Wednesday, May 21, 2008

புதுமைப்பித்தன் எழுதிய 'திரு ஆங்கில அரசாங்கத் தொண்டடிப்பொடிய்யாள்வார் வைபவம்'

புதுமைப்பித்தன் எழுதிய 'திரு ஆங்கில அரசாங்கத்
தொண்டடிப்பொடிய்யாள்வார் வைபவம்' :


'ஷ்ரீயப்பதியாய் ஸிம்லாச் சிகரத்தில் எழுந்தருளாநின்ற
அரசாங்க ஈச்வரன் வில்லிங்டன் மூர்த்தி' யை நோக்கிப்
பாடிய பதக்கதிலிருந்து சில :

உற்றாரை யான் வேண்டேன், ஊர் வேண்டேன், பேர் வேண்டேன்,
மற்றுமிந்த வாணிபத்தின் புன்செல்வம் யான் வேண்டேன்
பொற்றோளாய் ! உன்னுடைய பெருமை மிகு சர்வீஸில்
சிற்றுருவ மானதொரு அட்டெண்டர் ஆகேனோ !

ஊனேறு செல்வத்துடன் பிறவி யான் வேண்டேன்
தேனார் மொழிக் கிள்ளைத் தேவியரும் யான் வேண்டேன்

வானோங்கு புகழ்மிகுந்த நின்வாயி லிட்டுண்ணும்
மீனாய்ப் பிறக்கும் தவமுடைய னாவேனோ.
-----------------------------------------------------------------

மூலம் : 'அந்தக் காலத்தில் காப்பி இல்லை'
ஆ.இரா.வேங்கிடாசலபதி, காலச்சுவடு பதிப்பகம்.

3 comments:

  1. எந்த கண்ணாடியில்
    பார்த்தாலும்- எனது
    வலது கரம்
    இடப்பக்கமாகவே தெரிகிறது


    வால்பையன்

    ReplyDelete
  2. //வானோங்கு புகழ்மிகுந்த நின்வாயி லிட்டுண்ணும்
    மீனாய்ப் பிறக்கும் தவமுடைய னாவேனோ.//

    மீனை தவிர வேறெதுவும் அவர் சாப்பிட மாட்டாரா?

    வால்பையன்

    ReplyDelete