Saturday, October 18, 2008

கீதாசாரம் : 'எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது' !

கீதாசாரம்

எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ,
அதுவும் நன்றாகவே நடக்கும்
உன்னுடையதை எதை நீ இழந்தாய்?
எதற்காக நீ அழுகிறாய்?
எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு?
எதை நீ படைதிருந்தாய், அது வீணாவதற்கு ?
எதை நீ எடுத்து கொண்டாயோ,
அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
எதை கொடுத்தாயோ,
அது இங்கேயே கொடுக்கப்பட்டது.
எது இன்று உன்னுடையதோ
அது நாளை மற்றொருவருடையதாகிறது
மற்றொரு நாள், அது வேறொருவருடையதாகும்.

வ‌ராக்க‌ட‌னை கொடுத்த‌ அன்ப‌ர்க‌ள் இதை பார்த்து பெருமூச்சு விட்டு
ஆறுத‌ல்டைய‌வ‌து எங்க‌ ஊர் வ‌ழ‌க்கம். அத்தனை Finance கம்பேனிகளிலும்
இது ஃபேரெம் செய்து மாட்டப்பட்டிருக்கும்.

அமேரிக்காவிற்க்கும் இதை ஏற்றுமதி செய்யாலாமே ? !!

:))

8 comments:

  1. //அமேரிக்காவிற்க்கும் இதை ஏற்றுமதி செய்யாலாமே ? !!//

    good idea...

    ReplyDelete
  2. :-))

    ஏதோ ஆன்மீகம் எழுதுகிறீர்களோ என்று பயந்துவிட்டேன்.

    சூப்பர்.

    ReplyDelete
  3. நானும் இதே போன்ற பதிவு ஒன்றில் ஏற்கனவே சொல்லி இருக்கிறேன்

    'எதைக் கொண்டுவந்தாய், எதனை இழக்கிறாய் ?'

    'நீ எதைக் கொண்டு வந்தாயோ...அதை,
    நீ பங்கு சந்தையிலிருந்தே கொண்டு வந்தாய்'

    'இன்று உன்னுடையதாக இருப்பது... பங்கு பரிவர்த்தனை முடிந்த பிறகு
    ஒன்றும் இல்லாமல் ஆகிவிடும்'

    என்பதாக கீதாச்சாரத்தை சற்று மாற்றி அமைத்துக் கொண்டு ஆறுதல் அடையலாம்

    ReplyDelete
  4. எழுத்துப் பிழை. நானும் எத்தனையோ முறை, எத்தனையோ இடங்களில் பார்த்திருக்கிறேன். ஒரு தடவை கூட பிழை இல்லாமல் இல்லை. இங்கேயும் சேர்த்து.

    ReplyDelete
  5. அதியமான் சார் நீங்க தூக்கி பிடித்த "தனியார்மயம்,தாராளமயம்,உலகமயம்"

    என்னும் மண்குதிரை " கீழேதள்ளி குழியும் பறித்து விட்டதே"

    உங்கள் பதில் என்ன?

    ReplyDelete
  6. வாங்க கோவியார்,

    'Great minds think alike'
    என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு !!
    :))

    இது தற்புகழ்ச்சியா அல்லது வஞ்சப் புகழ்ச்சியா என்று சொல்லுங்களேன் ?

    :))))

    ReplyDelete
  7. நன்றி தமிழ்மணி அவர்களே. ஆன்மீகத்திலும், ஜோதிடத்திலும் எமக்கு ஈடுபாடு உண்டுதான்.

    ReplyDelete
  8. Ramana,

    too simplisitic. pls see

    athiyaman.blogspot.com for engish posts

    if US and world markets really collapses then this free email and
    blogger is over for good ramana. ok

    :)))

    ReplyDelete