எழுதும் நணப்ர் மதிமாறன் அவர்களுக்கு ஒரு திறந்த மடல் :
http://mathimaran.wordpress.com/2008/08/04/
நண்பர் மதிமாறன் அவர்களே,
எனது முந்தைய பின்னோட்டங்களை நீங்கள் ஏன
வெளியிட மறுக்குறீர்கள் என்று புரியவில்லை.
இறுதியாக ஒரு கருத்து :
பார்பன சேவை என்றால் என்ன ? அது என்ன என்பதை
பற்றி உங்கள் கருத்துக்கள்தாம் இறுதியானது என்று
கருதினால் அது பகுத்தறிவல்லவே.
///தான் சம்பாதித்த பணத்தை எல்லாம் கிட்டப்பாவின்
முதல் குடும்பத்தாரிடம் இழந்தார். வறுமையில் சிக்கினார். மீண்டும்
பார்ப்பன சேவையில் ஈடுபட்டு வசதியான
நிலைக்கு உயர்ந்தார்.////
இது சற்றும் நாகரீகமில்லாத கருத்துக்கள். கே.பி.எஸ்
அவர்களின் முழு வாழ்க்கை வரலாற்றையும்
படித்திருக்கிறீர்களா. 3, அல்லது 4 நூல்கள் வந்துள்ளன.
சென்ற ஆண்டு உயிர்மை இதழிலும் வந்துள்ளது.
அவர் கிட்டப்பாவை மனதார காதலித்தார். நேசித்தார்.
அது உங்களுக்கு பார்பன சேவையாக தெரிகிறதா ?
காதல், அன்பு, சுயனல்லமில்லாமல் வாழ்தல் :
இவை பற்றி உங்களுக்கு எதாவது தெரியுமா ? கிட்டப்பா
அவரை சரியாக நடத்தவில்லை. குடித்து அழிந்தார்.
இரண்டாவது திருமணம் புரிந்தது தவறான செய்ல்தாம். (கலைஞர்கள்
வாழ்வில் இன்றும் இது ஒரு சாபக்கேடுதான்). ஆனால் கே.பி.எஸ் அவர்கள்
கடைசி வரை மிக மிக
அன்புடன், பரந்த மனத்துடன் இருந்தார். அது ஒரு குற்றமா
என்ன ? கிட்டப்பா பிறப்பால் ஒரு பார்பனர். ஆனால் ஒரு மகத்தான
பாடகர். அவரின் சாதனைகள் மறுக்கப்பட கூடியன அல்லவே.
கே.பி.எஸ் கிட்டப்பாவின் மறைவிற்க்கு பிறகும் அவரின் பெற்றோரை பேணி
உதவினார் என்பது உங்களுக்கு தெரியுமா? பந்தம், பாசம், நேசம் :
இவற்றை தயவு செய்து கொச்சை படுத்தாதீர்கள்..
கே.பி.எஸ் கரூர் அருகே உள்ள கொடுமுடியில் பிறந்து
பிறகு கரூரிலும் வாழ்ந்தார். அவரின் தம்பி என்
தகப்பனாரின் நண்பர். (நாங்களும் கரூர் தான்). கே.பி.எஸ்
அவர்களின் தங்கை பேரன் இங்கு சென்னையில் தான்
இருக்கிறார். எனது இனிய நண்பர். நல்ல பாடகர். சிறிதும்
இங்கிதம், பண்பு இல்லாத உங்கள் 'தனி வாழ்க்கை
விமர்சனம்' மிகுந்த வருத்தையே அளிக்கிறது.
நானும் ஒரு சுயமரியாதை குடும்பத்தில் பிறந்தவன்தான். பெரியாரிய,
மார்க்ஸிய கருத்துக்களை படித்து வளர்ந்தவன்
தான். இன்று கருத்துகள் சிலவற்றில் மாற்றம்
கொண்டுள்ளேன். ஆனால் உண்மையான பார்பனியம்
என்றால் என்ன என்று எமக்கும் தெரியும்.
பெரியார் / அம்பேத்கார் இருவரையும் பற்றி உங்கள்
பாணியில் விரிவாக எழுத முடியும்தான். அவர்கள் செய்த தவறுகள்
அல்லது கூறிய ஒரு சில கருத்துக்களை
'மட்டும்' வைத்து கொண்டு அவர்கள் தேச பக்தி
இல்லாத துரோகிகள் என்று வாதாடலாம். ஆனால் அது
சரியான / முழுமையான வாதமாக இருக்க முடியாது.
பெரியாரும் சில இடங்களில் / தருணங்களில் தவறு
செய்துள்ளார். உ.ம் : 1968 டிசம்பரில் கீழ்வெண்மணி
கிராமத்தில் பல தாழ்த்ப்பட்டவர்கள் உயிருடன் கொளுத்தப்பட்டனர். அதை
கண்டிக்கும் விசியத்தில்
மழுப்பலாக இருந்தார். காரணம் அன்று அண்ணா
முதல்வர். அர்சுக்கு பெரிய பிரச்சை வராமல்
ஜாக்கிரதையாக கையாண்டார் என்றும் கொள்ளாம்.
(இதை பற்றிய சுட்டிகள் சுகுணா திவாகர் வ்லைபதிவர்
தந்தார். அவர் ஒரு மிக ஆழமான பெரியாரிஸ்ட் தான்).
