Tuesday, October 7, 2008

தேசம், ஞானம், கல்வி, ஈசன், பூசையெல்லாம்......

பராசக்தி (1952) சிவாஜி க‌ணேச‌ன், க‌லைஞ‌ர்
கூட்ட‌ணியில் ஒரு புதிய‌ திருப்புமுனையை
ப‌டைத்த‌ அருமையான‌ ப‌ட‌ம். (என‌து விருப்ப‌
ப‌ட‌ங்க‌ளில் / பாட‌ல்க‌ளில் ஒன்று) ;
அதில் வ‌ரும் ஒரு சூப்ப‌ர் பாட‌ல்.

எழுதியவர் : உடுமலை நாராயண கவி

தேசம் ஞானம் கல்வி ஈசன் பூசை யெல்லாம்
காசுமுன் செல்லாதடி - குதம்பாய்
காசு முன் செல்லாதடி.
ஈசனும் ஈசனார் பூசையும் தேசத்தில்
காசுக்குப் பின்னாலே - குதம்பாய்
காசுக்குப் பின்னாலே.

சாட்சியான பணம் கைவிட்டுப் போனபின்
சாட்சி கோர்ட்டு ஏறாதடி - குதம்பாய்
சாட்சி கோர்ட்டு ஏறாதடி.
பைபையாய் பொன் கொண்டோர்
பொய் பொய்யாய் சொன்னாலும்
மெய் மெய்யாய் போகுமடி - குதம்பாய்
மெய் மெய்யாய் போகுமடி.

நல்லவரானாலும் இல்லாதவரை
நாடு மதிக்காது - குதம்பாய்
நாடு மதிக்காது.

கல்வி இல்லாத மூடரை கற்றோர் கொண்டாடுதல்
வெள்ளிப் பணமடியே - குதம்பாய்
வெள்ளிப் பணமடியே

ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக்கோனே - காசு
காரியத்தில் கண் வையடா தாண்டவக்கோனே

உள்ளே பகை வையடா தாண்டவக்கோனே
உதட்டில் உறவாடடா தாண்டவக்கோனே

முட்டாப் பயலையெல்லாம் தாண்டவக்கோனே - காசு
முதலாளி ஆக்குதடா தாண்டவக்கோனே

கட்டி அழும்போதும் தாண்டவக்கோனே - பிணத்தைக்
கட்டி அழும்போதும் தாண்டவக்கோனே - பணப்
பெட்டிமேலே கண் வையடா தாண்டவக்கோனே

---------------------------------

இது "பணம்" படத்தில் வந்தது.

அண்ணா , என்.எஸ்.கே. போன்றவர்களுக்கு அன்று
ஆஸ்தான கவிபோல் விளங்கிய அருமையான கவிஞர்
உடுமலை நாராயணகவி எழுதியது :

எங்கே தேடுவேன் , பணத்தை எங்கே தேடுவேன்
எங்கே தேடுவேன் , பணத்தை எங்கே தேடுவேன்

உல‌க‌ம் செழிக்க‌ உத‌வும் ப‌ண‌த்தை எங்கே தேடுவேன்
அரசன் முதல் ஆண்டியும் ஆசை படும் இந்த பணத்தை
எங்கே தேடுவேன், பணத்தை எங்கே தேடுவேன்
கருப்பு மார்கெட்டில் கலந்து கொண்டாயோ
கஞ்சன் கைகளில் சிக்கிகொண்டாயோ
கிண்டிரேஸில் சிக்கி கிருகிருத்தாயோ
அண்டின பேர்களை ரெண்டும் செய்யும்
பணத்தை ப‌ண‌த்தை எங்கேதேடுவேண்
எங்கே தேடுவேன் , பணத்தை எங்கே தேடுவேன்

பூமிக்குள் புதைந்து புதைய‌லானாயோ......
பொன்ந‌கையாய் பெண்மேல் தொங்குகின்றாயோ
சாமிக‌ள் அடிக‌ளில் ச‌ர‌ண்புகுந்தாயோ
ச‌ன்யாசி கோல‌த்தோடு உல‌வுகின்றாயோ
ப‌ண‌த்தை எங்கே தேடுவேன்
எங்கே தேடுவேன் , பணத்தை எங்கே தேடுவேன்

திருப்ப‌தி உண்டிய‌லில் சேர்ந்துவிட்டாயோ
திருவ‌ன்னாம‌லை குகைபுகுந்தாயோ
இரும்பு பெட்டிக‌ளில் இருக்கின்றாயோ
இர‌க்க‌முள்ள‌வ‌ரிட‌ம் இல்ல‌த‌ப‌ண‌மே
உன்னை என்கே தேடுவேன்
தேர்ச‌லில் சேர்ந்து தேய்ந்து போனாயோ
தேக‌ சுக‌த்திற்க்காக‌ ஊட்டி சென்றாயோ

