Monday, December 29, 2008

கீழ்வெண்மணியைப் பற்றி பெரியார்

12.1.69 அன்று செம்பனார் கோவிலில் அவர் ஆற்றிய
சொற்பொழிவிலிருந்து (விடுதலை 20.1.69) :

"தஞ்சை மாவட்டத்தில் இடதுசாரி கம்யூனிஸ்ட்கள்
விவசாய மக்களுக்கு நலன் செய்வதுபோல
அவர்களுக்காகப் பாடுபடுவதுபோல ஏழை
எளியவர்களின் வாழ்வை உயர்த்துவதுபோல
மேடைகளிலே பேசுகிறார்கள். உங்கள் கூலியை
உயர்த்துவது, வாழ்வை வளமாக்குவது எங்கள்
கட்சியேயாகும் எனக்கூறி விவசாய மக்களை
ஏமாற்றி அவர்களை பலிவாங்கிக் கொண்டு வருகிறார்கள்.
கூலி உயர்வு என்பது ஒரு கட்சியால் ஏற்படுவதல்ல.
இதனைத் தொழிலாளர்கள் உணரவேண்டும். நாட்டில்
ஏற்படுகின்ற பொருளாதார மாற்றம், விலைவாசி
உயர்வு - பற்றாக்குறை இவைகளைக் கொண்டுதான்
கூலிகள் உயர்கின்றதே தவிர கட்சிகளால் அல்ல.
தொழிலாளர்கள் தங்களுக்கு கிடைக்கிற
பொருளாதாரத்தில் எப்படி வாழவேண்டும்
என்பதை கம்யூனிஸ்ட் தோழர்கள் உங்களுக்குக்
கூறாமல் நாட்டிலே கலவரத்தையும், புரட்சியையும்
ஏற்படுத்தி இன்றைய தினம் வலதானாலும் சரி,
இடதானாலும் சரி, அதிதீவிர கம்யூனிஸ்ட்டுகளானாலும்
சரி இந்த ஆட்சியினைக் கவிழ்த்துவிட வேண்டுமென்கின்ற
முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றனர். அதற்கு விவசாயத்
தோழர்களும் மற்ற தொழிலாள நண்பர்களும் இடம்
கொடுக்கக்கூடாது என்று கேட்டுக்கொள்கின்றேன். நாகை
தாலுக்காவிலே கலகம் செய்ய தூண்டியது கம்யூனிஸ்ட்
கட்சி. அதன் காரணமாக 42 பேர் உயிரிழந்தனர்.
கம்யூனிஸ்ட் கட்சி நமக்கு ஒத்துழைத்த கட்சி என்று
அரசாங்கம் சும்மா இருந்துவிடவில்லை. தேவையான
நடவடிக்கையினை மேற்கொண்டிருக்கின்றது.நாட்டில்
அராஜகத்தைத் தூண்டும் பணியில் கம்யூனிஸ்ட்
கட்சி மிக தீவிரமாக ஈடுபட்டிருக்கின்றது. இதற்கு
இடம்கொடுக்காமல் அரசாங்கம் நடவடிக்கை
எடுக்க வேண்டும். கம்யூனிஸ்ட்களின் குறி கீழத்தஞ்சைப்
பகுதி பக்கம் திரும்ப இருக்கிறது. இங்குள்ள விவசாயத்
தோழர்கள் இங்கு அந்த தீயசக்தி பரவ இடம் கொடுக்கக்
கூடாது என்று கேட்டுக்கொள்கின்றேன். இந்த ஆட்சியை
பலவீனப்படுத்தக் கம்யூனிஸ்ட் கட்சி ஈடுபட்டுள்ளது.
அதற்கு நம்மக்கள் ஆதரவளிக்காமல் இவ்வாட்சிக்கு
தங்களின் ஆதரவினைக் கொடுப்பதன் மூலம் இந்த
அரசை மேலும் பலம் பொருந்தியதாக்க வேண்டும்.''

Friday, November 21, 2008

எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன்

விஷ்ராந்தி முதியோர் இல்லத்தில் தற்போது இருக்கும், எழுத்தாளர் ராஜம்
கிருஷ்ணன் அவர்களை சந்தித்து, சுமார் 2.5 மணி நேரம் உரையாடினேன். மறக்க
முடியாத சந்திப்பு.
அவரின் வய‌து 83..

தன் நீண்ட வாழ்க்கை பயணத்தை பற்றி பல விசியங்கள் சொன்னார். முசிறியில்
பிறந்து, பள்ளி இறுதி வரை மட்டும் படித்து, காவேரி நதியில் விளையாடி
வளர்ந்தவர். பல மொழிகளையும், இலக்கியங்களையும் சுயமாக கற்றவர்.

செக்கோஸ்லோவோக்கிய, ரஸ்ஸியா பயண அனுபவங்களை பற்றி கூறினார். பெண்ணியம்
பற்றி அந்த காலத்தில் இருந்து நிலை பற்றி, படுகர்கள் மற்றும் பழங்குடி
மக்களின் வாழ்க்கை, கலாச்சாரம் பற்றி ஆய்வு செய்ய தாம் கடும்
பிரயத்தனத்துடன் செய்த முயற்சிகள் பற்றி கூறினார்.

எழுத்தாளர்கள் அம்பை, ஜெயகாந்தன், சுந்திர ராமசாமி, சுஜாதா, மேலும் பலரை
பற்றி பேசினார்.

தனது படைப்புகளான : ஆன்டி உடோபியா (Anti-Utopia), வேருக்கு நீர்,
டாக்டர் ரங்காச்சாரியின் வாழ்க்கை வரலாறு, பாரதி பற்றிய ஆய்வுகள்
குறித்து விரிவாக பேசினார்.

அவருக்கு குழந்தைகள் இல்லை. கணவரும் காலமாகிவிட்டார். இருந்த வீட்டை
விற்ற பின் கிடைத்த பணத்தை, உறவினர் ஒருவர் ஏமாற்றி அபகரித்துவிட்டு அவரை
அனாதரவாக தவிக்க விட்டுவிட்டார். காவல் துறை உயர் அதிகாரி திலகவதி
(அவரும் ஒரு எழுத்தாளர் தான்) இவரை மீட்டு, விசராந்த்தி முதியோர்
இல்லத்தில் சேர்த்தார்.

கொடுமையான நிலை...

மின் தமிழ் இழையில் தமிழ் தேனி அவர்கள் எழுதியது :

http://groups.google.co.in/group/minTamil/browse_thread/thread/b4012b9cbd32abd0/65f0b80ed463fd25?hl=en#65f0b80ed463fd25

Thursday, November 6, 2008

பட்டின‌த்தாரும், குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டமும் !

நாப்பிளக்க பொய்பேசி நவநிதியம் நாளும் தேடி
நலமில்லா நாரியரைக் கூடி,
பூப் பிளந்து புலபுலவென, கலகலவெனவரும்
புற்றுஈசல் போல பிள்ளைகளைப் பெறுவீர்
காப்பதற்க்கும் வழியறியீர், கைவிடவும் மாட்டீர்
ஆப்பசைத்த குரங்குதன் நிலை பட்டீரோ.

-பட்டின‌த்தார்.

Friday, October 31, 2008

சதாம் ஹுசேன், செர்பியா,ஆஃப்கானிஸ்தான், அமெரிகாவின் போர்கள், டாலர் அரசியல் மற்றும் இன்ன பிற...

எப்படி சோவியத் ரஸ்ஸியா உண்மை கம்யூனிசம் அல்ல
என்று தோழர்கள் சொல்கிறார்களோ அதே போல்தாம்
அமெரிக்கா உண்மையான சுதந்திர பொருளாதார
கேபிடலிசத்தின் சின்னம் அல்ல. நார்வே, ஜெர்மனி
போன்ற நாடுகளை சொல்லாம்.

அமெரிக்காவின் பல போர்கள் மற்றும் ஆதிக்கம் செலுத்த முயற்சிகள் : இவை
அமெரிக்கா பற்றிய ஒரு வெறுப்பை பெரும்பாலோனவர்ககளிடம் தோற்றுவித்து
உள்ளதுதான்.
கோல்ட் வார் எனப்படும் மறைமுக யுத்தம் சுமார் 45 வருடகாலாம் அமெரிக்கா
மற்றும் இதர ஜனனாயக முதலாளித்துவ நாடுகளுக்கும் சோவியத் ரஸ்ஸியா
மற்றும் அதன் துணை (அல்லது அடிமை) நாடுகளுக்கும்
இடையே நடந்தது. இதன் அடிப்படையில்தாம்
அமெரிக்காவின் செய்ல்களை எடைபோட வேண்டும்.
இன்று அனைவரும் சோவியத் ரஸ்ஸியா, கிழக்கு அய்ரோப்பாவில் (செக், ஹங்கேரி,
போன்றவை) மற்றும் ஆஃப்கானிஸ்தான், எகிப்து, சிரியா போன்ற நாடுகளில் செய்த
ஆதிக்கத்தை மற்றும் அயுத சப்பளை மற்றும் உதவிகளை மறந்து விட்டார்கள்.
அதற்க்கு மாற்றாக அமெரிக்கா மற்றும் நேடொ நாடுகள் அதே பாணியில்
செயல்பட்டன. இரண்டும்
ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்தாம். இஸ்ரேல்
உருவாக்கப்பட்ட அய்.நா சபை ஓட்டேடுப்பில் காம்ரேட் ஸ்டாலினின் சோவியத்
ரஸ்ஸியாவும் இஸ்ரேலுக்கு
ஆதரவாக 1948இல் வாக்களித்தை காம்ரேடுகள் இன்று சொல்லுவதில்லை. இஸ்ரேலை
அடியோடு அழிக்க
எகிப்த்து மற்றும் இதர அரேபிய நாடுகள் கடும் முயற்சி
செய்த போது அமேரிக்கா இஸ்ரேலை ஆதரித்தது. இதற்க்கு போட்டியாக பின்னர்
ரஸ்ஸியா எகிப்த் மற்றும் சிரியாவை கண்மூடித்தனமாக ஆதரித்தது. இதன்
விளைவுகள் இன்றும் தொடர்கிறது.

அமெரிக்க செய்வதை நியாப்படுத்தவில்லை.
தெளிவுபடுத்துகிறேன்.

1990க‌ளில் ப‌ழைய‌ யூகொஸ்லோவிய‌ ப‌குதிக‌ளில்
கிருஸ்த‌வ‌ செர்பியா இஸ்லாமிய‌ போஸ்னியர்க‌ளை
கொன்றழித்து செய்த‌து. உல‌க‌ நாடுக‌ள் அனைவ‌ரும்
(ர‌ஸ்ஸியா நீங்க‌லாக‌, ஏனெனில் அவ‌ர்க‌ள் செர்பிய‌ர்க‌ளின்
உட‌ன் ப‌ங்காளிக‌ள்) செர்பியாவை க‌ண்டித்த‌ன‌. அய்.நாவில் நியாய‌ம்
கிடைக்காம‌ல் ர‌ஸ்ஸியா வீட்டோ அதிகார‌த்தை உப‌யோகித்த‌து. இன‌ப்ப‌டுகொலை
(இதில் க‌வ‌னிக்க‌ வேண்டிய‌ விசிய‌ம் : இஸ்லாமிய‌ர்க‌ள் பெரும் அள‌வில்,
கிருஸ்துவ‌ செர்பிய‌ர்க‌ளால், கொடிய‌வ‌ன் மிலாஸ‌விச் த‌லைமையில்
கொல்ல‌ப்ப‌ட்ட‌ன‌ர்) தொட‌ர்ந்த‌து. சாம‌, பேத‌, தான், த‌ண்ட‌ம் :
இவை அனைத்தையும் நேடோ நாடுக‌ள் ப‌ய‌ன்ப‌டுத்தி
க‌டைசியில் 1999இல் செர்பியா மீது க‌டும் குண்டு ம‌ழை
பொழிந்து அத‌ன் பொருளாதார‌த்தையும், ராணுவ‌ அணிக‌ள‌ன்க‌ளையும் அழித்து,
செர்பியாவின்
கொடுங்கோல்க‌ளை நிறுத்திய‌து. அப்போதும் அமெரிக்க‌ எதிர்பாளர்க‌ள்
வ‌ழ‌க்க‌ம் போல் 'எதிர்த்த‌ன‌ர்.'

http://en.wikipedia.org/wiki/Bosnian_War#War_crimes

அது ஒரு இனப்படுகொலை. ethnic cleansing.

http://en.wikipedia.org/wiki/Bosnian_Genocide

இஸ்லாமிய மக்களுக்கு எந்த அரசியல் நோக்கம்
இல்லாமல் மனிதாபிமான அடிப்படையில் அமெரிக்காவும்,
இதர நெடோ நாடுகளும் 1999இல் உதவின. கிருஸ்துவ செர்பியர்களின் ஆதிக்கத்தை
எதிர்த்து..

அமெரிக்கா இஸ்லாமிய‌ர்க‌ளுக்கு எதிரான‌து அல்ல
என்ப‌தை நிருப்பிக்க‌ இதை பெரிதாக‌ பிராச்ச‌ர‌ம்
செய்திருக்க‌ வேண்டும். ப‌ல‌ ஆண்டுக‌ளுக்கு முன் நான்
அமெரிக்க‌ வெளியுற‌வு துறைக்கு இந்த‌ 'பிரச்சார‌' அவ‌சிய‌ம்
ப‌ற்றி ஒரு மின்ம‌ட‌ல் அனுப்பினேன். !!

1979வரை ஆஃப்கானிஸ்தான் ஒரு அமைதியான,
வளமான நாடாகாக இருந்தது. இஸ்லாமிய தீவிரவாதம்,
அல் கொய்தா, தலிபான் எல்லாம் இல்லை. அமைதியான
மக்கள், நிம்மதியாக வாழ்ந்தனர். சோவியத் ரஸ்ஸியா
தன் தென் எல்லையில் அமைந்த நாடானான ஆஃகானிஸ்தானுக்கு 'புரட்சி' அய்
'ஏற்றுமதி' செய்ய
முயன்று, இறுதியில் படை எடுத்தது. ஆஃப்கானிஸ்தானுகு
அன்று பிடித்தது சனி. ர‌ஸ்ஸிய ஆக்கிரமிப்பை, கடும் அடக்குமுறைகளை
எதிர்க்க முஜாகுதின் படைகளை பாக் உதவியுடன் அமெரிக்கா ஊக்குவித்தது. பின்
லேடன்
சவுதியில் இருந்து ஆஃப்கானிஸ்தான் சென்று, அமெரிக்க உதவியுடன்
ர்ஸ்ஸியார்களை எதிர்த்து போராடினார்.
பாகிஸ்தான் அமெரிக்காவிற்கு முக்கிய நேச நாடு
மற்றும் தளமாக, ரஸ்ஸியர்களை எதிர்க்க ஒரு தடுப்பரணாக இருந்த்து. 10
ஆண்டுகளில் ரஸ்ஸியா தோற்று பிறகு
1991இல் வீழ்ந்தது. ஆனால் கிணறு வெட்ட பூதம்
கிளம்பிய கதையாக, இஸ்லாம் பெயரில் ஊக்குவிக்கப்பட்ட முஜாகுதீன் மற்றும்
பின் லேடன் பலமாக வளார்ந்து
இன்றும் பெரும் பிரச்சனையாக, ஆஃப்கானிஸ்தானுக்கும்,
உலகத்திற்க்கும் விளங்குகிறது.

அதே போல் 1979 வரை ஈரான் மன்னர் ஷா ஆட்சியில்
அமெரிக்க ஆதரவாளியாக, (அதாவது ரஸ்ஸிய எதிர்பில்) அமைதியாக இருந்த நாடு.
அயோத்துள்ளா கோமெனியின்
'புரட்சி' 1979இல் உருவாகி இஸ்லாமிய அரசு உருவாகி, அமெரிக்கர்களை
ஈரானிலிருந்து துரத்தி, அன்றிலிருந்து
ஈரான் ஒரு அமெரிக்க 'எதிர்பாளாராக' வளர்ந்தது. மதவாத தீவிரவாத்தை
ஊக்குவிக்கும் நாடாக உருமறியது. ஈராக்கின்
சர்வாதிகாரி சதாம் ஒரு கொடுங்கோலந்தான். அவன் தன் மக்களை, பல லச்சம்
பேர்களை ஈவிரக்கமில்லாமல்
கொன்றவன். எதிர்தவர்களை எல்லாம் பூண்டோடு அழித்தவன். ஆனாலும் அவன் ஒரு
மதசார்பற்றவன். மேலும் இஸ்லாமிய மதவாதிகள் வலுவாகா இராக்கில்
உருமாறினால், தன் அதிகாரத்திற்க்கு ஆபத்து என்று ஜாக்கரதையாக இருந்தான்.
மேலும், அரேபிய சன்னி முஸ்லிமான சதாம், இராக்கின் பெருவாரியான ஷியா
பிரிவு இஸ்லாமியர்களை
இரும்புக்கரம் கொண்டு அடக்கி வைத்திருந்தான். ஈரானில் உருவான ஷியா
மதவாதம் மற்றும் வளர்சி ,இராக்கில்
உள்ள பெருவாரி மக்களான ஷியாக்களையும் ஈர்த்து தன் அதிகாரத்திற்க்கு
ஆபத்து வரும் என்று நினைத்து 1980இல்
ஈரான் மீது படை எடுத்தான். 8 ஆண்டுகள் கடும் போர்.
பெரும் உயிர்பலி மற்றும் சேதம். 'எதிரிக்கு எதிரி நண்பன்'
என்ற (முட்டாள்தனமான, விவேகமில்லாத) தத்துவத்தின் அடிப்படையில் அமெரிக்கா
சதாமை ஊக்குவித்து
உதவியது. பிறகு அனுபவித்தது, வழக்கம் போல்!!

1990இல் சதாம் திவால் நிலைக்கு தள்ளப்பட்டதால்,
எண்ணை வளம் மிகுந்த சிறிய நாடான குவைத் மீது
படை எடுத்து ஆக்கிரமித்தான். சவுதி மீதும் படை
எடுப்பேன் என்று மிரட்டினான். உடனே அமெரிக்கா
மற்றும் அதன் நேச நாடுகள், விரைவாக களத்தில்
இறங்கி, கடும் போரில் ஈடுபட்டு குவைத்தை
விடுவித்தன. 1991இன் ஆரம்பத்தில் குவைத்தை
முற்றாக விடுவித்த அமெரிக்க மற்றும் இதர
படையுனர், ஒரு முக்கிய காரணத்திற்காக சதாமை
அழிக்காமல், ஈராக்கின் ராணுவ பலத்தை முற்றாக
அழிக்காமல், வேண்டும் என்றே விட்டு வைத்தனர்.
வலுவான மதவாத ஈரானை எதிர்காலத்தில் தடுக்க
ஒரு அரணாக ஒரு வலுவான் ஈராக் தேவைபட்டது.
(to maintain the 'balance of power' and to contain Iran. Strategic
calculations...)முக்கியமாக சதாம் போன்ற ஈரானை
எதிர்க்கும் ஒரு சர்வாதிகாரி தேவை பட்டது.
இல்லாவிட்டால் 1992இல் லேயே சதாமின் கதை
முடிந்திருக்கும்.

வழக்கம் போல அமெரிக்கர்கள் தப்புகணக்கு
போட்டனர். சதாம் அணு ஆயுதங்கள் மற்றும்
பேரழிவு ஆயுதங்களை குவிப்பதாக பலமான
சந்தேகம். பொருளாதார தடை. இருந்தும் ஒரு
வில்லனை ஒழிக்க காரணாங்கள் அதிகம் இன்று
புஸ் ஜூனியர் அன்ட் கம்பேனி படை எடுத்து
இன்று மாட்டியுள்ளனர். அதே தப்புக்கணக்குதான்.
தலைவலி போய் திருகுவலி வந்த வரலாற்றில்
இருந்து இன்று வரை அமெரிக்கர்கள் ஒரு
பாடமும் கற்றதாக தெரியவில்லை.

