என்று தோழர்கள் சொல்கிறார்களோ அதே போல்தாம்
அமெரிக்கா உண்மையான சுதந்திர பொருளாதார
கேபிடலிசத்தின் சின்னம் அல்ல. நார்வே, ஜெர்மனி
போன்ற நாடுகளை சொல்லாம்.
அமெரிக்காவின் பல போர்கள் மற்றும் ஆதிக்கம் செலுத்த முயற்சிகள் : இவை
அமெரிக்கா பற்றிய ஒரு வெறுப்பை பெரும்பாலோனவர்ககளிடம் தோற்றுவித்து
உள்ளதுதான்.
கோல்ட் வார் எனப்படும் மறைமுக யுத்தம் சுமார் 45 வருடகாலாம் அமெரிக்கா
மற்றும் இதர ஜனனாயக முதலாளித்துவ நாடுகளுக்கும் சோவியத் ரஸ்ஸியா
மற்றும் அதன் துணை (அல்லது அடிமை) நாடுகளுக்கும்
இடையே நடந்தது. இதன் அடிப்படையில்தாம்
அமெரிக்காவின் செய்ல்களை எடைபோட வேண்டும்.
இன்று அனைவரும் சோவியத் ரஸ்ஸியா, கிழக்கு அய்ரோப்பாவில் (செக், ஹங்கேரி,
போன்றவை) மற்றும் ஆஃப்கானிஸ்தான், எகிப்து, சிரியா போன்ற நாடுகளில் செய்த
ஆதிக்கத்தை மற்றும் அயுத சப்பளை மற்றும் உதவிகளை மறந்து விட்டார்கள்.
அதற்க்கு மாற்றாக அமெரிக்கா மற்றும் நேடொ நாடுகள் அதே பாணியில்
செயல்பட்டன. இரண்டும்
ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்தாம். இஸ்ரேல்
உருவாக்கப்பட்ட அய்.நா சபை ஓட்டேடுப்பில் காம்ரேட் ஸ்டாலினின் சோவியத்
ரஸ்ஸியாவும் இஸ்ரேலுக்கு
ஆதரவாக 1948இல் வாக்களித்தை காம்ரேடுகள் இன்று சொல்லுவதில்லை. இஸ்ரேலை
அடியோடு அழிக்க
எகிப்த்து மற்றும் இதர அரேபிய நாடுகள் கடும் முயற்சி
செய்த போது அமேரிக்கா இஸ்ரேலை ஆதரித்தது. இதற்க்கு போட்டியாக பின்னர்
ரஸ்ஸியா எகிப்த் மற்றும் சிரியாவை கண்மூடித்தனமாக ஆதரித்தது. இதன்
விளைவுகள் இன்றும் தொடர்கிறது.
அமெரிக்க செய்வதை நியாப்படுத்தவில்லை.
தெளிவுபடுத்துகிறேன்.
1990களில் பழைய யூகொஸ்லோவிய பகுதிகளில்
கிருஸ்தவ செர்பியா இஸ்லாமிய போஸ்னியர்களை
கொன்றழித்து செய்தது. உலக நாடுகள் அனைவரும்
(ரஸ்ஸியா நீங்கலாக, ஏனெனில் அவர்கள் செர்பியர்களின்
உடன் பங்காளிகள்) செர்பியாவை கண்டித்தன. அய்.நாவில் நியாயம்
கிடைக்காமல் ரஸ்ஸியா வீட்டோ அதிகாரத்தை உபயோகித்தது. இனப்படுகொலை
(இதில் கவனிக்க வேண்டிய விசியம் : இஸ்லாமியர்கள் பெரும் அளவில்,
கிருஸ்துவ செர்பியர்களால், கொடியவன் மிலாஸவிச் தலைமையில்
கொல்லப்பட்டனர்) தொடர்ந்தது. சாம, பேத, தான், தண்டம் :
இவை அனைத்தையும் நேடோ நாடுகள் பயன்படுத்தி
கடைசியில் 1999இல் செர்பியா மீது கடும் குண்டு மழை
பொழிந்து அதன் பொருளாதாரத்தையும், ராணுவ அணிகளன்களையும் அழித்து,
செர்பியாவின்
கொடுங்கோல்களை நிறுத்தியது. அப்போதும் அமெரிக்க எதிர்பாளர்கள்
வழக்கம் போல் 'எதிர்த்தனர்.'
http://en.wikipedia.org/wiki/Bosnian_War#War_crimes
அது ஒரு இனப்படுகொலை. ethnic cleansing.
http://en.wikipedia.org/wiki/Bosnian_Genocide
இஸ்லாமிய மக்களுக்கு எந்த அரசியல் நோக்கம்
இல்லாமல் மனிதாபிமான அடிப்படையில் அமெரிக்காவும்,
இதர நெடோ நாடுகளும் 1999இல் உதவின. கிருஸ்துவ செர்பியர்களின் ஆதிக்கத்தை
எதிர்த்து..
அமெரிக்கா இஸ்லாமியர்களுக்கு எதிரானது அல்ல
என்பதை நிருப்பிக்க இதை பெரிதாக பிராச்சரம்
செய்திருக்க வேண்டும். பல ஆண்டுகளுக்கு முன் நான்
அமெரிக்க வெளியுறவு துறைக்கு இந்த 'பிரச்சார' அவசியம்
பற்றி ஒரு மின்மடல் அனுப்பினேன். !!
1979வரை ஆஃப்கானிஸ்தான் ஒரு அமைதியான,
வளமான நாடாகாக இருந்தது. இஸ்லாமிய தீவிரவாதம்,
அல் கொய்தா, தலிபான் எல்லாம் இல்லை. அமைதியான
மக்கள், நிம்மதியாக வாழ்ந்தனர். சோவியத் ரஸ்ஸியா
தன் தென் எல்லையில் அமைந்த நாடானான ஆஃகானிஸ்தானுக்கு 'புரட்சி' அய்
'ஏற்றுமதி' செய்ய
முயன்று, இறுதியில் படை எடுத்தது. ஆஃப்கானிஸ்தானுகு
அன்று பிடித்தது சனி. ரஸ்ஸிய ஆக்கிரமிப்பை, கடும் அடக்குமுறைகளை
எதிர்க்க முஜாகுதின் படைகளை பாக் உதவியுடன் அமெரிக்கா ஊக்குவித்தது. பின்
லேடன்
சவுதியில் இருந்து ஆஃப்கானிஸ்தான் சென்று, அமெரிக்க உதவியுடன்
ர்ஸ்ஸியார்களை எதிர்த்து போராடினார்.
