என்று தோழர்கள் சொல்கிறார்களோ அதே போல்தாம்
அமெரிக்கா உண்மையான சுதந்திர பொருளாதார
கேபிடலிசத்தின் சின்னம் அல்ல. நார்வே, ஜெர்மனி
போன்ற நாடுகளை சொல்லாம்.
அமெரிக்காவின் பல போர்கள் மற்றும் ஆதிக்கம் செலுத்த முயற்சிகள் : இவை
அமெரிக்கா பற்றிய ஒரு வெறுப்பை பெரும்பாலோனவர்ககளிடம் தோற்றுவித்து
உள்ளதுதான்.
கோல்ட் வார் எனப்படும் மறைமுக யுத்தம் சுமார் 45 வருடகாலாம் அமெரிக்கா
மற்றும் இதர ஜனனாயக முதலாளித்துவ நாடுகளுக்கும் சோவியத் ரஸ்ஸியா
மற்றும் அதன் துணை (அல்லது அடிமை) நாடுகளுக்கும்
இடையே நடந்தது. இதன் அடிப்படையில்தாம்
அமெரிக்காவின் செய்ல்களை எடைபோட வேண்டும்.
இன்று அனைவரும் சோவியத் ரஸ்ஸியா, கிழக்கு அய்ரோப்பாவில் (செக், ஹங்கேரி,
போன்றவை) மற்றும் ஆஃப்கானிஸ்தான், எகிப்து, சிரியா போன்ற நாடுகளில் செய்த
ஆதிக்கத்தை மற்றும் அயுத சப்பளை மற்றும் உதவிகளை மறந்து விட்டார்கள்.
அதற்க்கு மாற்றாக அமெரிக்கா மற்றும் நேடொ நாடுகள் அதே பாணியில்
செயல்பட்டன. இரண்டும்
ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்தாம். இஸ்ரேல்
உருவாக்கப்பட்ட அய்.நா சபை ஓட்டேடுப்பில் காம்ரேட் ஸ்டாலினின் சோவியத்
ரஸ்ஸியாவும் இஸ்ரேலுக்கு
ஆதரவாக 1948இல் வாக்களித்தை காம்ரேடுகள் இன்று சொல்லுவதில்லை. இஸ்ரேலை
அடியோடு அழிக்க
எகிப்த்து மற்றும் இதர அரேபிய நாடுகள் கடும் முயற்சி
செய்த போது அமேரிக்கா இஸ்ரேலை ஆதரித்தது. இதற்க்கு போட்டியாக பின்னர்
ரஸ்ஸியா எகிப்த் மற்றும் சிரியாவை கண்மூடித்தனமாக ஆதரித்தது. இதன்
விளைவுகள் இன்றும் தொடர்கிறது.
அமெரிக்க செய்வதை நியாப்படுத்தவில்லை.
தெளிவுபடுத்துகிறேன்.
1990களில் பழைய யூகொஸ்லோவிய பகுதிகளில்
கிருஸ்தவ செர்பியா இஸ்லாமிய போஸ்னியர்களை
கொன்றழித்து செய்தது. உலக நாடுகள் அனைவரும்
(ரஸ்ஸியா நீங்கலாக, ஏனெனில் அவர்கள் செர்பியர்களின்
உடன் பங்காளிகள்) செர்பியாவை கண்டித்தன. அய்.நாவில் நியாயம்
கிடைக்காமல் ரஸ்ஸியா வீட்டோ அதிகாரத்தை உபயோகித்தது. இனப்படுகொலை
(இதில் கவனிக்க வேண்டிய விசியம் : இஸ்லாமியர்கள் பெரும் அளவில்,
கிருஸ்துவ செர்பியர்களால், கொடியவன் மிலாஸவிச் தலைமையில்
கொல்லப்பட்டனர்) தொடர்ந்தது. சாம, பேத, தான், தண்டம் :
இவை அனைத்தையும் நேடோ நாடுகள் பயன்படுத்தி
கடைசியில் 1999இல் செர்பியா மீது கடும் குண்டு மழை
பொழிந்து அதன் பொருளாதாரத்தையும், ராணுவ அணிகளன்களையும் அழித்து,
செர்பியாவின்
கொடுங்கோல்களை நிறுத்தியது. அப்போதும் அமெரிக்க எதிர்பாளர்கள்
வழக்கம் போல் 'எதிர்த்தனர்.'