ஈராக் படை எடுப்பில் சதாம் மற்றும் அவனின்
ஃபாத்தா கட்சி அழிக்கபட்டது மிக சரியான,
நல்ல விசியம். அத்தோடு அமெரிக்கர்கள்
வெளியெறி, அங்கு இனச்சண்டை (ஷியா, சன்னி
மற்றும் குர்த் இனதவர்களுக்குள்) உருவாகாமல்
இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்தான்.

சதாம் ஹூசைன் சுமார் 24 வருடங்கள் ஈராக்கை
ஆண்ட கொடியவன். கண்டிப்பாக ஒரு ஹீரோ
அல்ல. குர்த் இன மக்கள் மீது விச வாய்வை
செலுத்தி கொன்றவன். மிக மிக குரூரமான கொடுங்கோலன்.அவனை பற்றி முழு விவரங்கள்
அறிய :

http://www.hrw.org/reports/1993/iraq/

http://en.wikipedia.org/wiki/Human_rights_in_Saddam%27s_Iraq

http://www.amnesty.org/en/library/info/MDE14/008/2001

ஆனால் அவன் ஒரு மதவாதி அல்ல. செக்யூலார்
கொடுங்கோலன் :

http://en.wikipedia.org/wiki/Saddam_Hussein#Secular_leadership


http://en.wikipedia.org/wiki/Al-Anfal_Campaign

http://en.wikipedia.org/wiki/Al-Anfal_Campaign#Violation_of_human_rights

http://en.wikipedia.org/wiki/Halabja_poison_gas_attack

......Various U.S. diplomats and intelligence officials have asserted
that Saddam was strongly linked with the CIA, and that U.S.
intelligence, under President John F. Kennedy, helped Saddam's party
seize power for the first time in 1963.[15][16]

Saddam Hussein in the past was seen by U.S. intelligence services as a
bulwark of anti-communism in the 1960s and 1970s.[16] His first
contacts with U.S. officials date back to 1959, when he was part of a
CIA-authorized six-man squad tasked with ousting then Iraqi Prime
Minister Abdul Karim Qassim.[17]
.....

http://www.guardian.co.uk/world/2002/oct/24/iraq.comment

சாதாம் ஹூசெனின் ம‌க‌ன்க‌ளும் கொல்ல‌ப்ப‌ட்ட‌தை
ப‌ற்றி எழுதியிருந்தீர்க‌ள். அவ‌ர்க‌ள் இருவ‌ரும் செய்த‌
கொலைக‌ள், ரேப்க‌ள் ம‌ற்றும் அட்டூலிய‌ங்க‌ள் ப‌ற்றி
ஒரு புத்த‌க‌மே எழுத‌லாம்.

பார்க்க‌ :

http://en.wikipedia.org/wiki/Uday_Hussein

http://en.wikipedia.org/wiki/Qusay_Hussein

மருமகன் :
http://en.wikipedia.org/wiki/Hussein_Kamel

விக்கிபீடியா சுட்டிக‌ளையே த‌ருகிறேன் என்று நினைக்க‌ வேண்டாம். நீங்க‌ள்
அமீர‌க‌த்தில் வ‌சிப்ப‌தால், அங்கு
யாராவ‌து இராக் அக‌திக‌ளிட‌ம் நேரில் விசாரித்துப்
பாருங்க‌ள். வன்கொடுமைகள் என்றால் என்னவென்று அனுபவபப்பட்டவர்கள்
சொன்னால் தெரியும்...

சதாமின் மகள்கள் மற்றும் மனைவியர் பத்திரமாக
இருக்கின்றனர். மகன்கள் இருவரும் போரில் அல்லது என்கவுன்டரில்
கொல்லப்பட்டனர். சதாம், தன் இரு மருமகன்களையும் எந்த முறையில் கொன்றானோ,
அதே முறையில் தான் அவனின் இரு மகன்களும்
சண்டையில் கொல்லப்பட்டனர், சரணடைய
மறுத்தால்

http://en.wikipedia.org/wiki/Uday_Hussein#Allegations_of_crimes_or_misconduct

காலின் கிளார்க் அவர்களின் கருத்துக்களுக்கு மாற்று இதோ :

http://www.atimes.com/atimes/Middle_East/HC10Ak01.html
http://www.econbrowser.com/archives/2006/01/strange_ideas_a.html
http://www.atimes.com/atimes/Middle_East/HA21Ak01.html
http://en.wikipedia.org/wiki/Petrodollar_warfare#Critical_views

2000 தேர்தலில் சொற்ப வாக்குகளில் அல் கோர் (டெமொக்ரட் கட்சி)
தோற்க்காமல் வென்றிருந்தால், கண்டிப்பாக ஈராக் மீது
படை எடுத்திறுக்கமாட்டார்கள்..

டாலர் உலக வர்த்க கரன்சியாக தொடர்வதும், சதாமின் முயற்சிகள் பற்றியும்,
பொருளாதார‌ நிர்ப‌ந்த‌ங்க‌ள் எந்த‌
அளவு அமெரிக்காவை இராக் போரை துவ‌க்க‌
கார‌ணியாக‌ இருந்த‌ன‌ என்ப‌து ப‌ற்றியும் மிக‌ மிக‌
தெளிவாக‌, ஆதார‌பூர்வ‌மான‌ சுட்டி இது :
பொறுமையாக‌, முழுசா ப‌டித்து பாருங்க‌ள்..

http://web.nps.navy.mil/~relooney/Rel_MEJ_S04.pdf

Thursday, October 30, 2008

தொலைவிலிருந்து பார்க்கும் போது, நீ என் நண்பனைப் போல் தோன்றுகிறாய்.....

எனக்கு மிகவும் பிடித்த ஒரு ஆங்கில பாட்டின் தமிழாக்கம் :

....தொலைவிலிருந்து பார்க்கும் போது நீ என் நண்பனைப் போல் தோன்றுகிறாய்,
ஆனால் நாம் யுத்த களத்தில் இருக்கிரோம்.

தொலைவிலிருந்து பார்க்கும் போது இந்த யுத்தம் எதற்க்கு என்று எனக்கு புரியவிலை..

http://www.youtube.com/watch?v=i5_YAj9lCQc

http://www.youtube.com/watch?v=aDSh5wUtXt4


FROM A DISTANCE

(Julie Gold)

From a distance the world looks blue and green
And the snow-capped mountains white
From a distance the ocean meets the stream
And the eagle takes to flight

From a distance there is harmony
And it echoes through the land
It's the voice of hope, it's the voice of peace
It's the voice of every man

From a distance we all have enough
And no one is in need
There are no guns, no bombs, no diseases
No hungry mouths to feed

From a distance we are instruments
Marching in a common band
Playing songs of home, playing songs of peace
They're the songs of every man
God is watching us, God is watching us
God is watching us from a distance

From a distance you look like my friend
Even though we are at war
From a distance I can't comprehend
What all this war is for

From a distance there is harmony
And it echoes through the land
It's the hope of hopes, it's the love of loves
It's the heart of every man

It's the hope of hopes, It's the love of loves
It's the song of every man

http://en.wikipedia.org/wiki/From_a_Distance

Saturday, October 18, 2008

கீதாசாரம் : 'எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது' !

கீதாசாரம்

எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ,
அதுவும் நன்றாகவே நடக்கும்
உன்னுடையதை எதை நீ இழந்தாய்?
எதற்காக நீ அழுகிறாய்?
எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு?
எதை நீ படைதிருந்தாய், அது வீணாவதற்கு ?
எதை நீ எடுத்து கொண்டாயோ,
அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
எதை கொடுத்தாயோ,
அது இங்கேயே கொடுக்கப்பட்டது.
எது இன்று உன்னுடையதோ
அது நாளை மற்றொருவருடையதாகிறது
மற்றொரு நாள், அது வேறொருவருடையதாகும்.

வ‌ராக்க‌ட‌னை கொடுத்த‌ அன்ப‌ர்க‌ள் இதை பார்த்து பெருமூச்சு விட்டு
ஆறுத‌ல்டைய‌வ‌து எங்க‌ ஊர் வ‌ழ‌க்கம். அத்தனை Finance கம்பேனிகளிலும்
இது ஃபேரெம் செய்து மாட்டப்பட்டிருக்கும்.

அமேரிக்காவிற்க்கும் இதை ஏற்றுமதி செய்யாலாமே ? !!

:))

Tuesday, October 14, 2008

மனித இனம் அழியுமா ?

மனித இனம் அழியுமா ?

சூரியனின் ஒளி மற்றும் வெப்பம் தான் பூமியில்
வசிக்கும் உயிர்களின் வாழ்வாதாரம். (solar energy) ;
சூரியனும் ஒரு ந‌ட‌ச்த்திர‌ம் தான். அது இன்னும் சுமார்
500 கோடி ஆண்டுக‌ளில் எரிந்து முடிந்து அழிந்து விடும்.
அத‌ற்க்கு முன் ஒரு சிக‌ப்பு ராட்ச‌னாகி (Red giant) பின்ன‌ர்
ஒரு க‌ருங்குழியாக‌ (black hole) இறுதியில் அணையும்.

சூரிய‌ன் இல்லாம‌ல் க‌ண்டிப்பாக‌ பூமியில் உயிர் இல்லை.
என‌வே ?

இன்னும் ஒரு 100 ஆண்டுக‌ளில் பெட்ரோலிய‌ம் சுத்தமாக‌ தீர்ந்துவிடும்.
மாற்று வ‌ழிக‌ள் ம‌ற்றும் எரிபொருள்க‌ள் வ‌ந்துவிடும்தான். ஆனால்
பிளாஸ்டிக்ஸ், உர‌ம்,
போன்ற‌வை எங்கிருந்து எவ்வாறு ம‌லிவாக‌ செய‌வ‌து ?

அனைத்து உலோக‌ங்கள் (இரும்பு, காப்பர், போன்றவை)
ம‌ற்றும் நில‌க்க‌ரிக‌ளும் இன்னும் சுமார் 500 முத‌ல் 1000
ஆண்டுக‌ளுக்குள் வெட்டி எடுக்க‌ப்ப‌ட்டு தீர்ந்துவிடும்.
பிற‌கு recylcing தான். new demand and costs ?

எதிர்கால‌ம் எப்ப‌டி ?

Saturday, October 11, 2008

'பார்பன சேவை' என்றால் என்ன ? (ப‌ழம்பெரும் கலைஞர் கே.பி.சுந்தராம்பாள் 'பார்பன சேவை' புரிந்ததாக எழுதும் ந‌ணப்ர் மதிமாறன் அவர்களுக்கு ஒரு திறந்த மடல் )

ப‌ழம்பெரும் கலைஞர் கே.பி.சுந்தராம்பாள் 'பார்பன சேவை' புரிந்ததாக
எழுதும் ந‌ணப்ர் மதிமாறன் அவர்களுக்கு ஒரு திறந்த மடல் :

http://mathimaran.wordpress.com/2008/08/04/

நண்பர் மதிமாறன் அவர்களே,

எனது முந்தைய பின்னோட்டங்களை நீங்கள் ஏன
வெளியிட ம‌றுக்குறீர்கள் என்று புரியவில்லை.
இறுதியாக ஒரு கருத்து :

பார்பன சேவை என்றால் என்ன ? அது என்ன என்பதை
பற்றி உங்கள் கருத்துக்கள்தாம் இறுதியானது என்று
கருதினால் அது பகுத்தறிவல்லவே.

///தான் சம்பாதித்த பணத்தை எல்லாம் கிட்டப்பாவின்
முதல் குடும்பத்தாரிடம் இழந்தார். வறுமையில் சிக்கினார். மீண்டும்
பார்ப்பன சேவையில் ஈடுபட்டு வசதியான
நிலைக்கு உயர்ந்தார்.////

இது ச‌ற்றும் நாக‌ரீக‌மில்லாத‌ க‌ருத்துக்க‌ள். கே.பி.எஸ்
அவ‌ர்க‌ளின் முழு வாழ்க்கை வ‌ர‌லாற்றையும்
ப‌டித்திருக்கிறீர்க‌ளா. 3, அல்ல‌து 4 நூல்க‌ள் வ‌ந்துள்ளன‌.
சென்ற‌ ஆண்டு உயிர்மை இத‌ழிலும் வ‌ந்துள்ளது.
அவ‌ர் கிட்ட‌ப்பாவை ம‌ன‌தார‌ காத‌லித்தார். நேசித்தார்.
அது உங்க‌ளுக்கு பார்ப‌ன‌ சேவையாக‌ தெரிகிறதா ?
காதல், அன்பு, சுயனல்லமில்லாமல் வாழ்தல் :
இவை பற்றி உங்களுக்கு எதாவது தெரியுமா ? கிட்ட‌ப்பா
அவ‌ரை ச‌ரியாக‌ ந‌ட‌த்த‌வில்லை. குடித்து அழிந்தார்.
இர‌ண்டாவ‌து திரும‌ணம் புரிந்த‌து த‌வறான‌ செய்ல்தாம். (க‌லைஞ‌ர்க‌ள்
வாழ்வில் இன்றும் இது ஒரு சாப‌க்கேடுதான்). ஆனால் கே.பி.எஸ் அவ‌ர்க‌ள்
க‌டைசி வ‌ரை மிக‌ மிக‌
அன்புட‌ன், ப‌ர‌ந்த‌ ம‌ன‌த்துட‌ன் இருந்தார். அது ஒரு குற்ற‌மா
என்ன‌ ? கிட்ட‌ப்பா பிற‌ப்பால் ஒரு பார்ப‌ன‌ர். ஆனால் ஒரு ம‌க‌த்தான‌
பாட‌க‌ர். அவ‌ரின் சாத‌னைக‌ள் ம‌றுக்க‌ப்ப‌ட‌ கூடிய‌ன‌ அல்ல‌வே.
கே.பி.எஸ் கிட்ட‌ப்பாவின் ம‌றைவிற்க்கு பிற‌கும் அவ‌ரின் பெற்றோரை பேணி
உத‌வினார் என்ப‌து உங்க‌ளுக்கு தெரியுமா? ப‌ந்த‌ம், பாச‌ம், நேச‌ம் :
இவ‌ற்றை த‌ய‌வு செய்து கொச்சை ப‌டுத்தாதீர்க‌ள்..

கே.பி.எஸ் க‌ரூர் அருகே உள்ள‌ கொடுமுடியில் பிற‌ந்து
பிற‌கு க‌ரூரிலும் வாழ்ந்தார். அவ‌ரின் த‌ம்பி என்
த‌க‌ப்ப‌னாரின் ந‌ண்ப‌ர். (நாங்க‌ளும் க‌ரூர் தான்). கே.பி.எஸ்
அவ‌ர்க‌ளின் த‌ங்கை பேர‌ன் இங்கு சென்னையில் தான்
இருக்கிறார். என‌து இனிய‌ ந‌ண்ப‌ர். ந‌ல்ல‌ பாட‌க‌ர். சிறிதும்
இங்கிதம், பண்பு இல்லாத உங்கள் 'தனி வாழ்க்கை
விமர்சனம்' மிகுந்த வருத்தையே அளிக்கிறது.

நானும் ஒரு சுய‌ம‌ரியாதை குடும்ப‌த்தில் பிற‌ந்த‌வ‌ன்தான். பெரியாரிய‌,
மார்க்ஸிய‌ க‌ருத்துக்க‌ளை ப‌டித்து வ‌ளர்ந்த‌வ‌ன்
தான். இன்று க‌ருத்துக‌ள் சில‌வ‌ற்றில் மாற்ற‌ம்
கொண்டுள்ளேன். ஆனால் உண்மையான‌ பார்ப‌னிய‌ம்
என்றால் என்ன‌ என்று எம‌க்கும் தெரியும்.

பெரியார் / அம்பேத்கார் இருவ‌ரையும் ப‌ற்றி உங்க‌ள்
பாணியில் விரிவாக‌ எழுத‌ முடியும்தான். அவ‌ர்க‌ள் செய்த‌ த‌வ‌றுக‌ள்
அல்ல‌து கூறிய‌ ஒரு சில‌ க‌ருத்துக்க‌ளை
'ம‌ட்டும்' வைத்து கொண்டு அவ‌ர்க‌ள் தேச‌ ப‌க்தி
இல்லாத‌ துரோகிக‌ள் என்று வாதாட‌லாம். ஆனால் அது
ச‌ரியான‌ / முழுமையான‌ வாத‌மாக‌ இருக்க‌ முடியாது.

பெரியாரும் சில இடங்களில் / தருணங்களில் தவறு
செய்துள்ளார். உ.ம் : 1968 டிசம்பரில் கீழ்வெண்மணி
கிராமத்தில் பல தாழ்த்ப்பட்டவர்கள் உயிருடன் கொளுத்தப்பட்டனர். அதை
கண்டிக்கும் விசியத்தில்
மழுப்பலாக இருந்தார். காரணம் அன்று அண்ணா
முதல்வர். அர்சுக்கு பெரிய பிரச்சை வராமல்
ஜாக்கிரதையாக கையாண்டார் என்றும் கொள்ளாம்.
(இதை பற்றிய சுட்டிகள் சுகுணா திவாகர் வ்லைபதிவர்
தந்தார். அவர் ஒரு மிக ஆழமான பெரியாரிஸ்ட் தான்).
1930இல் ஒரு கூட்டத்தில் சமூக போராட்டதிற்க்க ஒரு
முக்கிய தீர்மானம் போட்டு பிறகு அதை அப்படியே அம்போவென்று விட்டுவிட்டு
வெளினாடு பயணம்
செய்தார். (ஆதரம் : அ.அய்யாமுத்து : எனது நினைவுகள்) ;

அதே போல் அம்பேத்கார் பற்றி அருண் சோரி எழுதிய
புத்தகம் பார்க்கவும்.

இதை எல்லாம் ஏன் எழுதிகிறேன் என்றால், ஒரு சில
நிகழ்வுகள் / க‌ருத்துக்களை 'மட்டும்' வைத்துக்கொண்டு
ஒரு தலைவரை பற்றி இறுதி முடிவு (final assesment)
செய்வது தவறு. பெரியாரின் சாதணைகள் முன் இவை
சிறு விசியங்கள் தான்.

அதே போல் தான் அனைத்து மனிதர்களையும் எடை போட வேண்டும்.

பெரியாரும் அம்பேத்காரும் சமூக பிரச்சனைகள் (சாதியம்)
முதலில் தீர்க்காமல் சுதந்திரம் கூடாது என்றனர். ஆகஸ்டு
15 அய் கருப்பு தினமாக பெரியார் கருதினார். (அண்ணா
அவ்வாறு நினைக்கவில்லை. இதில் பெரியாருடன் முரண்
பட்டார்)

இந்தியா சுதந்திரம் அடைந்தால் ஆங்கிலேயன் இடத்தில்
வைதீக பார்பனர்கள் அமர்ந்து பார்பானியம்
வலுவடைந்துவிடும் என்று தவறாக முடிவு கட்டினார்.

ஆனால் நடந்தது வேறுதான். பார்பனியம் 1947க்கு பின் வலுவிலந்தது.
பிற்படுத்தப்பட்ட / தாழ்த்தப்பட்ட மக்களுக்கு
முன்பு எப்போதும் இல்லாத அளவு முன்னேர வாய்ப்பு
கிடைத்தது. இட ஒதுக்கீடு, இலவச கல்வி, சுயமரியாதை
திருமணங்கள் போன்ற பல விசியங்களுக்கு அரசின்
ஆதரவும். சட்ட ரீதியான அங்கீகாரமும் கிடைத்தது..

எந்த ஒரு தலைவரும் அனைத்து விசியங்களிலும்
சரியான நிலைபாட்டை / க‌ருத்தை வாழ்க்கை முழுவதும் கொள்வது மிக கடினம்.
தவறுகள் சகஜம்.

உலகில் எங்காவது 100 % perfect leader இருந்துள்ளரா
என்ன ? சாத்தியம் இல்லை.

