Friday, November 21, 2008

எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன்

விஷ்ராந்தி முதியோர் இல்லத்தில் தற்போது இருக்கும், எழுத்தாளர் ராஜம்
கிருஷ்ணன் அவர்களை சந்தித்து, சுமார் 2.5 மணி நேரம் உரையாடினேன். மறக்க
முடியாத சந்திப்பு.
அவரின் வய‌து 83..

தன் நீண்ட வாழ்க்கை பயணத்தை பற்றி பல விசியங்கள் சொன்னார். முசிறியில்
பிறந்து, பள்ளி இறுதி வரை மட்டும் படித்து, காவேரி நதியில் விளையாடி
வளர்ந்தவர். பல மொழிகளையும், இலக்கியங்களையும் சுயமாக கற்றவர்.

செக்கோஸ்லோவோக்கிய, ரஸ்ஸியா பயண அனுபவங்களை பற்றி கூறினார். பெண்ணியம்
பற்றி அந்த காலத்தில் இருந்து நிலை பற்றி, படுகர்கள் மற்றும் பழங்குடி
மக்களின் வாழ்க்கை, கலாச்சாரம் பற்றி ஆய்வு செய்ய தாம் கடும்
பிரயத்தனத்துடன் செய்த முயற்சிகள் பற்றி கூறினார்.

எழுத்தாளர்கள் அம்பை, ஜெயகாந்தன், சுந்திர ராமசாமி, சுஜாதா, மேலும் பலரை
பற்றி பேசினார்.

தனது படைப்புகளான : ஆன்டி உடோபியா (Anti-Utopia), வேருக்கு நீர்,
டாக்டர் ரங்காச்சாரியின் வாழ்க்கை வரலாறு, பாரதி பற்றிய ஆய்வுகள்
குறித்து விரிவாக பேசினார்.

அவருக்கு குழந்தைகள் இல்லை. கணவரும் காலமாகிவிட்டார். இருந்த வீட்டை
விற்ற பின் கிடைத்த பணத்தை, உறவினர் ஒருவர் ஏமாற்றி அபகரித்துவிட்டு அவரை
அனாதரவாக தவிக்க விட்டுவிட்டார். காவல் துறை உயர் அதிகாரி திலகவதி
(அவரும் ஒரு எழுத்தாளர் தான்) இவரை மீட்டு, விசராந்த்தி முதியோர்
இல்லத்தில் சேர்த்தார்.

கொடுமையான நிலை...

மின் தமிழ் இழையில் தமிழ் தேனி அவர்கள் எழுதியது :

http://groups.google.co.in/group/minTamil/browse_thread/thread/b4012b9cbd32abd0/65f0b80ed463fd25?hl=en#65f0b80ed463fd25

4 comments:

  1. she was a professor or principal in a city college!
    am i right?

    ReplyDelete
  2. திராவிடவெறியர்களின் ஆட்சிதான் இதற்கு காரணம்

    ReplyDelete
  3. கேட்பதற்கு படிப்பதற்கு வருத்தமாக இருக்கிறது.

    இன்றும், பெரும்பாலான எழுத்தாளர்கள், திரை பட நடிகர்கள், நடிகைகள் இறுதி காலங்களில் கஷ்ட படுகின்றனர்.

    நிஜ வாழ்க்கையையும் அவர்கள் கதை, திரைப்படம் போல நினைத்துக் கொள்கிறார்கள் போல.

    எஸ் ராமகிருஷ்ணன் எழுதும் பெரும்பாலான எழுத்தாளர்கள் வறுமையிலேயே உள்ளனர். தமிழ் எழுத்து காசு தராது போல.அல்லது சம்பாதித்த காசை சேமிக்க தெரிய வில்லையா இவர்களுக்கு என்று தெரிய வில்லை.

    இன்றைய எழுத்தாளர்களுக்கு இது ஒரு பாடம்.

    குப்பன்_யாஹூ

    ReplyDelete