Wednesday, May 28, 2008

ராஜஸ்தானில் குஜ்ஜார் இன மக்களின் போராட்டம் ?

2003 தேர்தலில் பி.ஜெ.பி தங்களை எஸ்.டி பிரிவில்
சேர்பதாக கூறிய பொய்யான வாக்குறுதிகளை நம்பி
'ஏமாற்ந்த' குஜ்ஜர் இன மக்கள் மீண்டும் வன்முறையில்
இறங்கி, ரயில்களை மறித்து, தண்டவாளங்களாஇ
பிளந்து 'போராட்டம்' நடத்துகின்றனர்.
(இங்க யாரும் கண்டுக்கர மாதிரி தெரியல !!)
இதுவரை 40 பேர்களுக்கு மேல் பலியாகி உள்ளனர்.
(போலிஸாரும் பலியாகி உள்ளனர்.)

இட‌ ஒதுக்கீட்டில் இருக்கும் அநியாங்க‌ள் ( ஆதாவாது கிரிமி லேய‌ர்,
சென்ச‌ஸ் இல்லா அடிப்ப‌டையில், எதோ ஒரு அடிப்படையில் விகுதங்கள்
ஒதுக்குபடல், போன்றாவை) அதில் ஓட்டு வேட்டையாக மாற்றிய அரசியல்
போன்றவைகளின் விளைவே இது.

சமீபததிய சர்வே ஒன்று குஜ்ஜார்கள் எஸ்.டி பிரிவுக்கு தகுதி அல்ல என்று
திட்டவட்டமாக அறிவித்தும் அவர்களின் போராட்டம் ஒயவில்லை.
த‌டியேடுத்த‌வ‌ன் த‌ண்ட‌ல்கார‌ன் மாதுரி, ஆள் ப‌ல‌ம் இருந்தால் என்ன‌
வேண்டுமானாலும் கேட்க்க‌லாம் என்று உள்ளது கால‌ம்.

மீனாக்க‌ள் என்ற தாழ்த‌ப்ப்ட்ட‌ பிரிவு குஜ்ஜார்க‌ளின் கோரிக்கையை
க‌டுமையாக‌ எதிர்க்கின்ற‌ன‌ர்.

உண்மை, நியாய‌ம் இதெல்லாம் என்ன‌ விலை சமூக நீதி என்ற முழக்கம் வெறும் மாயயைதானா ?

உண்மை நிலவரம் தான் என்ன ? இட ஒதுக்கீட்டில் நடக்கும் அநியாயங்கள் தான் எவை ? ஒரு வெளிபடையான, சாதி வாரி சர்வே ஏன் இன்னும் எடுக்கபடவில்லை. எந்த சாதிகளில் எத்தனை சதவீதம் உண்மையில் பிற்படுத்தப்பட்ட மக்கள் என்ற விவரம் ஏன் இன்னும் தெளிவுபடுத்தப்படவில்லை. இவை பற்றி ஒரு வெளிப்படையான, நேர்மையான விவாதம் ஏன் இந்தியாவில் இல்லை.

2011 ம‌க்க‌ள் தொகை க‌ணாக்கெடுப்பில் ஜாதிவாரியான‌ ம‌ற்ற இத‌ர‌
த‌க‌வ‌ல்க‌ளை திர‌ட்ட‌ ஏன் இன்னும் த‌ய‌க்க‌ம் ? வெறும் அர‌சிய‌ல்.

உண்மையே, உன் விலை என்ன‌ ?

2 comments:

  1. //உண்மையே, உன் விலை என்ன‌ ?//

    கே ஆர் அதியமான் அய்யா,

    வேறு என்ன,"ஓட்டு" தான் விலை.
    அது சரி,நம்ம ஊர் மரம் வெட்டி அய்யா கூட,வன்னிய கும்பலை மிகவும் ஒடுக்கப் பட்ட ஒரு மாதிரி குற கும்பல்னு அறிவிக்கணும்னு போராட ஆயுத்தமாகிறராமே, அது உண்மையா?

    பாலா

    ReplyDelete