Wednesday, October 8, 2008

இஸ்லாமிய சமுதாயம் முன்னேற சில யோசனைகள்

எனது தனிப்பட்ட கருத்து இது :

இஸ்லாமியர்களிடம் வறுமை, கல்லாமை மிக அதிகம்
தான். இந்திய சராசரியை விட அதிகமாகவே உள்ளது.
இதை போக்க வழிகள் :

1.குழ‌ந்தைகள பெற்ற்க்கொளவதை தாங்களே
விவேகத்துடன் கட்டுபடுத்திக் கொள்ளவேண்டும்.
மதக்காரணாம், மற்றும் ஜனத்தொகை குறைந்தால்,
இந்துக்கள் தங்களை நசுக்கிவிடுவார்கள் என்ற வீண்
பயம் போன்ற காரணிகள் சரியல்ல. ஒரு குழந்தை தான்
அரசு பரிந்துரைக்கிறது. இன்று பெரும்பாலான இதர
பிரிவினர் இரண்டு குழந்தைகளுக்கு மிகாமல் பார்த்துக் கொள்கினரன்ர். அதுவே
சிரமம். கல்வி மற்றும்
வளர்க்க போதிய வருமானம் இல்லாமல் வாழ்க்கை போராட்டம்தான்.

2. ஆண் / பெண் இரு பாலருக்கும் திருமண வயதை தள்ளி
போட வேண்டும்.

3. கல்வியில் அவசியத்தை இஸ்லாமியர்கள் அனைவரும்
உணரச் செய்ய வேண்டியது அவர்களின் தலைவர்களின்
கடமை. முக்கியமாக பெண் கல்வியில் முக்கியத்தை.

4.நவீன விஞ்ஞானம் ,கணிதம் மதராஸாக்களில் கற்று தர ஏற்பாடு செய்ய
வேண்டும். கிருஸ்துவர்களை போல் கல்வி துறையில் இருக்கவேண்டும். சர்சு
நடத்தும் பள்ளிகளில்
நவீன கல்விதான். லாட்டின் மற்றும் மதக்கல்வி மிக
குறைவு. உருதுவில் மட்டும் படித்த சென்னை
மாணவர்களை நான் சந்தித்திருக்கிறேன். அவர்கள்
இந்த நவீன உலகில் ஆங்கிலம் / தமிழ் அறியாமல்
எப்படி வேலை செய்வர் ? அவர்களில் எதிர்காலம் ?
அவர்களால் மற்றவர்களோடு போட்டியிட முடியுமா ?

5.ஹாஜ் மான்யம் : வருடம் சுமார் 250 கோடிகள்
அரசினால் அளிக்கப்படுகிறது. ஒரு ஏர் டிக்கெட்டிற்க்கு
சுமார் 8000 ரூபாய், தாரளமாக பயணம் செய்பவர்களே ஏற்றுக்கொள முடியும்.
ஒரளவு வசதியானவர்களே
ப‌யணம் செய்வர். மானியம் கண்டிப்பாக மதசார்பின்மைக்கு எதிரானது தான்.
இந்த‌ 250 கோடிக‌ளை மானிய‌த்திற்க்கு அளிக்காம‌ல், வ‌ருட‌ந்தோரும் ஒரு
ஏழை இஸ்லாமியர்
அதிகம் வாழும் ஒரு ப‌த்து ப‌குதிக‌ளுக்கு 25 கோடிக‌ளாக‌
பிரித்து, அங்கே இல‌வ‌ச‌ க‌ல்வி ம‌ற்றும் ம‌ருத்துவ‌ம‌னைக‌ள்
க‌ட்ட‌ உப‌யோகிக்க‌ வேண்டும். ப‌த்து
ஆண்டுக‌ளில் இந்தியாவெங்கும் சுமார் 100 இட‌ங்க‌ளில் அருமையான‌, த‌ர‌மான‌
க‌ல்வி ம‌ற்றும் ம‌ருத்துவ‌ம‌னைக‌ள் அமைத்தால், எத்த‌னை ல‌ட்ச‌ம்
இஸ்லாமிய‌ர் ப‌ய‌ன‌டைவ‌ர் ?

6. பிற மதத்தவர்களை கண்டு பயம் / தயக்கத்தை விடுத்து, அனைவருடனும் கலந்து
பழக வேண்டும் ஒரு
கிறுஸ்துவர்களின் தேவாலயம் மற்ரும் வீடுகளுக்கு
நான் சகஜமாக சென்று உறவாடுவதை போல் ஒரு
சராசரி இஸ்லாமியரிடம் பழக முடியவில்லை.
மசூதிகளுக்குள் செல்லவே தயக்கமாக / அச்சமாக
இருக்கிறது. அனைவருடன் கலந்து பழகும் போது மனம் விரிவடையும். புதிய
சிந்தனைகள் ஓங்கும். நாடர்கள்,
கொங்கு கவுண்டர்கள், பார்பனர்கள், மார்வாரிகள் போல்
வாழ்வில் முன்னேற உழைப்பு, motivation, focus on goals,
சந்தர்பத்திர்க்கேர்ப தனனை மாற்றிக்கொள்ளுதல்
(adaptabiltiy) போன்றவற்றை கற்க வேணடும்.

No community can progress dependent only on govt support or by
blaming other groups for thir backwardness. Only progressive thinking,
broad outlook, the ability to transcend unscientific and orthodox religious
attitudes can enable any group to climb. the Jewish people are the
best example for this kind of attiude and sucess. (i am not talking
about Islrael / Palestine conflict ) ; but about the magnificient
acheivement of Israelis in turing a arid and dry desert into a
floursihing and prosperous nation in less than 50 years. While Isreal
has no oil resoureces, it is more prosperosu than neighbouring Jordan,
Syria, etc. (the Isreali aggression and violations are a different
subject ; i am here talking about the abiltiy to learn from even
'enemies')....

Tuesday, October 7, 2008

தேசம், ஞானம், கல்வி, ஈசன், பூசையெல்லாம்......

பராசக்தி (1952) சிவாஜி க‌ணேச‌ன், க‌லைஞ‌ர்
கூட்ட‌ணியில் ஒரு புதிய‌ திருப்புமுனையை
ப‌டைத்த‌ அருமையான‌ ப‌ட‌ம். (என‌து விருப்ப‌
ப‌ட‌ங்க‌ளில் / பாட‌ல்க‌ளில் ஒன்று) ;
அதில் வ‌ரும் ஒரு சூப்ப‌ர் பாட‌ல்.

எழுதியவர் : உடுமலை நாராயண கவி

தேசம் ஞானம் கல்வி ஈசன் பூசை யெல்லாம்
காசுமுன் செல்லாதடி - குதம்பாய்
காசு முன் செல்லாதடி.
ஈசனும் ஈசனார் பூசையும் தேசத்தில்
காசுக்குப் பின்னாலே - குதம்பாய்
காசுக்குப் பின்னாலே.

சாட்சியான பணம் கைவிட்டுப் போனபின்
சாட்சி கோர்ட்டு ஏறாதடி - குதம்பாய்
சாட்சி கோர்ட்டு ஏறாதடி.
பைபையாய் பொன் கொண்டோர்
பொய் பொய்யாய் சொன்னாலும்
மெய் மெய்யாய் போகுமடி - குதம்பாய்
மெய் மெய்யாய் போகுமடி.

நல்லவரானாலும் இல்லாதவரை
நாடு மதிக்காது - குதம்பாய்
நாடு மதிக்காது.

கல்வி இல்லாத மூடரை கற்றோர் கொண்டாடுதல்
வெள்ளிப் பணமடியே - குதம்பாய்
வெள்ளிப் பணமடியே

ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக்கோனே - காசு
காரியத்தில் கண் வையடா தாண்டவக்கோனே

உள்ளே பகை வையடா தாண்டவக்கோனே
உதட்டில் உறவாடடா தாண்டவக்கோனே

முட்டாப் பயலையெல்லாம் தாண்டவக்கோனே - காசு
முதலாளி ஆக்குதடா தாண்டவக்கோனே

கட்டி அழும்போதும் தாண்டவக்கோனே - பிணத்தைக்
கட்டி அழும்போதும் தாண்டவக்கோனே - பணப்
பெட்டிமேலே கண் வையடா தாண்டவக்கோனே

---------------------------------

இது "பணம்" படத்தில் வந்தது.

அண்ணா , என்.எஸ்.கே. போன்றவர்களுக்கு அன்று
ஆஸ்தான கவிபோல் விளங்கிய அருமையான கவிஞர்
உடுமலை நாராயணகவி எழுதியது :

எங்கே தேடுவேன் , பணத்தை எங்கே தேடுவேன்
எங்கே தேடுவேன் , பணத்தை எங்கே தேடுவேன்

உல‌க‌ம் செழிக்க‌ உத‌வும் ப‌ண‌த்தை எங்கே தேடுவேன்
அரசன் முதல் ஆண்டியும் ஆசை படும் இந்த பணத்தை
எங்கே தேடுவேன், பணத்தை எங்கே தேடுவேன்
கருப்பு மார்கெட்டில் கலந்து கொண்டாயோ
கஞ்சன் கைகளில் சிக்கிகொண்டாயோ
கிண்டிரேஸில் சிக்கி கிருகிருத்தாயோ
அண்டின பேர்களை ரெண்டும் செய்யும்
பணத்தை ப‌ண‌த்தை எங்கேதேடுவேண்
எங்கே தேடுவேன் , பணத்தை எங்கே தேடுவேன்

பூமிக்குள் புதைந்து புதைய‌லானாயோ......
பொன்ந‌கையாய் பெண்மேல் தொங்குகின்றாயோ
சாமிக‌ள் அடிக‌ளில் ச‌ர‌ண்புகுந்தாயோ
ச‌ன்யாசி கோல‌த்தோடு உல‌வுகின்றாயோ
ப‌ண‌த்தை எங்கே தேடுவேன்
எங்கே தேடுவேன் , பணத்தை எங்கே தேடுவேன்

திருப்ப‌தி உண்டிய‌லில் சேர்ந்துவிட்டாயோ
திருவ‌ன்னாம‌லை குகைபுகுந்தாயோ
இரும்பு பெட்டிக‌ளில் இருக்கின்றாயோ
இர‌க்க‌முள்ள‌வ‌ரிட‌ம் இல்ல‌த‌ப‌ண‌மே
உன்னை என்கே தேடுவேன்
தேர்ச‌லில் சேர்ந்து தேய்ந்து போனாயோ
தேக‌ சுக‌த்திற்க்காக‌ ஊட்டி சென்றாயோ

சுவ‌ற்றிக்குள் த‌ங்க‌மாய் ப‌ங்க்குவிட்டாயொ

சூட‌ம் சாம்பிரானியாய் க‌ர‌ந்துவிட்டாயோ

உல‌க‌ம் செழிக்க‌ உத‌வும் ப‌ண‌மே உன்னை எங்கே தேடுவேன்

எங்கே தேடுவேன் , பணத்தை எங்கே தேடுவேன்
எங்கே தேடுவேன் , பணத்தை எங்கே தேடுவேன்

Friday, October 3, 2008

இந்திரா காந்தியின் கொடுங்கோலாட்சி (அவசரகாலம் / MISA )

1975 ஜூன் மாதம் 25ஆம் தேதி, இந்திய பிரதமர்
இந்திரா காந்தி அவசர நிலை பிரகடனம் செய்து
நாட்டில் சர்வாதிகார ஆட்சிக்கு வழிவ‌குத்தார்.
அனைத்து அடிப்படை உரிமைகளும் ரத்து
செய்யப்பட்டன. எதிர்கட்சிகள் தடை செய்யப்பட்டன ;
தலைவர்கள் அனைவரும் கைது செய்யப்ட்டு ,
விசாரணையின்றி சிறையில் தள்ளப்பட்டனர்.
பலரும் தலைமறைவாகினர். பத்திரிக்கைகள்
முடக்கப்பட்டன. கடுமையான தனிக்கை முறை
உருவானது.

இந்த கொடுங்கோலாட்சி 1977வரை தொடர்ந்த
வரலாறு பற்று பலருக்கும் தெரியாது.

http://en.wikipedia.org/wiki/Indian_Emergency

வலது கம்யுனிஸ்ட்கள் அடித்த ஜால்ரா சொல்லி
மாளாது. இந்திராதான் இந்தியா என்று கவியரங்கங்கள்
நடத்தினர்.

இருபது அம்ச திட்டம் என்ற பாடல் சதா வானொலியில் ஒலித்துக்கொண்டிருக்கும்.
ரயில்கள் சரியான நேரத்திற்கு
ஓடின. அரசு ஊழியர்களும் அவர்கள் சங்கங்களும் கப்சிப்.

திரைப்பட தணிக்கை குழு அடித்த லூட்டி மாளாது. மது
குடிப்பது , மற்றும் வன்முறை சண்டைக்காட்சிகள் வெட்டி வீசப்பட்டன.
'கிச்சா குர்சி கா' என்ற திரைப்படம் சஞ்சய்
காந்தி குழுவினரால் நெகடிவ்வோடு எரிக்கப்பட்டது.
பத்திரிகைகள் தணிக்கை செய்யப்பட்டன. துக்ளக் போன்ற பத்திரிகைகள் பல
பக்கங்கள் அச்சிடாமலேயே வெளி வந்தன...அவ்வளவு சென்சார்.

புரட்சிகர சிந்தனை கொண்ட மாணவர்கள் வேட்டையாடப் பட்டனர். கேரளாவில் ராஜன்
கொலை வழக்கு பிரசித்தம்
பெற்றது. காவல்துறை எவரையும் பிடித்து சித்திரவதை
செய்யும் அதிகாரம் கொண்டிருந்தது.

பெரும் தலைவர்கள் பலர் தலைமறைவாகவும்
சிறையிலும் காலத்தை கழிக்க வேண்டியிருந்தது.....

அவசர நிலை காலத்தின் பெரும் சக்தியாக சஞ்சய்
காந்தி விளங்கினார். குடும்ப கட்டுப்பாட்டு திட்டத்தை நிறைவேற்றுகிறேன்
என்று சொல்லி குறி வைத்து ஒரு குறிப்பிட்ட பிரிவினரை பிடித்து கட்டாய
கருத்தடை
(நஸ்பந்தி) செய்தார், தில்லி துர்க்மான் கேட் பகுதியில்
இருந்த ஆயிரக்கணக்கான குடிசைகளை புல்டோசர்
கொண்டு இடித்து தள்ளினார்.

கல்லூரி விடுதிகள் கடும் கண்காணிப்புக்கு ஆயின.
Q Branch அதிகாரிகள் எந்த மாணவனையும் பிடித்து
இழுத்து சென்றனர். காங்கிரஸ் மாணவர்கள்
ஆள்காட்டிகளாக திகழ்ந்தனர்.

ரப்பர் ஸ்டாம்ப் ஜனாதிபதிகளில் அப்போதைய
ஜனாதிபதி பக்ருதீன் அலி அகமதுக்கு தனி இடம்
உண்டு. அவர் பாத் டப்பில் படுத்துக்கொண்டு
கையெழுத்திடும் அபு அப்ரகாமின் கேலி சித்திரம்
படு பிரசித்தம்.

ஆர்.எஸ்.எஸ். உட்பட பல இயக்கங்கள் தடை
செய்யப்பட்டன.

அரசியலில் அப்போது அதிக ஆர்வம் காட்டாமல்
இருந்த ஜெயபிரகாஷ் நாராயணன் எதிர்ப்பு அலைக்கு
தலைமை தாங்கினார். ஜார்ஜ் பெர்னாண்டஸ்
போன்றவர்களையும் குறிப்பிட்டு சொல்லலாம்.

தி.மு.கவின் களப்பலி சிட்டிபாபு. அப்போது உள்ளே
போனவர்கள் எல்லாம் பின்னர் பெயருடன் 'மிசா' என்ற பட்டத்தையும்
சேர்த்துக்கொண்டனர். கைம்பெண்
மறுவாழ்வு திட்டதிற்க்கு நான் தயார் இந்திரா தயாரா
என கேட்ட ஸ்டாலினின் விலா எலும்பு முறிக்க
பட்ட காலம்.

'Be Indian, Buy Indian' என்ற அரசின் முழக்கத்திற்கு பயந்து அயல்நாட்டு
வாட்ச் கட்டினவன் எல்லாம் அதை அவிழ்த்து பாக்கெட்டில் போட்டு கொண்டு
திரிந்த காலம்.....

Monday, September 29, 2008

இஃப்தார் விருந்தும், அரசியல்வாதிகளும்

ரம்லான் நோன்பை தினமும் முடிக்க சாய்ங்கால வேளையில் இஸ்லாமிய அன்பர்கள்
நோன்பு கஞ்சி குடித்து முடிப்பது வழக்கம். சூரியோதயத்திற்க்கு முன்பு
துவங்கும் இந்த விரதம், மாலை வரை ஒரு சொட்டு தண்ணீர் கூட பருக கூடாது
என்பது விதி.
என‌து இஸ்லாமிய‌ ந‌ண்ப‌ர் ஒருவ‌ர் எச்சிலைக் கூட‌ விழுங்காம‌ல் துப்பிவிடுவார்.

விர‌த‌ம் ஜீரண‌ உருப்புக‌ளுக்கு ஓய்வு அளிப்ப‌த‌ற்க்காக‌ அனைத்து
ம‌த‌ங்க‌ளிலும் எதோ ஒரு பாணியில் உருவாக்க‌ப்ப‌ட்ட‌து. இஸ்லாமிய‌
ர‌ம‌லான் நோன்பு ஒரு மாத‌ம் வ‌ரை தின‌மும் க‌டைபிடிக்க‌ப் ப‌டுகிற‌து.
ஏழைகள், பட்டினியால் கஸ்டப்படுவதை அனைவரும் அனுபவத்தில் உணர்ச் செயவதும்
ஒரு நோக்கம் என்று அந்த நண்பர் கூறினார்.

கடந்த 25 ஆண்டுகளில் இந்த இஃப்தார் விருந்தில் அரசியல் புகுந்து விட்டது.
பெரும் பாலான அரசியல் கட்சி தலைவர்கள், இதில் கலந்து கொண்டு மத
நல்லினக்தையும் அப்படியே இஸ்லாமிய ஓட்டு வங்கிகளையும் வளர்க்க ஒரு
ஸ்டண்ட் இது. பெரிய தவறில்லை இது.

எமது கேள்வி : கடும் விரதம் இருக்கும் இஸ்லாமிய நண்பர்கள் விரதம் முடிக்க
நோன்பு கஞ்சி அருந்துவது சரி. ஆனால் காலை, மதியம் மூக்கு பிடிக்க
சாப்பிட்டு, பிறகு பீடா போட்டுக்கொண்ட அரசியல் தலைவர்கள், மாலையில் இந்த
விருந்தில் கலந்து, உண்மையில் நோன்பு இருப்பவர்க்ளோடு சேர்ந்து கஞ்சி
குடிப்பது தமாஸா இல்லை ?

இது ப‌ற்றி என்ன‌ சொல்வ‌து ?

Monday, September 22, 2008

பாரதியின் 'ஆரியர்' பற்றிய கருத்துக்கள் - ஒரு விவாதம்

பாரதியின் 'ஆரியர்' பற்றிய கருத்துக்கள் அன்றைய
காலகட்டத்தை வைத்துத்தான் எடை போட வேண்டும்.
ஆரியன் என்றால் யாரை எதை குறிப்பிடுகிறார் ?
திராவிடன் எனற பிரோயகம் இல்லையே ? அப்ப
ஆரியர் என்றால் பார்பனர் என்று அர்த்ததில்
பிர்யோகித்தாரா அல்லது பொதுவாக இந்தியர்களை
குறிக்க அந்த சொல்லா ? அன்று ஆரியன் என்ற சொல் 'பொலிடிக்கலி அன்கரக்க்ட்'
ஆகாமல் சகஜமாக
இருந்த்து.

பார்பனர்களின் இயல்புகளையும் அவர் கண்டித்துள்ளார்.
அதனால் பார்பனியவாதி அவர் என்று முடிவு கட்டுவது
சரியல்ல. ஜாதி பேதங்களை வெறுத்தவர். தாழ்தப்பட்ட
மக்களிடம் அன்பு கொண்டவர்.

