Friday, July 4, 2008

ஹாஜ் மான்யமும், மதசார்பின்மையும்

ஆண்டிற்க்கு 250 கோடி அள‌வுக்கு ஹாஜ் ப‌ய‌ணிக‌ளுக்கு
இந்திய‌ அர‌சு மான்ய‌ம் அளிப்ப‌து ம‌த‌சாற்பின்மையா
அல்ல‌து ?

இதில் பிஜெபி ஆட்சி செய்த‌ 5 ஆண்டுக‌ளில் இதை
நிறுத்த‌ முய‌ற்சி செய்ய‌வில்லை.

ச‌ம்ப‌த‌ப்ப‌ட்ட‌ அனைவ‌ரும் க‌ள்ள‌த‌ன‌மாக‌
செய‌ல்ப‌டுகின்ற‌ன‌ர்.

ஹாஜ் ப‌ய‌ண‌ம் தார‌ள‌மாக‌ செல்லால‌ம் ; ஆனால்
சொந்த‌ செல‌வில். அதைதான் இஸ்லாமும் சொல்கிற‌து
என்று ந‌ம்புகிறேன்.

ஓட்டுக‌ளுக்காக‌ இந்த‌ முட்டாள்த‌னம் தொட‌ர்கிற‌து.

இஸ்லாமிய‌ ம‌க்க‌ளும் இந்த‌ ப‌ண‌த்தை வேறு ந‌ல்ல‌,
ப‌ய‌னுள்ள‌ வ‌ழிக‌ளில் அர‌சு செல‌வு செய்ய‌ வேண்டினால்
என்ன‌ ? வ‌ருடா வ‌ருட‌ம் இந்த‌ 250 கோடிக‌ளில்
இஸ்லாமிய‌ர்க‌ள‌ அதிக‌ம் வாழும் ப‌குதிக‌ளில்
இல‌வ‌ச‌ ம‌ருத்துவ‌ம‌னைக‌ள், க‌ல்விக்கூட‌ங்க‌ள்,
ஸ்கால‌ர்ஷிப்க‌ள் போல்...

ஹும்....

ந‌ட‌க்காது இதெல்லாம்.

அண்டை வீட்டுகாரர்கள் உணவு அருந்திவிட்டானா என்று பார்த்துவிட்டு உணவு
உட்கொள்பவனே உண்மையான இஸ்லாமியன் என்று குர்ஆன் கூறுவதாக தெரிகிறது.

அதேபோல ஹஜ் பயணம் மேற்கொள்வதைவிட ஏழை பெண்களுக்கு திருமணம் செய்துவைப்பது
மிகவும் நல்லது என்று முகமது நபி(ஸல்) கூறியுள்ளதாகவும் தெரிகிறது.

ஆனால் நடைமுறையில் இந்தியாவில் வசிக்கும் இஸ்லாமியர்களில்
மிகப்பெரும்பான்மையினர் வறுமையில் வாட, சிறுபான்மை இஸ்லாமியர்கள் மட்டுமே
செல்வசெழிப்புடன் வசிக்கின்றனர்.

இவர்களுக்கு சமூக சிந்தனைகளும் இருப்பதில்லை. இஸ்லாமிய மார்க்கத்தில்
கூறப்பட்டுள்ள விஷயங்களையும் இவர்கள் கடைபிடிப்பதில்லை. (விதிவிலக்குகள்
நீங்கலாக)

இதைவிட கொடுமை என்னவென்றால், இந்து மதத்தின் அடிவேறான சாதியக்
கொடுமைகளால் சீரழிக்கப்பட்டு இஸ்லாமிய மதத்திற்கு மாறியவர்களை, அங்கும்
அதே சாதிப்பாகுபாடுகள் தொடர்ந்து துரத்துவதுதான்.

பொது சிவில் சட்டம் : அதை ஏன் இன்றும் இஸ்லாமிய தலைவர்கள் மற்றும் ஆண்கள்
(பெண்கள் அல்ல) ஏற்க மறுக்கின்றனர் ?

