வாழ்கை முறையை சித்தாரிக்கிறது. அவரது எளிய நடைக்கு ஒரு சாம்பிள் :
..'இதுதான் எங்கள் ஊர். இப்போது உள்ள உத்தமதானபுரத்துக்கும்
'எங்கள் ஊர்' என்று பெருமையோடு நான் எண்ணும் உத்தமதானபுரத்துக்கும்
எவ்வளவோ வேறுபாடு உண்டு. என் இளமை காலத்தில் இருந்த எங்கள் ஊர்தான் என்
மனதில் இடங் கொண்டிருக்கிறது. இந்த காலத்தில் உள்ள பல சௌரியமான
அமைப்புகள் அந்த காலத்தில் இல்லை ; ரோடுகள் இல்லை ; கடைகள் இல்லை ;
உத்தியோகஸ்தர்கள் இல்லை; ரெயிலின் சப்தம் இல்லை. ஆனாலும், அழகு இருந்தது;
அமைதி இருந்தது; ஜன்ங்களிடத்தில் திருப்தி இருந்தது; பக்தி இருந்தது.
அவர்கள் முகத்தில் மகிழ்ச்சி நிலவியது ; வீடுகளில் லக்ஷ்மீகரம்
விளங்கியது...'
இவ்வாறு 1940ல் எழுதுகிறார். !!
திருவாடுதுறை ஆதினத்தின் ஆதரவில் வளர்ந்து, மாயூரம் மீனாட்சிசுந்திரம்
பிள்ளையிடம் தமிழ் கற்று, பல அரிய தமில் இலக்கியங்களை தேடி அலைந்து
பதிப்பித்த சான்றோர் அவர். சீவகசிந்தாமணி, சிலப்பதிகாரம் போன்ற பல
முக்கிய காப்பியங்களை தேடி பதிபித்த வரலாறு, அனைவரும் படிக்க வேண்டிய ஒரு
ஆவணம்.
டாகடர். உ.வே.சாமினாதையர் நூல் நிலையம், பெசன்ட் நகர், சென்னை - 90. ரூ.
160 பக்கம் : 776
No comments:
Post a Comment