Tuesday, February 22, 2011

கும்ப யுகம் பிறந்துவிட்டது

ஜோதிட ஆரய்ச்சி என்று எனது blogger profileஇல் இருப்பதை பார்த்துவிட்டு, பலரும் ஜோதிடம் பற்றி விசாரிப்பார்கள். எதிர்காலத்தை பற்றி ஆருடம் கூறுவது ஜோதிடத்தில் ஒரு பகுதிதான். வேறு பல அம்சங்களும், பார்வைகளும் ஜோதிடத்தில் உள்ளது. மொத்த வாழ்க்கையை, வரலாற்றை, மானிட தத்துவங்களை, பிரபஞ்ச ரகசியங்களை, சூட்சமங்களை பற்றி நிறைய ஜோதிடத்தில் உள்ளது. அது ஒரு கடல். அதை கரையில் இருந்து கொண்டு, சிறிது ஆராய முயல்கிறேன். ஜோதிடம் நவீன விஞ்ஞானத்திற்க்கு முரணானது, மூட நம்பிக்கை என்ற பார்வை பகுத்தறிவாளர்களுக்கும், நாத்திகர்களுக்கும், ஏன் பல ஆத்திகர்களுக்கும் உண்டு. (நானும் ஒரு காலத்தில் அப்படி பேசியவந்தான்). அதை திட்டவட்டமாக மறுக்க இங்கு முயலவில்லை. ஒரு திறந்த மனதோடு, முன்முடிவுகள் இல்லாமல், இதை வாசிக்க வேண்டுகிறேன்.

இந்திய ஜோதிட பாணியில் இருந்து அடிப்படையில் மேற்கத்தைய ஜோதிட பாணி மாறுபடுகிறது. மருத்துவத் துறை போல இதிலும் பல school of thoughts உண்டு. கும்ப யுகம் பற்றிய கருத்தாக்கம் மேற்கத்திய, அய்ரோப்பிய ஜோதிடத்தில் உள்ளது. அதை பற்றியே இக்கட்டுரை.

சுமார் 2000 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு புது யுகம் பிறக்கிறது. மீன யுகம் முடிந்து கொண்டிருக்கிறது. கும்ப யூகம் பிறந்து கொண்டிருக்கும் காலத்தில் நான் வாழ்கிறோம்.

மீனம் குருவால் ஆள்ப்படும் வீடு. Tradition, orthodoxy, absolute religious faith, respect for the authority, family values : இவைதான் மீன யுகத்தில் அம்சங்கள். மதமும், அதிகார கட்டமைப்பும் மக்களை முழுமையான கட்டுப்பாட்டில் வைத்திருந்த காலங்கள். மனித உரிமைகள் பற்றி கோட்பாடுகளே உருவாகாத காலங்கள். ஜனனாயகம், அதிகார்த்தை எதிர்த்து பேசுதல் போன்றவையே இல்லாத காலங்கள். மூட நம்பிக்கைகளும், ஆழ்ந்த ஆன்மீக சிந்தனைகளும் கலந்து மக்களை வசப்படுத்தியிருந்த காலங்கள். அறிவு வளர்ச்சி மிக குறைவாக, குறுகிய வட்டத்திற்குள் அடை பட்டிருந்த காலங்கள்.

கும்பம் சனியால் ஆளப்படும் வீடு. சனி கிரகம் மிக முக்கியமான கிரகம். கீழ்தட்டு மக்களையும், நீதியையும், ஜனனாயகத்தையும் ஆளும் கிரகம். அதனால் தான் மானிட சரித்திரத்தில் முதன் முறையாக உண்மையான, முழமையான ஜனனாயகம் கடந்த 60 வருடங்களாக தோன்றியது. அதுவரை உலகெங்கிலும் மன்னராட்சிதான். மதமும், நிலப்பிரபுத்தவமும் மக்களை ஆட்டி படைத்தன. மனித உரிமைகள் இன்று போல இல்லாத காலங்கள். மனிதர்கள் அடிமைகளாக சர்வ சாதாரணமாக விற்க்கப்பட்டனர். வதைக்கப்பட்டனர். பெண்களின் நிலை மிக மோசமாக இருந்தது. ஆணாதிக்கம் மிக மிக அதிகம். சாதி கட்டுமானம் இந்தியாவில் மிக வலுவாக, எதிர்த்து கேட்க முடியாத அளவில், அனைவராலும் ஏற்று கொள்ள பட்ட கோட்பாடாக இருந்தது. அடிமைகளை வைத்திருத்தல், தீண்டாமை, சாதிய கொடுமைகள், பெண்களை, விதவைகளை இரண்டாம் தர குடிமகன்களக நடத்துதல் : இவை morally wrong என்று அன்று யாரும் கருதவில்லை. Organised religion இவற்றை கண்டிக்க வில்லை. மாறாக நிலப்பிரபுத்துவ்த்துடன் கைகோர்த்து, இவற்றை legitimatize செய்தது ; அதாவது நியாயப்படுத்தியது.

