Monday, September 29, 2008

இஃப்தார் விருந்தும், அரசியல்வாதிகளும்

ரம்லான் நோன்பை தினமும் முடிக்க சாய்ங்கால வேளையில் இஸ்லாமிய அன்பர்கள்
நோன்பு கஞ்சி குடித்து முடிப்பது வழக்கம். சூரியோதயத்திற்க்கு முன்பு
துவங்கும் இந்த விரதம், மாலை வரை ஒரு சொட்டு தண்ணீர் கூட பருக கூடாது
என்பது விதி.
என‌து இஸ்லாமிய‌ ந‌ண்ப‌ர் ஒருவ‌ர் எச்சிலைக் கூட‌ விழுங்காம‌ல் துப்பிவிடுவார்.

விர‌த‌ம் ஜீரண‌ உருப்புக‌ளுக்கு ஓய்வு அளிப்ப‌த‌ற்க்காக‌ அனைத்து
ம‌த‌ங்க‌ளிலும் எதோ ஒரு பாணியில் உருவாக்க‌ப்ப‌ட்ட‌து. இஸ்லாமிய‌
ர‌ம‌லான் நோன்பு ஒரு மாத‌ம் வ‌ரை தின‌மும் க‌டைபிடிக்க‌ப் ப‌டுகிற‌து.
ஏழைகள், பட்டினியால் கஸ்டப்படுவதை அனைவரும் அனுபவத்தில் உணர்ச் செயவதும்
ஒரு நோக்கம் என்று அந்த நண்பர் கூறினார்.

கடந்த 25 ஆண்டுகளில் இந்த இஃப்தார் விருந்தில் அரசியல் புகுந்து விட்டது.
பெரும் பாலான அரசியல் கட்சி தலைவர்கள், இதில் கலந்து கொண்டு மத
நல்லினக்தையும் அப்படியே இஸ்லாமிய ஓட்டு வங்கிகளையும் வளர்க்க ஒரு
ஸ்டண்ட் இது. பெரிய தவறில்லை இது.

எமது கேள்வி : கடும் விரதம் இருக்கும் இஸ்லாமிய நண்பர்கள் விரதம் முடிக்க
நோன்பு கஞ்சி அருந்துவது சரி. ஆனால் காலை, மதியம் மூக்கு பிடிக்க
சாப்பிட்டு, பிறகு பீடா போட்டுக்கொண்ட அரசியல் தலைவர்கள், மாலையில் இந்த
விருந்தில் கலந்து, உண்மையில் நோன்பு இருப்பவர்க்ளோடு சேர்ந்து கஞ்சி
குடிப்பது தமாஸா இல்லை ?

இது ப‌ற்றி என்ன‌ சொல்வ‌து ?

Monday, September 22, 2008

பாரதியின் 'ஆரியர்' பற்றிய கருத்துக்கள் - ஒரு விவாதம்

பாரதியின் 'ஆரியர்' பற்றிய கருத்துக்கள் அன்றைய
காலகட்டத்தை வைத்துத்தான் எடை போட வேண்டும்.
ஆரியன் என்றால் யாரை எதை குறிப்பிடுகிறார் ?
திராவிடன் எனற பிரோயகம் இல்லையே ? அப்ப
ஆரியர் என்றால் பார்பனர் என்று அர்த்ததில்
பிர்யோகித்தாரா அல்லது பொதுவாக இந்தியர்களை
குறிக்க அந்த சொல்லா ? அன்று ஆரியன் என்ற சொல் 'பொலிடிக்கலி அன்கரக்க்ட்'
ஆகாமல் சகஜமாக
இருந்த்து.

பார்பனர்களின் இயல்புகளையும் அவர் கண்டித்துள்ளார்.
அதனால் பார்பனியவாதி அவர் என்று முடிவு கட்டுவது
சரியல்ல. ஜாதி பேதங்களை வெறுத்தவர். தாழ்தப்பட்ட
மக்களிடம் அன்பு கொண்டவர்.