பாகிஸ்தான் அமெரிக்காவிற்கு முக்கிய நேச நாடு
மற்றும் தளமாக, ரஸ்ஸியர்களை எதிர்க்க ஒரு தடுப்பரணாக இருந்த்து. 10
ஆண்டுகளில் ரஸ்ஸியா தோற்று பிறகு
1991இல் வீழ்ந்தது. ஆனால் கிணறு வெட்ட பூதம்
கிளம்பிய கதையாக, இஸ்லாம் பெயரில் ஊக்குவிக்கப்பட்ட முஜாகுதீன் மற்றும்
பின் லேடன் பலமாக வளார்ந்து
இன்றும் பெரும் பிரச்சனையாக, ஆஃப்கானிஸ்தானுக்கும்,
உலகத்திற்க்கும் விளங்குகிறது.
அதே போல் 1979 வரை ஈரான் மன்னர் ஷா ஆட்சியில்
அமெரிக்க ஆதரவாளியாக, (அதாவது ரஸ்ஸிய எதிர்பில்) அமைதியாக இருந்த நாடு.
அயோத்துள்ளா கோமெனியின்
'புரட்சி' 1979இல் உருவாகி இஸ்லாமிய அரசு உருவாகி, அமெரிக்கர்களை
ஈரானிலிருந்து துரத்தி, அன்றிலிருந்து
ஈரான் ஒரு அமெரிக்க 'எதிர்பாளாராக' வளர்ந்தது. மதவாத தீவிரவாத்தை
ஊக்குவிக்கும் நாடாக உருமறியது. ஈராக்கின்
சர்வாதிகாரி சதாம் ஒரு கொடுங்கோலந்தான். அவன் தன் மக்களை, பல லச்சம்
பேர்களை ஈவிரக்கமில்லாமல்
கொன்றவன். எதிர்தவர்களை எல்லாம் பூண்டோடு அழித்தவன். ஆனாலும் அவன் ஒரு
மதசார்பற்றவன். மேலும் இஸ்லாமிய மதவாதிகள் வலுவாகா இராக்கில்
உருமாறினால், தன் அதிகாரத்திற்க்கு ஆபத்து என்று ஜாக்கரதையாக இருந்தான்.
மேலும், அரேபிய சன்னி முஸ்லிமான சதாம், இராக்கின் பெருவாரியான ஷியா
பிரிவு இஸ்லாமியர்களை
இரும்புக்கரம் கொண்டு அடக்கி வைத்திருந்தான். ஈரானில் உருவான ஷியா
மதவாதம் மற்றும் வளர்சி ,இராக்கில்
உள்ள பெருவாரி மக்களான ஷியாக்களையும் ஈர்த்து தன் அதிகாரத்திற்க்கு
ஆபத்து வரும் என்று நினைத்து 1980இல்
ஈரான் மீது படை எடுத்தான். 8 ஆண்டுகள் கடும் போர்.
பெரும் உயிர்பலி மற்றும் சேதம். 'எதிரிக்கு எதிரி நண்பன்'
என்ற (முட்டாள்தனமான, விவேகமில்லாத) தத்துவத்தின் அடிப்படையில் அமெரிக்கா
சதாமை ஊக்குவித்து
உதவியது. பிறகு அனுபவித்தது, வழக்கம் போல்!!
1990இல் சதாம் திவால் நிலைக்கு தள்ளப்பட்டதால்,
எண்ணை வளம் மிகுந்த சிறிய நாடான குவைத் மீது
படை எடுத்து ஆக்கிரமித்தான். சவுதி மீதும் படை
எடுப்பேன் என்று மிரட்டினான். உடனே அமெரிக்கா
மற்றும் அதன் நேச நாடுகள், விரைவாக களத்தில்
இறங்கி, கடும் போரில் ஈடுபட்டு குவைத்தை
விடுவித்தன. 1991இன் ஆரம்பத்தில் குவைத்தை
முற்றாக விடுவித்த அமெரிக்க மற்றும் இதர
படையுனர், ஒரு முக்கிய காரணத்திற்காக சதாமை
அழிக்காமல், ஈராக்கின் ராணுவ பலத்தை முற்றாக
அழிக்காமல், வேண்டும் என்றே விட்டு வைத்தனர்.
வலுவான மதவாத ஈரானை எதிர்காலத்தில் தடுக்க
ஒரு அரணாக ஒரு வலுவான் ஈராக் தேவைபட்டது.
(to maintain the 'balance of power' and to contain Iran. Strategic
calculations...)முக்கியமாக சதாம் போன்ற ஈரானை
எதிர்க்கும் ஒரு சர்வாதிகாரி தேவை பட்டது.
இல்லாவிட்டால் 1992இல் லேயே சதாமின் கதை
முடிந்திருக்கும்.
வழக்கம் போல அமெரிக்கர்கள் தப்புகணக்கு
போட்டனர். சதாம் அணு ஆயுதங்கள் மற்றும்
பேரழிவு ஆயுதங்களை குவிப்பதாக பலமான
சந்தேகம். பொருளாதார தடை. இருந்தும் ஒரு
வில்லனை ஒழிக்க காரணாங்கள் அதிகம் இன்று
புஸ் ஜூனியர் அன்ட் கம்பேனி படை எடுத்து
இன்று மாட்டியுள்ளனர். அதே தப்புக்கணக்குதான்.
தலைவலி போய் திருகுவலி வந்த வரலாற்றில்
இருந்து இன்று வரை அமெரிக்கர்கள் ஒரு
பாடமும் கற்றதாக தெரியவில்லை.
ஈராக் படை எடுப்பில் சதாம் மற்றும் அவனின்
ஃபாத்தா கட்சி அழிக்கபட்டது மிக சரியான,
நல்ல விசியம். அத்தோடு அமெரிக்கர்கள்
வெளியெறி, அங்கு இனச்சண்டை (ஷியா, சன்னி
மற்றும் குர்த் இனதவர்களுக்குள்) உருவாகாமல்
இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்தான்.
சதாம் ஹூசைன் சுமார் 24 வருடங்கள் ஈராக்கை
ஆண்ட கொடியவன். கண்டிப்பாக ஒரு ஹீரோ
அல்ல. குர்த் இன மக்கள் மீது விச வாய்வை
செலுத்தி கொன்றவன். மிக மிக குரூரமான கொடுங்கோலன்.அவனை பற்றி முழு விவரங்கள்
அறிய :
http://www.hrw.org/reports/1993/iraq/
http://en.wikipedia.org/wiki/Human_rights_in_Saddam%27s_Iraq
http://www.amnesty.org/en/library/info/MDE14/008/2001
ஆனால் அவன் ஒரு மதவாதி அல்ல. செக்யூலார்
கொடுங்கோலன் :
http://en.wikipedia.org/wiki/Saddam_Hussein#Secular_leadership
http://en.wikipedia.org/wiki/Al-Anfal_Campaign
http://en.wikipedia.org/wiki/Al-Anfal_Campaign#Violation_of_human_rights
http://en.wikipedia.org/wiki/Halabja_poison_gas_attack
......Various U.S. diplomats and intelligence officials have asserted
that Saddam was strongly linked with the CIA, and that U.S.
intelligence, under President John F. Kennedy, helped Saddam's party
seize power for the first time in 1963.[15][16]
Saddam Hussein in the past was seen by U.S. intelligence services as a
bulwark of anti-communism in the 1960s and 1970s.[16] His first
contacts with U.S. officials date back to 1959, when he was part of a
CIA-authorized six-man squad tasked with ousting then Iraqi Prime
Minister Abdul Karim Qassim.[17]
.....
http://www.guardian.co.uk/world/2002/oct/24/iraq.comment
சாதாம் ஹூசெனின் மகன்களும் கொல்லப்பட்டதை
பற்றி எழுதியிருந்தீர்கள். அவர்கள் இருவரும் செய்த
கொலைகள், ரேப்கள் மற்றும் அட்டூலியங்கள் பற்றி
ஒரு புத்தகமே எழுதலாம்.