கும்ப யுகம் பிறந்தவுடன் தான் இவைகள் எல்லாம் மிக தவறுகள் என்பதையே மனிதன் உணர்ந்து கொண்டான். புதிய மதிப்பீடுகளை உருவாக்கினான். மதத்தின் பிடி கொஞ்சம் கொஞ்சமாக தள்ர்ந்தது. நவீன விஞ்ஞானமும், scientific method எனப்படும் அறிவார்ந்த பார்வைகளும் வளர்ந்தன. ஓட்டு போட்டு தேர்ந்தொடுக்கும் பாரளுமன்ற ஜனனாயகம், மதசார்பின்மை, பாரபட்சமில்லாத நீதிமுறைகள் உருவாகின.

Modern science and technology, communications, cross cultural exchanges, exchange of ideas : இவைகள் கும்ப ராசியின் அம்சங்கள். இந்த இணையம் தான் கும்ப யூகம்த்திற்க்கு மிக மகத்தான சாட்சி. Instant Communication across the world இதுதான் மகத்தான சாட்சி. சாதி, மத, இன, மொழி, பாலின வேறுபாடுகளை கடந்து, உலக குடிமகன் என்ற விழுமியத்தை மனிதன் உருவாக்கிய காலம் இது. புதிய சோதனை முயற்சிகள் அனைத்து துறைகளிலும். கலாச்சாரங்கள் ஒன்றை ஒன்று மிகவும் பாதிக்கின்ற காலங்கள். அதிகாரத்தை நோக்கி எழும்பும் குரல்கள். கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகளை பற்றி தெளிவு உருவான காலங்கள்.

Human rights, womens rights, gays rights, transgenders rights, animal rights, tribal rights, childrens rights, physically handicapped peoples rights போன்ற கருத்தாக்கங்கள் உருவாகியதே இந்த யுகத்தின் அடையாளம். சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம் என்ற சொல்லாடலகளின் யுகம். மனித நேயமும், கொடைகளும் மிக அதிகரித்துள்ளது. உலகில் எந்த மூலையில் ஒரு பெரும் இயற்க்கை பேரழிவு, பஞ்சம், நோய் என்று ஊடங்கள் மூலம் செய்தி வந்தவுடன் பல நாடுகளும், அமைப்புகளும் உடனே உதவ துவங்கும் முறை ; 100 ஆண்டுகளுக்கு முன்பு இது சாத்தியமில்லை.

இளைராஜாவின் திருவாசக ஆரட்டோரியா (அல்லது சிம்பானி) உருவானதை பற்றி விரிவாக பேச முடியும். திருவாசகம் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட பக்தி இலக்கியம். இத்தனை நூற்றாண்டுகளாக, மிக குறுகிய வட்டத்தில், மேல் சாதி, மேல் தட்டு மக்களிடம் மட்டுமே பயிலப்பட்ட பாடல்கள். இளையாரஜா பிறப்பால் ஒரு தலித். அவரின் முன்னோர்கள் திருவாசகத்தை அறிந்து கொள்ள வாய்ப்பே இருந்திருக்கவில்லை. பழம் தமிழ் பாடல்களை, தாழ்த்தப்பட்ட சாதியில் பிறந்த ஒரு மேதை, ஃபாதர் கேஸ்பர் ராஜ் என்னும் ஒரு கத்தோலிக்க பாதிரியாரின் உதவியோடு, அய்ரோபிய பாணி இசை முறையில், ஹங்கேரி நாட்டில் conduct செய்யப்பட்டு, அமெரிக்காவில் recording செய்யப்பட்டு, இடையே ஒரு ஆங்கிலேயர் சில வரிகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து அருமையாக பாடி, இந்தியாவில் பல மாநிலங்களில் இருந்து வந்த சேர்ந்திசை குழுவினர் கூட பாட, ஒரு மகத்தான இசை வடிவமாக நமக்கு கிடைத்திருக்கிறது. கும்ப யுகம் என்றால் என்னவெனபதை புரிந்து கொள்ள, திருவாசக சிம்பானி உருவான முறையை தெரிந்து கொண்டாலே போதும். A magnificent creation blending ancient tamil lyrics and European choral music with modern technology; jointly created by a dalith Tamil, a Catholic priest, Europeans, Americans, Indians all working together.

எதிர்மறையான அம்சங்களும் உண்டு : குடும்ப அமைப்பு சிதைந்து கொண்டிருக்கிறது. Isolation என்படும் தனிமை பலரையும் வாட்டுகிறது. முதியோர்களின் நிலை முன்பு போல் இல்லை. உளவியல் சிக்கல்கள் அதிகரிக்கிறது. நவீன தொழிநுடப்த்தால் சுற்றுபுற சீர்கேடுகள் என்ப்படும் environmental destruction இந்த யுகத்தில் தான் ஆரம்பம்.