Wednesday, October 8, 2008

இஸ்லாமிய சமுதாயம் முன்னேற சில யோசனைகள்

எனது தனிப்பட்ட கருத்து இது :

இஸ்லாமியர்களிடம் வறுமை, கல்லாமை மிக அதிகம்
தான். இந்திய சராசரியை விட அதிகமாகவே உள்ளது.
இதை போக்க வழிகள் :

1.குழ‌ந்தைகள பெற்ற்க்கொளவதை தாங்களே
விவேகத்துடன் கட்டுபடுத்திக் கொள்ளவேண்டும்.
மதக்காரணாம், மற்றும் ஜனத்தொகை குறைந்தால்,
இந்துக்கள் தங்களை நசுக்கிவிடுவார்கள் என்ற வீண்
பயம் போன்ற காரணிகள் சரியல்ல. ஒரு குழந்தை தான்
அரசு பரிந்துரைக்கிறது. இன்று பெரும்பாலான இதர
பிரிவினர் இரண்டு குழந்தைகளுக்கு மிகாமல் பார்த்துக் கொள்கினரன்ர். அதுவே
சிரமம். கல்வி மற்றும்
வளர்க்க போதிய வருமானம் இல்லாமல் வாழ்க்கை போராட்டம்தான்.

2. ஆண் / பெண் இரு பாலருக்கும் திருமண வயதை தள்ளி
போட வேண்டும்.

3. கல்வியில் அவசியத்தை இஸ்லாமியர்கள் அனைவரும்
உணரச் செய்ய வேண்டியது அவர்களின் தலைவர்களின்
கடமை. முக்கியமாக பெண் கல்வியில் முக்கியத்தை.

4.நவீன விஞ்ஞானம் ,கணிதம் மதராஸாக்களில் கற்று தர ஏற்பாடு செய்ய
வேண்டும். கிருஸ்துவர்களை போல் கல்வி துறையில் இருக்கவேண்டும். சர்சு
நடத்தும் பள்ளிகளில்
நவீன கல்விதான். லாட்டின் மற்றும் மதக்கல்வி மிக
குறைவு. உருதுவில் மட்டும் படித்த சென்னை
மாணவர்களை நான் சந்தித்திருக்கிறேன். அவர்கள்
இந்த நவீன உலகில் ஆங்கிலம் / தமிழ் அறியாமல்
எப்படி வேலை செய்வர் ? அவர்களில் எதிர்காலம் ?
அவர்களால் மற்றவர்களோடு போட்டியிட முடியுமா ?

5.ஹாஜ் மான்யம் : வருடம் சுமார் 250 கோடிகள்
அரசினால் அளிக்கப்படுகிறது. ஒரு ஏர் டிக்கெட்டிற்க்கு
சுமார் 8000 ரூபாய், தாரளமாக பயணம் செய்பவர்களே ஏற்றுக்கொள முடியும்.
ஒரளவு வசதியானவர்களே
ப‌யணம் செய்வர். மானியம் கண்டிப்பாக மதசார்பின்மைக்கு எதிரானது தான்.
இந்த‌ 250 கோடிக‌ளை மானிய‌த்திற்க்கு அளிக்காம‌ல், வ‌ருட‌ந்தோரும் ஒரு
ஏழை இஸ்லாமியர்
அதிகம் வாழும் ஒரு ப‌த்து ப‌குதிக‌ளுக்கு 25 கோடிக‌ளாக‌
பிரித்து, அங்கே இல‌வ‌ச‌ க‌ல்வி ம‌ற்றும் ம‌ருத்துவ‌ம‌னைக‌ள்
க‌ட்ட‌ உப‌யோகிக்க‌ வேண்டும். ப‌த்து
ஆண்டுக‌ளில் இந்தியாவெங்கும் சுமார் 100 இட‌ங்க‌ளில் அருமையான‌, த‌ர‌மான‌
க‌ல்வி ம‌ற்றும் ம‌ருத்துவ‌ம‌னைக‌ள் அமைத்தால், எத்த‌னை ல‌ட்ச‌ம்
இஸ்லாமிய‌ர் ப‌ய‌ன‌டைவ‌ர் ?