பார்க்க :
http://en.wikipedia.org/wiki/Uday_Hussein
http://en.wikipedia.org/wiki/Qusay_Hussein
மருமகன் :
http://en.wikipedia.org/wiki/Hussein_Kamel
விக்கிபீடியா சுட்டிகளையே தருகிறேன் என்று நினைக்க வேண்டாம். நீங்கள்
அமீரகத்தில் வசிப்பதால், அங்கு
யாராவது இராக் அகதிகளிடம் நேரில் விசாரித்துப்
பாருங்கள். வன்கொடுமைகள் என்றால் என்னவென்று அனுபவபப்பட்டவர்கள்
சொன்னால் தெரியும்...
சதாமின் மகள்கள் மற்றும் மனைவியர் பத்திரமாக
இருக்கின்றனர். மகன்கள் இருவரும் போரில் அல்லது என்கவுன்டரில்
கொல்லப்பட்டனர். சதாம், தன் இரு மருமகன்களையும் எந்த முறையில் கொன்றானோ,
அதே முறையில் தான் அவனின் இரு மகன்களும்
சண்டையில் கொல்லப்பட்டனர், சரணடைய
மறுத்தால்
http://en.wikipedia.org/wiki/Uday_Hussein#Allegations_of_crimes_or_misconduct
காலின் கிளார்க் அவர்களின் கருத்துக்களுக்கு மாற்று இதோ :
http://www.atimes.com/atimes/Middle_East/HC10Ak01.html
http://www.econbrowser.com/archives/2006/01/strange_ideas_a.html
http://www.atimes.com/atimes/Middle_East/HA21Ak01.html
http://en.wikipedia.org/wiki/Petrodollar_warfare#Critical_views
2000 தேர்தலில் சொற்ப வாக்குகளில் அல் கோர் (டெமொக்ரட் கட்சி)
தோற்க்காமல் வென்றிருந்தால், கண்டிப்பாக ஈராக் மீது
படை எடுத்திறுக்கமாட்டார்கள்..
டாலர் உலக வர்த்க கரன்சியாக தொடர்வதும், சதாமின் முயற்சிகள் பற்றியும்,
பொருளாதார நிர்பந்தங்கள் எந்த
அளவு அமெரிக்காவை இராக் போரை துவக்க
காரணியாக இருந்தன என்பது பற்றியும் மிக மிக
தெளிவாக, ஆதாரபூர்வமான சுட்டி இது :
பொறுமையாக, முழுசா படித்து பாருங்கள்..
////சரி அமெரிக்காவை விடுங்கள். இன்றய ஜெர்மனி பற்றி பேசுவோமே. இரு உலக்ப்போர்களை ஆரம்பித்து பின், சர்வ நாசம் அடைந்த ஜெர்மனி, 1945க்கு பின் எந்த ஒரு வெளி விவாகரத்திலும் தலையிடாமல், தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கிறது. அய்ரோப்பாவின் முதன்மையான பொருளாதார நாடாக வளம் பெற்றுள்ளது. சுந்திர பொருளாதார கொள்கைகள் தாம். அமெரிக்கவின் வாழ்க்கை மற்றும் பொருளாதார முறைகளுக்கு ஏறக்குறைய இணையானது. உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார வல்லரசு.
ReplyDeleteகடும் பாடம் கற்று கொண்டதால் கடந்த 63 வருடங்களாக எந்த சர்வ தேச விசியத்தில் ஒரு கருத்து கூட சொல்வதில்லை. தலையிடுவதில்லை. ஆதிக்கம் செலுத்த முயல்வதில்லை. அங்கு வாழ்க்கை தரம் மிக மிக உயர்ந்தது. கிழக்கு ஜெர்மனி சுமார் 40 ஆண்டுகாலம் கம்யூனிச பிடியில் இருந்து தத்தளிது பின் மீண்டு வந்து, மேற்க்கு ஜெர்மனியுடன் இணைந்து இன்று வளம் பெற்றுள்ளது.
ஜெர்மனி பற்றி யாரும் விவாதம் செய்வதில்லை. ஏன் ?
சரி, இறுதியாக உங்களை போன்றவர்கள் சுதந்திர சந்தை பொருளாதரம் மற்றும் அதை செயல் படுத்தும் லிபரல் ஜனனாயகம் : இவற்றிற்கு மாற்றாக எதை வைக்கிறீர்கள் ?
கம்யூனிசத்தையா ? அல்லது இந்திய பாணி அரசாங்க சோசியலிசத்தையா (1991 வரை)? அவற்றின் விளைவுகள் தாம் பார்த்தோமே.. மனித உரிமைகளை மீறும் எந்த ஒரு அமைப்பையும் நாம் ஆதரிப்பதில்லைதான்.
சரியான மாற்றுவழிகள் சொல்லுங்களேன். நடைமுறையில் செயல்படுத்தும் வகையில்..
மார்கிசியவாதிகளுக்கு யாதர்த்தம் புரியாது (புரிய வைக்கவும் முடியாது) என்பதே எனது தனிப்பட்ட அபி.
நண்பர் ஜமாலன்,
ReplyDeleteசரி அமெரிக்காவை விடுங்கள். இன்றய ஜெர்மனி பற்றி பேசுவோமே. இரு
உலக்ப்போர்களை ஆரம்பித்து பின், சர்வ நாசம் அடைந்த ஜெர்மனி, 1945க்கு
பின் எந்த ஒரு வெளி விவாகரத்திலும் தலையிடாமல், தான் உண்டு தன் வேலை
உண்டு என்று இருக்கிறது. அய்ரோப்பாவின் முதன்மையான பொருளாதார நாடாக வளம்
பெற்றுள்ளது. சுந்திர பொருளாதார கொள்கைகள் தாம். அமெரிக்கவின் வாழ்க்கை
மற்றும் பொருளாதார முறைகளுக்கு ஏறக்குறைய இணையானது. உலகின் மூன்றாவது
பெரிய பொருளாதார வல்லரசு.