http://en.wikipedia.org/wiki/Bosnian_War#War_crimes
அது ஒரு இனப்படுகொலை. ethnic cleansing.
http://en.wikipedia.org/wiki/Bosnian_Genocide
இஸ்லாமிய மக்களுக்கு எந்த அரசியல் நோக்கம்
இல்லாமல் மனிதாபிமான அடிப்படையில் அமெரிக்காவும்,
இதர நெடோ நாடுகளும் 1999இல் உதவின. கிருஸ்துவ செர்பியர்களின் ஆதிக்கத்தை
எதிர்த்து..
அமெரிக்கா இஸ்லாமியர்களுக்கு எதிரானது அல்ல
என்பதை நிருப்பிக்க இதை பெரிதாக பிராச்சரம்
செய்திருக்க வேண்டும். பல ஆண்டுகளுக்கு முன் நான்
அமெரிக்க வெளியுறவு துறைக்கு இந்த 'பிரச்சார' அவசியம்
பற்றி ஒரு மின்மடல் அனுப்பினேன். !!
1979வரை ஆஃப்கானிஸ்தான் ஒரு அமைதியான,
வளமான நாடாகாக இருந்தது. இஸ்லாமிய தீவிரவாதம்,
அல் கொய்தா, தலிபான் எல்லாம் இல்லை. அமைதியான
மக்கள், நிம்மதியாக வாழ்ந்தனர். சோவியத் ரஸ்ஸியா
தன் தென் எல்லையில் அமைந்த நாடானான ஆஃகானிஸ்தானுக்கு 'புரட்சி' அய்
'ஏற்றுமதி' செய்ய
முயன்று, இறுதியில் படை எடுத்தது. ஆஃப்கானிஸ்தானுகு
அன்று பிடித்தது சனி. ரஸ்ஸிய ஆக்கிரமிப்பை, கடும் அடக்குமுறைகளை
எதிர்க்க முஜாகுதின் படைகளை பாக் உதவியுடன் அமெரிக்கா ஊக்குவித்தது. பின்
லேடன்
சவுதியில் இருந்து ஆஃப்கானிஸ்தான் சென்று, அமெரிக்க உதவியுடன்
ர்ஸ்ஸியார்களை எதிர்த்து போராடினார்.
பாகிஸ்தான் அமெரிக்காவிற்கு முக்கிய நேச நாடு
மற்றும் தளமாக, ரஸ்ஸியர்களை எதிர்க்க ஒரு தடுப்பரணாக இருந்த்து. 10
ஆண்டுகளில் ரஸ்ஸியா தோற்று பிறகு
1991இல் வீழ்ந்தது. ஆனால் கிணறு வெட்ட பூதம்
கிளம்பிய கதையாக, இஸ்லாம் பெயரில் ஊக்குவிக்கப்பட்ட முஜாகுதீன் மற்றும்
பின் லேடன் பலமாக வளார்ந்து
இன்றும் பெரும் பிரச்சனையாக, ஆஃப்கானிஸ்தானுக்கும்,
உலகத்திற்க்கும் விளங்குகிறது.
அதே போல் 1979 வரை ஈரான் மன்னர் ஷா ஆட்சியில்
அமெரிக்க ஆதரவாளியாக, (அதாவது ரஸ்ஸிய எதிர்பில்) அமைதியாக இருந்த நாடு.
அயோத்துள்ளா கோமெனியின்
'புரட்சி' 1979இல் உருவாகி இஸ்லாமிய அரசு உருவாகி, அமெரிக்கர்களை
ஈரானிலிருந்து துரத்தி, அன்றிலிருந்து
ஈரான் ஒரு அமெரிக்க 'எதிர்பாளாராக' வளர்ந்தது. மதவாத தீவிரவாத்தை
ஊக்குவிக்கும் நாடாக உருமறியது. ஈராக்கின்
சர்வாதிகாரி சதாம் ஒரு கொடுங்கோலந்தான். அவன் தன் மக்களை, பல லச்சம்
பேர்களை ஈவிரக்கமில்லாமல்
கொன்றவன். எதிர்தவர்களை எல்லாம் பூண்டோடு அழித்தவன். ஆனாலும் அவன் ஒரு
மதசார்பற்றவன். மேலும் இஸ்லாமிய மதவாதிகள் வலுவாகா இராக்கில்
உருமாறினால், தன் அதிகாரத்திற்க்கு ஆபத்து என்று ஜாக்கரதையாக இருந்தான்.