6. பிற மதத்தவர்களை கண்டு பயம் / தயக்கத்தை விடுத்து, அனைவருடனும் கலந்து
பழக வேண்டும் ஒரு
கிறுஸ்துவர்களின் தேவாலயம் மற்ரும் வீடுகளுக்கு
நான் சகஜமாக சென்று உறவாடுவதை போல் ஒரு
சராசரி இஸ்லாமியரிடம் பழக முடியவில்லை.
மசூதிகளுக்குள் செல்லவே தயக்கமாக / அச்சமாக
இருக்கிறது. அனைவருடன் கலந்து பழகும் போது மனம் விரிவடையும். புதிய
சிந்தனைகள் ஓங்கும். நாடர்கள்,
கொங்கு கவுண்டர்கள், பார்பனர்கள், மார்வாரிகள் போல்
வாழ்வில் முன்னேற உழைப்பு, motivation, focus on goals,
சந்தர்பத்திர்க்கேர்ப தனனை மாற்றிக்கொள்ளுதல்
(adaptabiltiy) போன்றவற்றை கற்க வேணடும்.

No community can progress dependent only on govt support or by
blaming other groups for thir backwardness. Only progressive thinking,
broad outlook, the ability to transcend unscientific and orthodox religious
attitudes can enable any group to climb. the Jewish people are the
best example for this kind of attiude and sucess. (i am not talking
about Islrael / Palestine conflict ) ; but about the magnificient
acheivement of Israelis in turing a arid and dry desert into a
floursihing and prosperous nation in less than 50 years. While Isreal
has no oil resoureces, it is more prosperosu than neighbouring Jordan,
Syria, etc. (the Isreali aggression and violations are a different
subject ; i am here talking about the abiltiy to learn from even
'enemies')....

8 comments:

 1. இஸ்லாமிய சமுதாய மக்கள் நலமுடன், வளமுடம் வாழ்ந்தால் மிக்க மகிழ்ச்சியே. (அனைத்து மக்களும் அதே போல் நலமுடன் வாழந்தால் சூப்பர் தான்).
  ஆனால் ச‌ச்சார் க‌மிட்டி அறிக்கை கூறும் த‌க‌வ‌ல்க‌ள் வேறு வித‌மாக‌த்தால் உள்ள‌து.
  இந்திய‌ இஸ்லாமிய‌ ம‌க்க‌ளிட‌ம் வ‌றுமையும், க‌ல்லாமையும் இந்திய‌ ச‌ராச‌ரியை விட‌ மோச‌மாக‌த்தான் உள்ள‌து. (அத‌ற்க்கு ச‌ரியான‌ கார‌ண‌ம் பிற‌ ம‌த‌க்கார‌ர்க‌ளே, அர‌சோ அல்ல‌ என்னும் உண்மை புரிய‌ வைப்பது க‌டின‌ம்).

  இஸ்லாமிய‌ர்க‌ளுக்கான‌ இட‌ ஒதுக்கீட்டை யாம் எதிர்க்க‌வில்லை. (ஆனால் அனைத்து இட‌ ஒதுக்கீடுக‌ளிலுக் கிரீமி லேய‌ர்க‌ளை க‌ளைய‌ வெண்டும் என்ப‌தே எம‌து உறுதியான‌ நிலை).

  இஸ்லாமிய‌ மார்க்கத்தில் அருமையான‌ விசிய‌ங்க‌ளும் இருக்கின‌ற‌ன‌. ப‌ள்ளிவாச‌லில் தொழுகை முறை அருமையான‌து ; உள்ளே அனைவ‌ரும் ச‌ம‌ம். அர‌ச‌னாலும், ஆண்டியானாலும் அனைவ‌ருக்கும் ஒரே அள‌வுதான் / மரியாதைதான். உருவ‌ வ‌ழிபாட்டை த‌வ‌ர்த்து, அனைவ‌ரும் கூட்டு வ‌ழிபாடு செய்வ‌து அருமை. மிக‌ முக்கிய‌மாக், பிற‌ ம‌த‌ங்க‌ள் (இந்து ம‌த்ம் போல்) இல்லாம‌ல், க‌ட‌வுளுக்கும் மனிதனுக்கும் இடையில் தொழுகையின் போது 'இடைத்தரகர்' (பாதிரியார்) யாரும் இல்லாத அமைப்பு அருமை. மேலும் மன்டியிட்டு தொழுகை செய்யும் முறை விஞ்ஞான பூர்வமானது. உடல் மற்றும் மன நலத்திற்க்கு மிக நல்லது என்பதையும் அறிந்துள்ளேன்.