அவரிடம் நெருங்கி பழகி, அவரின் அனைத்து
எழுத்துக்களையும் படித்தவர் பாரதிதாசன் எனப்படும் கனகசுப்புரத்தினம்.
புரட்சி கவிஞர் என்று
பகுத்தறிவாளர்களால் ஏற்றுக்கொள்ளப்படும் அவர்
ஏன் தன் பெயரை 'பாரதிதாசன்' என்று மாற்றிக்
கொண்டார் ? அவர் பாரதியோடு நெறுங்கி பழகியவர்.
பாரதியின் உண்மையான குண நலன்களை உணர்ந்தவர். பாரதியின் நல்லியல்புகள்,
சாதி மதம் கடந்த பார்வைகள்
மற்றும் அன்பை புரிந்தவர் / நேரில அறிந்தவர்.
அதனால்தாம் தம்மை பாரதிதாசன் என்று அழைத்துக்
கொண்டார். அவரின் பார்வையில் பாரதி ஒரு பார்பனவாதியாகவோ, இந்துத்துவவாதியாக
தோன்றவில்லையே ? ஏன் ?

ஒரு மனிதனை முழ்மையாக புரிந்து கொள்ள
அவனின் முழு வாழ்வையும் பார்க்க
வேண்டும் என்பதே சரி..

////////செந்தமிழ் நாடெனும் போதினிலே யின்பத்
தேன்வந்து பாயுது காதினிலே என்றெழுதித்
தமிழ்நாட்டை அப்படியே நெஞ்சால் எழுதி
முடித்தார்" (8)

என புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் கூறுகிறார். இவ்வாறாகப்
பாரதி நண்பர்களுடைய வேண்டுதலாலும், கட்டாயத்தாலும் தான், "செந்தமிழ்
நாடெனும் போதினிலே" என்ற பாடலையும், "யாமறிந்த மொழிகளிலே" என்ற பாடலையும்
எழுதினார். இந்தப் பாடல்களுக்காக அவருக்கு மதுரைத்
தமிழ்ச் சங்கம் பரிசாக
ரூ.100 அளித்தது. (9////////

so ? எப்படி வேண்டுமானாலும் அர்த்தப்படுத்திக்
கொள்ளாலாம். (interpretation)

உள்ளதில் மெய் உணர்வு இல்லாமல் ஆழமான,
உணார்சிகரமான கவிதைகளை, பிறர் சொல்கிறார்கள
என்று எழுத முடியாது. எழுதுனாலும் குற்ற‌ம் /
எழுதாவிட்டாலும் குற்ற‌ம். வேடிக்கை..

//இதுகுறித்து ஆய்வாளர் க.கைலாசபதி கூறுவதாவது:

"1949 இல் ஓமந்தூரார் அரசு பாரதி நூல்களின் பதிப்பு
உரிமையை வாங்கியது. 1950 இல் அரசு பாரதி நூல்கள்
பதிப்புக் குழு ஒன்றை உருவாக்கியது. அக்குழுவில் இருந்த
ரா.பி.சேதுப்பிள்ளை, மு.வரதராசனார் போன்றோர்
பாரதியின் கவிதைகளில் மூலப்படியில் இருந்த
கிரந்த எழுத்துக்களை முழுமையாக நீக்கிவிட்டதாகவும்,
1909 இல் வெளிவந்த ஜன்மபூமியில் ஸமர்ப்பணம்
முகவுரை ஆகியவற்றின் கீழ் ஸி.ஸுப்பிரமணிய பாரதி
என்றே கையொப்பமிட்டுள்ளார்" (20) என்றும் ஆய்வாளர் க.கைலாசபதி கூறியுள்ளார்.
/////

இருக்கலாம். 100 ஆண்டுகளுக்கு முன் மணிபிரவள
நடைதான் சாதரணமாக இருந்த்து. அந்த காலத்தில் தூய
தழில் இயக்கம் வளர்வில்லை. சம்ஸ்கிருதம் பற்றிய
இன்றைய அரசியல் எதிர்ப்போ, சமஸ்கிருதம்
பார்பனியத்தின் ஆதிக்க மொழி என்ற கருத்தோ
பொதுபுத்தியில் பரவாத காலம் அது.

அன்று தமிழ் கவிதை என்றாலே யாப்பு / செய்யுள் தாம்.புதுக்கவிதையே இல்லை.
இன்று எழுதுவது சுலபம்.

எளிய தமிழ் கவிதைகளின் முன்னேடி பாரதி.
முழ்வதுமாக சமஸ்கிருதம் கலக்காமல் எழுத வேண்டும் ;
அப்படி எழுதுவதுதான் சரியானது என்ற கருத்து அன்று
இல்லை. அப்படி இருந்தாலும் பாரதி வளர்ந்த /வாழ்ந்த
காலச்சூழ் நிலையை பாருங்கள். பார்பனராக பிறந்து,
காசியில் படித்து, சம்ஸ்கிருதம், ஹிந்தி மொழிகளில் இலக்கியங்களில் நல்ல
தேர்ச்சி பெற்ற அவர், தமிழில்
இந்த அளவு அன்றைய காலகட்டத்தில் எழுதியதே
பெரிய விசியம். மணிபிரவாள தமிழ் சூழ்னிலை அன்று.
பாரதி தமிழ், சம்ஸ்கிருதம் இரண்டையும் உயர்வாக
கருதியவன். (பார்பானியவாதமாக அல்ல) ; சம்ஸ்கிருதத்தில்
பல அரிய காப்பியங்களை படித்து திளைத்தார் / மகிழ்ந்தார். தமிழிலும்தான்.
அவனை பொருத்தவரை பேதம், ஏற்ற
தாழ்வு இல்லை.

குழந்தை உள்ளம் கொண்டவன் பாரதி.

//வேத உபநிடத மெய்நூல்களெல்லாம் போய்ப்
பேதக் கதைகள் பிதற்றுவாரிந் நாட்டினிலே" (2)

எனக் கூறி, இங்கு "ஆரியர்கள் வாழ்ந்த நாடு அற்புத
நாடென்றும், அவர் எழுதிய வேத உபநிடதங்களெல்லாம்
மறைந்து போயினவே" என்றும் மிகவும்
வருத்தப்படுகிறார்.

///

வருத்தபடுவது அதற்காக அல்ல.
"பேதக் கதைகள் பிதற்றுவாரிந் நாட்டினிலே" :
இதற்க்காகத்தான்.

அதாவது பல ஜாதி. இன, மத, பிரிவுகளை அதற்கான கதைகளைதான் இன்று மக்கள்
முன்னிருத்தி பேதம்
கற்பித்து பிரிந்து வாழ்கின்றனர் என்றா வருத்தம்.

மனுதர்மம் பின்னர் வந்த சதி. உபனிடங்களில் உள்ள
தத்துவங்கள், மனுதர்மம் போன்ற அநியாயமான,
(பிறப்பிலேயே ஏற்ற தாழ்வு கற்பிக்க்கும்), ஆணாதிக்க
கருத்துக்கள் அல்ல. அதைதாம் பாரதி குறிப்பிடுகிறான். ஒழுக்கத்தால் தான்
ஒருவன் உண்மையான பிரமணனாக முடியும் ; பிறப்பால் அல்ல என்பதை உபனிடம் /
கீதை வலியிருத்துகிறது. அதை பாரதியும்
எடுத்துரைக்கின்றான். இந்து மத கருத்துக்கள் பற்றி
பாரதியின் பார்வை வேறு ; ஆர்.எஸ்.எஸ் பார்பனர்களின்
பார்வை வேறு.

Friday, September 19, 2008

மதமாற்றம் செயவது தவறா என்ன ?

க‌ர்னாட‌காவில் ச‌மீப‌த்தில் ந‌ட‌ந்த‌ கிருஷ்த்துவ‌ வ‌ழிபாட்டு
ஸ்த‌ல‌ங்க‌ளின் மீது ப‌ச்ர‌ங்தால் வெறிய‌ர்க‌ள் ந‌ட‌த்திய‌
தாக்குத‌ல்க‌ளை முத‌லைமைச்ச‌ர் எடியூர‌ப்ப‌ சிறிதும் பெறுப்போ. வெக்க‌மே
இல்லாம‌ல் நியாய‌ப‌டுத்தி பேசுகிறார். ம‌த‌ மாற்ற‌ம் செய்வ‌தான் தான்
இந்த தாக்குத‌ல்க‌ளாம். ஒரு முத‌லாமைச்ச‌ரின் பேச்சு இப்ப‌டியா ? கொடுமை.
(அவ‌ரிட‌ம் வேறு என்ன‌ எதிர்ப்ப‌ர்ப‌து ? )

அது ச‌ரி, ம‌த‌ மாறுவ‌து ஒரு த‌னி ம‌னித‌ உரிமை. தலித்துக‌ள் மாறினால்
மேல் ஜாதியின‌ருக்கு என்ன‌ ? ச‌ரியான‌ ஃபாசிஸ்டுக‌ள் தாம் இப்படி
காட்டுமிராண்டி போல் தாக்குவ‌ர்.

இப்ப நாட்டுல‌ இதுதான் முக்கிய‌ பிர‌ச்ச‌னையா என்ன‌ ?

மூட‌ர்க‌ள்...

Tuesday, September 16, 2008

அமெரிக்காவின் 'சுதந்திர தேவி சிலை'

அமெரிக்காவின் 'சுதந்திர தேவி சிலை'

ந்யூ யார்க் நகரின் துறைமுகம் அருகே, கடலின் நடுவில் ஒரு மிகப்
பிரமாண்டமான சிலை : சுத்ந்திர தேவி சிலை. 1880களில் ப்ரான்ஸ் நாடு
அன்பளிப்பு இந்த சிலை.

அமெரிக்கா என்றால் இன்று பெரும்பாலானோருக்கு இருக்கும் பிம்பம் : புஷ்,
ஈராக் நாட்டை ஆக்கிரமிப்பிப்பு. சி.அய்.ஏ சதிகள், 'ஏகாதிபத்திய
அடக்குமுறைகள்'...

ஆனால் 1930கள் வரை இருந்த அமெரிக்க வேறு. அதுதான் உண்மையான அமெரிக்க.
(இன்றும் அந்த அடிப்படை கொள்கைகள் உள்ளன, ஆனால் மறைந்து நிற்க்கின்றன).
அன்று உலக அரங்கில் அமெரிக்கா நுழையவில்லை. படை எடுப்புகள் இல்லை.
சோவியத் ரஸ்ஸியாவுடன் பனிப்போர் ஆரம்பமாகவில்லை.

1774இல் உலகின் முதல் சுதந்திர, ஜனனாயக அரசு அமெரிக்காவில்தான் உருவானது.
சம‌த்துவம் மற்றும் சுதந்திரம் போன்ற விசியங்கள் நடைமுறையில் ஏற்க்கபட்ட
வரலாறு. அன்ரு உலகம் முழுவது மன்னர் ஆட்சி மற்ரும் நிலப்பிரவுத்வ
சர்வாதிகாரம்தான்.

ஆனாலும் அமெரிக்காவில் ஜனனாயகம் முழுமையடைய மேலும் ஒரு நூற்றாண்டானது.
கருப்பின மக்கள் அடிமைகளாக நடத்தப்பட்டதை நிறுத்த ஒரு பெரும் உள் நாட்டு
போர் 1860 65 நடந்து ;அதன் இறுதியில் ஆப்ரகாம் லிங்கன் உயிர் தியாகம்
செய்தார். (காந்தியடிகளை ஒரு மத வெறியன் கொன்றதர்க்கு இணையானது).
செவ்விந்யர்களையும் வேட்டையாடி அவர்களின் நிலங்களை அபகரித்த கொடுமைகளும்
நடந்தன. 1880களில்தாம் அவை நின்றன.

1880கள் முதல் 1914 வரை பொற்காலம் என்று வர்ணிக்கிறார்கள். அந்த
காலகட்டத்தில் அய்ரோப்பாவில் மத அடக்குமுறைகள் ; யூதர்கள்,
கத்தோலிக்கர்கள், அய்ரிஸ்கார்கள், கிழக்கு அய்ரோபிய நாட்டில்
சிறுபான்மையினர், போலிஸ் நாட்டினர், போன்ற பல்வேறு குழுக்கள்
நசுக்கப்பட்டனர். ஏழைகளின் நிலை கொடுமையாக இருந்தது. வறுமை, பஞ்சம் பல
இடங்களில். அவர்கள் அனைவருக்கும் அமெரிக்க திறந்த கரங்களுடன் அடைக்கலம்
அளித்தது. (இன்று போல் விசா வழங்குவதில் கட்டுபாடு இல்லை) ; வந்தாரை
வாழவைக்கும் நாடாக திகழ்ந்தது. டைட்டானிக் படத்தில் பார்திருப்பீர்கள்.
ஏழை மக்கள் பலரும் புது வாழ்வு தொடங்க புது உலகம் நோக்கி பயண்ம செய்தனர்.
அவர்களின் சொத்து நம்பிக்கை மட்டுமே.

வந்தவர்கள் சுந்திரமாக வாழ, வேலை பார்க்க, தொழில் தொடங்க எந்த தடையும்
இல்லை. அய்ரொப்பாவில் போல் கட்டுபாடுகள், அடக்குமுறைகள் இல்லை.

மேற்க்கே கலிஃபோர்னியா போன்ற மாகாணங்களில் பச்சை நிலங்கள் (160 ஹெக்டேர்
ஒரு குடும்பத்திற்க்கு) இலவசமாக அளிக்கப்பட்டன. விவசாயத்தை துவங்கி
செழிக்க, உழைப்பை மட்டும் போட புதியவர்கள் ஆர்வதுடன் தலைபட்டனர்...

அட்லாண்டிக பெருங்கடலை கடந்து வந்த மககளுக்கு ஒரு மிக முக்கிய ஆதர்சமாக,
வரவேற்ப்பாக நின்றாள் அந்த சுதந்திர தேவி..

சுதந்திரம் என்றால் என்ன என்று சர்வாதிகாரத்தில் துன்புற்றவருக்கே
புரியும் / தெரியும்.

அய்ரொபாவில் பரம்பரை பணக்கார்கள் என்றும், தனது மூதாதைகள் 'லார்டுகள்'
என்றேல்லம் பெருமை அடித்துக்கொள்வார்கள். உடல் உழைப்பு மற்றும் தொழில்
முனைவோர்களுக்கு பெரிய மரியதை இல்லை. ஆனால் மாறாக, அமெரிக்காவில் பரம‌
ஏழையாக பிறந்து, தன் சுய முயற்ச்சியால், கடும் உழைப்பால் உயர்பவர்களுக்கே
மரியாதை. அவர்களைதாம் வழிகாட்டியாக கருதுவர். தாமஸ் ஆல்வா எடிசன், ஹென்றி
ஃபோர்ட், ஜான் ராக்ஃபெல்லர், கார்னிகி, மார்கன், ஹில்டன், டர்னர், லீ
அயோக்கா, ரிச்சார்ட் பிரான்சன், பில் கேட்ஸ் போன்ற சாதனையாளர்களே அங்கு
ஹீரோக்கள். அனைவரும் சாதாரண குடும்பத்தில் பிறந்து, போதிய கல்வி கூட
இல்லாமல், தம் சுய முயற்ச்சியால் பெரும் பொருள் ஈட்டி, சாம்ராஜியங்களை
நிறுவினர். அதன் மூலம் அமெரிக்க பொருளாதாரமே வளர்ந்து சுபிட்சம்
அதிகரித்தது.

The "American dream" என்பார்கள். யார் வேண்டுமானாலும் உழைத்து முன்னேற
வாய்பு ; மொழி, இனம், நிறம், மதம் போன்ற கட்டுப்பாடுகள் இல்லை. Metling
point என்று அமெரிக்க கலாச்சாரத்தை சொல்வார்கள்.

அதனால்தான் இன்றும் உலகம் முழுவது இருந்து மக்கள் அமெரிக்கவிற்க்கு புலம்
பெயர்ந்து வாழ முனைகிறார்கள். அவர்களை சுதந்திர தேவி வரவேற்க்கிறாள்...

Friday, July 25, 2008

KGB / CIA ஒற்றர்கள்

மாணவப்ப‌ருவத்திலிருந்தே 'ஸ்பை திரில்லர்ஸ்' நாவலகளை
விருப்பி படிப்பேன். (இன்றும்தான்) ; ஆனாலும் பல இடங்களில்
நிஜ வாழ்க்கை சம்பவங்கள், கற்பனைகளை விட மிக் மிக
சுவாரசியமாக இருக்கும்.

பீட்டர் ரைட் என்ற முன்னாள் பிர்டிஷ் உளவுத்துறை (MI6)
அதிகாரி, 20 வருடங்களுக்கு முனெழுதிய ஸ்பைகெட்சர் என்ற சுயசரிதை மிக மிக சுவாரசியமான ஒரு நூல். திரும்பத் திரும்ப வாசிக்க தூண்டும். அதை வெளியட பிரிட்டிஸ் அரசு கடும் முயற்சி செய்தது. ரைட், துணை இயக்குனராக கடைசியாக பணியாற்றி பின் ஓய்வு பெற்றார். பின் ஆஸ்த்ரேலியவிற்க்கு புலம்பெயர்ந்து, அங்கிருந்து தனது நூலை வெளியிட்டார்.

சோவியத் ரஸ்ஸிய்வின் கெ.ஜி.பி மற்றும் அதன் துணை அமைப்புகளுடன் சுமார் 30௦ ஆண்டு காலம் அவர் நடத்திய நிழல் யுத்தங்கள், உளவுகள் பற்றி மிக விரிவாக, ஆதார பூரிவமாக விவரித்துள்ளார். the great game during the cold war
era...

இதனுடன் ஒப்பிட்டால் ஜேம்ஸ் பாண்ட் கதைகள் மிகவும்
crude ஆகவும், மேலோட்டமாகவும் இருக்கும்.

ரிங ஆஃப் 5 (Ring of Five) என்ற அய்வர் குழு 1930களில் கேம்பிர்டி
பலகலைகழகட்தில் படித்த இளம் இடதுசாரிகளை கொண்ட
ஒரு குழு. அவர்கள அனைவரும் கம்யூனிச கொள்கைகளை
ஏற்று, பிறகு கே.ஜி.பி யின் வலையில் சிக்கியவர்கள். அனவருக்கும் ஒருவரை ஒருவர் பற்றி தெரியும். அவர்களுக்கு இடப்பட்ட முதல் ஆணை, தங்களின்
உண்மையன கொளகைகள் யாருக்கும் தெரியாமல் அமைதியாக படித்து, ஆங்கில அரசின் பல் துறைகளில் வேலையில் சேர்ந்து முன்னேறி உயர் பதவிகளில் அமர்வது.

அவர்களில் முதன்மையானவரும், முக்கியமானவரும் தான் ஹேரால்ட்
'கிம்' பில்பி. எம்.அய்.6 இல் உயர் பதவியில் இருந்தார்.
வாஸிங்க‌டனுக்கு பிறகு அணுப்பட்டார். பல வருடங்கள் கே.ஜி.பி க்காக உளாவு பார்த்த பின், அவர் மீது சந்தேகம் விழுந்தது. திடீரென்
மாஸ்கோவிற்க்கு தப்பிச் சென்றார். அங்கு ஒரு பத்திரிக்கையாளர்
கூட்டத்தில் தான் கேஜிபி யில் ஒரு கர்னல் பதவி வகிப்பதாக வெளிபடுத்தினார்
!!!

'Spycatcher' by Peter Wright :

கெ.ஜி.பி யின் உளவு நடவடிக்கைகள் மற்றும் நுட்பமான செய்லதிட்டங்கள்,
mis-information attempts, double spies, even triple
spies, comunication networks,controllers, sleepers, moles withinh the British
and American establisments, etc பிரமிப்பூட்டும். அவற்றை
உள்னாட்டில் முறியடிக்க முயன்ற நிறுவனம் MI5
வெளி நாடுகளில் உளவு சேகரிக்கும் நிறுவனம் MI6 (James
Bond iruntha Millitary Intellegence 6)

பீட்டர் ரைட் ஒரு எலெட்ரானிக்ஸ் நிபுனர் ; விஞ்ஞார்னியாகதான் எம்.அய்.5
இல் சேர்ந்தார். (அவரது தந்தையும் ஒரு ரேடியோ விஞ்ஞானிதான். மார்கோனிக்கு கிழ் நேரடியாக முதலாவது உலக யுத்ததின் போது பணி புரிந்தார்). அதற்க்கு முன் பல ஆண்டுகள் பிர்டிஷ் கப்பற்படையில் விஞ்ஞானியாக பணியாற்றினார்.

