Tuesday, May 20, 2008

சென்னை புத்தக கண்காட்சியில் சில 'முரண்பாடுகள்' Options

சென்னை புத்தக கண்காட்சியில் அனைத்து வகை
'சிந்தனைகளும்' (அல்லது சித்தாந்தங்களும்) அருகருகே
கடை விரித்திருப்தே ஒரு நகைமுரண்.

தீவிர இந்து சமய சிந்தனை / பக்தி / ஆன்மீகம் (உ.ம் :
ராமகிருஷ்ண மடம், ஈசா யோகா) கடைகளுக்கு அருகே
பெரியாரிய / திராவிட சிந்தனைகள் !!

தீவிர இடதுசாரி / கம்யூனிச புத்தக கடைகளுக்கு எதிரே
சந்தை பொருளாதாரம் / மேலான்மை சம்மந்த பட்ட
புத்தகங்கள் !! ஜோதிட புத்தகங்கள்.

இஸ்லாமிய புத்தகளுக்கு சற்று தொலைவில் ஆர்.எஸ்.எஸ்
வகையிரா புத்தகங்கள்..

சேகுவாரா வரலாறு புத்தகங்கள் விற்க்கும் கடையிலே
பிஸினஸ் மேனெஜ்மென்ட் / மார்க்கட்டிங் புத்தங்களும்
வைக்கப்பட்டிறுக்கும் முரண் !!!

சற்று பிரமிப்பை ஏற்படுதினாலும், இந்த முரண் சிரிபை
வரவழைக்கிறது.

ஒரு பழைய பாடலின் வரி :

..everyone selling their wares,
selling soap, selling prayers....

யாராவது ஒரு புதுக்கவிதை புனையலாமே இதை பற்றி !!!!

3 comments:

  1. எந்த கண்ணாடியில்
    பார்த்தாலும்- எனது
    வலது கரம்
    இடப்பக்கமாகவே தெரிகிறது


    வால்பையன்

    ReplyDelete
  2. கண்ணாடியின் அருகே நின்று நீங்களே உங்களை பார்த்தால் சரியாய் தான் தெரியும்,
    மற்றவர் பார்த்தாலோ ஆல்லது தூரம் சென்று பார்த்தால் இந்த தவறு ஏற்படும்.
    virtual image, அறிவியல்...

    ReplyDelete