அன்பின் பாதை சேர்ந்தவனுக்கு முடிவேயில்லையடா... மனதின் நீளம் எதுவோ, அதுவே வாழ்வின் நீளமடா..
Friday, May 30, 2008
நூறு ஆண்டுகளுக்கு முன் சென்னை / மெட்ராஸ் - அரிய புகைப்படங்கள்
'எலிப்பொறிக்குள் மனிதர்கள்' - ஆண்டாள் பிரியதர்ஷினி
எல்லாருமே
பிள்ளையார் ஆகிவிட்டோம்
உலகமே
எலி வாகனத்தில்
பயணிக்கிறது
சிவ பார்வதியைய் சுற்றிய
பிள்ளையாராக
வாமன வாரிசுகள்
ஓரடிப் பெட்டிக்குள்
உலகைச் சுற்றுகிறார்கள்.
கால்களைக் கழற்றிவிட்டுக்
கைவிரல்களால்
ஊழித் தாண்டவம்
ஆடுகிறோம்
அரூபச் சிலந்தி வலையை
எலியால் பிறாண்டிப்
பிறாண்டிப் பிரபஞ்சம் தாண்டித்
தேடுகிறோம்
எலிக்கு மனித வாகனம்
இருபத்தொன்றில்
வாழ்க எலி சாம்ராஜ்யம் !
-ஆண்டாள் பிரியதர்ஷினி
நன்றி : சுஜாத்தாவின் கற்றதும் பெற்றதும்.
Income Tax Raid பற்றி திருக்குறள் :
அளவறிந்து சேர்க்கா தான் செல்வம்
உளவறிந்து பறிக்கப் படும்.
அடக்கம் அமரருள் வைக்கும் அடங்காமை
ஜெயில் உள் வைக்கும்.
(1997இல் 'அம்மாவும், சின்னம்மாவும்' 'மாமியார்'
வீட்டிற்க்கு அனுப்பப்பட்ட போது
இயற்ப்பட்ட புதுக்குறள்கள் !!!)
அமேரிக்காவில் ஒரு பத்திரிக்கை விளம்பரம் :
இருந்தால் இந்த ஆளை யோசித்துப் பாருங்கள் :
பள்ளிப் படிப்பை இவன் பாதியில் விட்டான். ஒரு
கடை வைத்து எல்லாவற்றையும் இழந்தான்.
கடன்களை அடைக்க 15 வருஷமாயிற்று. கல்யாணம்
பண்ணிக் கொண்டு சந்தோசமில்லாமல் அவஸ்தைப்
பட்டான், இரண்டு தடவை தேர்தலுக்கு நின்று தோற்று
போனான்.
அவன் ஒரே ஒரு சொற்பொழிவு மட்டும் பிற்பாடு பிரசித்தமாயிற்று. ஆனால்
அப்போது யாரும் அதை கவனிக்கவில்லை. பத்திரிக்கைகளில் அவனைத்
தாக்கினார்கள். நாட்டின் பாதி ஜனங்கள் அவனை
வெறுத்தார்கள்.
இத்தனை இருந்தும் உலகமெங்கும் எத்தனை பேர்
இந்த கன்னம் ஒட்டின, கசங்கிய மனிதனால்
ஊக்குவிக்கப் பட்டிருக்கிறார்கள் !
"அவன் பெயர் அப்ரகாம் லிங்கன்."
----------------------------------
2. ஆஸ்கார் வைல்டு சொன்னார் : 'மாறாமல் இருப்பது கற்பனையற்றவரின்
சரணாலயம்' என்று. எனவே தினம்
6.05க்கு எழுந்திருப்பதை நிறுத்து. 5.06க்கு எழுந்திரு.
அதிகாலை ஒரு மைல் நடந்து பார். ஆபிசுக்கு வேறு
வழியே செல். மனைவியுடன் அடுத்த சனிக்கிழமை
ட்யூட்டி மாற்றிக்கொள். புதுசாக ஏதாவது வாங்கிப்பார்.
காட்டுப் பூக்களை பறி. ராத்திரி தனியாக விழித்திரு.
பார்வையில்லாதவர்களுக்கு படித்துக் காட்டு. தெருவில்
போகும் மஞ்சள் ஸாரி பெண்களை எண்ணிப்பார். புதிய பத்திரிகைக்கு சந்தா
செலுத்து. நடு ராத்திரியில் சைக்கிள்
ஓட்டு. உங்கள் ஊர் எம்.எல்.ஏ.க்கு ஒரு படை திரட்டி
அழைத்துச் செல். இத்தாலிய மொழி பழகும் பையனுக்கு
உனக்கு தெரிந்ததை சொல்லித்தா. இரண்டு மணி நேரம் இடைவிடாமல் மோட்ஸார்ட்
கேள். இந்த வயசில் பரத
நாட்டியம் துவங்கு. ஏதாவது செய்து வாழ்க்கையை
அனுபவி. ஏனெனில் நாம் இந்தப் பக்கம் ஒரு முறைதான்
வருகிறோம்.'
நன்றி : சுஜாத்தாவின் 'ஒரிரு எண்ணங்கள்'
Wednesday, May 28, 2008
ராஜஸ்தானில் குஜ்ஜார் இன மக்களின் போராட்டம் ?
இட ஒதுக்கீட்டில் இருக்கும் அநியாங்கள் ( ஆதாவாது கிரிமி லேயர்,
சென்சஸ் இல்லா அடிப்படையில், எதோ ஒரு அடிப்படையில் விகுதங்கள்
ஒதுக்குபடல், போன்றாவை) அதில் ஓட்டு வேட்டையாக மாற்றிய அரசியல்
போன்றவைகளின் விளைவே இது.
