Wednesday, July 16, 2008

பிரபஞ்சத்தின் ஆரம்ப கணங்கள் (Big Bang Theory)

சுமார் 1350 கோடி வருடங்களுக்கு முன் சிங்குலாரிட்டி
(Singularity)என்ற ஒருமை புள்ளியில் இருந்து வெடித்டு
துவங்கியது இந்த பிரபஞ்சம். அந்த வெடிப்பு கணத்தின்
போது தான் காலமும், இடமும் பிறந்தன. அதற்க்கு முன்
மேட்டர் / என்டி மேட்டர் இரண்டும் சம அளவில் இருந்து பாலன்ஸ் செய்து கொண்டனவாம்.

அந்த ஒருமை புள்ளி கணத்தில் இருந்து வெடித்து சிதறி
இன்றும் ஒரு ஊதப்படும் பலூன் போல இந்த பிரபஞ்சம் விரிவடைந்து கொண்டே போகிறது.

அந்த ஒருமை புள்ளி கணத்திற்க்கு முன் 'ஒன்றுமே' இல்லை. காலம், இடம்
இரண்டும் இல்லை. அவை இரண்டும் இல்ல
நிலை பற்றி புரிந்து கொள்வது மிக கடினம். அதவாது வெற்றிடமும் இல்லை. இடமே
இல்லா நிலை பற்றி புரிந்து கொள்ள முயற்ச்சிப்போம்.

Steven Weinberg's classic "The First Three Minutes." என்ற மிக
முக்கிய புத்தகம் அந்த ஆரம்ப 3 நிமிடங்களை விவரிக்கின்றது.

வேறு விதமாக‌ விள‌க்க‌ முய‌ற்சிக்கிறேன் : நாம் முப்ப‌ரிணாம‌ உல‌கில்
வாழ்ந்து ப‌ழ‌கிவிட்டோம். நான்காவ‌து ப‌ரிமாண‌ம்
(நேர‌ம்) ப‌ற்றி அய்ன்ஸ்டினின் ரிலெடிவிட்டி திய‌ரி பேசுகிற‌து.
ந‌ம்மால் க‌ற்ப‌னை செய்து புரிந்து கொள்வ‌து க‌டின‌ம்.

ஒரு இர‌ண்டு ப‌ரிமான‌ உல‌கை க‌ற்ப‌னை செய்து கொள்ளுங்க‌ள் : அதாவாது ஒரு
மிக‌ப் பெரிய‌ த‌ட்டையான‌ மேஜைதான் உல‌க‌ம். அதில் இர‌ண்டு ப‌ரிமாணங்க‌ளே
உள்ள‌ கோடு, வட்ட‌‌ம், செவ்வ‌க‌ம், சதுரம் போன்ற 'ஜீவன்கள்' வாழ்வதாக
வைத்துக்கொள்வோம். அவை நீளம், அகலம் என்ற இரண்டே பரிமாணங்களைத்தான்
அறியும், புரிந்து கொள்ளும். அவற்றிடம் உயரம் என்ற மூன்றாவது பரிமாணம்
ஒன்று உள்ளது. மூன்று பரிமானங்கள் உள்ள உலகில் உருண்டை, ப்ரிஸம், உருளை
போன்ற 'ஜீவன்கள்' எடை மற்றும் அடர்த்தியுடன் வாழ்கின்றன என்று விளக்க
முயற்ச்சித்தால், அந்த இரு பரிமாண 'ஜீவன்களுக்கு' புரியாது அல்லவா. அதே
போல்தாம் மனிதர்களுகு நான்காவது பரிமாணம் பற்றி கற்பனை செய்வது இயலாது..

அதே போல்தான் சிங்குலாரிட்டி எனப்படும் ஒருமைபுள்ளி என்ற ஆரம்ப கணத்தின்
முன் 'ஒன்றுமே' இல்லா நிலை. காலமும், இடமும் இல்லா நிலை.

ஹப்புள் என்ற விஞ்ஞானி ரெட் ஷிஃப்ட் என்ற விசயத்தை கண்டுபிடித்தார்.
அதவாது நம் புமியிலிருந்து ஒரு கால்க்ஸி எத்தனை துரத்தில் உள்ளதோ அந்த
தூரத்திற்க்கு நேர்விகிதத்தில் அவற்றின் (ப‌ரப்ஞ்சத்தின்
மைப்புள்ளியிலிருந்து விரிவடையும்) விலகிச் செல்லும் வேகம் உள்ளது.
அதிலிருந்து வெளிப்படும் ரேடியோ கதிர்வீச்சு அகச்சிவப்பு கதிர்களின் அலகை
நோக்கின் 'நகர்ந்துள்ளது'.

1964இல் பென்ஸியாஸ், வில்சன் என்ற இரு விஞ்ஞானிகள் 'காஸ்மிக்
பாக்கரவுண்ட் மைக்ரோவேவ் ரேடியேஸன்' (Cosmic microwave background
radiation)என்ற பிரபஞ்சம் முழுவதும் விரவியிருக்கும் சிற்றலை (ஒரு வகை
வெப்ப அலை)பற்றி எதேச்சயாக கண்டுபிடித்தனர். அதற்காக நோபல் பரிசு
வென்றனர். அந்த கண்டுபிடிப்பு பிக் பாங் தியரியை உறுதி செய்தது. ஆரம்ப கண
வெடிப்பு சிதறல் போது உருவான வெப்ப அலைகளின் தற்போதை வடிவம் பிரபஞ்சம்
முழுவதும் சம அளவில் பரவி உள்ளது..