மேலும், அரேபிய சன்னி முஸ்லிமான சதாம், இராக்கின் பெருவாரியான ஷியா
பிரிவு இஸ்லாமியர்களை
இரும்புக்கரம் கொண்டு அடக்கி வைத்திருந்தான். ஈரானில் உருவான ஷியா
மதவாதம் மற்றும் வளர்சி ,இராக்கில்
உள்ள பெருவாரி மக்களான ஷியாக்களையும் ஈர்த்து தன் அதிகாரத்திற்க்கு
ஆபத்து வரும் என்று நினைத்து 1980இல்
ஈரான் மீது படை எடுத்தான். 8 ஆண்டுகள் கடும் போர்.
பெரும் உயிர்பலி மற்றும் சேதம். 'எதிரிக்கு எதிரி நண்பன்'
என்ற (முட்டாள்தனமான, விவேகமில்லாத) தத்துவத்தின் அடிப்படையில் அமெரிக்கா
சதாமை ஊக்குவித்து
உதவியது. பிறகு அனுபவித்தது, வழக்கம் போல்!!
1990இல் சதாம் திவால் நிலைக்கு தள்ளப்பட்டதால்,
எண்ணை வளம் மிகுந்த சிறிய நாடான குவைத் மீது
படை எடுத்து ஆக்கிரமித்தான். சவுதி மீதும் படை
எடுப்பேன் என்று மிரட்டினான். உடனே அமெரிக்கா
மற்றும் அதன் நேச நாடுகள், விரைவாக களத்தில்
இறங்கி, கடும் போரில் ஈடுபட்டு குவைத்தை
விடுவித்தன. 1991இன் ஆரம்பத்தில் குவைத்தை
முற்றாக விடுவித்த அமெரிக்க மற்றும் இதர
படையுனர், ஒரு முக்கிய காரணத்திற்காக சதாமை
அழிக்காமல், ஈராக்கின் ராணுவ பலத்தை முற்றாக
அழிக்காமல், வேண்டும் என்றே விட்டு வைத்தனர்.
வலுவான மதவாத ஈரானை எதிர்காலத்தில் தடுக்க
ஒரு அரணாக ஒரு வலுவான் ஈராக் தேவைபட்டது.
(to maintain the 'balance of power' and to contain Iran. Strategic
calculations...)முக்கியமாக சதாம் போன்ற ஈரானை
எதிர்க்கும் ஒரு சர்வாதிகாரி தேவை பட்டது.
இல்லாவிட்டால் 1992இல் லேயே சதாமின் கதை
முடிந்திருக்கும்.
வழக்கம் போல அமெரிக்கர்கள் தப்புகணக்கு
போட்டனர். சதாம் அணு ஆயுதங்கள் மற்றும்
பேரழிவு ஆயுதங்களை குவிப்பதாக பலமான
சந்தேகம். பொருளாதார தடை. இருந்தும் ஒரு
வில்லனை ஒழிக்க காரணாங்கள் அதிகம் இன்று
புஸ் ஜூனியர் அன்ட் கம்பேனி படை எடுத்து
இன்று மாட்டியுள்ளனர். அதே தப்புக்கணக்குதான்.
தலைவலி போய் திருகுவலி வந்த வரலாற்றில்
இருந்து இன்று வரை அமெரிக்கர்கள் ஒரு
பாடமும் கற்றதாக தெரியவில்லை.
ஈராக் படை எடுப்பில் சதாம் மற்றும் அவனின்
ஃபாத்தா கட்சி அழிக்கபட்டது மிக சரியான,
நல்ல விசியம். அத்தோடு அமெரிக்கர்கள்
வெளியெறி, அங்கு இனச்சண்டை (ஷியா, சன்னி
மற்றும் குர்த் இனதவர்களுக்குள்) உருவாகாமல்
இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்தான்.