கடும் பாடம் கற்று கொண்டதால் கடந்த 63 வருடங்களாக எந்த சர்வ தேச
விசியத்தில் ஒரு கருத்து கூட சொல்வதில்லை. தலையிடுவதில்லை. ஆதிக்கம்
செலுத்த முயல்வதில்லை. அங்கு வாழ்க்கை தரம் மிக மிக உயர்ந்தது. கிழக்கு
ஜெர்மனி சுமார் 40 ஆண்டுகாலம் கம்யூனிச பிடியில் இருந்து தத்தளிது பின்
மீண்டு வந்து, மேற்க்கு ஜெர்மனியுடன் இணைந்து இன்று வளம் பெற்றுள்ளது.
ஜெர்மனி பற்றி யாரும் விவாதம் செய்வதில்லை. ஏன் ?
சரி, இறுதியாக உங்களை போன்றவர்கள் சுதந்திர சந்தை பொருளாதரம் மற்றும் அதை
செயல் படுத்தும் லிபரல் ஜனனாயகம் : இவற்றிற்கு மாற்றாக எதை வைக்கிறீர்கள்
?
கம்யூனிசத்தையா ? அல்லது இந்திய பாணி அரசாங்க சோசியலிசத்தையா (1991 வரை)?
அவற்றின் விளைவுகள் தாம் பார்த்தோமே.. மனித உரிமைகளை மீறும் எந்த ஒரு
அமைப்பையும் நாம் ஆதரிப்பதில்லைதான்.
சரியான மாற்றுவழிகள் சொல்லுங்களேன். நடைமுறையில் செயல்படுத்தும் வகையில்..
மார்கிசியவாதிகளுக்கு யாதர்த்தம் புரியாது (புரிய வைக்கவும் முடியாது)
என்பதே எனது தனிப்பட்ட அபி.
நண்பர் ஜமாலன்,
ReplyDelete////காரணம், ஹிட்லரின் இனப்படுகொலையும் பயங்கரவாதமும் இஸ்ரேல்
தனிநாட்டுக் கோரிக்கையின் ஜனநாயகத் தன்மையை உலகம் புரிந்து கொள்ளவும்
ஏற்கவும் செய்தது என்பதே வரலாறு். இஸ்ரேலை தனிநாடாக அங்கீகரிப்பதில் எந்த
ஒரு அறபிய மற்றும் உலகநாடுகள் ஏன் பாலஸ்தீன விடுதலை இயக்கம் துவங்கி
ஹமாஸ்வரை பிரச்சனை இல்லை. இஸ்ரேலின் இறையாண்மையில் யாருக்கும்
ஆட்சேபனையில்லை. அதன் ஆக்ரமிப்பும் முற்றிலுமாக அறபிகளை துடைத்தெறிய
முயலும் இனவாதப்போக்கும் அதற்கு குடை பிடிக்கும் அமேரிக்க நிலையும்தான்
பிரச்சனை. சர்வதேச விதிமுறைகளக்கு புறம்பாக நடக்கும் அதன்
எதேச்சதிகாரப்போக்கும் அதற்கு துணைப்போகும் அமேரிக்காவும்தான் பிரச்சனை.
இதெல்லாம் உங்களுக்கு சொல்லனுமா?///////
மிகவும் தவறான தகவல். (இன்றைய நிலை பற்றி சொல்லபட்டது என்று
நினைக்கிறேன்) பா.ராகவன் அவர்களின் புத்தகதை இன்னும் படிக்கவில்லை.
1948 அய்.நா வாக்கெடுப்பில் இஸ்ரேல் உருவாக்கப்பட்ட பிறகு, அரேபிய
நாடுகள் அதை ஏற்க்க மறுத்து, சின்ஞ்சிறிய இஸ்ரேல் மீது 5 நாடுகளுள் ஒரே
சமயத்தில் போர் தொடுத்தன. அன்றிலிருந்து இஸ்ரேல் தன்னை காப்பற்றிக்கொள்ள
வாழ்வாதார போரில் (war for survival) ஈடுபட வேண்டிய கட்டாயம்.
http://en.wikipedia.org/wiki/Arab-Israeli_conflict
[edit] June 12, 1967-1973
In the summer of 1967, Arab leaders met in Khartoum in response to the
war, to discuss the Arab position toward Israel. They reached
consensus that there should be:
No recognition of the State of Israel.
No peace with Israel.
No negotiations with Israel.
In 1969, Egypt initiated the War of Attrition, with the goal of
exhausting Israel into surrendering the Sinai Peninsula.[43] The war
ended following Nasser's death in 1970.
On October 6, 1973, Syria and Egypt staged a surprise attack on Israel
on Yom Kippur, overwhelming the Israeli military.[44][45] The Yom
Kippur War accommodated indirect confrontation between the US and the
Soviet Union. When Israel had turned the tide of war, the USSR
threatened military intervention. The United States, wary of nuclear
war, secured a ceasefire on October 25.[44][45]
இது Golda Meir என்னும் இஸ்ரேல் பிரதமர் (முதல் பெண்மணி) அன்று கூறியது :
"The Muslims can fight and lose, then come back and fight again. But
Israel can only lose once."
இன்று பாலஸ்தீனர்களின் பக்கம் தான் நியாயம் உள்ளது. ஆனால் நேர்மை,
ஒழுக்கம் மற்றும் ஒற்றுமை இல்லாமல் அவர்கள் தொடர்ந்து துன்பத்திலேயே
வாடும் கொடுமை. பாலஸ்தீன விடுதலை இயக்கம் 1948 போரில் தோல்வி அடைந்த பின்
முதலில் ஜோர்டானில் தன் தளத்தை அமைத்து. ஆனால் நன்றி இல்லாமல் ஜோர்டானை
ஆக்கிரமிக்க முயன்றதால் அங்கிறது விரட்டப்பட்டு, பின் லெப்னானில் அதே
வேலையை செய்த்து. அதனால் ஒரு கொடுமையான உள்னாட்டு போர் லெப்னானில்
ஏற்பட்டு, பின் டுனிசியாவிற்க்கு அந்த விடுதலை இயக்கம் துரத்தப்பட்டது.
நேர்மை, நன்றி உணர்ச்சி, கட்டுப்பாடு இல்லாமல் எந்த ஒரு இயக்கமும்,
போராளி குழுவும் வென்றதாக சரித்திரம் இல்லை. பாலஸ்தீன தலைமைக்குள்
இருக்கும் ஊழல், குழுச்சண்டைகள் மற்றும் அடக்குமுறைகள் : இவை இருக்கும்
வரை விமோச்சனம் இல்லை.
நீங்கள் அமீர்கத்தில் வசிப்பதால், பாலஸ்தீனர்களின் குணநலன்கள் பற்றி
என்னை விட நன்கு அறிந்திருப்பீர்கள். (எகிப்த்தியர்கள் பற்றியும் தான்).
