Saturday, January 10, 2009

புத்தக கண்காட்சியில் சில மணி நேரங்கள்

நேற்று மதியம் புத்தக கண்காட்சியில் சில மணி நேரங்கள் இருந்தேன். தமிழ் புத்காலயத்தில், ராஜம் கிருஷ்ணானின் பல புத்தகங்களை வாங்க 
முடிந்தது. எழுத்தாளாரை நன்கு பரிச்சியமான பிறகு அவரின் ஆக்கங்களை 
படிக்கும் விந்தை ! ஜெயமோகனின் "பின் தொடரும் நிழலின் குரல்" : ( நம்ம சப்ஜெக்ட் ஆச்சே, 
அதாவது கம்யூனிச ரஸ்ஸியாவில் நடந்த கொடுமைகள் பற்றிய 
தடிமனான புதினம்), ஞாநியின் நாடங்கள் மற்றும் கட்டுரைகள், மாலனின் 
கட்டுரை தொகுப்பு (என் ஜன்னலுக்கு வெளியே) : இந்த நூல் வெளியிட்டு 
விழாவில் அவரை சந்தித்தேன், சென்ற வாரம் கிழக்கு பதிப்பக
மொட்டைமாடியில்), ஆல்ஃபெர்ட் காம்யுவின் நாடகம் ஒன்று, வ.ரா வின்  
"பாரதி நினைவுகள்" (எனது பழைய காப்பி இரவல் சென்று தொலைந்து
விட்டது ; மிக அருமையான, மிக முக்கியமான‌ ஆவணம் இது), சுஜாதாட்ஸ், 
மற்றும் புதுமைபித்தனின் "ஸ்டாலினுக்கு தெரியும்" வாங்கினேன். மேலும் பல நூல்களை பார்த்தால் ஆசையாக இருக்கிறது. பட்ஜெட் மற்றும் 
வீட்டில் பெருகும் நூலகதிற்க்கான இடம், மனைவியின் ஆட்சேபனைகள் போன்ற 
தடைகள். (முதல் வேளையாக‌ பில்களை கிழித்து போட்டுவிட்டு, பிறகு கொஞ்சம் 
கொஞ்சமாக புத்கங்களை வீட்டிற்க்குள் கடத்துவது ஒரு கலை ; அது 
பேச்லர்ஸுகளுக்கு தெரியாது ! ) காலச்சுவடு பதிப்பகத்தில் "சித்திர பாரதி" என்று ஒரு அற்புதமான, புகைபட 
வரலாறு : பெரிய புத்தகம், விலை 300க்கு மேல். அடுத்த முறை வாங்கிவிடலாம். 
தீர்ந்துவிடாது என்று நம்புகிறேன். சென்ற வருட புத்தக சந்தை பற்றி எழுதிய பதிவு எப்போதும் செல்லும் : http://athiyamaan.blogspot.com/2008/05/options.html பல்வேறு முரண்பாடான எண்ணங்கள் ஒரே இடத்தில் சங்கமிக்கும் விசித்திர 
கலவை.. பிறகு ஞாநியின் 'ஓ' ஸ்டாலில் சில மணி நேரங்கள். அவரின் பரிக்க்ஷா நாடக 
குழு நண்பர்கள் இருந்தனர். பக்கத்து ஸ்டாலில் (டபுள் ஸ்டால்) ஒரு புதிய 'காதல்' 
கவிஞர்.  அவரின் காதல் கவிதை தொகுப்பை 'ம்ட்டும்' வெளியிட்டு ஸ்டாலில் 
ஏகாந்தமாக,  அழகாக விற்பனைக்கு அடிக்கியிருந்தார். அது ஒன்றும் பிரச்சனை 
இல்லை. ஆனால்  தொடர்ந்து அவரின் கவிதைகளின் ஒலி வடிவத்தை ஒலிபரப்பி 
எமது காதுகளில் தொடர் பொழிவாக 'சேவை' செய்தார். முக்கியாமாக், ஞாநியின் 
அரங்கில் பில் போடும் டேபிளில் அமர்ந்து பணியாற்றிய நண்பர் 
வெங்கடேஷ்க்குத்தான் பாவ்ம் தொடர்ந்து அந்த  கவிதை மழையில் மூழ்க்கும் 'பாக்கியம்' !! 
அய்யா காதல் கவிஞர்களே, கொஞ்சம் கருணை காட்டுங்களேன். (இதை தான் சொந்த 
செலவில் சூன்யம் வைத்துக் கொள்வது என்பதா ? :)))

ஞாநி சிறுது நேரம் கழித்து வந்து சேர்ந்தார். மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி. 
சென்ற வாரம் நடை பெற்ற, அவரின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டு பல 
புதிய நண்பர்களை சந்தித்தேன். ஸ்டாலில் புத்தகம் வாங்கிய பலரும் அவரிடம் 
ஆட்டிகிராஃப் வாங்கினர். அவரின் சகாக்களுடன் கழிக்கும் தருணாங்கள் உற்சாகமாக 
இருந்தன. கட்டுரைகளை மட்டும் படிக்காமல் அவரின் நாடங்கள் மற்றும் மொழி பெயர்ப்புகளையும் படியுங்கள் நண்பர்களே... எழுத்தாள‌ர் பாமரன் மற்றும் மருதனை கண்காட்சியில் சந்தித்தேன். மீண்டும் நாளை..

2 comments:

 1. அன்பின் நண்பரே இன்று உங்கள் வலையினை பார்க்கும் ஆவலில் வந்தேன். வாழ்த்துக்கள் நண்பரே!

  புத்தக கடையில் முரண்பாடான விதத்தில் கடைகள் வைக்கப்பட்டுள்ளதை கொஞ்சம் நகைச்சுவையாக சொல்லியுள்ளீர்கள்.

  வாழ்த்துக்கள் நண்பரே
  அன்புடன் இளங்கோவன்

  ReplyDelete
 2. தன்னுடைய நிலத்திற்காக, வாழ்வாதாரத்திற்காக, உரிமைக்காக போராடும் பழங்குடியினரின் போராட்டங்களை தீவிரவாதம் என்றும் மக்கள் விரோத, தேசநலனுக்கு எதிரான வன்முறை என்றும் மக்கள் விரோத முதலாளித்துவ அரசுகள் செய்யும் பரப்புரைகள் நடுத்தர மக்களையும், ஜாதி வெறியர்களையும் எளிதில் நம்பவைத்து ஏமாற்றுவதின் விளைவு….. இங்கே காட்சிப்பதிவாக….. முதலாளித்துவ சிந்தனைவாதிகளின் வெறியாக…..

  http://www.youtube.com/watch?v=VLeqXoclhX0

  ReplyDelete