Radio traffic analysis, developing new and accurate mikes, triangulation
and tracing of enemy radios, cryptography, code breaking போன்றவை
அவரின் ஈடுபாடுகள். முதலில் துல்லியமக ஒட்டுக்கேட்க்கும்
ஒரு கருவியை 50களில் உருவாக்கினார். அதே போல்
ரஸ்ஸிய ஓட்டுக்கேட்க்கும் கருவிகளை எங்கு மறைத்துவைத்திருந்தாலிம்
'கண்டு' பிடிக்க பல புதிய
முறைகளை தொடங்கினார்

////Peter Wright
During World War II, however, he joined the Admiralty's Research Laboratory.
After the war, Wright joined Marconi's research department and,
according to Spycatcher, he was instrumental in resolving a difficult
technical problem. The CIA sought Marconi's assistance over a covert listening device (or
"bug") that had been found in a replica of the Great Seal of the United States
presented to the U.S. Ambassador in Moscow in 1945 by the Young
Pioneer organization of the Soviet Union. Wright determined that the
bugging device, dubbed The Thing, was actually a tiny capacitive
membrane (a condenser microphone) that became active only when 330 MHz
microwaves were beamed to it from a remote transmitter. A remote receiver could then
have been used to decode the modulated microwave signal and permit
sounds picked up by the microphone to be overheard. The device was
eventually attributed to Soviet inventor, Léon Theremin.

In 1954 Wright was recruited as principal scientific officer for MI5. According
to his memoirs, he then was either responsible for, or intimately involved
with, the development of some of the basic techniques of ELINT, for example:

Operation ENGULF, acoustic cryptanalysis of Egyptian Hagelin cipher
machines in 1956; Operation RAFTER remote detection of passive radio
receivers used by Soviet agents through detecting emanations from the
local oscillator, in 1958 (a technique now more commonly used to
enforce payment of television licences); and Operation STOCKADE, analysis of
compromising emanation from French cipher machines in 1960. In
addition Wright claimed that he was regularly involved in black bag jobs to illegally install
bugs for the government, and that MI5 was so well organised for this they even had expert tradesmen on hand to rapidly and undetectably effect repairs in the event that someone bungled and made a mess whilst installing a bug. He also claimed that MI5 was involved in a conspiracy to remove Labour prime minister Harold Wilson. /////

Russian mis-information techinics பற்றி படிக்கும் போது மிக சுவாரசியமாக
இருக்கும். அதவாது பொய்யான தகவல்களை வேண்டுமென்றே எதிரி நாட்டு
உளவுத்துறையினருக்கு கிடைக்குமாறு பல வழிகளில் ஏற்பாடு செய்து, அதன்
மூலம் அவர்களின் கவனத்தை திசை திருப்பி, வீணாடிப்பது. Diverting
attention and creating confusion within CIA/ MI6

இதற்க்கு false defectors எனப்படும் பொய்யான இரட்டை உளவாளிகள் முக்கிய
க்ருவியாக பயன்ப்டுத்தப்பட்டனர். அதாவது ரஸ்ஸியாவில் வாழ்கை பிடிக்காமல், 'தப்பி' வந்து, அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளின் உளவுத்துறையிடம் 'தஞ்சம்' புகுந்து, தாய்னாட்டை பற்றிய
'ரகசிய' தகவல்களை காட்டிக்கொடுத்தல். பெரும்பாலும்
கெ.ஜி.பி இல் அதிகரிகளாக அல்லது ரஸ்ஸிய ராணுவத்தில் விஞ்ஞானிகளாக பணி புரிந்தவர்களே அப்படி வந்தனர்

சில சுவாரசியமான உளவு வேலைகள் :

1962இல் சோவியத் ரஸ்ஸியாவை உளவு பார்க்க U-2 என்ற
மிக நவீன விமானம் மூலம் அமேரிக்கர்கள் 7 மைல்
உயரத்தில் பறந்து படம் பிடித்தனர். 7 மைல் உயரம் தாக்கும் விமான்
எதிர்ப்பு பீரங்கிகள், ஏவுகணைகள், போர் விமானங்கள்
அப்போது ரஸ்சியாவிடம் இல்லை. அமெரிக்க விமானங்கள் துருக்கியில்ல் உள்ள நேடோ விமான தளத்திலிருந்துதான பறந்தன. கே.ஜி.பி ஒரு துருக்கிய உளவாளியை அந்த விமான தளத்தில் ஒரு சாதாரண கூலித் தொழிலாளியாக அனுப்பியது. ஓடுபாதை மற்றிம் விமானங்களை சுற்றிய இடங்களை கூட்டிப் பெருக்கும் வேலை. ஒரு இரவில், யாரும் பார்க்காத சமயத்தில் விமானத்தில் நுழைந்த அந்த உளவாளி, Altimeter (விமானம் பறக்கும் உயர‌த்தை காட்டும் கருவி) கருவியை பேனலில் பொருத்த உதவிய வலது பக்க ஸ்க்ரூவை
மட்டும் கழட்டி அதற்க்கு பதிலாக ஒரு காந்த சக்தி மிகுந்த
ஒரு ஸ்க்ரூவை மாட்டினார். வேறு எந்த கோளாரும் செய்யாமல் சத்தமில்லாமல் வெளியேறினார்.

அடுத்த நாள் காலை, காரி பவர்ஸ் என்ற அமேரிக்க விமானி அந்த விமானத்தை வழக்கம் போல கிளப்பி ரஸ்ஸியாவை படம்பிடிக்க ஆரம்பித்தார். காந்த ஸ்குரு இழுத்தால் விமானம் 7 மைல் உயரத்திற்க்கும் மிக தாழ்வாக பறக்கும் போதே, அந்த அல்டிமேட்டர் 7 மைல் அலகை காட்டியது. உடனே ரஸ்ஸியர்கள் ஒரு விமான எதிர்ப்பு ஏவுகணையை
செலுத்தி அந்த அமேரிக்க விமானத்தை சுட்டு வீழ்த்தினார்கள். காரி பவர்ஸ்
பாராச்சூட் மூலம் தரை இறங்கி சிறை பிடிக்கப்பட்டர். அதன் பின்
அமெரிக்க வேவு விமானங்கள் வரவில்லை. ரஸ்ஸியர்கள் உண்மையிலேயே 7 மைல் உயர்த்தில் பற்க்கும் விமானத்தை தாக்கும் ஏவுகணையை உருவாக்கிவிட்டாதாகவே அமேரிக்கார்கள் வெகு காலத்திற்க்கு நம்பினார்கள். :))))

முக்கிய அலுவலங்களில் செகரட்ரைகளாக பணி புரியும் அவலட்சனமான, குண்டான முதிர் கன்னிகளை மிக அழகான வாலிப உள்வாளிகளின் காதல் வலையில் வீழ்த்தி தகவல்களை பெறுவது ஒரு நூதனமான முறை.
தனிமையில் வாடும் பெண்களை பல வாரங்கள் பின் தொடர்ந்து, 'சந்தித்து', டேட் செய்து பிறகு காதல் வலையில் விழ வைக்க சில இளம் உளவாளிகளுக்கு ஸ்பெஸல் பயிற்சி உண்டு. !! :))

அலுவ‌ல‌க‌ங்க‌ளில் முக்கிய‌ ராணுவ் ம‌ற்றும் இத‌ர‌ஆவ‌ணாங்க‌ளை டைப் அடிக்கும் ப‌ணியில் இருக்கும்பெண்க‌ளே பெரும்பாலும் குறிவைக்க‌ப்ப்டுவ‌ர். டைப் அடித்த‌ பின் கார்ப‌ன் பேப‌ர்க‌ளை அழிக்காம‌ல், அவ‌ற்றை ர‌க‌சிய‌மாக‌ காத‌ல்ர்க‌ளிட‌ம் சேர்பிக்க‌ அவ‌ர்க‌ள் தூண்ட‌ப்ப‌டுவ‌ர். (அப்போதெல்லாம்ப‌ழைய‌ முறை டைப்ரைட்ட‌ர்க‌ள் தான் இருந்த‌ன‌). இந்த‌ முறைக‌ளில்இஸ்ரேலிய‌ மொஸாட்,கே.ஜெ.பி போன்ற‌ அமைப்புக‌ள் கில்லாடிக‌ள். !!!

"False flag approach" என்று ஒரு முறை. அதாவது, உளவாளி,ஒரு அர‌சு ப‌த‌வியில் இருப்ப‌வ‌ரிட‌ம் தான் வேறு ஒரு நாட்டு உள‌வாளிஎன்று ந‌ம்ப‌ வைப்ப‌து. உதார‌ண‌மாக‌, தென்ஆப்பிரிக்க‌ அர்சு , நிற‌ வெறி கொள்கைக‌ளை க‌டுமையாக‌ அபார்த்தாய்ட்என்ற‌ பெய‌ரில் ப‌ல‌ ப‌ல‌ ஆண்டுக‌ளாக‌ க‌டைபிடித்தால், ப‌ல‌ மேலைநாடுக‌ள் தெ.ஆப்பிரிக்க‌அர‌சிட‌ம் உறவை துண்டித்து, அய்.னா ச‌பை மூல‌ம் ப‌ல‌ த‌டைக‌ளைவித்தித‌ன‌. ஆனால் சோவிய‌த் ர‌ஸ்ஸியா தெ.ஆப்பிராக்கிவை குறிவைக்கிற‌துஎன்ற‌ ப‌ய‌த்தை ப‌ய‌ன்ப‌டுத்தி, தெ.ஆப்பிரிக்கா உள‌வாளி போல் ப‌ல‌ போலி த‌டைய‌ங்க‌ள் /அடையாளங்க‌ளை உடைய‌ வேறு ஒருநாட்டு உள‌வாளி (மொஸாட், கே.ஜி.பி போன்றவை),அய்ரோபிய நாடுகளில் அரசு அதிகாரிகள் (சிலர்மறைமுகமாக தென் ஆப்பிரிக்க அரசை முற்ரிலும் கைவிடக்கூடாது என்றுநம்பியவர்கள்) சிலரிடம் தம் கைவரிசையயை காட்டின....

Wednesday, July 16, 2008

பிரபஞ்சத்தின் ஆரம்ப கணங்கள் (Big Bang Theory)

சுமார் 1350 கோடி வருடங்களுக்கு முன் சிங்குலாரிட்டி
(Singularity)என்ற ஒருமை புள்ளியில் இருந்து வெடித்டு
துவங்கியது இந்த பிரபஞ்சம். அந்த வெடிப்பு கணத்தின்
போது தான் காலமும், இடமும் பிறந்தன. அதற்க்கு முன்
மேட்டர் / என்டி மேட்டர் இரண்டும் சம அளவில் இருந்து பாலன்ஸ் செய்து கொண்டனவாம்.

அந்த ஒருமை புள்ளி கணத்தில் இருந்து வெடித்து சிதறி
இன்றும் ஒரு ஊதப்படும் பலூன் போல இந்த பிரபஞ்சம் விரிவடைந்து கொண்டே போகிறது.

அந்த ஒருமை புள்ளி கணத்திற்க்கு முன் 'ஒன்றுமே' இல்லை. காலம், இடம்
இரண்டும் இல்லை. அவை இரண்டும் இல்ல
நிலை பற்றி புரிந்து கொள்வது மிக கடினம். அதவாது வெற்றிடமும் இல்லை. இடமே
இல்லா நிலை பற்றி புரிந்து கொள்ள முயற்ச்சிப்போம்.

Steven Weinberg's classic "The First Three Minutes." என்ற மிக
முக்கிய புத்தகம் அந்த ஆரம்ப 3 நிமிடங்களை விவரிக்கின்றது.

வேறு விதமாக‌ விள‌க்க‌ முய‌ற்சிக்கிறேன் : நாம் முப்ப‌ரிணாம‌ உல‌கில்
வாழ்ந்து ப‌ழ‌கிவிட்டோம். நான்காவ‌து ப‌ரிமாண‌ம்
(நேர‌ம்) ப‌ற்றி அய்ன்ஸ்டினின் ரிலெடிவிட்டி திய‌ரி பேசுகிற‌து.
ந‌ம்மால் க‌ற்ப‌னை செய்து புரிந்து கொள்வ‌து க‌டின‌ம்.

ஒரு இர‌ண்டு ப‌ரிமான‌ உல‌கை க‌ற்ப‌னை செய்து கொள்ளுங்க‌ள் : அதாவாது ஒரு
மிக‌ப் பெரிய‌ த‌ட்டையான‌ மேஜைதான் உல‌க‌ம். அதில் இர‌ண்டு ப‌ரிமாணங்க‌ளே
உள்ள‌ கோடு, வட்ட‌‌ம், செவ்வ‌க‌ம், சதுரம் போன்ற 'ஜீவன்கள்' வாழ்வதாக
வைத்துக்கொள்வோம். அவை நீளம், அகலம் என்ற இரண்டே பரிமாணங்களைத்தான்
அறியும், புரிந்து கொள்ளும். அவற்றிடம் உயரம் என்ற மூன்றாவது பரிமாணம்
ஒன்று உள்ளது. மூன்று பரிமானங்கள் உள்ள உலகில் உருண்டை, ப்ரிஸம், உருளை
போன்ற 'ஜீவன்கள்' எடை மற்றும் அடர்த்தியுடன் வாழ்கின்றன என்று விளக்க
முயற்ச்சித்தால், அந்த இரு பரிமாண 'ஜீவன்களுக்கு' புரியாது அல்லவா. அதே
போல்தாம் மனிதர்களுகு நான்காவது பரிமாணம் பற்றி கற்பனை செய்வது இயலாது..

அதே போல்தான் சிங்குலாரிட்டி எனப்படும் ஒருமைபுள்ளி என்ற ஆரம்ப கணத்தின்
முன் 'ஒன்றுமே' இல்லா நிலை. காலமும், இடமும் இல்லா நிலை.

ஹப்புள் என்ற விஞ்ஞானி ரெட் ஷிஃப்ட் என்ற விசயத்தை கண்டுபிடித்தார்.
அதவாது நம் புமியிலிருந்து ஒரு கால்க்ஸி எத்தனை துரத்தில் உள்ளதோ அந்த
தூரத்திற்க்கு நேர்விகிதத்தில் அவற்றின் (ப‌ரப்ஞ்சத்தின்
மைப்புள்ளியிலிருந்து விரிவடையும்) விலகிச் செல்லும் வேகம் உள்ளது.
அதிலிருந்து வெளிப்படும் ரேடியோ கதிர்வீச்சு அகச்சிவப்பு கதிர்களின் அலகை
நோக்கின் 'நகர்ந்துள்ளது'.

1964இல் பென்ஸியாஸ், வில்சன் என்ற இரு விஞ்ஞானிகள் 'காஸ்மிக்
பாக்கரவுண்ட் மைக்ரோவேவ் ரேடியேஸன்' (Cosmic microwave background
radiation)என்ற பிரபஞ்சம் முழுவதும் விரவியிருக்கும் சிற்றலை (ஒரு வகை
வெப்ப அலை)பற்றி எதேச்சயாக கண்டுபிடித்தனர். அதற்காக நோபல் பரிசு
வென்றனர். அந்த கண்டுபிடிப்பு பிக் பாங் தியரியை உறுதி செய்தது. ஆரம்ப கண
வெடிப்பு சிதறல் போது உருவான வெப்ப அலைகளின் தற்போதை வடிவம் பிரபஞ்சம்
முழுவதும் சம அளவில் பரவி உள்ளது..

////Hubble's law has two possible explanations. Either we are at the
center of an explosion of galaxies—which is untenable given the
Copernican Principle—or the universe is uniformly expanding
everywhere. This universal expansion was predicted from general
relativity by Alexander Friedman in 1922[4] and Georges Lemaître in
1927,[5] well before Hubble made his 1929 analysis and observations,
and it remains the cornerstone of the Big Bang theory as developed by
Friedmann, Lemaître, Robertson and Walker.

That space is undergoing metric expansion is shown by direct
observational evidence of the Cosmological Principle and the
Copernican Principle, which together with Hubble's law have no other
explanation. Astronomical redshifts are extremely isotropic and
homogenous,[1] supporting the Cosmological Principle that the universe
looks the same in all directions, along with much other evidence. If
the redshifts were the result of an explosion from a center distant
from us, they would not be so similar in different directions.

Measurements of the effects of the cosmic microwave background
radiation on the dynamics of distant astrophysical systems in 2000
proved the Copernican Principle, that the Earth is not in a central
position, on a cosmological scale.[37] Radiation from the Big Bang was
demonstrably warmer at earlier times throughout the universe. Uniform
cooling of the cosmic microwave background over billions of years is
explainable only if the universe is experiencing a metric expansion,
and excludes the possibility that we are near the unique center of an
explosion. ////

http://en.wikipedia.org/wiki/Big_bang_theory

சிங்குலாரிடி என்ற அந்த ஆரம்ப கணத்திலிருந்து இன்று வரை நடந்த விசியங்களை
ஒரளவு அனுமானித்துவிட்டோம். ஆனால் அந்த ஆரம்ப கணத்திற்க்கு முன் என்ன
இருந்தது, ஏன் இந்த மகா மகா வெடிப்பு, இத்தனை கோடாடனு கோடி ஸில்லியன் டன்
எடையுள்ள பருப்பொருளும், சக்தியும் எப்படி ஒரே மைக்ரோ செக்கன்டில், ஒற்றை
புள்ளியிலிருந்து எப்படி, ஏன் வெளிப்பட்டன என்ற கேள்விக்கு விடை இல்லை.
ஏன் என்ற கேள்வி ?

அந்த சிங்குலாரிட்டிக்கு முன் இருந்தவற்றை 'விளக்க' கடவுள் தேவை
படுகிறார். ஆனால் அதற்க்கு பின் நிகழ்ந்தவைகளை விள‌க்க தேவையில்லை, என்று
ஒரு கருத்து உள்ளது....

Tuesday, July 15, 2008

கம்யூனிஸ ஜோக்ஸ்

சோவியத் ரஸ்ஸியாவில் கோழிகளை பராமரிக்க ஒரு சமயம் சிக்கல் வந்த போது,
கூட்டுப்பண்ணை விவ‌சாய‌த் தொழிலாள்ர்களிட‌ம் ஒவ்வோருவ‌ரிட‌மும் 100
கோழிக‌ள் ஒப்ப‌டைக்க‌ப்ப‌ட்ட‌ன‌. ஆளுக்கு 100 ரூரில் கொடுக்க‌ப்ப‌ட்ட‌து.

சில மாதங்களுக்க்கு பிறகு மாஸ்கோவிலிருந்து ஒரு க‌மிஸ்ன‌ர் ஆய்வுக்கு
வ‌ந்தார் ;அன‌வ‌ரும் வ‌ரிசையில் நினன்ற‌ன‌ர் :

க‌மிஸ்ன‌ர் : கோழிக்கு என்ன‌ப்பா கொடுத்த‌ ?

விவ‌சாயி 1 : 100 ரூபிளுக்கும் கோதுமை வாங்கிப் போட்டேன் காம்ரேட்.

க‌மிஸ்ன‌ர் : என்ன‌து கோதுமையா ? இந்த‌ ப‌ஞ்ச‌ கால‌த்தில் கோழிக்கு
கோதுமையா ? இவ‌னை சைபீரியா சிறைக்கு அனுப்பிடுங்க‌. நீ என்ன‌ப்ப‌ போட்ட‌
?

விவ‌சாயி 2 : (ப‌ய‌த்துட‌ன்) கோதுமை உமி போட்டேங்க‌

க‌மிஸ‌ன‌ர் : உமியிலிருந்து மின்சார‌ம் த‌ய‌ரிக்க‌லாம். மின்
ப‌ற்றாக்குறை கால‌த்துல் கோழிக்கு உமியா ? இவ‌னையும் சைபீரியாவுக்கு
அனுபுங்க‌. நீ என்ன‌ப்பா செய்த‌ ?