பல முறை கொடுத்த வாக்கை மீறி காஸா பகுதியில் இருந்து இஸ்ரேல் மீது
ராக்கேட் அடிப்பதால், வெகுண்ட இஸ்ரேல் கடுமையான தடைகளை,
எதிர்தாக்குதல்களை ஈவிரக்கமில்லாமல் செய்கிறது. இரு தரப்பினரிடமும் தவறு
உள்ளது.
சவுதி அரேபியா தான் இன்றும் பாலஸ்தீன அரசிற்க்கு ஆண்டு தோறும் பெரும்
நிதி உதவி அளித்து காப்பற்றுகிறது. ஆனால் பாலஸ்தீனர்களின் நேர்மையற்றா
ஊழல் ஆட்சி அதை வீணடித்து பாழாக்குகிறது.
பாலஸ்தீன நாட்டை இஸ்ரேல் அங்கிரத்து, ஆக்கிரமிக்க பட்ட பகுதிகளை
திருப்பிக் கொடுத்தாலும் அவர்கள் 'உருப்பட' மாட்டர்கள் என்பதே என்
தாழ்மையான கருத்து.
http://en.wikipedia.org/wiki/Israeli_settlements#Debate_on_the_settlements
கடந்த கால வரலாறு இன்றும் இஸ்ரேலை பயமுறுத்துகிறது. பகுதிகளை
திருப்பிக்கொடுத்த்டால், நாட்டை மீண்டும் அழிக்க போர் புரிவார்கள் என்ற
ஒரு பாரேனியா இன்றும் உள்ளது. ஆனாலும் இஸ்ரேல் ஒரு ஜனனாயக நாடுதான்.
அங்கு கடுமையான மாற்றுக்கருத்துகள், விவாதங்கள் மற்றும் தேர்தல் மூலம்
எதிர்கட்சிகள் ஆட்சி அமைக்க வழிமுறைகள் உள்ளன. இஸ்ரேலின் கொள்கைகளை
எதிர்க்கும் இஸ்ரேலியர்களை யாரும் துரோகிகளாக பார்பதில்லை. கொல்வதில்லை.
ஆரோக்கியமான ஜனனாயம ; பத்திரிக்கை சுதந்திரம், லிபரல் ஜனனாயகம்.
இதே போல் பாலஸ்தீனம் மற்றும் இதர அரபு நாடுகளுலும் சாத்தியாமல நல்லா
இருக்கும். பிரச்சனைகளை பேசித்தீர்த்து கொள்ளாம்.
பொதுவாத இஸ்லாமிய மற்று அரேபிய நாடுகளில் இது போன்ற அடிப்படை ஜனனாயக்
அமைப்பு சாத்தியாமா ? நீங்க தான் செல்லனும்.
எண்ணை வளம் முற்றாக தீர்ந்த உடன், இந்த பாலஸ்தீனப் பிரச்சனை
தீர்ந்துவிடும் என்று தோன்றுகிறது. சவுதி நிதி உதவி செய்வது நின்று
விடும். நிலப்பிரவுத்தவ ஆளும் கும்பல், தாம் வெளிநாடுகளில் சேமித்து
வைத்துள்ள பெரும் செல்வத்துடன் ஓடிவிடுவார்கள். பிறகு 100 ஆண்டுகளுக்கு
முன் இருந்தது போல் அரேபியர்கள் ஒட்டகம் மேய்த்து பிழைக்க வேண்டிய நிலை
வரும். போர்கள், சண்டைகள் முற்றாக நின்று போகும். அப்பவாவது அடிப்படை
ஜனனாயகம் மலருமா அங்கு ? தெரியவில்லை..
http://groups.google.co.in/group/panbudan/browse_thread/thread/a8fe1f37bbfb6912
நண்பர் ஜமாலன்,
ReplyDeleteவறுமையை ஒழிக்க மூன்று அம்சங்கள் தேவை :
1.Freee Markets
2.Welfare state
3.Good Governance
இதில் முதல் இரண்டை பற்றி போதிய விவாதங்கள், ஆய்வுகள் உள்ளன. சமீபத்தில்
தான் மூன்றாவது விசியமான நல்லாட்சி பற்றி விரிவாக அனைவரும்
பேசுகிறார்கள். சட்டம் ஒழுங்கு, நேர்மை, ஊழல் இல்லாத நிலை, திறமையான
நிர்வாகம், நியாயமான சட்டதிட்டங்கள் மற்றும் நேர்மையான, ஊழலற்ற delivery
mechanism for govt welfare programs.
இது இல்லாமல் ஒன்றும் பிரயோசனம் இல்லை. இந்தியா போன்ற நாடுகளில்
வறுமைக்கு இது தான் முக்கிய காரணி...
இறுதியாக இந்த ஒரு சுட்டியை மட்டும் பார்க்கவும் :
Ethics, Corruption, and Economic Freedom
http://athiyaman.blogspot.com/2007/05/ethics-corruption-and-economic-freedom.html
அய்ன்சிட்னின் 1933இலேயே அமெரிக்காவில் தஞ்சம் புகுந்தார். 40களில்
ReplyDeleteஅவராகவே அமெரிக்க ஜனாதிபதிக்கு அணுகுண்டு பற்றி கடிதம்
எழுதினார். நாசி ஜெர்மனி அணு குண்டை தயாரிக்க முழு மூச்சாக
முனைந்துள்ள காலம் அது. அதற்க்கு முன்பாக அமெரிக்கா அதை தயாரித்தாக
வேண்டிய கட்டாயம் இருந்தது. இல்லாவிட்டால் விளைவுகள் பயங்கரமாக
இருந்திருக்கும்.
மேலும் அய்ன்ஸ்டின் அமெரிக்காவிற்க்கு 'உதவ' மறுத்திருதால் அவரை
கட்டாயப்படுத்தியிருக்க முடியாது. ஆனால் சோவியத் ரஸ்ஸியா,
உலக்போர் முடிந்த பின் பல திறமையான ஜெர்மனீய விஞ்ஞானிகளை
கடத்தி சென்று கட்டாயமாக வேலை வாங்கி ராக்கெட் தொழினுட்பம்
மற்றும் அணுசக்தி துறையில் வளர்ந்தது. ஏராளாமன் ஆதரங்கள்
உள்ளன. இதில் முக்கிய விசியம் கட்டாயபடுத்துதல். அடிப்படை
உரிமைகளை நசுக்குதல். அய்ன்ஸ்டின் அமெரிக்கா பிடிக்காமல் வேறு எந்த
நாட்டிற்க்கும் தாராளமாக புலம் பெயரந்திருக்கலாம். அவரின் உரிமை
(ஏன் பிறர் உரிமைகளும்தான்) அது. அதை அமெரிக்காவில் நசுக்க முடியாது.
