எல்லாருமே
பிள்ளையார் ஆகிவிட்டோம்
உலகமே
எலி வாகனத்தில்
பயணிக்கிறது
சிவ பார்வதியைய் சுற்றிய
பிள்ளையாராக
வாமன வாரிசுகள்
ஓரடிப் பெட்டிக்குள்
உலகைச் சுற்றுகிறார்கள்.
கால்களைக் கழற்றிவிட்டுக்
கைவிரல்களால்
ஊழித் தாண்டவம்
ஆடுகிறோம்
அரூபச் சிலந்தி வலையை
எலியால் பிறாண்டிப்
பிறாண்டிப் பிரபஞ்சம் தாண்டித்
தேடுகிறோம்
எலிக்கு மனித வாகனம்
இருபத்தொன்றில்
வாழ்க எலி சாம்ராஜ்யம் !
-ஆண்டாள் பிரியதர்ஷினி
நன்றி : சுஜாத்தாவின் கற்றதும் பெற்றதும்.
அதியமான்,
ReplyDeleteஒரு வேகத்தில் தமிழில் எழுதி தள்ளுகிறீர்கள் போல? பொருளாதார பதிவுகளையும் எதிர்பார்கிறேன்.
thanks Naanjilaan.
ReplyDeleteEconomic blogs take time and need more inputs and ideas. hence occasional posts only.