சுவ‌ற்றிக்குள் த‌ங்க‌மாய் ப‌ங்க்குவிட்டாயொ

சூட‌ம் சாம்பிரானியாய் க‌ர‌ந்துவிட்டாயோ

உல‌க‌ம் செழிக்க‌ உத‌வும் ப‌ண‌மே உன்னை எங்கே தேடுவேன்

எங்கே தேடுவேன் , பணத்தை எங்கே தேடுவேன்
எங்கே தேடுவேன் , பணத்தை எங்கே தேடுவேன்

5 comments:

 1. தேசம் ஞானம் கல்வி எல்லாம் காசு பின் தானடி .

  மிக்க நன்றி. இந்த பாடல் வரிகளை நானும் பல நாட்களாகா தேடி கொண்டு இருந்தேன்.

  மிக அருமையான வரிகள், மிக பயனுள்ள பதிவும் கூட.

  குப்பன்_யாஹூ

  ReplyDelete
 2. கா கா கா
  ஆகாரம் உண்ண எல்லோரும் ஒன்றாக
  அன்போடு ஓடி வாங்க
  என்ற அனுபவப் பொருள் விளங்க
  அந்த அனுபவப்பொருள் விளங்க
  காக்கை அண்ணாவே நீங்க அழகான வாயால்
  பண்ணாகப் பாடுறீங்க
  காக்காவென ஒண்ணாகக் கூடுறீங்க வாங்க

  (கா கா கா)

  சாப்பாடில்லாமே தவிக்குதுங்க
  ஜனம் கூப்பாடு போட்டு மனம் குமுறுதுங்க
  உயிர் காப்பாத்த கஞ்சித் தண்ணி ஊத்துங்க
  என்றால் தாப்பாளப் போடுறாங்க பாருங்க
  அந்த சண்டாளர் ஏங்கவே தன்னலமும் நீங்கவே
  தாரணி மீதிலே பாடுங்க ராகம் கா கா கா

  எச்சிலை தனிலே எறியும் சோத்துக்கு
  பிச்சைக் காரர் சண்டை ரோட்டிலே
  இளைத்தவன் வலுத்தவன் இனச்சண்டை பணச்சண்டை
  எத்தனையோ இந்த நாட்டிலே
  பட்சி ஜாதி நீங்க - எங்க
  பகுத்தறிவாளரைப் பாக்காதீங்க
  பட்சமா இருங்க பகிர்ந்துண்டு வாழுங்க
  பழக்கத்தை மாத்தாதீங்க எங்கே பாடுங்க கா கா கா

  படம்: பராசக்தி
  இசை: ஆர்.சுதர்சனம்
  பாடல்: கலைஞர் கருணாநிதி
  பாடியவர்: சி.எஸ். ஜெயராமன்

  ReplyDelete
 3. நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி

  > > சுசீலா: நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி
  > > இந்த நாடே இருக்குது தம்பி
  > > நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி
  > > இந்த நாடே இருக்குது தம்பி

  > > இருவரும்: சின்னஞ்சிறு கைகளை நம்பி
  > > ஒரு சரித்திரம் இருக்குது தம்பி
  > > சின்னஞ்சிறு கைகளை நம்பி
  > > ஒரு சரித்திரம் இருக்குது தம்பி


  > > நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி
  > > இந்த நாடே இருக்குது தம்பி


  > > சீர்காழி: கருணை இருந்தால் வள்ளல் ஆகலாம்
  > > கடமை இருந்தால் வீரன் ஆகலாம்
  > > பொறுமை இருந்தால் மனிதன் ஆகலாம்
  > > மூன்றும் இருந்தால் தலைவன் ஆகலாம்
  > > இந்த மூன்றும் இருந்தால் தலைவன் ஆகலாம்


  > > சுசீலா: நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி
  > > இந்த நாடே இருக்குது தம்பி
  > > இருவரும்: சின்னஞ்சிறு கைகளை நம்பி
  > > ஒரு சரித்திரம் இருக்குது தம்பி


  > > சுசீலா: அன்னையிடம் நீ அன்பை வாங்கலாம்
  > > தந்தையிடம் நீ அறிவை வாங்கலாம்
  > > இரண்டும் இருந்தால் பேரை வாங்கலாம்
  > > பேரை வாங்கினால் ஊரை வாங்கலாம்