  இஸ்லாம் என்ற‌ பெய‌ரில் அம‌லில் உள்ள சில‌ விசிய‌ங்க‌ளைதாம் எதிர்க்கிறோம்.
  இஸ்லாமிய‌ பெண்க‌ள் ப‌ர்தா அணிவ‌தும் அவ‌ர்க‌ளின் சொந்த‌ விசிய‌ம். அதை எந்த‌ சிவில் ச‌ட்ட‌மும் த‌டை செய்ய‌ முடியாது / கூடாது. ஓ.கே. ஆனால் ப‌ள்ளிக‌ள் , அல‌வ‌ல‌ங்க‌ள் போன்ற‌ இட‌ங்க‌ளில் உடைக்கான‌ க‌ட்டுப்ப‌டுக‌ளை விதிப்ப‌து அந்த‌ந்த‌ நிறுவ‌ன‌ங்க‌ளின் உரிமை. ம‌ற்ற பொது ம‌ற்றும் இருப்பிட‌ங்க‌ளில் ஆடை அணிவ‌து த‌னிம‌னித‌ உரிமை. ப‌ர்தா தேவை இல்லை, பெண்க‌ளின் அடிமைச் சின்ன‌ம் என்று நாங்க‌ள் கூறுவ‌து எங்க‌ள் க‌ருத்துத்தான். ம‌ற்றப‌டி ஜ‌ன‌னாய‌க‌ நாட்டில் ப‌ர்தாவை 'த‌டை' செய்ய‌ முடியாது / கூடாது. ஓ.கே.

  பலதார மணத்தை நியாப்படுத்த முடியாது. அது அடிபடை சமத்துவத்திற்க்கு எதிர்னாது. உலகின் பெரும்பானைமையான் (உண்மை ஜனனாயக) நாடுகளில் அது தடை செய்யப்பட்டுள்ளாது. பாக்கிஸ்தான், துருக்கி, எகிப்ப்து போன்ற இஸ்லாமிய நாடுகளிலும் கூட தடை. ஏன் என்று புரிந்து கொள்ள முயலுங்கள்.