செய்ய மாட்டர்கள்.
இஸ்ரேல் உருவாக பல ஆண்டுகள் ஆனது. யூதர்கள் 1900 முதல் அங்கு
பெருமளவில் குடியேறி வாழ்ந்தனர். திடீரென அனைவரையும், அவர்கள்
விருப்பத்திற்க்கு மாறாக அமெரிக்காவில் குடியேற்ற முடியாது. ஆனால்
விருப்பட்டு புலம் பெயர்பவர்களை அமெரிக்க வரவேற்றது. 1948இல்
அய்.நா வாக்கெடுப்பில் ஜோசப் ஸ்டாலின் தலைமையிலான சோவியத் ரஸ்ஸியா
இஸ்ரேல் உருவாக வாக்களித்தது ஏன் என்று பார்கலாமா ? அன்று அது தான்
சரியான தீர்வாக பெரும்பாலானா நாடுகளுக்கு பட்டது.
மேலும்...
அமெரிக்கவை செலுத்தியது / செலுத்துவது பயம். பாரனியா என்றும்
சொல்லாம். கம்யூனிசம் மற்றும் பாசிசத்தை கண்டு அளவு கடந்த
பயம். 1941இல் ஜப்பனியர் பேர்ல் துறைமுகத்தை நயவஞ்சகமாக
தாக்கியதிலிருந்து அமெரிக்காவின் பார்வை முற்றிலும் மாறிவிட்டது.
அதுவரை அது உலக விசியங்களில் இருந்து முற்றாக விலகியே ( )
இருந்தது. இரு உலக போர்களிலும் விருப்பமில்லாமலே பங்கெடுத்தது.
இரண்டாம் உலக்போருக்கு பின் சொவியத் ரஸ்ஸிய ஆக்கிரமிப்பில் இருந்த
கிழக்கு அய்ரோபிய நாடுகளில் (போலந், செக், ஹங்கேரி, கிழக்கு
ஜெர்மனி போன்றாவை)
ஜனனாயகத்தை அழித்து குறுக்கு வழியில் 'கம்யூனிசத்தை' புகுத்தி
அடக்குமுறை செய்ததை கண்ட பின் அமெரிக்காவிம் போக்கே மாறிவிட்டது.
குளிர் போர் ஆரம்பித்து பல 'தவறுகளை' இரு தரப்பினரும்
செய்தனர்.
சைனாவில் 1948இல் நடந்ந்த செம்புரட்சி, அதன் பின் கொரியாவில்
நடந்த கடுமையான உள்னாட்டு போர் : வட கொரியா கம்யூனிச நாடாகி,
தென் கொரியாவை
நசுக்க நினைத்த செயல்கள். இரு தரப்பினரும் அமெரிக்க மற்றும்
சீனாவின் 'அதாரவுடன்' புரிந்து கொடும் போர். பின் மாவோ செயத
பிரகடனம் : ".. கன்னியாகுமரி வரை செம்புரட்சியை கொண்டு செல்வோம்.
மொத்த ஆசியாவிலும் கம்யூனிசம் பரவும்..." ; இது பின்னர் வியட்னாம்,
லாவோஸ், கம்போடியா, மல்லெசியா, இந்தோனேசியா போன்ற நாடுகளுகும் உள்னாட்டு
போர்களை உருவாக்கி, கடும் விளைவுகள் உருவாகின. அதன் பின்னியில் அமெரிக்க
'போர்களை' பார்க்கவேண்டும்.
இன்று வியர்னாம், கம்பொடியா, வட கொரியா மற்றும் சைனாவின் நிலைபாடுகள்,
கொளகைகள் மற்றும் பெருளாதார மாற்றங்களை பார்க்கும் போது வீணான சண்டைகள்
அவை என்று தெரிகிறது. வியட்னாமியர் பெரும் தீரத்துடன் அமெரிக்காவை
எதிர்து புரிந்த போர் இன்று அர்த்தமற்றதாகிவிட்டது. சுதந்திர சந்தை
பொருளாதாரம் மற்றும் லிபரல் ஜனனாயக அமைப்பு : இவை இரண்டும் பரவலாக
ஏற்றுக்கொள்ளப் படுகின்றன...
இஸ்ரேலின் வரலாறை படிக்கும் போது, என்னைப் பொருத்தவரை, எந்த துன்பத்தையும் தாங்கி, வாழ்ந்துவிடலாம் என்று நம்பிக்கை பிறக்கிறது.
ReplyDeleteஅவர்களின் இன்றைய நிலைபாடு மற்றும் தவறுகள் வேறு விசியம். ஆனால் ஆரம்ப வருடங்களில் அவர்கள் எதிர் கொண்ட போர்கள் மற்றும் செய்த தியாகங்கள் ஒரு
மகத்தான, மிக மகத்தான வீர வரலாறு. An indomitable people with a 'never
say die' spirit. Valiant courage while facing and defeating powerful
enemies. out-gunned and out numbered on all fronts many times...
They crossed all the limits of human endurance and will power...
an inspiration for me...
இந்த புத்தகங்களை முடிந்தால் படிக்கவம் :
O Jerusalem!
by Dominique Lapierre and Larry Collins.
http://en.wikipedia.org/wiki/O_Jerusalem
Exodus by Leon Uris
http://en.wikipedia.org/wiki/Ari_Ben_Canaan
பாலைவனத்தை சோலைவனமாக மாற்றிய உழைப்பும், திறமையும் மிக மிக அருமையான
சாதனைகள் தாம். அண்டை நாடுகளான ஜோர்டான், சிரியா வை விட மிக மிக வளமாக 50
வருடங்களில் மாறியது பெரும் சாதனை. எண்ணை வளம் இல்லாமல், ஜோர்டானில்
இருந்து இறக்குமதிதான்.
I salute these brave and determined people..
Shalom !
/////நண்பர் அதியமானுக்கு..
ReplyDeleteஅரேபியாவில் ஜனநாயகம் வராமல் இருக்க காரணம்
அமேரிக்க அரசுதான் என்பது உலகறிந்த விஷயம். உலகில்////
நண்பர் ஜமாலன்,
எப்படி என்று சொல்ல முடியுமா ? மிக மிக எளிமைபடுத்தப்பட்ட
தவறான வாதம் இது.
அமெரிக்காவே உருவாகாமல், எந்த ஒரு மேலை நாடும் அரபிய
பகுதிகளில் நுழையாமல் (காலினி ஆதிக்க அய்ரோபிய நாடுகள் மற்றும் சோவியத்
ரஸ்ஸியா உள்பட) அவர்கள் நூற்றாண்டுகளாக 'சுதந்திரமாக' இருந்திருந்தால்,
இன்று அடிப்படை ஜனனாயகம் இந்த அளவு கூட இருந்திருக்காது.
