Friday, May 30, 2008

அமேரிக்காவில் ஒரு பத்திரிக்கை விளம்பரம் :

1. 'உஙக்ளுக்கு எப்போதாவது ஆயாசமாக, அதைரியமாக
இருந்தால் இந்த ஆளை யோசித்துப் பாருங்கள் :

பள்ளிப் படிப்பை இவன் பாதியில் விட்டான். ஒரு
கடை வைத்து எல்லாவற்றையும் இழந்தான்.
கடன்களை அடைக்க 15 வருஷமாயிற்று. கல்யாணம்
பண்ணிக் கொண்டு சந்தோசமில்லாமல் அவஸ்தைப்
பட்டான், இரண்டு தடவை தேர்தலுக்கு நின்று தோற்று
போனான்.

அவன் ஒரே ஒரு சொற்பொழிவு மட்டும் பிற்பாடு பிரசித்தமாயிற்று. ஆனால்
அப்போது யாரும் அதை கவனிக்கவில்லை. பத்திரிக்கைகளில் அவனைத்
தாக்கினார்கள். நாட்டின் பாதி ஜனங்கள் அவனை
வெறுத்தார்கள்.

இத்தனை இருந்தும் உலகமெங்கும் எத்தனை பேர்
இந்த கன்னம் ஒட்டின, கசங்கிய மனிதனால்
ஊக்குவிக்கப் பட்டிருக்கிறார்கள் !

"அவன் பெயர் அப்ரகாம் லிங்கன்."

----------------------------------

2. ஆஸ்கார் வைல்டு சொன்னார் : 'மாறாமல் இருப்பது கற்பனையற்றவரின்
சரணாலயம்' என்று. எனவே தினம்
6.05க்கு எழுந்திருப்பதை நிறுத்து. 5.06க்கு எழுந்திரு.
அதிகாலை ஒரு மைல் நடந்து பார். ஆபிசுக்கு வேறு
வழியே செல். மனைவியுடன் அடுத்த சனிக்கிழமை
ட்யூட்டி மாற்றிக்கொள். புதுசாக ஏதாவது வாங்கிப்பார்.
காட்டுப் பூக்களை பறி. ராத்திரி தனியாக விழித்திரு.
பார்வையில்லாதவர்களுக்கு படித்துக் காட்டு. தெருவில்
போகும் மஞ்சள் ஸாரி பெண்களை எண்ணிப்பார். புதிய பத்திரிகைக்கு சந்தா
செலுத்து. நடு ராத்திரியில் சைக்கிள்
ஓட்டு. உங்கள் ஊர் எம்.எல்.ஏ.க்கு ஒரு படை திரட்டி
அழைத்துச் செல். இத்தாலிய மொழி பழகும் பையனுக்கு
உனக்கு தெரிந்ததை சொல்லித்தா. இரண்டு மணி நேரம் இடைவிடாமல் மோட்ஸார்ட்
கேள். இந்த வயசில் பரத
நாட்டியம் துவங்கு. ஏதாவது செய்து வாழ்க்கையை
அனுபவி. ஏனெனில் நாம் இந்தப் பக்கம் ஒரு முறைதான்
வருகிறோம்.'

நன்றி : சுஜாத்தாவின் 'ஒரிரு எண்ணங்கள்'

6 comments:

  1. // தெருவில்
    போகும் மஞ்சள் ஸாரி பெண்களை எண்ணிப்பார்.//

    வீட்ல சொல்லியாச்சா அதியமான் :-))

    ***

    புதியதாகச் செய்வது நிச்சயம் புத்துணர்ச்சிதான். தொகுப்பிற்கு நன்றி

    ReplyDelete
  2. ////ஆஸ்கார் வைல்டு சொன்னார் : 'மாறாமல் இருப்பது கற்பனையற்றவரின்
    சரணாலயம்' ///

    அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மை!

    ReplyDelete
  3. வாங்க கல்வெட்டு,

    நல்லாயிருக்கீகளா.

    அதெல்லாம் வீட்டல கண்டுக்கமாட்டக (என்ற தைரியம்தான்) !!!

    ReplyDelete
  4. //
    ஏனெனில் நாம் இந்தப் பக்கம் ஒரு முறைதான்
    வருகிறோம்.'
    //

    எண்ண அர்த்தமுள்ள வார்த்தைகள் சார் ,

    பதிவிற்கு நன்றி

    ReplyDelete
  5. கல்வெட்டு பலூன் மாம்ஸ் கேட்ட கேள்வியே ஒரு ரிப்பீட்டு வுட்டுக்கிறேன்

    :)))))))))))

    ReplyDelete