  ReplyDelete
 2. மனிதன் மனிதனாக வாழவேண்டும்-என்ற தத்துவத்தை மனிதனுக்கு விளங்க வைக்கவே முஹம்மது நபி(ஸல்-அலை)அவர்கள் அவதரித்தார்கள்...
  இஸ்லாமிய விஞ்ஞானிகளின் சரிதைகளை நீங்கள் வாசித்தால் பிரமிப்படைவீர்கள்...இன்னும் நாசாவில் கூடா இஸ்லாமிய விஞ்ஞானிகளின் மூலஆதாரங்களை வைத்தே இன்றைய்ய விஞ்ஞானம் வளர்ந்து வருகிறது என்பது வெளிச்சத்துக்கு வராத உண்மை...
  விஞ்ஞானிகளுக்கு மத சாயம் பூசுவதற்கு நான் விரும்பவில்லை அவர்கள் எந்த சமயங்களில் இருந்தாலும் சரியே...
  நமது நாட்டைப் பொருத்தரை உங்களுடைய கருத்தில் சிலவற்றை ஏற்றுக்கொள்கிறேன்.
  திட்டமில்லாத குழந்தை பெறல்
  மதரசாக்களில் அரபு கல்வியோடு உலக கல்வியையும் கற்பிப்பது போன்ற கருத்துக்கள் வரவேற்க தக்கதாகும்...
  திருச்சி நகரிலிருந்து 12 கிமீ தொலைவில் உள்ள பூலாங்குளத்துப்பட்டி(திண்டுக்கல்ரோடு)கிராமத்தில் இஸ்லாம் உலகக் கல்வி உள்ளடக்கிய மதரஸா 10 ஆண்டுகளுக்கு மேல் இயங்கி வருகிறது அதில் நானும் ஒரு உறுப்பினராக இருந்து வருகிறேன்..
  திருமண வயதை தள்ளிப்போடுவதில் பெற்றோர்களின் மன நிலையும் அவர்களின் சூழ் நிலைகளும் காரணமாக அமைகிறது ....
  இன்றைய்ய காலத்து இஸ்லாமி இளைஞர்கள் இளைஞிகள் கல்வியில் ஆர்வம்காட்டி வருகிறார்கள்
  பல கிராமங்களில் வாழக்கூடிய இஸ்லாமியர்கள் நகரங்களில் இடம்பெயர்ந்து குழந்தைகளுக்கு நல்ல கல்வியை வழங்க முன் வந்துள்ளார்கள்..
  ஹஜ் பயணம் 250 கோடிகள் அரசினால் மானியம் வழங்கப்படுவது உண்மைதான்..அந்த தொகையில் ஹஜ் யாத்திரை முழுமையாக நடந்து விட சாத்திய மில்லை..
  ஹஜ்கமிட்டி மூலம் ஹஜ் செய்பவர்கள் 95ஆயிரம் பணம் கட்டவேண்டும் இதில் 30ஆயிரம் ஹஜ் பயணிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது..குலுக்கல் முறையில் ஹஜ் பயணிகளை தேர்வு செய்வார்கள் இதில் எவருமே இலவசமாக ஹஜ் யாத்திரை செய்வதில்லை
  பெண்களுக்கு சுதற்திரம் பர்தாவில் இல்லை...பர்தா என்பது பெண்களுக்கு பாதுகாப்பே ஒழிய சுதந்திரம் பறிப்பு அல்ல...
  சில சமயங்களில் பெண்கள் மாதவிடாய் காலத்தில் அவர்களை வீட்டின் கொல்லைபுர மூலைகளில் முடக்கி வைத்துள்ளார்கள்..அது தீண்டத்தாகத தீட்டாக கருதுகிறார்கள்..இதுவும் பெண்களின் சுதந்திர பறிப்புதான்...
  இந்த ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டு போட்டியில் பஹ்ரைனிலிருந்து பர்தா அணிந்த பெண் தடகள போட்டியில் பர்தா அணிந்து விளையாடி வெற்றிப் பெற்ற செய்தியை தாங்கள் ஊடகங்களில் கண்டிருக்கலாம்...பர்தா தடையில்லை..
  ஆண் பெண்கள் விசயத்தில் பலகீனமானவர்கள் சீக்கிரமே எமோசன் ஆகக்கூடியவர்கள் ஆதலால் பெண்களை பாதுகாக்க பர்தா அவர்களுக்கு கேடயம்..பர்தாவின் சிறப்பை பர்தா அணியாத பெண்களிடம் கேட்டுப்பாருங்கள்
  சுதந்திரம் என்பது உடையில் இல்லை உள்ளத்தில்...

  நண்பர் அதியமான் அவர்களே உங்கள் கருத்துக்களை வரவேற்கின்றேன்

  எனது கருத்துக்களை இங்கு பகிர்ந்துக் கொண்டிருக்கிறேன்...

  நன்றி

  நேரமிருந்தால் எனது வலைப்பூக்குள் வாருங்கள்


  www.kiliyanur-ismath.blogspot.com

  ReplyDelete
 3. வாங்க‌ நண்பரே. எனது கருத்துக்களை தெளிவாக கூறி இருந்தேனே. ம‌ற்ற‌ப‌டி ந‌ம‌க்கும் பெரும‌ளவில் க‌ருத்தொற்றுமை இருக்கிற‌து...

  ReplyDelete
 4. //இன்னும் நாசாவில் கூடா இஸ்லாமிய விஞ்ஞானிகளின் மூலஆதாரங்களை வைத்தே இன்றைய்ய விஞ்ஞானம் வளர்ந்து வருகிறது என்பது வெளிச்சத்துக்கு வராத உண்மை//

  My brother is working in NASA and he laughs after reading this :)

  ReplyDelete
 5. தெளிவான கருத்துகள், ஆனால் நடைமுறையில் அவர்களை சகமனிதர்களாக மாற்றுவது சாத்தியமில்லையே!, அல்லா தேவையானத்தை ஏற்கனவே சொல்லிட்டார், நீ மூடிகிட்டு இருன்னு அனானி பின்னூட்டம் வரனுமே, இன்னும் வரலையா அண்ணே!