1930இல் ஒரு கூட்டத்தில் சமூக போராட்டதிற்க்க ஒரு
முக்கிய தீர்மானம் போட்டு பிறகு அதை அப்படியே அம்போவென்று விட்டுவிட்டு
வெளினாடு பயணம்
செய்தார். (ஆதரம் : அ.அய்யாமுத்து : எனது நினைவுகள்) ;
அதே போல் அம்பேத்கார் பற்றி அருண் சோரி எழுதிய
புத்தகம் பார்க்கவும்.
இதை எல்லாம் ஏன் எழுதிகிறேன் என்றால், ஒரு சில
நிகழ்வுகள் / கருத்துக்களை 'மட்டும்' வைத்துக்கொண்டு
ஒரு தலைவரை பற்றி இறுதி முடிவு (final assesment)
செய்வது தவறு. பெரியாரின் சாதணைகள் முன் இவை
சிறு விசியங்கள் தான்.
அதே போல் தான் அனைத்து மனிதர்களையும் எடை போட வேண்டும்.
பெரியாரும் அம்பேத்காரும் சமூக பிரச்சனைகள் (சாதியம்)
முதலில் தீர்க்காமல் சுதந்திரம் கூடாது என்றனர். ஆகஸ்டு
15 அய் கருப்பு தினமாக பெரியார் கருதினார். (அண்ணா
அவ்வாறு நினைக்கவில்லை. இதில் பெரியாருடன் முரண்
பட்டார்)
இந்தியா சுதந்திரம் அடைந்தால் ஆங்கிலேயன் இடத்தில்
வைதீக பார்பனர்கள் அமர்ந்து பார்பானியம்
வலுவடைந்துவிடும் என்று தவறாக முடிவு கட்டினார்.
ஆனால் நடந்தது வேறுதான். பார்பனியம் 1947க்கு பின் வலுவிலந்தது.
பிற்படுத்தப்பட்ட / தாழ்த்தப்பட்ட மக்களுக்கு
முன்பு எப்போதும் இல்லாத அளவு முன்னேர வாய்ப்பு
கிடைத்தது. இட ஒதுக்கீடு, இலவச கல்வி, சுயமரியாதை
திருமணங்கள் போன்ற பல விசியங்களுக்கு அரசின்
ஆதரவும். சட்ட ரீதியான அங்கீகாரமும் கிடைத்தது..
எந்த ஒரு தலைவரும் அனைத்து விசியங்களிலும்
சரியான நிலைபாட்டை / கருத்தை வாழ்க்கை முழுவதும் கொள்வது மிக கடினம்.
தவறுகள் சகஜம்.
உலகில் எங்காவது 100 % perfect leader இருந்துள்ளரா
என்ன ? சாத்தியம் இல்லை.
நண்பர் மதிமாறன்,
ReplyDelete'பார்பனவாதி' தீரர் சத்தியமூர்த்திக்கு ஆதரவாக, அவரின் கூட்டங்களில் தேசிய கீதங்கள் பாடினார் என்பதால் அவரை ஒரு பார்பன அடிவருடி என்கிறீர்கள். சரி,
உங்க லாஜிக் படி பார்தால், காமராஜரை என்னவென்பது. சத்தியமூர்த்தியின் சீடர் அவர். சத்தியமூர்த்தியே தனது அரசியல் குருவாக ஏற்றவர். அவரின் நினைவை போற்றி புகழ்ந்தார். அதானால் காமராஜரும் ஒரு 'பார்பன அடிவருடியா' ?
இது தர்க்கம் அல்ல. குதர்க்கம்...
அதியமான்,
ReplyDeleteபெருமால் கோவில் கருட சேவைதான் கேள்விப்பட்டு இருக்கிறேன்.
athi,ur standard on everything is really nice.we shud not write abt the bad things here.bloggingla ethuvenalum aiduchu.its really a shame to write bad things abt a past actress.
ReplyDeleteமதிமாறன் அல்ல அவர்..!! மதி மறன்..!! விஷயங்களில் எல்லாம் விஷத்தை மட்டும் பார்க்கும் அவரது எழுத்துகளுக்கு மதிப்பளிப்பதே தவறு. கேபிஎஸ் அவர்களின் சேவை நாடறியும். ஒரு மதிமாறனால் விதி மாறாது. விட்டுத்தள்ளுங்கள் அதியமான் இவருக்கெல்லாம் மடலெழுதி நேரத்தை வீணாக்காதீர்கள்..!!
ReplyDeleteஜோதிட ஆராய்ச்சியில் தன்னை ஈடுபடுத்தி அது ஒரு பொய் என்று நிருபித்து கொண்டிருக்கும் அதியமான் அவர்களே உங்கள் பகுத்தறிவிற்கு என் முதல் வணக்கம் . பார்பன சேவை என்றால் என்னவென்று தெரியாமல் நீங்கள் முஸ்லீம் சமூகம் உருபடுவத்ர்கு யோசனை சொல்கிறீர்கள் . இதற்கு பெயர் தான் பார்பன சேவை . உங்கள் சேவை அவர்களுக்கு தேவை . இதை படித்தால் உங்களுக்கு ரொம்ப சங்கடமாக இருந்தால் அதே சங்கடம் உங்கள் கட்டுரையை படிக்கும் பொது எனக்கும் ஏற்பட்டது . கே.பி. சுந்தராம்பாள் என்று ஒருவருக்காக நீங்கள் பெரியாரையும் அம்பேத்காரையும் சுட்டி காட்டுவது பெரும் சந்தர்பவாதமாக தெரியவில்லை ?
ReplyDelete