Sunday, April 19, 2009

மேதைகளின் தமாஸ்

மேதைகளின் தமாஸ்

இங்கிலாந்தின் பிரதம் வின்ஸ்டன் சர்சிலுக்கு தம் மருமகனை
பிடிக்காது. ஒரு முறை ஒரு குடும்ப விருந்தில், ஒருவர்
சர்சிலிடம், "உங்களை கவர்ந்த உலகத்தலைவர் யார் ?"
என்று கேட்டார்.

அதற்கு சர்ச்சில் "இத்தாலிய நாட்டின்
சர்வாதிகாரி முசோலனி" என்றார்.

"அவர் ஒரு ஃபாசிசவாதி, உங்கள் எதிர்யாச்சே" என்றார்
கேள்வி கேட்டவர்.

அதற்க்கு சர்ச்சில் சாவகாசமாக சொன்னது "
"இருக்கலாம், ஆனால் என்னால் கனவிலும் செய்ய‌
முடியாததை அவர் சர்வசாதரணமாக செய்தார்.
அவரின் சொந்த மருமகனை தூக்கிலிட்டார்"
 
--------------
 
பெர்னாட் ஷா தமது புதிய நாடகம் ஒன்றிர்க்கக இரு
நுழைவுசீட்டுகளை சர்சிலுக்கு அனுப்பினார். அத்துடன் ஒரு
சீட்டில் : "இரு டிக்கெட்டுகள் அனுப்பியுள்ளேன். ஒன்று
உங்களுக்கு, இன்னொன்று உங்கள் நண்பர்
யாருக்கவது. அப்படி யாராவத் இருந்தால்.."

உடனே அந்த டிக்கெட்டுகளை திருப்பி அனுப்பிய சர்ச்சில்,
எழுதியது "இன்று வேலை இருப்பதால் நாடகம் பார்க்க
வர இயலாது, நாளைய‌ தின நாடகத்திற்க்கு ஒரு டிக்கெட்டுகள்
அனுப்புங்கள்.நாளையும் நாடகம் நடந்தால்.."
 
----------------
 
ஒரு மிக அழகான, பிரபலாமான ஹாலிவுட் நடிகை,
பெர்னாட் ஷாவிற்க்கு எழுதியது : "...நீங்கள் பெரிய‌
அறிவாளி. நான் பேரழகி. நாம் திருமணம் செய்தால்,
உங்களைப்போல அறிவும், என்னைப் போல அழகும்
கொண்ட குழந்தை பிறக்கும்.."

அதற்க்கு ஷா எழுதிய பதில் :
"மன்னிக்கவும். உங்களைப் போல அறிவும்,
என்னை போன்ற அழகும் கொண்ட குழ்ந்தை
பிறந்தால் என்ன ஆவது.."
 
 

4 comments:

  1. சர்ச்சில் ஒரு பொதுகூட்டத்தில் பேசும்போது தேர்க்கூட்டம் கூடியது.உடனே அவர் கட்சி எம்பி ஒருவர் "நீங்கள் தான் மக்கள் தலைவர்.உங்களுக்கு எத்தனை கூட்டம் கூடுகிறது பாருங்கள்" என்று அதிசயப்பட்டார்.

    உடனே சர்ச்சில் "அட நீங்க வேற..என்னை முச்சந்தியில் தூக்கு போடுவதாக அறிவித்தால் இதை விட பெரிய கூட்டம் கூடும்" என்றார்.

    மக்களின் மந்தை மனோபாவத்தை சர்ச்சில் நன்கு புரிந்துவைத்திருக்கிறார்

    ReplyDelete
  2. B'shaw and another person were passing thro a narrow path.

    The other person: I don't give way to idiots.

    B'shaw: I do

    ReplyDelete
  3. Very funny liners.


    Thanks for sharing. Expecting you to read more of your articles.

    ReplyDelete
  4. I am expecting you to write frequently. (The last comment had some mistakes. Ignore the mistakes)

    ReplyDelete