அவரிடம் நெருங்கி பழகி, அவரின் அனைத்து
எழுத்துக்களையும் படித்தவர் பாரதிதாசன் எனப்படும் கனகசுப்புரத்தினம்.
புரட்சி கவிஞர் என்று
பகுத்தறிவாளர்களால் ஏற்றுக்கொள்ளப்படும் அவர்
ஏன் தன் பெயரை 'பாரதிதாசன்' என்று மாற்றிக்
கொண்டார் ? அவர் பாரதியோடு நெறுங்கி பழகியவர்.
பாரதியின் உண்மையான குண நலன்களை உணர்ந்தவர். பாரதியின் நல்லியல்புகள்,
சாதி மதம் கடந்த பார்வைகள்
மற்றும் அன்பை புரிந்தவர் / நேரில அறிந்தவர்.
அதனால்தாம் தம்மை பாரதிதாசன் என்று அழைத்துக்
கொண்டார். அவரின் பார்வையில் பாரதி ஒரு பார்பனவாதியாகவோ, இந்துத்துவவாதியாக
தோன்றவில்லையே ? ஏன் ?

ஒரு மனிதனை முழ்மையாக புரிந்து கொள்ள
அவனின் முழு வாழ்வையும் பார்க்க
வேண்டும் என்பதே சரி..

////////செந்தமிழ் நாடெனும் போதினிலே யின்பத்
தேன்வந்து பாயுது காதினிலே என்றெழுதித்
தமிழ்நாட்டை அப்படியே நெஞ்சால் எழுதி
முடித்தார்" (8)

என புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் கூறுகிறார். இவ்வாறாகப்
பாரதி நண்பர்களுடைய வேண்டுதலாலும், கட்டாயத்தாலும் தான், "செந்தமிழ்
நாடெனும் போதினிலே" என்ற பாடலையும், "யாமறிந்த மொழிகளிலே" என்ற பாடலையும்
எழுதினார். இந்தப் பாடல்களுக்காக அவருக்கு மதுரைத்
தமிழ்ச் சங்கம் பரிசாக
ரூ.100 அளித்தது. (9////////

so ? எப்படி வேண்டுமானாலும் அர்த்தப்படுத்திக்
கொள்ளாலாம். (interpretation)

உள்ளதில் மெய் உணர்வு இல்லாமல் ஆழமான,
உணார்சிகரமான கவிதைகளை, பிறர் சொல்கிறார்கள
என்று எழுத முடியாது. எழுதுனாலும் குற்ற‌ம் /
எழுதாவிட்டாலும் குற்ற‌ம். வேடிக்கை..

//இதுகுறித்து ஆய்வாளர் க.கைலாசபதி கூறுவதாவது:

"1949 இல் ஓமந்தூரார் அரசு பாரதி நூல்களின் பதிப்பு
உரிமையை வாங்கியது. 1950 இல் அரசு பாரதி நூல்கள்
பதிப்புக் குழு ஒன்றை உருவாக்கியது. அக்குழுவில் இருந்த
ரா.பி.சேதுப்பிள்ளை, மு.வரதராசனார் போன்றோர்
பாரதியின் கவிதைகளில் மூலப்படியில் இருந்த
கிரந்த எழுத்துக்களை முழுமையாக நீக்கிவிட்டதாகவும்,
1909 இல் வெளிவந்த ஜன்மபூமியில் ஸமர்ப்பணம்
முகவுரை ஆகியவற்றின் கீழ் ஸி.ஸுப்பிரமணிய பாரதி
என்றே கையொப்பமிட்டுள்ளார்" (20) என்றும் ஆய்வாளர் க.கைலாசபதி கூறியுள்ளார்.
/////

இருக்கலாம். 100 ஆண்டுகளுக்கு முன் மணிபிரவள
நடைதான் சாதரணமாக இருந்த்து. அந்த காலத்தில் தூய
தழில் இயக்கம் வளர்வில்லை. சம்ஸ்கிருதம் பற்றிய
இன்றைய அரசியல் எதிர்ப்போ, சமஸ்கிருதம்
பார்பனியத்தின் ஆதிக்க மொழி என்ற கருத்தோ
பொதுபுத்தியில் பரவாத காலம் அது.