  ReplyDelete
 6. ///1.குழ‌ந்தைகள பெற்ற்க்கொளவதை தாங்களேவிவேகத்துடன் கட்டுபடுத்திக் கொள்ளவேண்டும்.மதக்காரணாம், மற்றும் ஜனத்தொகை குறைந்தால்,
  இந்துக்கள் தங்களை நசுக்கிவிடுவார்கள் என்ற வீண்பயம் போன்ற காரணிகள் சரியல்ல. ///
  அதியமான் முஸ்லிம்களுக்கு இந்துக்களைவிட ,ஜைனர்களை விட குழந்தைகள் அதிகம் என்பதற்கு கடந்த சென்சஸ் லிருந்து ஆதாரம் தாருங்கள் .இல்லையெனில் முன்மாதிரியாக வினவு பதிவர்கள் முஸ்லிம்களும் மற்றவர்களும் தங்கள் வயதையும் குழந்தைகளையும் இங்கே பதியட்டும் .இஸ்லாம் நிரந்தர கருத்தடையைத்தான் தடை செய்கிறதே தவிர ஆணுறை பயன்படுத்துவதை தடை செய்யவில்லை .முதல் குழந்தை பாலூட்டுவதன் மூலம் தாயிக்கு இடையூறு என்றால் அடுத்த குழந்தை பிறப்பை தவிர்த்திட அஸ்ல்செய்து கொள்ளுங்கள் என்கிறது அஸ்ல் என்பது கிட்டத்தட்ட ஆணுறை உபயோகிப்பது போன்றே .
  அடுத்து,இன்று அமெரிக்காவின் உறுத்தலாக இருப்பது இந்தியா சீனாவின் முன்னேற்றமே .இந்தியா,சீனா முன்னேற்றத்திற்கு காரணம் மக்கள் வளமே .
  ///2. ஆண் / பெண் இரு பாலருக்கும் திருமண வயதை தள்ளி
  போட வேண்டும். ////
  உங்களது அத்தனை யோசனைகளும் மீடியாக்களிளிருந்து இஸ்லாத்தை தெரிந்து கொண்டு சொல்லியுள்ளதாக அறிய முடிகிறது .யதார்த்தம்
  என்னவென்று அறிய விரும்பாமல் அள்ளிமுடித்துள்ளீர்கள்.படிக்காத மற்றவர்களைப் போலவே படிக்காத முஸ்லிம்கள் இவ்வாறு திருமணத்தை முற்படுத்தியிருப்பர்கள்.
  3. கல்வியில் அவசியத்தை இஸ்லாமியர்கள் அனைவரும்
  உணரச் செய்ய வேண்டியது அவர்களின் தலைவர்களின்
  கடமை. முக்கியமாக பெண் கல்வியில் முக்கியத்தை.
  2000 க்கு முன்பைவிட அதன் பிறகு பத்தாவது வகுப்பு ப்ளஸ் டூ ரேன்க் பட்டியல்களை பார்த்தால் உங்களுக்கு உண்மை அறியலாம்.
  4.நவீன விஞ்ஞானம் ,கணிதம் மதராஸாக்களில் கற்று தர ஏற்பாடு செய்ய
  வேண்டும். கிருஸ்துவர்களை போல் கல்வி துறையில் இருக்கவேண்டும். சர்சு
  நடத்தும் பள்ளிகளில்
  நவீன கல்விதான்.
  மதரசாவில் மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்துவிட்டன சில மதரசாக்கள் மூடும் நிலையில் உள்ளது.பெருபாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை இப்போது மதரசாவிற்கு அனுப்புவதில்லை.
  .///ஹாஜ் மான்யம் : வருடம் சுமார் 250 கோடிகள்
  அரசினால் அளிக்கப்படுகிறது. ஒரு ஏர் டிக்கெட்டிற்க்கு
  சுமார் 8000 ரூபாய், தாரளமாக பயணம் செய்பவர்களே ஏற்றுக்கொள முடியும்.
  ஒரளவு வசதியானவர்களே ///
  ஏர் டிக்கட் 16000 /= ரூபாய் மற்றசெலவுகள் 50000 /= ரூபாய் ஆனால் ஹஜ் பயணிகளிடம் வசூலிப்பது ,இப்போது 110000 /= ரூபாய் .இதில் அந்நிய செலவாணி க்காக 30000 /=
  ரூபாயை மானியமாக தருகிறார்கள் .அதியமான் அவர்களே ,சரியாக பார்த்தால் அது மானியம் அல்ல.அரசுக்கு லாபமே
  6. பிற மதத்தவர்களை கண்டு பயம் / தயக்கத்தை விடுத்து, அனைவருடனும் கலந்து
  பழக வேண்டும் ஒரு
  ///கிறுஸ்துவர்களின் தேவாலயம் மற்ரும் வீடுகளுக்கு
  நான் சகஜமாக சென்று உறவாடுவதை போல் ஒரு
  சராசரி இஸ்லாமியரிடம் பழக முடியவில்லை. ///
  சில இடங்கள் ,சில மக்களின் பழகக் வழக்கங்கள் பொறுத்தே உள்ளது. இன்னும் சொல்லப்போனால் உயர் ஜாதி இந்துக்களைவிட ,பிற்படுத்தப்பட்ட ,தாழ்த்தப்பட்ட இந்துக்களிடம் உறவுமுறைகளை வைத்து முஸ்லிம்களே அதிகமாக நெருக்கமாக உறவாடுகிறார்கள்.
  நீங்கள் குறிப்பிடும் சில ஜாதியினர் உழைப்பால் மட்டுமே முன்னேறினர் என்று சொல்லமுடியாது.அரசியல் ஆதிக்கம் ,அதிகாரவர்க்க உதவியுடன் ,அரசு நிதி மோசடிகளுடன் முன்னேறி இருக்கிறார்கள் என்பது ஊரறிந்த உண்மை.
  இஸ்ரேல் முன்னேற்றம் ,அமெரிக்காவின் தயவில்மட்டுமே .இரானின் முன்னேற்றத்தை ஒழிக்க கங்கணம் கட்டவில்லையா? இராக்கின் சதாம் தண்ணி முஸ்லிம் என்று சொன்னது அமெரிக்காவின் முதல் தாக்குதலுக்கு பிறகே .அதாற்கு முன்னர் தண்ணி அரபாக காட்டிக் கொண்டு அற்புதேசத்தை விரிவாக்க எண்ணினார்.தனது அடுத்த நிலையில் தாரிக்அஜிஸ் என்னும் அரபு கிறித்தவரை வைத்திருந்தார் .மதச்சாயம் இல்லாமல் இருந்த அவரை சும்மா விட்டார்களா? மேலும் அவரது மதசார்ப்பின்மையே ,அதாவது தாரிக் அஜிசே அவரை காட்டிகொடுத்து கைதும் செய்யப்பட்டார்.
  எண்ணை வள நாடாக இல்லாவிட்டாலும் ,அமேரிக்கா உதவியுடன் ,அமேரிக்கா ராணுவ உடையில் இராக்கை அழித்து,அங்குள்ள எண்ணையை பைப்லைன் வழியாக திருடியும் வருவதையும் முன்னேற்றம் எனாதீர்கள்.