விவாகரத்து, சொத்துரிமை, ஜீவனாம்சம், பாகப்பிரிவினை
போன்ற விசியங்கள் அனைத்து மக்களுகும் பொதுதானே.
அதில் மட்டும் ஏன் இன்னும் ஷாரியாத் சட்டத்தை
மட்டும்தான் ஏற்ப்போம் என்று பிடிவாதம் ? ஆணாதிக்கம்
மிகுந்த நியாமில்லா சட்டம் அது.

சரி, கிரிமினல் குற்றங்கலுக்கும் ஷாரியத்தை (சவுதி
அரேபியா போல்) இந்தியாவில் பயன்படுத்த என்ன
தயக்கம் ? ஒராவஞ்னை ? இரட்டை வேடம் இது.
கையை வெட்டுதல் போன்ற கொடுமையான
தண்டனைகள் அதில்...

பெண்களை அடிமைபடுத்தும் சட்டம் ஆண்களால்
இன்றும் நிலை நிறுத்தப் படுகிறது. இதற்க்கு சால்ஜாப்பு
வேறு. நடுவு நிலைமை, நேர்மையே இல்லையா ?

(இப்படி எழுதவதால் என்னை ஒரு இந்துதவா
ஆதரவாளர், இஸ்லாமியர்களை வெறுக்கும் குறிகிய
மனபான்மை உடையவன் என்று முடிவு செய்ய
வேண்டாம் !!)

6 comments:

  1. இப்படி எழுதவதால் என்னை ஒரு இந்துதவா
    ஆதரவாளர், இஸ்லாமியர்களை வெறுக்கும் குறிகிய
    மனபான்மை உடையவன் என்று முடிவு செய்ய
    வேண்டாம் !!)
    இது தான் சூப்பர்

    ReplyDelete
  2. உங்கள் வாதம் புரியவில்லை,

    ஒருவர் தன் மகளுக்கு திருமண உதவி கேட்கிறார் அதற்கு சிலரும் உதவுகிறார்கள், அவரிடம் சென்று நீங்கள் ஏன் திருமணம் ஆகாத பிறருடைய பெண்களை நினைத்துப் பார்த்து, உங்கள் மகளையும் அப்படியே திருமணம் முடிக்காமல் வைத்திருக்காமல் ஏன் திருமணம் செய்து கொடுக்க முயல்கிறீர்கள் ? என்பது போல் இருக்கிறது.

    இந்தியா ஒளிருகிறது என்று 5 செகண்ட் விளம்பரத்திற்கு கோடிகள் கணக்கில் வீனாக்குவதைவிட இதற்கு கொடுப்பதில் ஒரு தரப்பினரையாவது திருப்தி படுத்த முடியுமே.

    இவ்வளவு பெரும் தன்மையாக பேசும் நீங்கள் சாமியார் மடங்களுக்கு கணக்கில் அடங்காத அளவுக்கு கோடிக்கணக்கில் குவியும் வெளிநாட்டுப்பணத்தையும் இந்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று குரல் கொடுக்கலாமே. நாம் நம் இந்திய மக்களுக்கே மதத்தை தொடர்பு படுத்தி இந்திய பணத்தைக் கொடுக்க வேண்டாம் என்று சொல்லும் போது அதே மதச்சார்பின்மையால் வெளிநாட்டினரின் பணமும் இந்தியாவுக்குள் வருவதை விரும்பவில்லை என்று துணிந்து சொல்லலாமே. அடுத்தவர் காசு என்றால் அதற்கெல்லாம் மதிப்பு இல்லையா ? அல்லது அவர்கள் போடுவதை நாம் பிச்சை என்ற அளவில் ஏற்றுக் கொள்கிறார்களா ?

    ReplyDelete
  3. nanabar kovi,

    you simply didnot understand the main issue. Govt money (that is tax payers public money) is being spend for the travwel expenses of muslim haaj pilgrrims. suppose if hindu pilgirms who travel to Maneswarer in China and Chrisitan pilgrms who travel to Jerusalem in Isreal demamd similar subsidy from our secular govt ?