அன்று தமிழ் கவிதை என்றாலே யாப்பு / செய்யுள் தாம்.புதுக்கவிதையே இல்லை.
இன்று எழுதுவது சுலபம்.

எளிய தமிழ் கவிதைகளின் முன்னேடி பாரதி.
முழ்வதுமாக சமஸ்கிருதம் கலக்காமல் எழுத வேண்டும் ;
அப்படி எழுதுவதுதான் சரியானது என்ற கருத்து அன்று
இல்லை. அப்படி இருந்தாலும் பாரதி வளர்ந்த /வாழ்ந்த
காலச்சூழ் நிலையை பாருங்கள். பார்பனராக பிறந்து,
காசியில் படித்து, சம்ஸ்கிருதம், ஹிந்தி மொழிகளில் இலக்கியங்களில் நல்ல
தேர்ச்சி பெற்ற அவர், தமிழில்
இந்த அளவு அன்றைய காலகட்டத்தில் எழுதியதே
பெரிய விசியம். மணிபிரவாள தமிழ் சூழ்னிலை அன்று.
பாரதி தமிழ், சம்ஸ்கிருதம் இரண்டையும் உயர்வாக
கருதியவன். (பார்பானியவாதமாக அல்ல) ; சம்ஸ்கிருதத்தில்
பல அரிய காப்பியங்களை படித்து திளைத்தார் / மகிழ்ந்தார். தமிழிலும்தான்.
அவனை பொருத்தவரை பேதம், ஏற்ற
தாழ்வு இல்லை.

குழந்தை உள்ளம் கொண்டவன் பாரதி.

//வேத உபநிடத மெய்நூல்களெல்லாம் போய்ப்
பேதக் கதைகள் பிதற்றுவாரிந் நாட்டினிலே" (2)

எனக் கூறி, இங்கு "ஆரியர்கள் வாழ்ந்த நாடு அற்புத
நாடென்றும், அவர் எழுதிய வேத உபநிடதங்களெல்லாம்
மறைந்து போயினவே" என்றும் மிகவும்
வருத்தப்படுகிறார்.

///

வருத்தபடுவது அதற்காக அல்ல.
"பேதக் கதைகள் பிதற்றுவாரிந் நாட்டினிலே" :
இதற்க்காகத்தான்.

அதாவது பல ஜாதி. இன, மத, பிரிவுகளை அதற்கான கதைகளைதான் இன்று மக்கள்
முன்னிருத்தி பேதம்
கற்பித்து பிரிந்து வாழ்கின்றனர் என்றா வருத்தம்.

மனுதர்மம் பின்னர் வந்த சதி. உபனிடங்களில் உள்ள
தத்துவங்கள், மனுதர்மம் போன்ற அநியாயமான,
(பிறப்பிலேயே ஏற்ற தாழ்வு கற்பிக்க்கும்), ஆணாதிக்க
கருத்துக்கள் அல்ல. அதைதாம் பாரதி குறிப்பிடுகிறான். ஒழுக்கத்தால் தான்
ஒருவன் உண்மையான பிரமணனாக முடியும் ; பிறப்பால் அல்ல என்பதை உபனிடம் /
கீதை வலியிருத்துகிறது. அதை பாரதியும்
எடுத்துரைக்கின்றான். இந்து மத கருத்துக்கள் பற்றி
பாரதியின் பார்வை வேறு ; ஆர்.எஸ்.எஸ் பார்பனர்களின்
பார்வை வேறு.

Friday, September 19, 2008

மதமாற்றம் செயவது தவறா என்ன ?