விவ‌சாயி 3 : (மிக ப‌ய‌த்துட‌ன்) நான் ஒன்னுமே கொடுக்கிலீங்க‌ காம்ரேட்.
நீங்க‌ குடுத்த‌ 100 ருபிள்க‌ளையும் கோழிங்க‌ கைல‌யே கொடுத்து,
உங்க‌ளுக்கு பிடிச்ச‌த‌ வாங்கி சாப்பிடுங்க‌ன்ட்டேன்..
------------------------------

ஸ்டாலின் மறைந்த பின் சில காலம் கழித்து குருஸேவ் அதிபரனார். அதன் பின்
ஒரு மேடையில் ஸ்டாலின் காலத்து கொடுமைகள் பற்றி முழங்கினார். அபோது
கூட்டத்தில் இருந்து ஒருவர் துண்டு சீட்டில் ஒரு கேள்வி அனுப்பினார் :

"இதை எல்லாம் ஸ்டாலின் உயிரோடு இருந்த போதே ஏன் பேசவில்லை ? "

அதை படித்துவிட்டு கடும் சினத்துடன் யார் இந்த துண்டுச்சீட்டை
அனுப்பியவர் என்று கர்ஜித்தார். அனுப்பியவர் பயந்து கொண்டு கம்மென்று
இருந்தார்.

பிறகு ஒரு கள்ளச்சிரிப்போடு குருஷேவ் சொன்னார் :

"கேள்வி கேட்ட இந்த் நபர் இப்போது இருக்கும் நிலைமையில் தான் அன்று நான்
இருந்தேன்."
---------------------------------------

சோவியத் ரஸ்ஸியாவில் ஒரு புத்தக கடை மேலாளார் கைது செய்யப்பட்டார்.
அவர் செய்த 'குற்றம்' : நான்கு வேறு புத்தங்களை வரிசையாக வைத்தது. அவை :

மாஸ்கோவிற்க்கு வெகு தூரத்தில்
வெளி நாட்டு கொடியின் கீழ்
நல்ல வாழ்க்கை
வாழ விரும்புகிறோம்
----------------------------------------

An inspecting commission came to a lunatics asylum. To greet them, a
choir of the patients sang a song from a popular movie that says "Oh,
how good it is to live in the Soviet land!"

The commission noticed that one of the men did not sing.

"Why are you not singing?"

"I'm not crazy, I'm a nurse here."

-----------------------------------------------------

சோவியத் ரஸ்ஸியாவில் ஒரு வீட்டில் அனவரும் வேறு வேறு வேலையாக் வெளியே
செல்ல வேண்டியிருந்தது. குளிர்பதன் பெட்டியின் கதவில் ஒரு நோட்டிஸ்
போர்ட். அதில் அனைவரும் அறிவிப்பர் :

1.தந்தை : தொழிளார் நல மீட்டிங்கிற்க்கு செல்கிறேன். வர 10 மணி ஆகும்.
Comrade ஸ்டாலின் வாழ்க.

2.தாய் : மகளிர் அமைப்பு சேவை மய்யத்திற்க்கு செல்கிறேன். திரும்ப 8 மணி
ஆகும். Comrade ஸ்டாலின் வாழ்க.

3.மகன் : கால் பந்து விளையாட போகிறேன். வர 7 மணி ஆகும். Comrade ஸ்டாலின் வாழ்க.

4.மகள் : தோழி வீட்டிற்க்கு செல்கிறேன். வர 6 மணி ஆகும். Comrade ஸ்டாலின் வாழ்க.

கடைசியாக :

5.திருடன் : இனி எப்போதும் திரும்பி வரவே மாட்டேன். Comrade ஸ்டாலின்
நீடுழி வாழ்க.
-----------------------------------------

An archaeologist finds a mummy in Egypt. An international debate
starts over how old it could be... Nobody knows, so the mummy is
brought to various countries for analysis by different experts...

It is brought to the USA first, the US specialists say, it is 3.000 years old.

Then, the Japanese, precise as usually, find that it is 2.953 years old.

The Russians come with the final result: "The mummy is 2.953 years, 5
months, 2 weeks and 4 days old". Journalists curiously ask how they
found this out, the Russians reply: "The mummy was taken to the KGB
and he confessed under torture"
-----------------------------------

Mr.Ivanov, a Russian engineer is caught on the streets by the KGB,
brought with a black car to the secret headquarters for
interrogation...

KGB agents: "Where do you live?"

Mr.Ivanov: "I live on Stalin Street, number 9"

After a few hours he gets beaten up and asked again...

KGB agents: "Where do you live?"

Mr.Ivanov: "I told you, I live at Stalin Street number 9"

He gets beaten up, tortured and thrown into a chamber...

The next day he gets asked again, then beaten up again and so on...

After a week of beating and torturing, the KGB agents think he's crazy
and let him go home...

When Mr.Ivanov arrives to his building, his neighbour, and old lady
whispers to him: "Psst! Mr.Ivanov! There were a coupple of agents
here, several times this week, they were asking whether you lived
here. But don't worry Mr.Ivanov, I told them I never heard about you!"
-----------------------------------

An East German citizen is caught at the Berlin wall by border guards
and is interrogated, then he ends up in a nuthouse.

Then, when a relative visits him there he is asked "Why were you
brought to the nuthouse?", the detainee replies: "I wanted to
immigrate to the Soviet Union"
-------------------------------------------

Crazy dictator, Nicolae Ceauşescu visits a mental institution in Romania.

Because the "nutcases" who live there are so stupid that they can't
remember their own names, they are given numbers... like: Popescu is
"Number 1", Ionescu is "Number 2" and so on...

The dictator enters the mental hospital and starts chatting with the
crazy patients.

Ceauşescu: "Hey, hello kid! Who are you?"

"Nut": "Hi, ahhh, I'm Number 8!"

Ceauşescu: "Wow! You are smart! And do you know who I am?"

"Nut": "Yeapp, ya're Number 9!"
---------------------------------------
heared in JNU, N.Delhi
Ques : Which State is the most Marxist in India ?

Ans : Bihar. becasue in the ultimate state of marxisim, the 'state' will
wither away, and the people will rule themselves. It is already there in Bihar.
---------------------------------------------

Saturday, July 12, 2008

Swiss bank’ accounts bleeding the country

Swiss bank' accounts bleeding the country
by B.R. Lall

http://www.tribuneindia.com/2008/20080712/edit.htm#8

Transparency International India recently exposed how the Indian
Government is not seeking information from the German Government about
billions of dollars of un-accounted money that belongs to the people
of India , lying in Liechtenstein , a small German county.

A number of other countries like the USA , Finland , Norway , Sweden ,
Canada , Italy , the UK and Ireland , whose nationals are also
included in the same list, are seriously collecting information about
their citizens.

As per Transparency International, if asked, the German Government has
offered to provide information on accounts to various nations the
world over including India , free of cost, but India refuses to take
the offer.

I had foreseen this attitude of the government, pointing out clearly
in my book Who Owns CBI: The Naked Truth that, "it will not be easy to
take any step in this direction, as the first obstacle will come from
Indian elites, who are holding such accounts/assets abroad. They will
oppose any such move tooth and nail. But no meaningful fight against
corruption, black money and plethora of economic offences can be
really successful without such radical measures."

I had attempted the analysis in the context of Switzerland alone and
had assessed Indian wealth in that single country at $5 trillion.
There are some other well known 'slush parks' like St Kitts, Antigua ,
Bahamas , and Isle of Man that multiply such holdings manifold. Of
course, Switzerland remains the roof and crown of the slush parks and
if Indian wealth lying there is added and can be brought home, we will
turn into one of the top, rich nations on the globe.

Indian resources get transferred abroad where these are invested to
generate employment and incomes. Other countries develop and prosper
at our cost. No wonder Switzerland has the second highest per capita
income, with this criminal banking industry in the lead.

The holdings abroad cannot be checked as banks cover themselves with
the veil of secrecy. However, the slush money arising out of the drug
trade is being treated differently. If it is suspected that the money
in a bank has some relation with the drug trade, the secrecy laws
stand automatically relaxed, as these have been amended to that
extent.

It was done on the insistence of the big western powers, as drugs are
their problem. After the attack on the World Trade Centre in New York
on September 11, 2001, money held by terrorists has also been frozen.
For countries like India, all economic offenders including the
corrupt, as also the cooperating Swiss-bankers, are the 'Financial
Terrorists' or their harbourers.

The major problem of the third world is corruption, and the secrecy
laws aid and abet it. It would not be an exaggeration to say that the
people of countries like Switzerland are more like receivers of stolen
property and are leading a parasitic existence. This hypocrisy does
not go well with their famed high stance on morality.

They should abandon such laws and make their banking business open and
transparent. India should take up this question with Swiss banks, the
western world and with all possible international organisations,
including the UN, OECD etc.

Apart from bank accounts, another dimension is property or other
assets that could be purchased abroad. Since the agency of one country
cannot conduct investigations in another country, some rules need to
be framed so that the particulars of deposits or properties held
abroad could be known to the mother country, in the name of whose
citizens these may stand.

Whenever a bank account is opened by an Indian citizen abroad, or
property is purchased, the particulars should be communicated to the
Indian authorities. All details should be maintained in a National
Property Register.

In criminal cases, on instructions from the CBI, the accounts should
automatically be frozen, the lockers, the properties and other assets
sealed and ultimately these assets be disposed of as per directions of
the Indian courts. For obtaining/supplying such information, the 'dual
criminality' norm may not be insisted upon, as corruption is a crime
everywhere, only some technical details may differ.

Once this happens, hiding black incomes abroad will become very
difficult and practically impossible. The country expects action from
the Prime Minister who is revered as an economist, as an academician
and as an honest person.

It may be argued that the government will fall as most of the elites,
including some of the civil servants, also hold such slush. The moot
point is whether the PM owes his loyalty to such criminals or to the
nation. What if the government of the day falls, the nation will
surely rise.

The writer was an IPS officer

Thursday, July 10, 2008

அம்பானி சகோதர‌ர்க‌ளின் அரசியல்

அம்பானி சகோதர‌ர்க‌ளின் அரசியல்

1991 வ‌ரி இந்தியாவில் நில‌விய‌ லைசென்ஸ், கோட்டா, பெர்மிட் ராஜியத்தில்
(அதிகாரிக‌ள், அர‌சிய‌ல்வ‌திக‌ள், தொழில‌திப‌ர்க‌ள் மூவ‌ரின் கூட்டு.
அத‌ன் மூல‌ம் அதிகார‌ துஷ்பிரோய‌க‌ம் ம‌ற்றும் ஊழல் வளர உதவிய சோசியலுச
பாணி பொருளாதாரம்) மிக‌ அதிக‌ம் வ‌ள‌ர்ந்த‌ ஒரு நிறுவ‌ன‌ம் ரில‌ய‌ன்ஸ்.
ப‌ல கா‌ங்கிர‌ஸ் த‌லைவ‌ர்க‌ளை விலைக்கு வாங்கி அத‌ன் மூல‌ம் ப‌ல‌
லைசென்சுக‌ளை, இற‌க்கும‌தி அனும‌திகளை (அப்போது டால‌ருக்கு க‌டும்
த‌ட்டுப்பாடு, அத‌னால் அர‌சின் க‌ட்டுபாடு மிக‌ அதிக‌ம்) பெற்று,
போட்டியாளர்களுக்கு அவை கிடைக்காமல் செய்து வளர்ந்தது. (இது அன்று
அனைத்து முதலாளிகளும் செய்தனர்/செய்ய வேண்டிய நிர்பந்தம் ; இன்று இல்லை).

தன் வினை தன்னை சுடும். பிரான்ப் முகர்ஜியை பல ஆண்டுகளாக 'வளைத்து'
போட்டிருந்தது ரிலையன்ஸ். பிறகு 90களுக்கு பின், முலயம் சிங் இன்
சம்ஜ்வாடி கட்சியில் இணைந்த (இளைய) அனில் அம்பானி, எம்.பி ஆகுவும் ஆனார்.
2004 பொது தேர்தலில் முலயாம் சிங் யாதவ் பெரும் வெற்றி பெறுவார் ; பிரதம்
ஆக கூட வாய்ப்பு இருக்கிறது என்று தப்பு கணாக்கு போட்டார் அனில் அம்பானி.
முகேஸ் அம்பானிக்கு அனில் அரசியலில் நேரடியாக இறங்கியது பிடிக்கவில்லை.
மேலும் தொழில் ரீதியாக சில முக்கிய முடிவுகள் எடுப்பதில் கருத்து
வேறுபாடுகள். கருப்பு பணம் பல ஆயிரம் கோடிகள்
இருவரிடமும். ரிலையன்ஸ் நிறவனப் பங்குகள் பெரும்
அள‌வில், பிணாமி கம்பேனி பெயர்களில், முகேஸிடம் உள்ளது.

2006இல் சகோதர்கள் சண்டையிட்டு பிரிந்தனர். அனில், ரிலயன்ஸ் டெல்காம்
மற்றும் ரிலயன்ஸ் காப்பிடல் மற்றும் ஒரு எனர்ஜி / கட்டுமான
நிறுவனமத்தையும் வைத்துகொண்டார். முகேஸின் கட்டுப்பட்டில் ரிலயன்ஸ்
நிறுவனம், இன்னும் கடும் விரோதம் ; திரை மறைவு நாடகங்கள்..

சமஜ்வாடி கட்சி இன்று அனில் அம்பானியின் பக்கம் ஸ்டாராங்காக உள்ளது. (பல
நூறு கோடிகள் குடுத்திற்ப்பார் !!). காங்கிரஸ் அமைச்சரவையில் உள்ள
பெட்ரோலிய அமைச்சர் முரளி தியோரா முகேஸின் ஆள். அத‌னால் தான் ரிலயன்ஸ்
பெட்ரோலிய நிறுவனம் ஏற்றுமதி செய்து ஈட்டிய 35 % லாபம்
மிக மிக அதிகம். அதற்கு உச்ச கட்ட வ‌ரி விதிக்க வேண்டும் என்று சமாஜ்வாடி
கட்சி சில காலமாக கூச்சல் போடுகிறது.

இடது சாரிகள் ஆதரவு வாபஸ் ஆனவுடன், காங்கிரஸ் அரசுக்கு இன்று சமாஜ்வாடி
கட்சியின் முழு ஆதரவு தேவையாகிவிட்டது. இனி அனில் அம்பானியின் கை ஓங்கும்
என்று எதிர்பார்க்கப்டுகிறது.

பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியோராவை பதவி நீக்கம் செய்ய அவர்கள்
பிரதமரை நிரபந்திப்பார்கள். முலயாம் சிங்கின் வலது கரமான அமர் சிங் ஒரு
அதிகார தரகர். பிம்ப் வேலை கூட செய்வார் என்று கேள்வி. அபாயகரமான‌ ஒரு
அரசியல்வாதி.

இனி தான் இருக்கிற‌து நாட‌க‌ம்.

த‌ன் வினை த‌ன்னை சுடும். ரில‌ய‌ன்ஸ் எந்த‌ வ‌கையில் அர‌சிய‌ல்வாதிக‌ளை
வாங்கி வ‌ளர்ந்த‌தோ அதே வ‌ழியில் விழ‌ வாய்ப்பு. ஆனால் அது நாட்டிற்க்கு
ந‌ல்ல‌த‌ல்ல‌.
ஜாம்ன‌க‌ரில் அமைக்க‌ப்ப‌ட்டுள்ள‌ ரிலைய‌ன்ஸ் சுத்தீக‌ரிப்பு ஆலை உல‌கின்
மிக‌ச் சிற‌ந்த‌ ஆலைக‌ளிள் ஒன்று. மிக‌ குறைந்த‌ நாட்க‌ளில், குறைந்த்
செல‌வில் க‌ட்ட‌ப்ப‌ட்ட‌து.
மிக‌ மிக‌ ந‌வீன‌மான‌து. அத‌னால் தான் லாப‌ம் அதிக‌ம்.

அது ந‌ம் தேசிய‌ சொத்து. இதை புரிந்து கொள்வ‌து கடின‌‌ம்...

மேலும் பார்க்க‌ :

http://indianeconomy.org/2008/07/08/guest-post-mukesh-ambani-under-fire/

Guest Post: Mukesh Ambani Under Fire
Filed under: Business, Corruption/ Red Tape, Energy, Entrepreneurship,
Media & Economics, Politics, Regulatory reforms — Nitin @ 12:22 pm
Mohit Satyanand

Though I have never invested in the shares of Reliance Industries, my
recently gleaned understanding of the world petroleum scenario has
made me respect the company's vision in its refining projects. As I
mentioned once earlier, RIL's existing refinery, and the one nearing
construction, reportedly have unparalleled flexibility to process
heavy, high-sulphur (so-called sour) crude, especially that emanating
from Iran. This crude sells at a huge discount to other crudes; once
it is refined into diesel, though, RIL is able to sell the resultant
distillates, especially diesel, into a world market which is thirsty
for such products.

Most mature consumers, the US especially, have made no investment in
refining capacity over the last 2 decades, and strategic thinkers in
the petroleum industry go so far as to say that RIL's investments are
changing the pattern of world flows in petroleum and petroleum
products.

For this reason, I have recently turned from a bear on RIL to a mildly
positive neutral. Until last week, that is. With Mulayam Singh and
Amar Singh all but in the ruling coalition, suddenly life has become
difficult for Mukesh Ambani. The first salvo across his bows was a
minor irritant, namely the questioning of concessional import duty
paid on two private jets.

More significantly, there are now calls for a 'windfall tax' on
profits RIL is making on its refining operations. Nothing could more
arbitrary than such a tax; windfall taxes have been discussed in the
US, on the extra profits oil companies make when commodity prices
suddenly ramp up - the implicit logic being that the companies have
done nothing to earn this extra profit. I disagree with such taxes, in
any case, since anyone who invests in an industry, resource-based or
otherwise, runs the risk of prices being lower than he anticipated -
in which case he is not compensated by the exchequer.

But in the proposal that RIL be taxed, all one sees is the
vindictiveness of those opposed to him. If RIL is making higher
profits than other refineries, this is due to its far-sightedness in
investing in a more complex and sophisticated refinery. The profits
accruing from such an operation are far from a 'windfall', a term
normally used to describe a lottery win, for example. If this
nonsensical suggestion is accepted by the government, it will send out
a signal that Indian governance is of the banana republic variety.

Mohit Satyanand is consulting editor at Outlook Money

Monday, July 7, 2008

இரு தற்கொலைகள்




இரு தற்கொலைகள்

சில ஆண்டுகளுக்கு முன் வரலாறை பதிவு செய்யும்
இரு ஆய்வாளர்கள் வெவ்வேறு நாடுகளில் மன அழுத்தம்
தாங்காமல் தற்கொலை செய்து கொண்டனர்.

1.அய்ரிஸ் சாங் அமெர்க்காவில் பிறந்து வளர்ந்த ஒரு
சீனப் பெண். (தைவான்) 1931இல் ஜப்பானியர்கள் சீனாவை
ஆக்கரமித்து, நான்கிங் பகுதிகளில் பல லட்சம்அப்பாவி
சீன மக்களை கொன்று, பென்களை வன்கொடிமை செய்து,
அழித்து பெருங்கொடுமைகள் புரிந்தனர். அதை ரேப் ஆஃப்
மன்சூரியா என்றும் கூறுவர். அந்த கொடுமையன
நிகழ்வுகளை நான்கிங் சென்று ஆராய்ந்து, அலசி
ஆங்கிலத்தில் பதிவு செய்து ஒரு புத்தகத்தையும்
எழுதினர் சாங்.

http://www.sfgate.com/cgi-bin/article.cgi?f=/c/a/2004/11/20/DDGN29TV0G1.DTL
http://en.wikipedia.org/wiki/Nanking_Massacre

Chinese civilians to be buried alive.[citation needed]
Chinese civilians to be buried alive

தான் சேகரித்த கொடுந்தகவல்களின் பாரம், மன அழுத்தம்
தாங்க முடியமல் விரைவில் (2004) தற்கொலை செய்து
கொண்டார்.