சதாம் ஹூசைன் சுமார் 24 வருடங்கள் ஈராக்கை
ஆண்ட கொடியவன். கண்டிப்பாக ஒரு ஹீரோ
அல்ல. குர்த் இன மக்கள் மீது விச வாய்வை
செலுத்தி கொன்றவன். மிக மிக குரூரமான கொடுங்கோலன்.அவனை பற்றி முழு விவரங்கள்
அறிய :
http://www.hrw.org/reports/1993/iraq/
http://en.wikipedia.org/wiki/Human_rights_in_Saddam%27s_Iraq
http://www.amnesty.org/en/library/info/MDE14/008/2001
ஆனால் அவன் ஒரு மதவாதி அல்ல. செக்யூலார்
கொடுங்கோலன் :
http://en.wikipedia.org/wiki/Saddam_Hussein#Secular_leadership
http://en.wikipedia.org/wiki/Al-Anfal_Campaign
http://en.wikipedia.org/wiki/Al-Anfal_Campaign#Violation_of_human_rights
http://en.wikipedia.org/wiki/Halabja_poison_gas_attack
......Various U.S. diplomats and intelligence officials have asserted
that Saddam was strongly linked with the CIA, and that U.S.
intelligence, under President John F. Kennedy, helped Saddam's party
seize power for the first time in 1963.[15][16]
Saddam Hussein in the past was seen by U.S. intelligence services as a
bulwark of anti-communism in the 1960s and 1970s.[16] His first
contacts with U.S. officials date back to 1959, when he was part of a
CIA-authorized six-man squad tasked with ousting then Iraqi Prime
Minister Abdul Karim Qassim.[17]
.....
http://www.guardian.co.uk/world/2002/oct/24/iraq.comment
சாதாம் ஹூசெனின் மகன்களும் கொல்லப்பட்டதை
பற்றி எழுதியிருந்தீர்கள். அவர்கள் இருவரும் செய்த
கொலைகள், ரேப்கள் மற்றும் அட்டூலியங்கள் பற்றி
ஒரு புத்தகமே எழுதலாம்.
பார்க்க :
http://en.wikipedia.org/wiki/Uday_Hussein
http://en.wikipedia.org/wiki/Qusay_Hussein
மருமகன் :
http://en.wikipedia.org/wiki/Hussein_Kamel
விக்கிபீடியா சுட்டிகளையே தருகிறேன் என்று நினைக்க வேண்டாம். நீங்கள்
அமீரகத்தில் வசிப்பதால், அங்கு
யாராவது இராக் அகதிகளிடம் நேரில் விசாரித்துப்
பாருங்கள். வன்கொடுமைகள் என்றால் என்னவென்று அனுபவபப்பட்டவர்கள்
சொன்னால் தெரியும்...
சதாமின் மகள்கள் மற்றும் மனைவியர் பத்திரமாக
இருக்கின்றனர். மகன்கள் இருவரும் போரில் அல்லது என்கவுன்டரில்
கொல்லப்பட்டனர். சதாம், தன் இரு மருமகன்களையும் எந்த முறையில் கொன்றானோ,
அதே முறையில் தான் அவனின் இரு மகன்களும்
சண்டையில் கொல்லப்பட்டனர், சரணடைய
மறுத்தால்
http://en.wikipedia.org/wiki/Uday_Hussein#Allegations_of_crimes_or_misconduct
காலின் கிளார்க் அவர்களின் கருத்துக்களுக்கு மாற்று இதோ :
http://www.atimes.com/atimes/Middle_East/HC10Ak01.html
http://www.econbrowser.com/archives/2006/01/strange_ideas_a.html
http://www.atimes.com/atimes/Middle_East/HA21Ak01.html
http://en.wikipedia.org/wiki/Petrodollar_warfare#Critical_views
2000 தேர்தலில் சொற்ப வாக்குகளில் அல் கோர் (டெமொக்ரட் கட்சி)
தோற்க்காமல் வென்றிருந்தால், கண்டிப்பாக ஈராக் மீது
படை எடுத்திறுக்கமாட்டார்கள்..
டாலர் உலக வர்த்க கரன்சியாக தொடர்வதும், சதாமின் முயற்சிகள் பற்றியும்,
பொருளாதார நிர்பந்தங்கள் எந்த
அளவு அமெரிக்காவை இராக் போரை துவக்க
காரணியாக இருந்தன என்பது பற்றியும் மிக மிக
தெளிவாக, ஆதாரபூர்வமான சுட்டி இது :
பொறுமையாக, முழுசா படித்து பாருங்கள்..