  ReplyDelete
 7. .///ஹாஜ் மான்யம் : வருடம் சுமார் 250 கோடிகள்
  அரசினால் அளிக்கப்படுகிறது. ஒரு ஏர் டிக்கெட்டிற்க்கு
  சுமார் 8000 ரூபாய், தாரளமாக பயணம் செய்பவர்களே ஏற்றுக்கொள முடியும்.
  ஒரளவு வசதியானவர்களே ///
  ஏர் டிக்கட் 16000 /= ரூபாய் மற்றசெலவுகள் 50000 /= ரூபாய் ஆனால் ஹஜ் பயணிகளிடம் வசூலிப்பது ,இப்போது 110000 /= ரூபாய் .இதில் அந்நிய செலவாணி க்காக 30000 /=
  ரூபாயை மானியமாக தருகிறார்கள் .அதியமான் அவர்களே ,சரியாக பார்த்தால் அது மானியம் அல்ல.அரசுக்கு லாபமே //

  எப்படிங்க லாபம், கொஞ்சம் சொல்லுங்க நானும் தெரிஞ்சிகிறேன்!

  ReplyDelete
 8. வால்பையன் அனானிக்கு பதிலாக வின்வுவின் புண்ணியத்தில் நான் பின்னூட்டமிட்டுள்ளேன் .அதியமான் சாருக்கும் அதில் மாற்று கருத்து இல்லை

  ReplyDelete