    A really secular govt does not support, or spend its publicmoney for any such unsecular matter.

    providing security is a different matter. the point is spending good money for a selected groups of pilgrims..

    and Nagore islami,

    i should not have put that disclaimer. you can assume whatever u wish. i don't care a damn...

    ReplyDelete
  4. and Nagore islami,

    i should not have put that disclaimer. you can assume whatever u wish. i don't care a damn...

    neverthless this one also damn super

    ReplyDelete
  5. //ஓட்டுக‌ளுக்காக‌ இந்த‌ முட்டாள்த‌னம் தொட‌ர்கிற‌து.//

    சேது சமுத்திர திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துவிட்டு பின்னர் எதிர்ப்பது ஓட்டுகளுக்காக அல்லாமல் வேறு எதற்காக. இவ்விஷயத்தில் எல்லா கட்சிகளும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்.


    //அதேபோல ஹஜ் பயணம் மேற்கொள்வதைவிட ஏழை பெண்களுக்கு திருமணம் செய்துவைப்பது
    மிகவும் நல்லது என்று முகமது நபி(ஸல்) கூறியுள்ளதாகவும் தெரிகிறது.//

    உடன்படுகிறேன்.


    //ஆனால் நடைமுறையில் இந்தியாவில் வசிக்கும் இஸ்லாமியர்களில்
    மிகப்பெரும்பான்மையினர் வறுமையில் வாட, சிறுபான்மை இஸ்லாமியர்கள் மட்டுமே
    செல்வசெழிப்புடன் வசிக்கின்றனர். //

    உண்மையை ஒப்புக்கொண்டதற்கு நன்றி. இது உண்மையால் சச்சார் கமிட்டியின் பரிந்துரைகளை வரிந்துக் கட்டிக்கொண்டு எதிர்ப்பது ஏனோ?.

    //இவர்களுக்கு சமூக சிந்தனைகளும் இருப்பதில்லை. இஸ்லாமிய மார்க்கத்தில்
    கூறப்பட்டுள்ள விஷயங்களையும் இவர்கள் கடைபிடிப்பதில்லை. (விதிவிலக்குகள்
    நீங்கலாக)//

    இது எல்லா மதத்தினரிடம் உண்டு. புழு பூச்சியை கொல்வது கூட பாவம் என்னும் புத்தமதத்தை சேர்ந்தவர்கள்தான் இலங்கையில் அப்பாவித் தமிழர்களை கொன்று குவிக்கிறார்கள். இந்துத்துவாவின் படுகொலைகளுக்கு குஜராத், ஒரிசா என பல உதாரணங்கள் இருக்கின்றன. இதில் எந்த மதத்தினரும் விதி விலக்கல்ல! இது ஒரு மதப் பிரச்சினை என்பதை விட இந்தியாவெங்கும் பரவியிருக்கும் சமூகப் பிரச்சினை.

    //இதைவிட கொடுமை என்னவென்றால், இந்து மதத்தின் அடிவேறான சாதியக்
    கொடுமைகளால் சீரழிக்கப்பட்டு இஸ்லாமிய மதத்திற்கு மாறியவர்களை, அங்கும்
    அதே சாதிப்பாகுபாடுகள் தொடர்ந்து துரத்துவதுதான். //

    முழுக்க முழுக்க உண்மை. பார்ப்பனீயத்தின் தாக்கம் இந்தியாவில் உள்ள மாற்று மதத்தினரையும் விட்டு வைக்கவில்லை.