க‌ர்னாட‌காவில் ச‌மீப‌த்தில் ந‌ட‌ந்த‌ கிருஷ்த்துவ‌ வ‌ழிபாட்டு
ஸ்த‌ல‌ங்க‌ளின் மீது ப‌ச்ர‌ங்தால் வெறிய‌ர்க‌ள் ந‌ட‌த்திய‌
தாக்குத‌ல்க‌ளை முத‌லைமைச்ச‌ர் எடியூர‌ப்ப‌ சிறிதும் பெறுப்போ. வெக்க‌மே
இல்லாம‌ல் நியாய‌ப‌டுத்தி பேசுகிறார். ம‌த‌ மாற்ற‌ம் செய்வ‌தான் தான்
இந்த தாக்குத‌ல்க‌ளாம். ஒரு முத‌லாமைச்ச‌ரின் பேச்சு இப்ப‌டியா ? கொடுமை.
(அவ‌ரிட‌ம் வேறு என்ன‌ எதிர்ப்ப‌ர்ப‌து ? )

அது ச‌ரி, ம‌த‌ மாறுவ‌து ஒரு த‌னி ம‌னித‌ உரிமை. தலித்துக‌ள் மாறினால்
மேல் ஜாதியின‌ருக்கு என்ன‌ ? ச‌ரியான‌ ஃபாசிஸ்டுக‌ள் தாம் இப்படி
காட்டுமிராண்டி போல் தாக்குவ‌ர்.

இப்ப நாட்டுல‌ இதுதான் முக்கிய‌ பிர‌ச்ச‌னையா என்ன‌ ?

மூட‌ர்க‌ள்...

Tuesday, September 16, 2008

அமெரிக்காவின் 'சுதந்திர தேவி சிலை'

அமெரிக்காவின் 'சுதந்திர தேவி சிலை'

ந்யூ யார்க் நகரின் துறைமுகம் அருகே, கடலின் நடுவில் ஒரு மிகப்
பிரமாண்டமான சிலை : சுத்ந்திர தேவி சிலை. 1880களில் ப்ரான்ஸ் நாடு
அன்பளிப்பு இந்த சிலை.

அமெரிக்கா என்றால் இன்று பெரும்பாலானோருக்கு இருக்கும் பிம்பம் : புஷ்,
ஈராக் நாட்டை ஆக்கிரமிப்பிப்பு. சி.அய்.ஏ சதிகள், 'ஏகாதிபத்திய
அடக்குமுறைகள்'...

ஆனால் 1930கள் வரை இருந்த அமெரிக்க வேறு. அதுதான் உண்மையான அமெரிக்க.
(இன்றும் அந்த அடிப்படை கொள்கைகள் உள்ளன, ஆனால் மறைந்து நிற்க்கின்றன).
அன்று உலக அரங்கில் அமெரிக்கா நுழையவில்லை. படை எடுப்புகள் இல்லை.
சோவியத் ரஸ்ஸியாவுடன் பனிப்போர் ஆரம்பமாகவில்லை.

1774இல் உலகின் முதல் சுதந்திர, ஜனனாயக அரசு அமெரிக்காவில்தான் உருவானது.
சம‌த்துவம் மற்றும் சுதந்திரம் போன்ற விசியங்கள் நடைமுறையில் ஏற்க்கபட்ட
வரலாறு. அன்ரு உலகம் முழுவது மன்னர் ஆட்சி மற்ரும் நிலப்பிரவுத்வ
சர்வாதிகாரம்தான்.

ஆனாலும் அமெரிக்காவில் ஜனனாயகம் முழுமையடைய மேலும் ஒரு நூற்றாண்டானது.
கருப்பின மக்கள் அடிமைகளாக நடத்தப்பட்டதை நிறுத்த ஒரு பெரும் உள் நாட்டு
போர் 1860 65 நடந்து ;அதன் இறுதியில் ஆப்ரகாம் லிங்கன் உயிர் தியாகம்
செய்தார். (காந்தியடிகளை ஒரு மத வெறியன் கொன்றதர்க்கு இணையானது).
செவ்விந்யர்களையும் வேட்டையாடி அவர்களின் நிலங்களை அபகரித்த கொடுமைகளும்
நடந்தன. 1880களில்தாம் அவை நின்றன.