சமீபததிய சர்வே ஒன்று குஜ்ஜார்கள் எஸ்.டி பிரிவுக்கு தகுதி அல்ல என்று
திட்டவட்டமாக அறிவித்தும் அவர்களின் போராட்டம் ஒயவில்லை.
தடியேடுத்தவன் தண்டல்காரன் மாதுரி, ஆள் பலம் இருந்தால் என்ன
வேண்டுமானாலும் கேட்க்கலாம் என்று உள்ளது காலம்.
மீனாக்கள் என்ற தாழ்தப்ப்ட்ட பிரிவு குஜ்ஜார்களின் கோரிக்கையை
கடுமையாக எதிர்க்கின்றனர்.
உண்மை, நியாயம் இதெல்லாம் என்ன விலை சமூக நீதி என்ற முழக்கம் வெறும் மாயயைதானா ?
உண்மை நிலவரம் தான் என்ன ? இட ஒதுக்கீட்டில் நடக்கும் அநியாயங்கள் தான் எவை ? ஒரு வெளிபடையான, சாதி வாரி சர்வே ஏன் இன்னும் எடுக்கபடவில்லை. எந்த சாதிகளில் எத்தனை சதவீதம் உண்மையில் பிற்படுத்தப்பட்ட மக்கள் என்ற விவரம் ஏன் இன்னும் தெளிவுபடுத்தப்படவில்லை. இவை பற்றி ஒரு வெளிப்படையான, நேர்மையான விவாதம் ஏன் இந்தியாவில் இல்லை.
2011 மக்கள் தொகை கணாக்கெடுப்பில் ஜாதிவாரியான மற்ற இதர
தகவல்களை திரட்ட ஏன் இன்னும் தயக்கம் ? வெறும் அரசியல்.
உண்மையே, உன் விலை என்ன ?
Saturday, May 24, 2008
பங்களாதேஸ் மக்களுக்கு மறதியா / நன்றியுணார்வு இல்லையா ?
70க்கும் மேற்பட்ட அப்பாவிகள் உயிரழந்தனர். இதற்ற்கு காரணம் பங்களாதேஸை
தலைமையாக கொண்ட ஒரு ஜிகாத் அமைப்பு என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
1971 வரை பங்களாதேஸ் கிழக்கு பாக்கிஸ்தானாக, மேற்க்கு பாகிஸ்தான்
(இன்றையபாக்) உடன் இனைந்து ஒரே நாடாக இருந்ததது. மேற்க்கு பாகிஸதானிய
பஞ்சாபியினர் அரசையும், ராணுவத்திலும் முன்னனி வகுத்து, கிழக்கு பாக்
பெங்காலி முஸ்லீமகளை நசுக்கி பல அடக்குமுறை புரிந்தனர். தேர்தல்களில்
வங்காளிகள் வென்றதை ஏற்க்க மறுத்து, பாக் ராணுவத்தை, பங்களாதேச்
பகுதிகளுக்கு அனுப்பி இனப் படுகொலை பெருமளவில் புரிந்தனர். கோடிக்கணக்கான
மக்கள் அகதிகளாக இந்தியாவிற்க்கு வந்தனர். அகதிகள் வருகை மிக மிக
அதிகமானதை அடுத்து இந்தியா தலையிட வேண்டிய கட்டாயம்.
அன்று பாக் முஸ்லிம் 'சகோதரகளின்' இனப்படுகொலைகளை சந்தித்த பங்களாதேஸ்
மக்கள் 40 ஆண்டுகளில் நடந்ததை மறந்து, நம் உதவிகளை மறந்து, இன்று
இந்தியாவை 'எதிரியாக' கருதி, தீவிரவாதிகளுக்கு ஆதரவு அளிப்து
வியப்பளிக்கிறது.
பார்க்க :
http://en.wikipedia.org/wiki/1971_Bangladesh_atrocities
http://en.wikipedia.org/wiki/Bangladesh_Liberation_War
http://en.wikipedia.org/wiki/1971_Bangladesh_atrocities#Genocide_debate
Wednesday, May 21, 2008
புதுமைப்பித்தன் எழுதிய 'திரு ஆங்கில அரசாங்கத் தொண்டடிப்பொடிய்யாள்வார் வைபவம்'
தொண்டடிப்பொடிய்யாள்வார் வைபவம்' :
'ஷ்ரீயப்பதியாய் ஸிம்லாச் சிகரத்தில் எழுந்தருளாநின்ற
அரசாங்க ஈச்வரன் வில்லிங்டன் மூர்த்தி' யை நோக்கிப்
பாடிய பதக்கதிலிருந்து சில :
உற்றாரை யான் வேண்டேன், ஊர் வேண்டேன், பேர் வேண்டேன்,
மற்றுமிந்த வாணிபத்தின் புன்செல்வம் யான் வேண்டேன்
பொற்றோளாய் ! உன்னுடைய பெருமை மிகு சர்வீஸில்
சிற்றுருவ மானதொரு அட்டெண்டர் ஆகேனோ !
ஊனேறு செல்வத்துடன் பிறவி யான் வேண்டேன்
தேனார் மொழிக் கிள்ளைத் தேவியரும் யான் வேண்டேன்
வானோங்கு புகழ்மிகுந்த நின்வாயி லிட்டுண்ணும்
மீனாய்ப் பிறக்கும் தவமுடைய னாவேனோ.
-----------------------------------------------------------------
மூலம் : 'அந்தக் காலத்தில் காப்பி இல்லை'
ஆ.இரா.வேங்கிடாசலபதி, காலச்சுவடு பதிப்பகம்.