    //பொது சிவில் சட்டம் : அதை ஏன் இன்றும் இஸ்லாமிய தலைவர்கள் மற்றும் ஆண்கள்
    (பெண்கள் அல்ல) ஏற்க மறுக்கின்றனர் ? //

    நடைமுறையில் உள்ள சிவில் சட்டத்தை எந்த மதத்தின் தாக்கமும் இல்லாமல் திருத்தியமைத்தால் பொது சிவில் சட்டம் அனைவருக்கும் ஏற்புக்குறியதே. (வருமான வரி கட்டும் உங்களுக்கு சாரல் படிவத்தில் வரும் “Hindu Joint Family" என்கிற வார்த்தை கண்ணில் படாதது ஏனோ?, இது போல் சிவில் சட்டத்திலும் பல பகுதிகள் உண்டு, அவற்றையெல்லாம் முற்றிலும் நீக்கலாமே)

    ஹேமாமாலினியை மணப்பதற்காக (பெயரளவில்)முஸ்லிமாக மதம் மாறிய தர்மேந்திராவிற்கு எம்.பி டிக்கேட் கொடுத்தக் கட்சி எதுவென்று தெரியுமா? தர்மேந்திராவிற்கு மட்டும் Muslim Personal Law செல்லுபடியாகும். மற்றவருக்கு செல்லாதோ?.


    (இப்படி நான் எழுதுவதால் நான் ஒரு இஸ்லாமிய அடிப்படைவாதி. இந்துக்களை வெறுக்கும் குறுகிய மனப்பாண்மை கொண்டவன் என்று முடிவு செய்யவேண்டாம்)

    ReplyDelete
  6. On may 10, 1995 a bench of the Supreme Court presided over by, Mr. Justice Kuldip Singh and Mr. Justice R.M. Sahai delivered a historic judgment (A.I.R. 1995 S.C. 1531). Four unfortunate Hindu wives separately moved the Supreme Court against their husbands who converted to Islam to have a second wife. The court held that under Hindu law conversion to another religion does not dissolve the previous marriage and unless existing marriage is dissolved re-marriage is void and punishable under Section 494, I.P.C. The Judges held that marriage, divorce and religion are in nature as much a matter of faith and conviction and not convenience. A Hindu converts to Muslim by receiving kalma, a Muslim becomes Hindu by reciting mantras. These are matters of belief and conviction and matters of faith, reason and logic. Misuse of religion for one's sordid ends must stop. Conversion should be out of conviction and not convenience. It has serious sociopolitical implication. The Judges said that an uniform civil code was imperative, both for protection of the oppressed and promotion of national unity and solidarity. But religious practices, violative of human rights and dignity and sacerdotal suffocation of essentially civil and material freedom are not autonomy but oppression. The court further said that those who preferred to remain in India after lice partition fully knew that the Indian leaders did not believe in two Nations or three Nations theory and that in the Indian Republic there was to be only one Nation, the Indian Nation and no community can claim to remain a separate entity on the basis of religion. Legislation and not religion being the authority under which the Muslim personal Law was permitted to operate and continued to operate and it could be superseded/supplemented by legislation by introducing an uniform civil code. Supreme Court verdict covers Hindu converts to Islam but not Muslims by birth. One Muslim can still have four wives under the Muslim Personal Law (Shariat) Application Act, 1937 which stabilise that the Muslims will be governed by personal Law. In the Judgement the Prime Minister was asked to take a fresh look at Article 44 of the Constitution which urges the state to secure an uniform civil code for citizens of Bharat. The judgement directed that Government should ask the Law Commission to draft a comprehensive common code incorporating the present day concept of human rights for women. In the interim period, to consider setting up a committee to enact a law for checking misuse of the right to convert one's religion. The law may provide as every citizen who changes his religion cannot marry another woman unless he divorces his first wife. They also directed the Secretary, Ministry of Law and Justice to file an affidavit of a responsible officer, in the Apex Court, by August 1996, indicating the steps taken and efforts made by the Centre towards securing an uniform civil code for the citizens in terms of the court judgement, which has remained in the cold storage for the last five decades. We have amended the Constitution in 1993 for providing reservations for women in Panchayats and Municipalities and now we have already introduced a bill for further amendment to provide for reservation for women in the assemblies and parliament, yet we honour primitive Personal Laws and custom which lend support to inhuman and unsocial treatment to women.

    ReplyDelete