நிலப்பிரவ மனோபாவம் (feudalism) அடிப்படையில் மதவாத்தையும் கூடி
இன்றும் ஆதிக்க சக்திகளாக இருகிறது.....
இஸ்ரேல் பகுதி சுமார் 100 ஆண்டுகளுக்கு முன் இதர அரேபிய பகுதிகளை விட
ReplyDeleteவறுமை அதிகமாக, மற்றும் பின் தங்கியே இருந்தது. யூதர்களின் உழைப்பும்,
திறமையும், சுத்ந்திர சந்தை பொருளாதார கொள்கைகளும் அதை பின்னர் ஒரு
முன்னேறிய நாடாக மாற்றியது ஒரு மகத்தான சாதனை. வறுமை ஒழிப்பிற்க்கு
சரியான பாதை பற்றி இது ஒரு நல்ல எடுத்துக்காட்டு. இததனைக்கும் எண்ணை வளம்
இல்லை. ராணுவ செலவு மிக அதிகம். அதன் துறைமுகங்கள் மற்றும் வர்தகம்
செல்லும் பாதைகள் பல முறை எதிர்களால் பிளாக்கேட் (முடக்கம்)
செய்யப்பட்டன.
பாலஸ்தீனர்கள், அவர்களுக்கு அய்.நாவால் 1948இல் ஒதுக்கப்பட்ட பகுதிகளில்
அமைதியாக வாழ்ந்து, இஸ்ரேலுடன் நட்புரவுடன் இருந்திருந்தால், இன்று
பாலஸ்தீனும் ,அமீரகம் போன்ற நல்ல வளமாக் இருந்திருக்கும். இஸ்ரேலின் உதவி
(ரிப்பிள் எஃபெக்ட் - thru ripple effect) கிடைத்து முன்னேறி சுபிட்சம்
அதிகரித்திருக்கும்..
இறுதியாக, கீழ்க்கண்ட மிக முக்கிய புத்தகங்களை இலவசமாக டவுன் லோட்
செய்து, சாவகாசமாக படிக்கவும் :
'The conquest of poverty' by Henry Hazlitt
http://www.mises.org/books/conquest.pdf
'The Anti-Capitalistic Mentality' by Ludwig von Mises
http://mises.org/etexts/anticap.pdf
முடிந்தால் உங்கள் அலுவகலத்தில், யாரும் பார்க்காத
நேரத்தில் அத்தனை பக்கங்களையும் பிரிண்ட் செய்து
கொள்ளவும். ஹி ஹி... நம்ம இந்திய ஓசி புத்தி இப்படி
சொல்ல வைக்குது.. :))
எல்லோரும் பணக்கார் ஆக முடியாது, தேவையும் இல்லை. அனைவருக்கும்
அடிப்படை தேவைகளான உணவு, உடை, வீடு போன்றவை கிடைத்தாலே பெரிய
விசியம்தான்.
நண்பர் செல்வன், ஏழைகளை பற்றி கவலைபடாத, மனித நேயம் இல்லாதவர் அல்ல.
நம் இருவரையும் விட அதிகம் உதவி செய்பவர் மற்றும் மனித நேயம் உடையவர்.
மேலும் பிறப்பால் செல்வந்தர் அல்ல. கடின உழைப்பால் முன்னேறியவர்.
வாழ்க்கையை பற்றி தெரிந்தவர்தாம்...
வறுமை ஒழிக்க பட வேண்டும், அதே சமயத்தில் மனித உரிமைகளும்
பாதுக்கப்பட வேண்டும். பொருளாதார சுதந்திரம் தடை செய்யப்படும்
அமைப்புகளில் (சோசியலிச பாணி) அடிப்படை சுதந்திரமும்
நசுக்கப்படும் என்பதே நடைமுறை. உதாரணமாக, இந்தியாவில் சோசியலிச
பாணி உச்சத்தை, இந்திரா காந்தி காலத்தில் அடைந்த போது, மிஸா
அடக்குமுறையில் முடிந்தது. இந்த தொடர்பை பற்றிய ஒரு அற்புதமான
புத்தகம் :
http://en.wikipedia.org/wiki/The_Road_to_Serfdom
வறுமை ஒழிக்க சரியான வழி பற்றி தான் இங்கு விவாதம். நோக்கங்கள்
நல்லவைதாம். வழிமுறைகள் பற்றித்தான் மாற்றுக் கருத்துக்கள்.
கம்யூனிசம் வறுமையை போக்கவில்லை. உரிமைகளையும் அழித்தது. மாற்று வழி
பற்றி விவாதம் தொடர்கிறது. மிகவும் ஆழமான சப்ஜெக்ட்...
முன்னேறிய நாடுகளில் வறுமை மிக குறைவு. மேலும் குறைக்க முடியும். அரசின்
வெட்டிச்செலவுகள் மற்றும் ராணுவ செலவுகளை தவிர்த்தால்.
முன்னேறும் நாட்டுகளும் அதெ வழியை 'ஒழுங்காக' பின்பற்றினால் வறுமையை
அழிக்க முடியும். நான் தந்த புத்தக சுட்டிகளை படிக்கிறேன் என்றீர்கள்.
படித்த பின், பிறகு நேரில் தொடரலாம்.
தொழில்முனைவோர்கள் எல்லாம் வில்லன்களாக, சுரண்டல்வாதிகளாக
சித்தரிக்க பட்டுள்ளனர். உண்மையில் அவர்கள்தாம் ஹீரோக்கள்.
லக்ஸ்மி நிவாஸ் மிட்டல் இன்று உலகின் பிக பணக்கார இந்தியர்.
அவரின் சொத்து மதிப்பு மற்றும் ஆடம்பர வாழ்க்கை : இவை பற்றிதான்
இடதுசாரிகள் பேசுகின்றனர். ஆனால் அவை முக்கியமல்ல. அவர்
எதிலிருந்து எங்கெ, எப்ப்டி தன் வாழ்க்கையை ஆரம்பித்து, என்ன
சாதித்தார், உருவாக்கினார் என்பதே முக்கியம். 70களில் அவரை போன்ற
மிகத் திறமையான தொழில்முனைவோர்களை இந்திய அரசு வில்லன்களாக
பார்த்து, இந்தியாவில் தொழிலே செய்ய முடியாத படி பல பல பல
தடைகளை, உச்சபட்ச வரிவிகுதங்களை விதித்து, மூடத்தனமாக அவர்
போன்றவர்களை நாட்டை விட்டே விரட்டியது. அவர் Indonesia போன்ற
நாடுகளுக்கு சென்று, கடும் நஸ்டத்தில் இருந்த இரும்பு உருக்காலைகளை
வாங்கி (வேறு யாரும் அவற்றை வாங்க துணியவில்லை) தன் அசாத்தியமான
திறமை, உழைப்பு மற்றும் தலைமை பண்புகளால், ஒரு பெரும் இரும்பு
சாம்ராஜியத்தை உலகெங்கிலும் நிறுவினார். அவருடன் நம் அரசு
நிறுவனமான செயில் அய் ஒப்பிட்டால் புரியும். அரசு இரும்பு
உருக்காலைகளில் நாம் கொட்டிய மொத்த பணம் (கடன் வாங்கியது), அதன்
நிகர லாபம் மற்றும் உற்பத்தி மதிப்பு மட்டும் தரம்... இவை
பற்றி ஒரு புத்தகமே எழுதலாம்.
