உடனிடியாக தகுந்த மாற்று ஏற்படுகள் செய்ய அரசும் இதர ஏஜன்சிகளும் முயல்வர். யாரும் யாரையும் அடக்குமுறையால் நசுக்காமல், மனித உரிமைகள் மீறப்படாமல் வெளிபடையான, நேர்மையான முறையில் நடவடிக்கைகள் அமலாகும்.

    ReplyDelete