1880கள் முதல் 1914 வரை பொற்காலம் என்று வர்ணிக்கிறார்கள். அந்த
காலகட்டத்தில் அய்ரோப்பாவில் மத அடக்குமுறைகள் ; யூதர்கள்,
கத்தோலிக்கர்கள், அய்ரிஸ்கார்கள், கிழக்கு அய்ரோபிய நாட்டில்
சிறுபான்மையினர், போலிஸ் நாட்டினர், போன்ற பல்வேறு குழுக்கள்
நசுக்கப்பட்டனர். ஏழைகளின் நிலை கொடுமையாக இருந்தது. வறுமை, பஞ்சம் பல
இடங்களில். அவர்கள் அனைவருக்கும் அமெரிக்க திறந்த கரங்களுடன் அடைக்கலம்
அளித்தது. (இன்று போல் விசா வழங்குவதில் கட்டுபாடு இல்லை) ; வந்தாரை
வாழவைக்கும் நாடாக திகழ்ந்தது. டைட்டானிக் படத்தில் பார்திருப்பீர்கள்.
ஏழை மக்கள் பலரும் புது வாழ்வு தொடங்க புது உலகம் நோக்கி பயண்ம செய்தனர்.
அவர்களின் சொத்து நம்பிக்கை மட்டுமே.

வந்தவர்கள் சுந்திரமாக வாழ, வேலை பார்க்க, தொழில் தொடங்க எந்த தடையும்
இல்லை. அய்ரொப்பாவில் போல் கட்டுபாடுகள், அடக்குமுறைகள் இல்லை.

மேற்க்கே கலிஃபோர்னியா போன்ற மாகாணங்களில் பச்சை நிலங்கள் (160 ஹெக்டேர்
ஒரு குடும்பத்திற்க்கு) இலவசமாக அளிக்கப்பட்டன. விவசாயத்தை துவங்கி
செழிக்க, உழைப்பை மட்டும் போட புதியவர்கள் ஆர்வதுடன் தலைபட்டனர்...

அட்லாண்டிக பெருங்கடலை கடந்து வந்த மககளுக்கு ஒரு மிக முக்கிய ஆதர்சமாக,
வரவேற்ப்பாக நின்றாள் அந்த சுதந்திர தேவி..

சுதந்திரம் என்றால் என்ன என்று சர்வாதிகாரத்தில் துன்புற்றவருக்கே
புரியும் / தெரியும்.

அய்ரொபாவில் பரம்பரை பணக்கார்கள் என்றும், தனது மூதாதைகள் 'லார்டுகள்'
என்றேல்லம் பெருமை அடித்துக்கொள்வார்கள். உடல் உழைப்பு மற்றும் தொழில்
முனைவோர்களுக்கு பெரிய மரியதை இல்லை. ஆனால் மாறாக, அமெரிக்காவில் பரம‌
ஏழையாக பிறந்து, தன் சுய முயற்ச்சியால், கடும் உழைப்பால் உயர்பவர்களுக்கே
மரியாதை. அவர்களைதாம் வழிகாட்டியாக கருதுவர். தாமஸ் ஆல்வா எடிசன், ஹென்றி
ஃபோர்ட், ஜான் ராக்ஃபெல்லர், கார்னிகி, மார்கன், ஹில்டன், டர்னர், லீ
அயோக்கா, ரிச்சார்ட் பிரான்சன், பில் கேட்ஸ் போன்ற சாதனையாளர்களே அங்கு
ஹீரோக்கள். அனைவரும் சாதாரண குடும்பத்தில் பிறந்து, போதிய கல்வி கூட
இல்லாமல், தம் சுய முயற்ச்சியால் பெரும் பொருள் ஈட்டி, சாம்ராஜியங்களை
நிறுவினர். அதன் மூலம் அமெரிக்க பொருளாதாரமே வளர்ந்து சுபிட்சம்
அதிகரித்தது.

The "American dream" என்பார்கள். யார் வேண்டுமானாலும் உழைத்து முன்னேற
வாய்பு ; மொழி, இனம், நிறம், மதம் போன்ற கட்டுப்பாடுகள் இல்லை. Metling
point என்று அமெரிக்க கலாச்சாரத்தை சொல்வார்கள்.

அதனால்தான் இன்றும் உலகம் முழுவது இருந்து மக்கள் அமெரிக்கவிற்க்கு புலம்
பெயர்ந்து வாழ முனைகிறார்கள். அவர்களை சுதந்திர தேவி வரவேற்க்கிறாள்...