  > > சீர்காழி: அன்பில் உயர்ந்தவர் யாரு?
  > > குழுவினர்: வள்ளலார்
  > > சீர்காழி: ஆமா.. வள்ளலார்
  > > சுசீலா: அறிவில் உயர்ந்தவர் யாரு?
  > > குழுவினர்: வள்ளுவர்
  > > சுசீலா: ஆமா.. வள்ளுவர்
  > > சீர்காழி: பாட்டில் உயர்ந்தவர் யாரு?
  > > குழுவினர்: பாரதியார்
  > > சீர்காழி: ஆமா.. பாரதியார்
  > > இருவரும்: நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி
  > > இந்த நாடே இருக்குது தம்பி
  > > சின்னஞ்சிறு கைகளை நம்பி
  > > ஒரு சரித்திரம் இருக்குது தம்பி


  > > திரைப் படம்: பெற்றால் தான் பிள்ளையா
  > > பாடியவர்கள்: சீர்காழி கோவிந்தராஜன்,
  > > பி.சுசீலா மற்றும் குழுவினர்
  > > இசை: எம்.எஸ்.வி
  > > நடிப்பு: சௌகார் ஜானகி, தங்கவேலு

  ReplyDelete
 4. பணம் ஒரு மாயை என்று தத்துவ விளக்கம் சொல்லப் போறிங்க படிக்கலாம் என்று வந்தேன் !

  ஏமாற்ற்ற்ற்ற்ற்ற்ற்ற்ற்ற்ற்ற்றம் !
  :(


  :)))))))))0

  ReplyDelete
 5. படம்: ஆளவந்தான்
  பாடல்: கடவுள் பாதி; மிருகம் பாதி

  கடவுள் பாதி
  மிருகம் பாதி
  கலந்து செய்த
  கலவை நான்!

  வெளியே மிருகம்
  உள்ளே கடவுள்
  விளங்க முடியா
  கவிதை நான்!

  மிருகம் கொண்று
  மிருகம் கொண்று
  கடவுள் வளர்க்க
  பார்க்கின்றேன்!

  ஆனால்……….
  கடவுள் கொண்று
  உணவாய் தின்று
  மிருகம் மட்டும்
  வளர்கிறதே!

  நந்த குமாரா!
  நந்த குமாரா!
  நாளை மிருகம் கொள்வாயா?
  மிருகம் கொண்ற
  எச்சம் கொண்டு
  மீண்டும் கடவுள் செய்வாயா?

  குரங்கில் இருந்து
  மனிதன் என்றால்
  மனிதன் நிறையா நினைப்பானா?
  மிருக ஜாதியில்
  பிறந்த மனிதா
  தேவ ஜோதியில் கலப்பாயா?
  ஹா!

  நந்த குமாரா…………..

  கடவுள் பாதி
  மிருகம் பாதி
  கலந்து செய்த
  கலவை நான்!

  வெளியே மிருகம்
  உள்ளே கடவுள்
  விளங்க முடியா
  கவிதை நான்!

  மிருகம் கொண்று
  மிருகம் கொண்று
  கடவுள் வளர்க்க
  பார்க்கின்றேன்!

  கடவுள் கொண்று
  உணவாய் தின்று
  மிருகம் மட்டும்
  வளர்கிறதே!

  நந்தா!
  கடவுள் பாதி
  மிருகம் பாதி
  கலந்து செய்த
  கலவை நான்!

  காற்றில் ஏறி
  மழையில் ஆடி
  கவிதை பாடும்
  பறவை நான்!

  கடவுள் பாதி
  மிருகம் பாதி
  கலந்து செய்த
  கலவை நான்!

  காற்றில் ஏறி
  மழையில் ஆடி
  கவிதை பாடும்
  பறவை நான்!

  ஒவ்வொரு துளியும்
  ஒவ்வொரு துளியும்
  உயிரில் வேர்கள்
  குளிருகிறதேன்?

  எல்லாம் துளியில்
  குளிரும் போதும்
  இரு துளி மட்டும்
  சுடுவதேன்?

  நந்த குமாரா!
  நந்த குமாரா!
  மழை நீர் சுடுது
  தெரியாதா?

  கண்ணம் வழிகிற
  கண்ணீர் துளிதான்
  வெந்நீர் துளி ஆனது
  அறிவாயா?

  சுட்ட மழையும்
  சுடாத மழையும்
  ஒன்றே கண்டவன்
  நீதானே!

  கண்ணீர் மழையில்
  தாநீர் மழையில்
  குளிக்க வந்தவன்
  நீதானே!
  யா!

  ReplyDelete