////Hubble's law has two possible explanations. Either we are at the
center of an explosion of galaxies—which is untenable given the
Copernican Principle—or the universe is uniformly expanding
everywhere. This universal expansion was predicted from general
relativity by Alexander Friedman in 1922[4] and Georges Lemaître in
1927,[5] well before Hubble made his 1929 analysis and observations,
and it remains the cornerstone of the Big Bang theory as developed by
Friedmann, Lemaître, Robertson and Walker.

That space is undergoing metric expansion is shown by direct
observational evidence of the Cosmological Principle and the
Copernican Principle, which together with Hubble's law have no other
explanation. Astronomical redshifts are extremely isotropic and
homogenous,[1] supporting the Cosmological Principle that the universe
looks the same in all directions, along with much other evidence. If
the redshifts were the result of an explosion from a center distant
from us, they would not be so similar in different directions.

Measurements of the effects of the cosmic microwave background
radiation on the dynamics of distant astrophysical systems in 2000
proved the Copernican Principle, that the Earth is not in a central
position, on a cosmological scale.[37] Radiation from the Big Bang was
demonstrably warmer at earlier times throughout the universe. Uniform
cooling of the cosmic microwave background over billions of years is
explainable only if the universe is experiencing a metric expansion,
and excludes the possibility that we are near the unique center of an
explosion. ////

http://en.wikipedia.org/wiki/Big_bang_theory

சிங்குலாரிடி என்ற அந்த ஆரம்ப கணத்திலிருந்து இன்று வரை நடந்த விசியங்களை
ஒரளவு அனுமானித்துவிட்டோம். ஆனால் அந்த ஆரம்ப கணத்திற்க்கு முன் என்ன
இருந்தது, ஏன் இந்த மகா மகா வெடிப்பு, இத்தனை கோடாடனு கோடி ஸில்லியன் டன்
எடையுள்ள பருப்பொருளும், சக்தியும் எப்படி ஒரே மைக்ரோ செக்கன்டில், ஒற்றை
புள்ளியிலிருந்து எப்படி, ஏன் வெளிப்பட்டன என்ற கேள்விக்கு விடை இல்லை.
ஏன் என்ற கேள்வி ?

அந்த சிங்குலாரிட்டிக்கு முன் இருந்தவற்றை 'விளக்க' கடவுள் தேவை
படுகிறார். ஆனால் அதற்க்கு பின் நிகழ்ந்தவைகளை விள‌க்க தேவையில்லை, என்று
ஒரு கருத்து உள்ளது....

3 comments:

 1. அந்த ஆரம்பத்தை இயற்கை என்று சொல்லி விட்டால்,பல கடவுள்கள்,மதங்கள் சண்டைகள் எல்லாம் இருக்காதே!
  ஒரே கடவுள் என்றால் அது உன் கடவுளா என் கடவுளா என்றல்லவா சண்டை தொடங்குகிறது.

  ReplyDelete
 2. அன்பர்,
  பிரபஞ்சத்தின் தோற்றத்தை பற்றிய விஞ்ஞான ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளை எளிய தமிழில் நன்றாக விளக்கி உள்ளீர்கள். ஆனால் கடைசியில் உங்கள் கருத்தை மெலிதாக உள்ள்செருகி இருக்கிறீர்கள்... அதுவும் கட்டுரையின் சாராம்சமாக.... //அந்த சிங்குலாரிட்டிக்கு முன் இருந்தவற்றை 'விளக்க' கடவுள் தேவை
  படுகிறார். ஆனால் அதற்க்கு பின் நிகழ்ந்தவைகளை விள‌க்க தேவையில்லை, என்று
  ஒரு கருத்து உள்ளது... //

  சிங்குலாரிட்டி என்பது பிரபஞ்சத்தின் ஆரம்ப நிலையை குறிப்பது. இதனை ஜெனரல் ரிலேடிவிட்டி கொள்கைகள் மூலம் பின் திசையில் கணக்கிட்டு அந்த நிலை வரை சென்றுள்ளனர். இந்தப்பெருவேடிப்பு நிகழ்ந்த கணம் முதல் இன்று வரை உள்ள பிரபஞ்சத்தின் இயக்கத்தை இயற்பியல் விதிகள் மூலம் அச்சரசுத்தமாக விளக்க முடிகிறது... அதனால் இந்த காலகட்டத்தை விளக்க கடவுள் தேவை இல்லை என்பது 'கருத்து' இல்லை, உண்மை, நிரூபணம்...
  பிரபஞ்சத்தின் தோற்றத்தை சிங்குலாரிட்டி மூலம் விளக்கியதில் ஸ்டீவென் ஹவ்கிங்'இன் பங்கு அளப்பரியது. பிரபஞ்ச உருவாக்கத்தினை விளக்க கூட கடவுள் என்ற கருத்தாக்கம் தேவை இல்லை என்கிறார்... (தி கிராண்ட் டிசைன்)
  வெளி, காலம் இரண்டுமே தானாக உருவாக்கி கொள்ளகூடியது (ஸெல்ப்-ப்ரோபகட்) என பொது ஈர்ப்பு கொள்கை மூலம் விளக்குகின்றனர் விக்ஞானிகள். ஆகையால் சிங்குலாரிட்டி கு முன் இருப்பவற்றை விளக்கவும் கடவுள் தேவை இல்லை (இன்னும் அறிவியல் பூர்வமாக நிருபணம் செய்யப்படவில்லை அவ்வளவு தான்...)
  கடவுள் பிரபஞ்சத்தை உருவாக்கினார் என்றால் கடவுளை யார் உருவாக்கியது என கேக்கலாம்? கடவுள் சுயம்பு என்றால் வெளி, காலம் ஏன் தானாக தோன்ற கூடாது?

  ReplyDelete