Tuesday, May 20, 2008

சென்னையில் பார்கக வேண்டிய இடங்கள்

1.பாரதி நினைவு இல்லம் : திருவல்லிக்கேணி பார்தசாரதி
கோவில் பின்புறம் அமைந்த இந்த வீட்டில்தான் 1921ல்
பாரதி காலமானார். பல அரிய புகைபடங்களும், அவருடைய
கையெழுத்தில் எழுதிய பல கவிதைகளின் கையெழுத்து
பிரதிகளும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன். தமிழர்கள்
அனைவரும் அவசியம் பார்கக வேண்டிய நினைவாலயம்..

2.விவேகானந்தர் இல்லம், மெரினா கடர்கரை சாலை :
1896 வாக்கில் அமெரிக்காவில்ருந்து திரும்பிய விவேகானந்தர்
சில நாட்க்கள் தங்கியிருந்த வீடு, இன்று ராமகிருஷ்ண
மடத்த்னரால் ஒரு அற்புதமான நினைவு இல்லமாக
மாற்றப்பட்டுள்ளது. விவேகானந்தரின் வாழ்கையை
சித்தரிக்கும் அரிய புகைப்பட கூடம், இந்திய வரலாற்றை
சித்தரிக்கும் ஒரு அருமையான ஓவிய கண்காட்சி,
புத்தக விற்ப்னை கடை மற்றும் ஒரு அமைதியான
தியான மண்டபம் உள்ளன.

3.புனித ஜார்ஜ் கோட்டை : 1660 களில் ஆங்கிலேயரால்
கட்டப் பட்ட கோட்டை. அப்போதே கட்டப்பட்ட புனித
மேரி சர்ச், ஆசியாவிலேயே மிக பழமையான
ஆங்கலிக்கன் சர்ச். பல அரிய, நினைவு பட்டகங்கள்
நிறைந்துள்ள தேவாலயம். இதில் தான் ராபர்ட் க்ளைவின்
திருமண்ம் நடந்தது ! அருகே ஒரு அழகிய பழைய
மாளிகை இப்போது மயுஸியமாக மாற்றப்பட்டுள்ளது.
பல அரிய சித்திரங்கள், ஆயுதங்கள், ஆவணங்கள்
உள்ளன.

4.எக்மோர் மயுஸியம்.

5.காமராஜர் நினைவு இல்லம், தி.நகர் : காமராஜர்
கடைசியாக வசித்த வீடு. அரிய புகைப்படங்களும்,
ஆவணங்களும் உள்ளன. தி.நகரில்தான் எம்.ஜி.ஆர்
நினைவு இல்லமும உள்ளது.

5. வழிபாட்டு ஸ்தலங்கள் : திருவல்லிக்கேணி
பார்தசாரதி கோவில், மைலாப்பூர் கபாலீஸ்வரர்
கோயில், சாந்தோம் தேவாலயம், கதீட்ரல் ரோடில்
இருக்கும் மிகப்பெரிய கதிட்ரல் ; பூந்தமல்லி
நெடுஞ்சாலையில் இருக்கும் மிக அழகிய
செயின் ஆண்ட்ரூஸ் கிர்க்..

6.வணடலூர் மிருககாட்சி சாலை மற்றும்
கடற்கரைகள்.

7. ஓமந்தூரார் எஸ்டேட் எனப்படும் அரசாஙக் இடத்தில்
அமைந்துள்ள பிரமான்டமான் ராஜாஜி மாளிகை ; 1
800 வாக்கில் ராபர்ட் க்ளைவின் மகன் எட்வர்ட்
க்ளைவில்னால் கட்டப்பட்ட விருத்தினர் மாளிகையே
இது. 1947வரை பிரிடிஷ் கவர்னர்கள் வசித்த இடம்.
அருகில்தான் எம்.எல்.ஏ விடுதிகள் அமைந்துள்ளன.

3 comments:

  1. ஆர்மீனியன் தெருவில் ஒரு சர்ச் இருக்கு.

    அந்தோணியார் கோவில். அங்கே செவ்வாய்க்கிழமைகளில் முழுக்க முழுக்க இந்துக்கள்தான் வழிபாட்டுக்குப் போகின்றார்கள்.

    ReplyDelete
  2. ஒரு காலத்தில் தமிழ் சினிமாக்களில் கோர்ட் காட்சிகள் எல்லாம் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள அரங்கில்தான் எடுக்கப்பட்டது. டோண்ட் மிஸ் இட்.

    ReplyDelete
  3. அன்புள்ள அதியமான்,

    வணக்கம். நலமா?

    சென்னை வருகின்றேன்.

    பாரதியார் நினைவு இல்லத்தின் விலாசம் தரமுடியுமா?

    இந்த முறையாவது தரிசிக்கவேணும்.

    என்றும் அன்புடன்,
    துளசி

    ReplyDelete