Tuesday, May 20, 2008

மெட்ராஸ் - சென்னை, சில சுவாரசியாமான சரித்தர தகவல்கள்

மெட்ராஸ் - சென்னை, சில சுவாரசியாமான சரித்தர தகவல்கள் :

சாந்தோம் பகுதியில் வசித்த, டி-மேடரியா என்ற போர்சிகிசிய குடும்பத்திடம்
கிழக்கிந்திய கம்பேனி அதன் ஆரம்ப காலங்களில் (1660ல்) கடன் வாங்கியது.
அக்குடும்பமே அக்காலத்தில் மிக பெரிய, செல்வாக்கான குடும்பம். என்வே
அவர்களின் நினைவாக மெட்ராஸ் என்று பெயர் வந்ததாக ஒரு தகவல்.
யேசு கிருஸ்துவின் நேரடி சீடரான புனித தாமஸ் 2000 வருடங்களுக்கு முன்
இங்கு வந்து வசித்தார். அவர் பிராச்சாரம் செய்த குன்றே சென்ட் தாமஸ்
மௌண்ட் (விமான நிலையம் அருகே உள்ளது). கோட்டையிலிருந்து ஆங்கிலேயர்கள்
அதற்கு போட்ட சாலையே மௌண்ட் ரோட். போர்சிகீசில்
செயின்ட் தாமஸ் என்பது சாந்த் தோம் ஆனது. அங்கேதான்
புனித தாமஸ் புதைக்கப்பட்டார்.

1670களில் எலிகு யேல் என்னும் ஆங்கிலேயர் மெட்ராஸ் கவர்னராக பல ஆண்டுகள்
இருந்தார். பிரிட்டிஷ் பகுதியின் எல்லையய் விரிவு படுத்தினார். அப்போது
இந்தியாவின் சக்ரவர்தியாக இருந்த அவுரங்கசீபின் கீழ் இருந்த
கோல்கொன்டா சுல்தானிடமிருந்து, திருவல்லிக்கேணி, தொன்டயார்பேட்டை,
எழும்பூர், போன்ற 'கிராமங்களை' ஆங்கிலேயருக்காக விலைக்கு வாங்கினார்.
பின்னர் பணியிலிருந்து ஓய்வு பெற்று அமேரிக்கா சென்று அங்கு
கனெக்டிக்கட் பகுதியில் வாழ்ந்தார். அங்கு ஒரு பள்ளிக்கு தனது செத்தில்
ஒரு பகுதியய் தானமாக அளித்தார். அது வளர்ந்து இன்று புகழ் பெற்ற யேல்
பல்கலைகழகமாக திகழ்கிறது.

சின்ன தறிகள் உடைய நெசவாளர்கள் வாழ்ந்த இடமே இன்று சிந்தாதரிப்பேட்டை.
ஆற்காடு நவாபின் குதிரை லாயம் இருந்த பகுதிதேன் இனறைய கோடம்பாக்கம் (கோடா
என்றால் குதிரை என்று இந்தியில் அர்த்தம்). நவாப், சையத்கான் என்ற தன்
திவானிற்கு தானமாக அளித்த பகுதியே இன்றய சையதாபேட்டை.
ஏரி மற்றும் பனை மரங்கள் நிறைந்த பகுதியே நுங்கம்பாக்கம் (நுங்கு) ; லேக்
ஏரியா ; செங்கல் சூலைகள் இருந்த பகுதியே இன்று சூலைமேடு மற்றும் சூலை
ஆகும்.

ஏழு ஊர்கள் சேர்ந்த பகுதியே எழும்பூர் ஆனது. தோல் ஆடைகளை சாயமிட்ட இடமே
இன்றய வண்ணாரப்பேட்டை. பீட்டரின் தமிழாக்கமே ராயர் ; ராயப்பேட்டை மற்றும்
ராயபுரம்.

கோட்டைக்குள் இருக்கும் சென்ட் மேரிஸ் சர்ச், மிக பழமை வாயந்தது.
ஆங்கிலேயரின் முதல் தேவாலயம் அது. ஆங்கிலேய ஆட்சிக்கு விதிட்ட ராபர்ட்
களைவின் திருமணம் இங்குதான் நடந்தது....

8 comments:

 1. :))

  சுவையா எழுதி இருக்கீங்க! நல்லா இருக்கு! அதோட ரெண்டு உதவிகள் செய்தா இன்னும் நல்லா இருக்கும்.

  1. டெம்ளேட் வடிவத்தை மாத்துங்கோ!
  2. எழுத்துப் பிழைகளை தவிற்கவும்.

  பொருளாதாரம் தவிர்த்து மற்ற செய்திகளுக்காக.. எழுத இந்த வலைப்பதிவை தொடங்கி இருக்கும் உங்களுக்கு பாராட்டுக்கள் அண்ணே!

  ReplyDelete
 2. அப்படியே பழைய புகைப்படங்கள் கிடைத்தால் பதிவில் இடுங்கள்

  ReplyDelete
 3. தகவல்கள் அருமை.

  இன்னும் படங்கள் சேர்த்துப் போடப்பாருங்க.

  சுவை கூடும்.

  ReplyDelete
 4. படிக்க மிக சுவையாக இருக்கிறது.

  ReplyDelete
 5. வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி நண்பர்களே.

  அரிய புகைபடங்களுக்கு பார்க்க :

  http://www.madraschennaiphotographs.com/gallery.htm

  ReplyDelete
 6. 1780களில் கைதர் அலி தொடர்ந்து சென்னையை தாக்கியதால், ஒரு அரண் அமைக்க பிரிடிஷார் முடிவு செய்து அதற்கு நிதி திரட்ட ஒரு வரி விதித்தனர். வரிவிதிப்பிற்க்கு பலத்த எதிர்ப்பு.

  சென்டரல் ஸ்டேஸனுக்கு ஓட்டிய சாலைதான் அன்றைய நகரின் மேற்க்கு எல்லை. அங்கு கட்டப்பட்ட அரண் (wall) பிறகு பல ஆண்டுகளுக்கு பின், அபாயம்
  நீங்கிய பிறகு இடிக்கப்பட்டது. அந்த சாலைதான் வால்டாக்ஸ் (walltax) ரோடு. அதற்க்கு தோண்டிய மண் பிறகு கொட்டப்பட இடமே மண்னடி. (பிராட்வே அருகே உள்ளது).

  அந்த அரணின் தொடர்சி இன்றும் மின்ட் பகுதியில் உள்ளது. ஜைல் ரோடு என்ப்படுகிறது. அரணின் பகுதிகள் ஜெயிலாக சிறிது காலம் உபயோகப்பட்டது. இன்று அங்கு ஒரு மகளிர் கல்லூரி அமைந்துள்ளது.

  மின்ட், எனும் தங்கசாலையில் அரசு நாணயங்கள் வார்க்கப்பட்டன.

  ReplyDelete
 7. This is appakannu from bangalore i am basically dindigul district ottanchatram taluk. your comments excellent.carry on. it will be useful for youngesters like me Thank you so much.

  ReplyDelete
 8. This is appakannu from bangalore i am basically dindigul district ottanchatram taluk. your comments excellent.carry on. it will be useful for youngesters like me Thank you so much.

  ReplyDelete