2. தென் ஆப்பரிக்காவை சேர்ந்த வெள்ளை இனத்தை
சேர்ந்தவ புகைபட கலைஞர் கெவின் கார்ட்ர். சூடானில்
நிலவிய கடும் பஞ்சத்தை 1994இல் புகைபடமெடுக்க
சென்றார். அவர் எடுத்த இந்த படம் அவருக்கு
புலிட்ஸர் விருதினை பெற்றுத் தந்தது. நேரில்
கண்ட கொடுமையான நிகழ்வுகளை தாங்க முடியாம்ல்
(க்டன் தொல்லை வேறு) 2004இல் தற்கொலை
செய்து கொண்டார்.

http://www.npr.org/templates/story/story.php?storyId=5241442



இதை ஆக்குபேசனல் ஹசார்ட் என்பர் ஆங்கிலத்தில்.
அதாவது தொழில் ரீதியான அபாயங்கள். மிக
அதிகமான மனித நேயம், சென்ஸிடிவான மனம்,
உலகின் துயரங்களை நேரில் கண்டதால் ஏற்பட்ட
கடும் மன உளைச்சல் ;இவை தற்கொலையில்
முடிந்தன..

Sunday, July 6, 2008

Man's dearest possession is life..

ரஸ்ஸிய புரட்சியை அடிபடையாக் கொண்ட 'வீரம்
விளைந்தது' என்ற புகழ் பெற்ற புதினத்தை எழுதிய
க்கலாய் ஆஸ்ட்ராவஸ்கியின் மிக முக்கியமான் இந்த
வாக்கியம் மானிட வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கபட்டது :

"Man's dearest possession is life. It is given to him but once,
and he must live it so as to feel no torturing regrets for wasted
years, never know the burning shame of a mean and petty
past; so live that, dying, he might say: all my life, all my
strength were given to the finest cause in all the world -
the fight for the Liberation of Mankind."

மானிட சுதந்திரம்தான் அனைத்திற்க்கும் அடிப்ப‌டை.
அதை நசுக்கும் எவ்வகை சர்வாதிகாரமும்
எதிர்க்கபட வேண்டியவை.

பண்டித நேருவிற்க்கு மிக மிக பிடித்த வரிகள்
இவை. மனப்பாடமாக அவருக்கு இதை
அறிந்தவராம். சுமார் ஒன்பது ஆண்டுகாலம்
ஆங்கிலேய சிறைகளில் கழித்த அவருக்கும்
இது பொருந்தும்.

அவரின் செயலாளர் மற்றும் சகாவான
எம்.ஓ.மாத்தாய் எழுதிய 'நேரு காலத்து நினைவுகள்'
என்ற நூலில் இதை குறிப்பிட்டு, நேரு மறையும்
தருவாயில் இந்த வாக்கியம் அவருக்கு நினவிற்க்கு
வந்திருக்கும் என்று தான் நம்புவதாக எழுதுகிறார்.
அதனால் தான் இறந்த பின்னும் நேருவின் முகத்தில்
அப்படி ஒரு அமைதியும், சாந்தமும் தெரிந்தாக
நம்புகிறார்..

Friday, July 4, 2008

ஹாஜ் மான்யமும், மதசார்பின்மையும்

ஆண்டிற்க்கு 250 கோடி அள‌வுக்கு ஹாஜ் ப‌ய‌ணிக‌ளுக்கு
இந்திய‌ அர‌சு மான்ய‌ம் அளிப்ப‌து ம‌த‌சாற்பின்மையா
அல்ல‌து ?

இதில் பிஜெபி ஆட்சி செய்த‌ 5 ஆண்டுக‌ளில் இதை
நிறுத்த‌ முய‌ற்சி செய்ய‌வில்லை.

ச‌ம்ப‌த‌ப்ப‌ட்ட‌ அனைவ‌ரும் க‌ள்ள‌த‌ன‌மாக‌
செய‌ல்ப‌டுகின்ற‌ன‌ர்.

ஹாஜ் ப‌ய‌ண‌ம் தார‌ள‌மாக‌ செல்லால‌ம் ; ஆனால்
சொந்த‌ செல‌வில். அதைதான் இஸ்லாமும் சொல்கிற‌து
என்று ந‌ம்புகிறேன்.

ஓட்டுக‌ளுக்காக‌ இந்த‌ முட்டாள்த‌னம் தொட‌ர்கிற‌து.

இஸ்லாமிய‌ ம‌க்க‌ளும் இந்த‌ ப‌ண‌த்தை வேறு ந‌ல்ல‌,
ப‌ய‌னுள்ள‌ வ‌ழிக‌ளில் அர‌சு செல‌வு செய்ய‌ வேண்டினால்
என்ன‌ ? வ‌ருடா வ‌ருட‌ம் இந்த‌ 250 கோடிக‌ளில்
இஸ்லாமிய‌ர்க‌ள‌ அதிக‌ம் வாழும் ப‌குதிக‌ளில்
இல‌வ‌ச‌ ம‌ருத்துவ‌ம‌னைக‌ள், க‌ல்விக்கூட‌ங்க‌ள்,
ஸ்கால‌ர்ஷிப்க‌ள் போல்...

ஹும்....

ந‌ட‌க்காது இதெல்லாம்.

அண்டை வீட்டுகாரர்கள் உணவு அருந்திவிட்டானா என்று பார்த்துவிட்டு உணவு
உட்கொள்பவனே உண்மையான இஸ்லாமியன் என்று குர்ஆன் கூறுவதாக தெரிகிறது.

அதேபோல ஹஜ் பயணம் மேற்கொள்வதைவிட ஏழை பெண்களுக்கு திருமணம் செய்துவைப்பது
மிகவும் நல்லது என்று முகமது நபி(ஸல்) கூறியுள்ளதாகவும் தெரிகிறது.

ஆனால் நடைமுறையில் இந்தியாவில் வசிக்கும் இஸ்லாமியர்களில்
மிகப்பெரும்பான்மையினர் வறுமையில் வாட, சிறுபான்மை இஸ்லாமியர்கள் மட்டுமே
செல்வசெழிப்புடன் வசிக்கின்றனர்.

இவர்களுக்கு சமூக சிந்தனைகளும் இருப்பதில்லை. இஸ்லாமிய மார்க்கத்தில்
கூறப்பட்டுள்ள விஷயங்களையும் இவர்கள் கடைபிடிப்பதில்லை. (விதிவிலக்குகள்
நீங்கலாக)

இதைவிட கொடுமை என்னவென்றால், இந்து மதத்தின் அடிவேறான சாதியக்
கொடுமைகளால் சீரழிக்கப்பட்டு இஸ்லாமிய மதத்திற்கு மாறியவர்களை, அங்கும்
அதே சாதிப்பாகுபாடுகள் தொடர்ந்து துரத்துவதுதான்.

பொது சிவில் சட்டம் : அதை ஏன் இன்றும் இஸ்லாமிய தலைவர்கள் மற்றும் ஆண்கள்
(பெண்கள் அல்ல) ஏற்க மறுக்கின்றனர் ?

விவாகரத்து, சொத்துரிமை, ஜீவனாம்சம், பாகப்பிரிவினை
போன்ற விசியங்கள் அனைத்து மக்களுகும் பொதுதானே.
அதில் மட்டும் ஏன் இன்னும் ஷாரியாத் சட்டத்தை
மட்டும்தான் ஏற்ப்போம் என்று பிடிவாதம் ? ஆணாதிக்கம்
மிகுந்த நியாமில்லா சட்டம் அது.

சரி, கிரிமினல் குற்றங்கலுக்கும் ஷாரியத்தை (சவுதி
அரேபியா போல்) இந்தியாவில் பயன்படுத்த என்ன
தயக்கம் ? ஒராவஞ்னை ? இரட்டை வேடம் இது.
கையை வெட்டுதல் போன்ற கொடுமையான
தண்டனைகள் அதில்...

பெண்களை அடிமைபடுத்தும் சட்டம் ஆண்களால்
இன்றும் நிலை நிறுத்தப் படுகிறது. இதற்க்கு சால்ஜாப்பு
வேறு. நடுவு நிலைமை, நேர்மையே இல்லையா ?

(இப்படி எழுதவதால் என்னை ஒரு இந்துதவா
ஆதரவாளர், இஸ்லாமியர்களை வெறுக்கும் குறிகிய
மனபான்மை உடையவன் என்று முடிவு செய்ய
வேண்டாம் !!)

Saturday, June 28, 2008

சில அருமையான் புத்தகங்கள்

சின்னக்குத்தூசி அவர்கள் எழுதிய‌ 'எத்தனை மனிதர்கள்'
(விகடன் பிரசுரம்)

திரு.வி.க, அண்ணா, பெரியார், பாரதி, வா.வு.சி, கோவை
அய்யாமுத்து,கண்ணதாசன், காமராஜர், ஜீவானந்தம், காயிதே மில்லத், குத்தூசி
குருசாமி, உ.வே.சா, அப்துல் ரஹிம், நெ.து.சுந்தரவடிவேலு போன்ற பல‌
பெருமக்க‌ளை பற்றி, பல நூல்களின் முலம், அருமையான கட்டுரைகளை
வடித்துள்ளார்.

பல வகை மனிதர்கள் ; சம்பவங்கள் ; வரலாற்று சுவசுகள்.

மிக அருமையான புத்தகம். அனைவரும் படிக்க வேண்டும்
---------------------------------------

'எனது நினைவுகள்'

கோவை அய்யாமுத்து
(1898-1977)

சுதந்திர போராட்ட வீரர், பெரியாரின் சகா மற்றும்
வைக்கம் வீரர். குடியரசு பத்திரிக்கையின் ஆசிரியர்.
த‌மிழ‌க‌த்தில் க‌த‌ரை நிலைனாடிய‌வ‌ர்.
காந்திய‌டிக‌ளின் ச‌கா. அவ‌ருட‌ன் ச‌ன்டை இட்டு,
வில‌கிய‌வ‌ர். ராஜஜியின் சீட‌ர்.

க‌விஞ‌ர், கதாசிரிய‌ர், 'க‌ஞ்சன்' என்ற‌ ப‌ட‌த்தை
கோவை சென்ட்ர‌ல் ஸ்டுடியோவில் 1947இல்
எழுதி இய‌க்கிய‌வ‌ர்.

ஜீவாவின் ந‌ண்ப‌ர். ஜி.டி.நாயுடுவின் தோழ‌ர்.
கோவை ர‌த்தின‌ச‌பாப‌தி முத‌லியாரின் ச‌கா.
(ஆர்.எஸ் புர‌ம் இவ‌ர் நினைவாக‌).

பொள்ளாச்சி ம‌காலிங்க‌ம், ஜி.கே.சுந்திர‌ம்,
க‌ல்கி ச‌தாசிவ‌ம், அவ‌ர்க‌ளின் ந‌ண்ப‌ர்.சி.சுப்ரமணியம்
அவரின் நெருங்கிய சகா.

மேலும் ப‌ல‌ ப‌ல‌ அருமையான‌ நிக‌ழ்வுக‌ள் ;
ந‌ட்புக‌ள், சாத‌னைக‌ள்.

அவ‌ர் எழுதிய‌ புத்த‌க‌ங்க‌ள் :

நாடு எங்கே செல்கிற‌து ?
நான் க‌ண்ட‌ பெரியார் (1957)

அவ‌ரின் ச‌ய‌ச‌ரிதை 1972இல் வான‌து ப‌திப்ப‌க‌த்தால்
வெளியிட‌ப் ப‌ட்ட‌து. இன்று கிடைப்ப‌து அரிது.
மிக‌ மிக‌ ப‌த்திர‌மாக‌ பாதுகாத்து வ‌ருகிறேன்.

என்னுடை மிக‌ முக்கிய‌ பொக்கிச‌ம் அது.
----------------------------------------

பட்டாம்பூச்சி (Paipilon)
பட்டாம்பூச்சி (ஆங்கிலத்தில் பாபிலான், மூலம் : ப்ரென்ச்)

ஹென்றி ஷாரிய‌ர் என்னும் ப்ரென்ச்கார‌ரின் சுயசரிதை.
செய்யாத‌ ஒரு கொலைக்காக‌ ஆயுள் த‌ண்ட‌னை விதிக்க‌ப்ப‌ட்டு,
ஃப்ரென்ச் க‌ய‌னாவிற்க்கு (S.America) நாடுக‌ட‌த்த‌ப்ப‌ட்டு சிறைவைக்க‌ப்பட்டார்
(1930க‌ளில்). அநியாயம‌னா த‌ண்ட‌னையை எதிர்த்து மீண்டும் மீண்டும் சுமார்
12 த‌ட‌வை த‌ப்பி, ஒவ்வொரு முறையும் பிடிப‌டுகிறார்.

ஒரு சிறு ப‌ட‌கில் 1000 மைல்க‌ள் க‌ட‌லை க‌ட‌ந்து டிரினிடாடை ஒரு முறை
அடைந்து சாத‌னை ப‌டைத்தார். சுமார் 6 மாத‌கால‌ம் செவ்விந்திய‌ர்க‌ள‌ட‌ன்
வ‌சித்தார் ; அங்கு ம‌ன‌ம் புரிந்தார். த‌ம்மை ச‌தி செய்து சிறையில்
அடைத்த‌ க‌ய‌வ‌ர்க‌ளை ப‌ழி வாங்க‌ துடித்தார். மீன்டும் ஃப்ரான்ஸ் செல்ல‌
முய‌ல்கையில் பிடிப‌ட்டு 4 ஆண்டு த‌னிமைச் சிறை த‌ண்ட‌னை.

த‌னிமை சிறை இருப்ப‌திலேயே கொடுமையான‌து. நிச‌ப்த‌ம் ம‌ட்டுமே.
ப‌ல‌ருக்கும் பைத்திய‌ம் பிடிக்கும். அதையும் வென்ற‌ க‌தை அருமை.

மீண்டும் மீன்டும் த‌ப்ப‌ முய‌ற்ச்சி. ப‌ல‌ ந‌ண்ப‌ர்க‌ள், எதிரிக‌ள்,
துரோக‌ங்க‌ள், ந‌ம்பிக்கைக‌ள். ம‌ர‌ண‌ங்க‌ள், சிறை க‌ல‌க‌ங்க‌ள்...

க‌டைசியாக‌ டெவில்ஸ் தீவில் சிறை. கொப்ப‌ரை தேங்க‌யா நிர‌ம்பிய‌ சாக்க்கு
மூட்டை பை மீது சவாரி செய்து கடலை கடந்து, வெனிசுலாவை அடைந்து இறுதி
வெற்றி. மொத்தம் 14 ஆண்டுகள் சிறைவாசம்.

தமிழில், ரா.கி.ரங்கராஜன் மொழி பெயர்த்து தொடராக 1970களில் வந்தது.
ஆனாலும் ஆங்கில / ப்ரென்ச் வடிவங்களே புத்தகமாக உள்ளன.

1971இல் இது வெளியாகி ஃப்ரான்ஸையே கலக்கியது.
ஒரு திரை படமாகவும் உருவானது.

வாழ்க்கையில் வைராக்கியத்தையும், நம்பிக்கையும்
உருவாக்கும்ஒரு காவியது இது. மீண்டும் மீண்டும் அடிக்கடி படிக்க தூண்டும்
வராலாறு இது.
-------------------------------------

Friday, June 20, 2008

ஒரு இளம் அமேரிக்க பாங்கரின் இந்திய அனுபவங்கள்

ஒரு இளம் அமேரிக்க பாங்கரின் இந்திய அனுபவங்கள்

மார்க் ஸ்ராப் என்னும் அமேரிக்க இளைஞர், சிறு கடன் துறையில்
பணியாற்றுகிறார். சமூக பெறுப்புணார்வும், மனித நேயமும், ஆர்வமும் மிகுந்த
இந்த துடிப்பான இளைஞர், கடந்த ஒரு வருட காலமாக டெல்லியில் ஒரு சிறு கடன்
நிறுவனத்தில் பணி புரிந்தார். அவரின் அனுபவங்களை அறிய :

http://bankerinindia.typepad.com/my_weblog/2008/01/re-tooled-and-r.html

மிக சுவாரசியமான, அருமையான பதிவுகள் இவை.

Microfinance: Charity or Usury? Why I Still Like It
http://bankerinindia.typepad.com/my_weblog/2007/12/what-i-like-abo.html

Why I Left Investment Banking ?
http://bankerinindia.typepad.com/my_weblog/2007/12/why-i-left-inve.html

02:00

உடனே அவரை ஒரு அமேரிக்க முதலாளிகளின் கைக்கூலி என்று விளிக்க்காமல்,
அவரின் பத்வுகளை மற்றும் அனுபவங்களை பெறுமையாக, விருப்பு வெறுப்பு
இல்லாமல் பார்க்கவும்.

க‌ந்து வ‌ட்டி தொழிலை எப்ப‌டி மாற்றி, ஏழைக‌ளுக்கு எப்ப‌டி உண்மையில்
உத‌வ‌து ப‌ற்றிய‌ ப‌திவுக‌ள் இவை...

Walmart in India, Part 2
http://bankerinindia.typepad.com/graylightning/2007/03/walmart-in-in-1.html

The Grey Economy
http://bankerinindia.typepad.com/graylightning/2006/11/the-grey-econom.html

Elvis in Camp Guru
http://bankerinindia.typepad.com/graylightning/2006/11/elvis-in-camp-g.html

Friday, May 30, 2008

நூறு ஆண்டுகளுக்கு முன் சென்னை / மெட்ராஸ் - அரிய புகைப்படங்கள்

பாரிஸ் கார்னர்
விக்டோரியா ஹால், சென்ட்ர‌ல் அருகில்

துறைமுகம்

மார்கெட்


இன்று ப‌ர்மா பஜார் இருக்கும் இட‌ம்


எஸ்பலாண்ட்





பார‌தி சாலை, ராய‌ப்பேட்டை

'எலிப்பொறிக்குள் மனிதர்கள்' - ஆண்டாள் பிரியதர்ஷினி

'எலிப்பொறிக்குள் மனிதர்கள்'

எல்லாருமே
பிள்ளையார் ஆகிவிட்டோம்
உலகமே
எலி வாகனத்தில்
பயணிக்கிறது

சிவ பார்வதியைய் சுற்றிய
பிள்ளையாராக
வாமன வாரிசுகள்
ஓரடிப் பெட்டிக்குள்
உலகைச் சுற்றுகிறார்கள்.

கால்களைக் கழற்றிவிட்டுக்
கைவிரல்களால்
ஊழித் தாண்டவம்
ஆடுகிறோம்
அரூபச் சிலந்தி வலையை
எலியால் பிறாண்டிப்
பிறாண்டிப் பிரபஞ்சம் தாண்டித்
தேடுகிறோம்

எலிக்கு மனித வாகனம்
இருபத்தொன்றில்
வாழ்க எலி சாம்ராஜ்யம் !

-ஆண்டாள் பிரியதர்ஷினி

நன்றி : சுஜாத்தாவின் கற்றதும் பெற்றதும்.

Income Tax Raid பற்றி திருக்குறள் :

Income Tax Raid பற்றி திருக்குறள் :

அளவறிந்து சேர்க்கா தான் செல்வம்
உளவறிந்து பறிக்கப் படும்.

அடக்கம் அமரருள் வைக்கும் அடங்காமை
ஜெயில் உள் வைக்கும்.

(1997இல் 'அம்மாவும், சின்னம்மாவும்' 'மாமியார்'
வீட்டிற்க்கு அனுப்பப்பட்ட போது
இயற்ப்பட்ட புதுக்குறள்கள் !!!)

அமேரிக்காவில் ஒரு பத்திரிக்கை விளம்பரம் :

1. 'உஙக்ளுக்கு எப்போதாவது ஆயாசமாக, அதைரியமாக
இருந்தால் இந்த ஆளை யோசித்துப் பாருங்கள் :

பள்ளிப் படிப்பை இவன் பாதியில் விட்டான். ஒரு
கடை வைத்து எல்லாவற்றையும் இழந்தான்.
கடன்களை அடைக்க 15 வருஷமாயிற்று. கல்யாணம்
பண்ணிக் கொண்டு சந்தோசமில்லாமல் அவஸ்தைப்
பட்டான், இரண்டு தடவை தேர்தலுக்கு நின்று தோற்று
போனான்.