http://en.wikipedia.org/wiki/Lakshmi_Mittal
அயன் ராண்ட் ஒரு மிக முக்கியமான எழுத்தாளர். தத்துவார்தமான
நாவல்கள் எழுதியவர். அவரின் கருத்துகள் மீது பல
விமர்சனங்கள் மற்றும் முரண்கள் உண்டுதான். ஆனாலும் ஒரு
தொழில்முனைவோனின் மனோபாவம் மற்றும் ஹீரோயிசம் பற்றி அவரின்
மாவெரும் நாவலான அட்லாஸ் ஷ்ரக்ட் ( Atlas Shrugged) கண்டிப்பாக
நீங்கள் படிக்க வேண்டும்.
http://atlasshrugged.com/
அதியமான்
ReplyDeleteஅமெரிக்கா பற்றிய உங்கள் கட்டுரை சிறப்பாக இருக்கிறது.
அமெரிக்கா போர் தொடுத்த நாடுகளில் எவையும் மக்களாட்சி நாடுகளாக இல்லை என்பதை கவனித்து இருப்பீர்கள்.
4 Mar Mathavaraj J: லிபியாவில் கூட்டுப்படைகளின் தாக்குதலை விமர்சனம் செய்து.....
ReplyDelete“May I suggest a 50-mile evacuation zone around Obama's Nobel Peace Prize?”
டுவிட்டரில் மைக்கேல் மூர்.
24 Mar K.R Athiyaman: சார், 1979இல் சோவியத் ரஸ்ஸியா ஆஃபாகானிஸ்தான் மீது படை எடுத்த போது உங்க நிலை பாடு என்ன ? எதிர்தீர்களா என்ன ?
24 Mar K.R Athiyaman: கூட்டுபடை தாக்குதல் நடத்தவில்லை என்றால் எதிர்பாளர்களை அனைவரையும் கொடுங்கோலன் கடாஃபி இன்னேறம் கொன்றழித்திருப்பான். அவர்கள் கோணத்தில் இருந்து பாருங்களேன். நாம் இங்கு சுகமா இருக்கோம்
24 Mar K.R Athiyaman: வினவு தளத்தில் இதை பற்றி சூடான ஒரு விவாதம் :
http://www.vinavu.com/2011/01/17/tunisia-revolution/
24 Mar Mathavaraj J: எந்த நாடும், இன்னொரு நாட்டின் மீது படையெடுப்பதை அடிப்படையிலேயே நான் எதிர்க்கிறேன். அதிலும் ஏகாதிபத்தியங்களின் அரசியல் கொடூரமானதாக இருக்கிறது.
24 Mar K.R Athiyaman: அதில் Libertarian என்ற புனைபெயரில் நான் எழுதியது :
ஒரு முக்கிய விசியத்தை விட்டுவிட்டேன் : கடாஃபியின் படைகள் மீது வான்வழி தாக்குதல் நடத்துவதை ‘எதிர்க்கும்’ நாடுகளின் போலித்தனம் மற்றும் உள்னோக்கங்கள் பற்றி. முக்கியமாக துருக்கி இதை கடுமையாக எதிர்க்கிறது. no fly zone லிபியா மீது அமைக்க துருக்கி இடம் கூட அளிக்க மறுத்துவிட்டது. உண்மையான காரணம் ஜனனாயக ‘கொள்கை’ அல்ல. துருக்கியில் உள்ள குர்த் இன மக்கள் தனிநாடு கேட்டு பல ஆண்டுகளாக போராடுகின்றனர். (பக்கத்து நாடுகளில் உள்ள குர்த் இன மக்களுடன் சேர்ந்து). அவர்களை நசுக்க பல வகைகளில் பல நாடுகள் முயல்கின்றன. லிபியா மீது தாக்குதலை ஆதரித்தால், எதிர்காலத்தில் எங்க தம் மீதும் இதே போல் தாக்குதல் (குர்த் மக்கள் எழுச்சியை நசுக்க முயலும் போது) வர வழி பிறக்கும் என்ற பயம் தான் உண்மையான காரணம்.
மடியில கனம் இருப்பவன் தான் பயப்படுவான் என்ற பழமொழி இங்கு மிக பொருந்து. இந்தியா உள்பட, இந்த தாக்குதலை எதிர்க்கும் அனைத்து நாடுகளுக்கும் இது பொருந்தும்.
கொள்கை, மன்னாங்கட்டி எல்லாம் ஒன்றும் இல்லை. தத்தம் நாடுகளில் தாங்கள் செய்யும் மீறல்கள்களை (அய்.நா) பயமில்லாமல் தொடர இந்த வேடம். அவ்வளவுதான்.
சீனாவுற்க்குதான் முதல் இடம். ராணுவ பலத்தால், தம் மக்களையே அடிமையாக வைத்திருப்பதால் பயம். எதிர்ப்பு. நல்ல நடிகர்கள் இவர்கள் எல்லோரும்.
தாக்குதலை ‘எதிர்க்கும்’ உங்களை போன்ற அப்பாவிகளை கேடயமாக பயண்படுத்தி கொள்ளும் ‘ராஜ தந்திரம்’ இவர்கள் அனைவருக்கும் உண்டு. இடதுசாரிகளை கேடையமாக பயன்படுத்தி தம் அயோக்கியத்தனங்களை தொடர் பல காலமாக ‘ராஜ தந்திரம்’ பயன்படுத்துப்படுகிறது. இடதுசாரிகளும் அதை பற்றி அலட்டிகொள்ளாமல், இதற்க்கு ’துணை’ போகும் முட்டாள்தனம் தொடரும் தான்.
24 Mar K.R Athiyaman: இந்த ’ரத்தக்காட்டேரி’ தாக்குதல் நடத்தவில்லை என்றால் கடாஃபி, எதிர்ப்பாளர்களை பூண்டோடு ஒழித்திருப்பான். அமெரிக்க ஆக்கிரமப்புகளுக்கு இதுவரை ஆதரவளிக்காத, ஃப்ரான்ஸ் தான் முதல் தாக்குதல் செய்தது. அவர்கள் ஒன்றும் மடையர்களோ அல்லது ஏகாதிபத்தியவாதிகளோ அல்ல.
மேலும் 1999 செர்பிய தாக்குதல் பற்றி அறிய, பார்க்கவும் :