அவன் ஒரே ஒரு சொற்பொழிவு மட்டும் பிற்பாடு பிரசித்தமாயிற்று. ஆனால்
அப்போது யாரும் அதை கவனிக்கவில்லை. பத்திரிக்கைகளில் அவனைத்
தாக்கினார்கள். நாட்டின் பாதி ஜனங்கள் அவனை
வெறுத்தார்கள்.

இத்தனை இருந்தும் உலகமெங்கும் எத்தனை பேர்
இந்த கன்னம் ஒட்டின, கசங்கிய மனிதனால்
ஊக்குவிக்கப் பட்டிருக்கிறார்கள் !

"அவன் பெயர் அப்ரகாம் லிங்கன்."

----------------------------------

2. ஆஸ்கார் வைல்டு சொன்னார் : 'மாறாமல் இருப்பது கற்பனையற்றவரின்
சரணாலயம்' என்று. எனவே தினம்
6.05க்கு எழுந்திருப்பதை நிறுத்து. 5.06க்கு எழுந்திரு.
அதிகாலை ஒரு மைல் நடந்து பார். ஆபிசுக்கு வேறு
வழியே செல். மனைவியுடன் அடுத்த சனிக்கிழமை
ட்யூட்டி மாற்றிக்கொள். புதுசாக ஏதாவது வாங்கிப்பார்.
காட்டுப் பூக்களை பறி. ராத்திரி தனியாக விழித்திரு.
பார்வையில்லாதவர்களுக்கு படித்துக் காட்டு. தெருவில்
போகும் மஞ்சள் ஸாரி பெண்களை எண்ணிப்பார். புதிய பத்திரிகைக்கு சந்தா
செலுத்து. நடு ராத்திரியில் சைக்கிள்
ஓட்டு. உங்கள் ஊர் எம்.எல்.ஏ.க்கு ஒரு படை திரட்டி
அழைத்துச் செல். இத்தாலிய மொழி பழகும் பையனுக்கு
உனக்கு தெரிந்ததை சொல்லித்தா. இரண்டு மணி நேரம் இடைவிடாமல் மோட்ஸார்ட்
கேள். இந்த வயசில் பரத
நாட்டியம் துவங்கு. ஏதாவது செய்து வாழ்க்கையை
அனுபவி. ஏனெனில் நாம் இந்தப் பக்கம் ஒரு முறைதான்
வருகிறோம்.'

நன்றி : சுஜாத்தாவின் 'ஒரிரு எண்ணங்கள்'

Wednesday, May 28, 2008

ராஜஸ்தானில் குஜ்ஜார் இன மக்களின் போராட்டம் ?

2003 தேர்தலில் பி.ஜெ.பி தங்களை எஸ்.டி பிரிவில்
சேர்பதாக கூறிய பொய்யான வாக்குறுதிகளை நம்பி
'ஏமாற்ந்த' குஜ்ஜர் இன மக்கள் மீண்டும் வன்முறையில்
இறங்கி, ரயில்களை மறித்து, தண்டவாளங்களாஇ
பிளந்து 'போராட்டம்' நடத்துகின்றனர்.
(இங்க யாரும் கண்டுக்கர மாதிரி தெரியல !!)
இதுவரை 40 பேர்களுக்கு மேல் பலியாகி உள்ளனர்.
(போலிஸாரும் பலியாகி உள்ளனர்.)

இட‌ ஒதுக்கீட்டில் இருக்கும் அநியாங்க‌ள் ( ஆதாவாது கிரிமி லேய‌ர்,
சென்ச‌ஸ் இல்லா அடிப்ப‌டையில், எதோ ஒரு அடிப்படையில் விகுதங்கள்
ஒதுக்குபடல், போன்றாவை) அதில் ஓட்டு வேட்டையாக மாற்றிய அரசியல்
போன்றவைகளின் விளைவே இது.

சமீபததிய சர்வே ஒன்று குஜ்ஜார்கள் எஸ்.டி பிரிவுக்கு தகுதி அல்ல என்று
திட்டவட்டமாக அறிவித்தும் அவர்களின் போராட்டம் ஒயவில்லை.
த‌டியேடுத்த‌வ‌ன் த‌ண்ட‌ல்கார‌ன் மாதுரி, ஆள் ப‌ல‌ம் இருந்தால் என்ன‌
வேண்டுமானாலும் கேட்க்க‌லாம் என்று உள்ளது கால‌ம்.

மீனாக்க‌ள் என்ற தாழ்த‌ப்ப்ட்ட‌ பிரிவு குஜ்ஜார்க‌ளின் கோரிக்கையை
க‌டுமையாக‌ எதிர்க்கின்ற‌ன‌ர்.

உண்மை, நியாய‌ம் இதெல்லாம் என்ன‌ விலை சமூக நீதி என்ற முழக்கம் வெறும் மாயயைதானா ?

உண்மை நிலவரம் தான் என்ன ? இட ஒதுக்கீட்டில் நடக்கும் அநியாயங்கள் தான் எவை ? ஒரு வெளிபடையான, சாதி வாரி சர்வே ஏன் இன்னும் எடுக்கபடவில்லை. எந்த சாதிகளில் எத்தனை சதவீதம் உண்மையில் பிற்படுத்தப்பட்ட மக்கள் என்ற விவரம் ஏன் இன்னும் தெளிவுபடுத்தப்படவில்லை. இவை பற்றி ஒரு வெளிப்படையான, நேர்மையான விவாதம் ஏன் இந்தியாவில் இல்லை.

2011 ம‌க்க‌ள் தொகை க‌ணாக்கெடுப்பில் ஜாதிவாரியான‌ ம‌ற்ற இத‌ர‌
த‌க‌வ‌ல்க‌ளை திர‌ட்ட‌ ஏன் இன்னும் த‌ய‌க்க‌ம் ? வெறும் அர‌சிய‌ல்.

உண்மையே, உன் விலை என்ன‌ ?

Saturday, May 24, 2008

பங்களாதேஸ் மக்களுக்கு மறதியா / நன்றியுணார்வு இல்லையா ?

ஜெய்பூரில் நடந்த கொடுமையான குண்டு வெடிப்புக‌ளில்
70க்கும் மேற்பட்ட அப்பாவிகள் உயிரழந்தனர். இதற்ற்கு காரணம் பங்களாதேஸை
தலைமையாக கொண்ட ஒரு ஜிகாத் அமைப்பு என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

1971 வரை பங்களாதேஸ் கிழக்கு பாக்கிஸ்தானாக, மேற்க்கு பாகிஸ்தான்
(இன்றையபாக்) உடன் இனைந்து ஒரே நாடாக இருந்ததது. மேற்க்கு பாகிஸதானிய
பஞ்சாபியினர் அரசையும், ராணுவத்திலும் முன்னனி வகுத்து, கிழக்கு பாக்
பெங்காலி முஸ்லீமகளை நசுக்கி பல அடக்குமுறை புரிந்தனர். தேர்தல்களில்
வங்காளிகள் வென்றதை ஏற்க்க மறுத்து, பாக் ராணுவத்தை, பங்களாதேச்
பகுதிகளுக்கு அனுப்பி இனப் படுகொலை பெருமளவில் புரிந்தனர். கோடிக்கணக்கான
மக்கள் அகதிகளாக இந்தியாவிற்க்கு வந்தனர். அகதிகள் வருகை மிக மிக
அதிகமானதை அடுத்து இந்தியா தலையிட வேண்டிய கட்டாயம்.

அன்று பாக் முஸ்லிம் 'சகோதரகளின்' இனப்படுகொலைகளை ச‌ந்தித்த பங்களாதேஸ்
மக்கள் 40 ஆண்டுகளில் நடந்ததை மறந்து, நம் உதவிகளை மறந்து, இன்று
இந்தியாவை 'எதிரியாக' கருதி, தீவிரவாதிகளுக்கு ஆதரவு அளிப்து
வியப்பளிக்கிறது.

பார்க்க‌ :

http://en.wikipedia.org/wiki/1971_Bangladesh_atrocities

http://en.wikipedia.org/wiki/Bangladesh_Liberation_War

http://en.wikipedia.org/wiki/1971_Bangladesh_atrocities#Genocide_debate

Wednesday, May 21, 2008

புதுமைப்பித்தன் எழுதிய 'திரு ஆங்கில அரசாங்கத் தொண்டடிப்பொடிய்யாள்வார் வைபவம்'

புதுமைப்பித்தன் எழுதிய 'திரு ஆங்கில அரசாங்கத்
தொண்டடிப்பொடிய்யாள்வார் வைபவம்' :


'ஷ்ரீயப்பதியாய் ஸிம்லாச் சிகரத்தில் எழுந்தருளாநின்ற
அரசாங்க ஈச்வரன் வில்லிங்டன் மூர்த்தி' யை நோக்கிப்
பாடிய பதக்கதிலிருந்து சில :

உற்றாரை யான் வேண்டேன், ஊர் வேண்டேன், பேர் வேண்டேன்,
மற்றுமிந்த வாணிபத்தின் புன்செல்வம் யான் வேண்டேன்
பொற்றோளாய் ! உன்னுடைய பெருமை மிகு சர்வீஸில்
சிற்றுருவ மானதொரு அட்டெண்டர் ஆகேனோ !

ஊனேறு செல்வத்துடன் பிறவி யான் வேண்டேன்
தேனார் மொழிக் கிள்ளைத் தேவியரும் யான் வேண்டேன்

வானோங்கு புகழ்மிகுந்த நின்வாயி லிட்டுண்ணும்
மீனாய்ப் பிறக்கும் தவமுடைய னாவேனோ.
-----------------------------------------------------------------

மூலம் : 'அந்தக் காலத்தில் காப்பி இல்லை'
ஆ.இரா.வேங்கிடாசலபதி, காலச்சுவடு பதிப்பகம்.

Tuesday, May 20, 2008

சுஜாத்தாவின் 'பதினாலு நாட்கள்'

சுஜாத்தாவின் 'பதினாலு நாட்கள்'

1971 பங்களாதேச விடுதலை போரை பற்றிய அருமையான சிறு நாவல். சுஜாத்தாவிற்கே
உரிய அருமையான நடை.

எதிரிகளிடம் சிக்கிய ஒரு இளம் இந்திய விமானியய் பற்றிய கதை.

முக்தி பாகினி இளைஞன் ஒருவனைப் பற்றிய வரி என்றும்
மறக்க இயலாது. :

....ரத்த வெள்ளத்தில் பிறக்கப்போகும் ஒரு புதிய சகாப்த்ததின்
ஆரம்ப வரிகள் அவன் முகத்தில் எழுதப்பட்டிருந்தன. எத்தனை
ஆர்வம் !..'

இதில் மேலும் சில வரிகள் :

ஜுல்பிகார் அலி பூட்டோ ஆயிரம் வருஷ்ம் போரடுவோம்
என்று சொன்ன போர் சரியாக பதினாலு நாட்களில் முடிந்தது. ஆயிரக்கணக்கில்
இந்தியர்கள் இறந்த பதினாலு நாட்கள்.
எத்தனையோ வாழ்நாட்க்களை, எத்தனையோ ஆசைகளை,
தாபங்களை, இளம் அரவணைப்புகளை அணைத்த
பதினாலு நாட்கள்...

"எதை எழுதுவீர்கள் நீங்கள் ? யாரைப் பற்றி எழுதினாலும்
போதாதே. இன்ஞினியர்களைப் பற்றி எழுதுவீர்களா,
இன்பான்ட்ரி பற்றியா, மெடிக்கல் கோர் பற்றியா,
விமானிகள் பற்றியா, கன்னர்கள் பற்றியா, கடற்படை
பற்றியா, ஜெனரல்களைப் பற்றியா, இல்லை அந்தத்
தேசத்தில் மொனமாக மாண்ட லட்சக்கணக்கான
ஜனங்களைப் பற்றியா ? யாரைப் பற்றி ?"

"உங்களைப் பற்றி" என்றேன்.

"நான் ஒரு சாதாரண பைலட், ஐ டிட் மை ஜாப்"
என்றான் அவன்.

கனடா நாட்டினருக்கு கோபமே வராதா ? ஜாலியான மக்களா ?

கனடா நாட்டினருக்கு கோபமே வராதா ? ஜாலியான மக்களா ?

போகோ டி.வியில் வரும் Just for Laughs - Gags நிகழ்ச்சியை
விரும்பி பார்கிறோம். அருமையான practical jokes ; கனடாவில்
பதிவு செய்யப்படுகிரது. இதில் அறியாமல் மாட்டியவர்கள்
யாரும் கோபப் படுவதே இல்லை. ஜாலியா சிரிச்சிக்கிட்டே,
ஈசியா எடுத்துக்வது, ஆச்சரியமாக உள்ளது. இங்க இப்படி
செஞ்சா டென்ஸன் ஆயிருவாங்க. சண்ட வந்திரும்.

இது எப்படு மக்கா ? கனடாவில் இருக்கும் யாராவது
விளக்குங்களே....

தமிழக முதல்வர்கள முன் ஆபாச நடனங்கள்

முப்பது ஆண்டுகளுக்கு முன் வரை தமிழக முதல்வர்களுக்கு,
சினிமாகாரர்கள் பாரட்டு விழா நடத்தினால், விழாவில்
பரதநாட்டியம், கிராமிய நடனங்கள் போன்றவை நடைபெறும்.
ஆனால் செனற பத்தாண்டுகளாக, அரைகுறை உடைகள்
அணிந்த நடிகைகளின் ஆபாச நடனம் சர்வ சாதாரணாமாக
நடக்கிறது. அதுவும் அரசு விழாவான திரைபட விருது வழங்கும்
விழாவில், மகாரஷ்டர ஆளுனர், உயர் அதிகாரிகள், போலிஸ்
தலைமை அதிகாரிகள் அனைவரும் முன், சிறுதும் லஜ்ஜை
இல்லாமல் ஆடும் வெட்க்ககேடு. தமிழர் கலாசாரம் வாழ்க.

இதை போன்ற பொது நிகழ்சிகளை நடத்தி, கண்டுகளிக்கும்
சினிமாக்காரர்களையும் , அரசியல்வாதிகளையும், எங்க
ஊர் பாசையில் சொன்னால் : 'சரியான தேவ்........யா
பசங்க'

இதைவிடக் கொடுமை, சிறு நகர்புறங்களில் இருக்கும்
தனியார் நடுனிலைப் பள்ளிகளின் ஆண்டு விழாவில்,
தரமில்லாத சினிமா பாடல்களுக்கு, சிறுவர், சிறுமியர்
ஆடும் நடனங்கள். அவற்றை லோக்கல் கேபில்
டி.வியில் ஒளிபரப்பும் கொடுமை வேறு.

வாழக தமிழர் பண்பாடு.....

எனக்கு மிகவும் பிடித்த பகவத் கீதை வரிகள்

எனக்கு மிகவும் பிடித்த பகவத் கீதை வரிகள் :

உயிர் அனைத்திடத்தும் வெறுப்பின்றி, நட்பும் கருணையும்
உடையவனாய், மமகாரம் அகங்காரம் அற்று, இனப
துன்பங்களைச் சமமாய்க் கருதி, பொறுமை படைத்து,
எப்போதும் சந்தோஷமாயிருப்பவன், யோகியாய்,
தன்னடக்கமுடையவனாய், திடநிச்சயமுள்ளவனாய்,
என்னிடத்து மனம் புத்தியை சமர்ப்பித்தவனாய்,
யார் என் பக்தனாகிறானோ, அவன் எனக்கு
பிரியமானவன். (அத் - 12 / ஸ்லோகம் 13 - 14)

பைபிலில் பிடித்தது :

Wisdom resideth in the heart, that hath understanding. (Proverbs)
Do not judge them, for they do not understand.

பிடித்த அரபிய பழமொழி :

அல்லாவை கும்பிடு , அனால் ஒட்டகத்தை கட்டிப்போடு.


பிடித்த திருக்குறள்கள் :

ஓதி உணர்ந்தும் பிறர்க்கு உரைத்தும் தான் அடங்காப்
பேதையின் பேதையார் இல். (என்க்கு மிக பொருந்துகிறது !!)

தெய்வதான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்(து)
அதனை அவன்கண் விடல் (management thru delegation !!)

எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப் தறிவு.

சென்னையில் பார்கக வேண்டிய இடங்கள்

1.பாரதி நினைவு இல்லம் : திருவல்லிக்கேணி பார்தசாரதி
கோவில் பின்புறம் அமைந்த இந்த வீட்டில்தான் 1921ல்
பாரதி காலமானார். பல அரிய புகைபடங்களும், அவருடைய
கையெழுத்தில் எழுதிய பல கவிதைகளின் கையெழுத்து
பிரதிகளும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன். தமிழர்கள்
அனைவரும் அவசியம் பார்கக வேண்டிய நினைவாலயம்..

2.விவேகானந்தர் இல்லம், மெரினா கடர்கரை சாலை :
1896 வாக்கில் அமெரிக்காவில்ருந்து திரும்பிய விவேகானந்தர்
சில நாட்க்கள் தங்கியிருந்த வீடு, இன்று ராமகிருஷ்ண
மடத்த்னரால் ஒரு அற்புதமான நினைவு இல்லமாக
மாற்றப்பட்டுள்ளது. விவேகானந்தரின் வாழ்கையை
சித்தரிக்கும் அரிய புகைப்பட கூடம், இந்திய வரலாற்றை
சித்தரிக்கும் ஒரு அருமையான ஓவிய கண்காட்சி,
புத்தக விற்ப்னை கடை மற்றும் ஒரு அமைதியான
தியான மண்டபம் உள்ளன.

3.புனித ஜார்ஜ் கோட்டை : 1660 களில் ஆங்கிலேயரால்
கட்டப் பட்ட கோட்டை. அப்போதே கட்டப்பட்ட புனித
மேரி சர்ச், ஆசியாவிலேயே மிக பழமையான
ஆங்கலிக்கன் சர்ச். பல அரிய, நினைவு பட்டகங்கள்
நிறைந்துள்ள தேவாலயம். இதில் தான் ராபர்ட் க்ளைவின்
திருமண்ம் நடந்தது ! அருகே ஒரு அழகிய பழைய
மாளிகை இப்போது மயுஸியமாக மாற்றப்பட்டுள்ளது.
பல அரிய சித்திரங்கள், ஆயுதங்கள், ஆவணங்கள்
உள்ளன.

4.எக்மோர் மயுஸியம்.

5.காமராஜர் நினைவு இல்லம், தி.நகர் : காமராஜர்
கடைசியாக வசித்த வீடு. அரிய புகைப்படங்களும்,
ஆவணங்களும் உள்ளன. தி.நகரில்தான் எம்.ஜி.ஆர்
நினைவு இல்லமும உள்ளது.

5. வழிபாட்டு ஸ்தலங்கள் : திருவல்லிக்கேணி
பார்தசாரதி கோவில், மைலாப்பூர் கபாலீஸ்வரர்
கோயில், சாந்தோம் தேவாலயம், கதீட்ரல் ரோடில்
இருக்கும் மிகப்பெரிய கதிட்ரல் ; பூந்தமல்லி
நெடுஞ்சாலையில் இருக்கும் மிக அழகிய
செயின் ஆண்ட்ரூஸ் கிர்க்..

6.வணடலூர் மிருககாட்சி சாலை மற்றும்
கடற்கரைகள்.

7. ஓமந்தூரார் எஸ்டேட் எனப்படும் அரசாஙக் இடத்தில்
அமைந்துள்ள பிரமான்டமான் ராஜாஜி மாளிகை ; 1
800 வாக்கில் ராபர்ட் க்ளைவின் மகன் எட்வர்ட்
க்ளைவில்னால் கட்டப்பட்ட விருத்தினர் மாளிகையே
இது. 1947வரை பிரிடிஷ் கவர்னர்கள் வசித்த இடம்.
அருகில்தான் எம்.எல்.ஏ விடுதிகள் அமைந்துள்ளன.